ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ.எஸ். குறிப்புகள்

2 posters

Go down

ஓ.எஸ். குறிப்புகள் Empty ஓ.எஸ். குறிப்புகள்

Post by Guest Mon May 02, 2011 9:38 am

ஓ.எஸ். குறிப்புகள்

ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்பான மேலும் சில தொழில் நுட்பச் சொற்களுக்கு விளக்கம் இங்கே தரப்படுகிறது.
1. Embedded Object (எம்பெடட் (பதித்தல்) ஆப்ஜெக்ட்):
அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில் உருவாக்கப்பட்டு, இன்னொரு அப்ளிகேஷனில்
உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்டில் பதிக்கப்படும் ஆப்ஜெக்ட். எடுத்துக்காட்டாக
அடோப் போட்டோஷாப் அல்லது எம்.எஸ். பெயிண்ட் புரோகிராமில் உருவான ஆப்ஜெக்ட்
ஒன்றை, வேர்ட் டாகுமெண்ட்டில் எம்பெட் செய்வது. ஆப்ஜெக்ட் அல்லது
படத்தினை அப்படியே ஒட்டாமல், எம்பெட் செய்வதன் மூலம் அந்த ஆப்ஜெக்டின்
ஒரிஜினல் பார்மட் அப்படியே வைக்கப் படுகிறது. இவ்வாறு பதிக்கப்பட்ட ஒரு
ஆப்ஜெக்ட்டை, அதன் ஒரிஜினல் புரோகிராம் மூலம் எடிட் செய்திடலாம். விண்டோஸ்
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஆப்ஜெக்ட் ஒன்றைப் பதித்திட OLE (Object Linking
and Embedding) என்று அழைக்கப்படும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

2. Event (நிகழ்வு):
புரோகிராம் ஒன்றினால், அறியப்படும் ஒரு நிகழ்வு. கம்ப்யூட்டர் செயலாக்கம்
அனைத்துமே, நிகழ்வுகளின் தொடர்ச்சியே. எடுத்துக் காட்டாக, மவுஸ் கிளிக்
செய்வது ஒரு நிகழ்வு. கீ ஒன்றினை அழுத்துவது மற்றொரு நிகழ்வு. மேக் இன்டோஷ்
மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் புரோகிராம்கள்
அனைத்தும் இத்தகைய நிகழ்வுகளாலேயே இயக்கப்படுகின்றன. இந்த நிகழ்வுகளுக்கான
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பதில் செயல்பாடுகள் தான் சிஸ்டம் செயல்பாடுகள்.
3. File Handle (கோப்பு அடையாள எண்):
பைல் ஒன்று திறக்கப்படுகையில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதற்கென ஓர் எண்ணை
ஒதுக்குகிறது. இதனையே பைல் ஹேண்டில் என அழைக்கிறோம். பைலை ஆப்பரேட்டிங்
சிஸ்டம் அணுகுகையில், பைல் ஹேண்டிலைப் பயன்படுத்தும். இந்த பைல் ஹேண்டில்
களுக்கென கம்ப்யூட்டரின் மெயின் மெமரியில் தனி இடம் ஒதுக்கப்படும். இந்த
மெமரியின் அளவைப் பொறுத்து, எத்தனை பைல் ஹேண்டில்கள் இங்கு தங்க
வைக்கப்படலாம் என்பது முடிவாகும். அதாவது ஒரே நேரத்தில் எத்தனை கோப்புகள்
திறக்கப்பட்டு பயன்படுத்தப் படலாம் என்பதனை அறியலாம். டாஸ் மற்றும்
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், அதிக பட்சம் எத்தனை பைல்கள்
திறக்கப்படலாம் என்பதனை CONFIG.SYS என்ற பைலில் உள்ள FILES= என்ற
ஸ்டேட்மெண்ட்டில் வரையறை செய்திடலாம்.
4. Interrupt (நிகழ்வினைச் சுட்டும் ஒரு சிக்னல்):
ஒரு புரோகிராம் இயங்கு கையில், நிகழ்வு ஒன்று ஏற்படும் போது, அதனை,
புரோகிராமிற்கு எடுத்துக் காட்டுவது இந்த இன்டரப்ட் எனப்படும் சிக்னல்
ஆகும். இது போன்ற ஒரு சிக்னல் கிடைக்கையில், அந்த புரோகிராம் அதற்கான
குறிப்பிட்ட செயல்பாட்டினை மேற்கொள்ளும். இவ்வாறு ஒரு சிக்னல்
அனுப்பப்படுகையில், புரோகிராம் தன் தொடர் செயல்பாட்டினைத் தற்காலிக மாக
நிறுத்தி வைத்து, சிக்னலுக்கான செயல்பாட்டில் இறங்கும். இன்டரப்ட்
சிக்னல்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். எடுத்துக்காட்டாக,
ஒவ்வொரு கீ அழுத்தலும், ஒரு இன்டரப்ட் சிக்னலை அனுப்பும். பிரிண்டர் போன்ற
பிற துணை சாதனங்களும் இன்டரப்ட் சிக்னல்களை அனுப்பலாம். இந்த வகை இன்டரப்ட்
hardware interrupt என அழைக்கப்படுகிறது. புரோகிராம் ஒன்றினால்,
ஏற்படுத்தப்படும் சிக்னல்கள் software interrupt என அழைக்கப்படுகின்றன.
இதனை a trap அல்லது an exception எனவும் அழைக்கின்றனர். பொதுவாக, ஒரு
பெர்சனல் கம்ப்யூட்டர், 256 வகையான சாப்ட்வேர் இன்டரப்ட் மற்றும் 15 வகையான
ஹார்ட்வேர் இன்டரப்ட்களை சப்போர்ட் செய்கிறது.
5. Job (பணி):
கம்ப்யூட்டர் சிஸ்டம் செயல்படுத்தும் ஒரு வேலைக்கு Job என்று பெயர். இந்த
வேலை ஒரே ஒரு புரோகிராம் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களால்
மேற்கொள்ளப் படலாம்.
6. Kernel கெர்னல் (மையம்):
ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றின் மத்திய தொகுப்பு. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில்
முதலாவதவாக லோட் செய்யப்படும் பகுதி இதுதான். மெயின் மெமரியில் எப்போதும்
இடம் பெறும். மெமரியில் எப்போதும் இருப்பதால், இது அளவில் சிறியதாக
இருப்பது நல்லது; சிறியதாகவே இருக்கும். ஆனால் அதே நேரத்தில்,
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மற்ற பகுதிகளுக்குத் தேவையான அனைத்து சேவைகளையும்
தந்து கொண்டே இருக்கும். இதன் முக்கிய சேவைகளைக் குறிப்பிட்டுச்
சொல்வதென்றால், மெமரி நிர்வாகம், செயல்பாடு, செயல்பாடுகளின் நிர்வாகம்,
டிஸ்க்கை செயல்படுத்தல் ஆகியவற்றைக் கூறலாம்.
7. MBR மாஸ்டர் பூட் ரெகார்ட்:
கம்ப்யூட்டர் பூட் செய்யப்படுகையில், இயக்கப்படும் முதல் புரோகிராம். எனவே
ஹார்ட் டிஸ்க்கின் முதல் செக்டாரில் இது தங்கிச் செயல்படும். பூட்
செயல்பாட்டி னை இது தொடங்கி வைக்கும். இதற்கு பார்ட்டிஷன் டேபிள் என்ற
அமைப்பைப் பார்த்து, எந்த பிரிவில் இயக்கத் தொடக்கத்தினை மேற்கொள்ளலாம்
என்று கணித்து மேற்கொள்ளும். பின்னர், புரோகிராமைக் கட்டுப்படுத்துவதனை,
அந்த பிரிவில் உள்ள பூட் செக்டாருக்கு மாற்றிவிடும். பூட் செயல்பாட்டினை
அது தொடர்ந்து எடுத்துக் கொள்ளும். டாஸ் மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங்
சிஸ்டத்தில், FDISK/MBR என்ற கட்டளையுடன், MBR புரோகிராமினை நீங்கள்
உருவாக்கலாம்.
இது குறித்து படிக்கையில், உங்கள் மனதில் MBR virus என்ற
பெயர் நினைவிற்கு வரலாம். இந்த வைரஸ் ஒரு பொதுவான அபாயகரமான வைரஸ். மாஸ்டர்
பூட் ரெகார்ட் புரோகிராமிற்குப் பதிலாக, தன் குறியீடுகள் அடங்கிய
புரோகிராமினைப் பதிந்து வைக்கும். ஒவ்வொரு முறை கம்ப்யூட்டர்
தொடங்கும்போதும் MBR செயல்படுத்தப் படுவதால், இது மிகவும் ஆபத்தான
விளைவுகளைத் தரும். முன்பு இந்த வகை வைரஸ் மிகவும் அதிகமாகக் காணப்பட்டது.
குறிப்பாக பிளாப்பி டிஸ்க் வழியாக இவை பரவின.
8. Task Switching (டாஸ்க் ஸ்விட்சிங்) பணி மாற்றம்:
புரோகிராம் ஒன்றில் செயல் பட்டுக் கொண்டிருக்கையில், இன்னொரு புரோகிராமில்
இயங்கும் பணியை மேற்கொள்ளும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சூழ்நிலையை இந்த
சொற்கள் குறிக்கின்றன. டாஸ் சிஸ்டத்திலும் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள
பல பயன்பாடு புரோகிராம்கள் கிடைக்கின்றன. ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.
இது multitasking என்பதல்ல. multitasking பணியில், சி.பி.யு.
புரோகிராம்களுக் கிடையில், முன்னும் பின்னுமாக இயங்கி, அனைத்து
புரோகிராம்களையும் ஒரே நேரத்தில் இயக்கும். எடுத்துக்காட்டாக, இணையத்தில்
ஒரு தளத்தினை பார்த்து, அதன் பக்கத்தில் உள்ள தேவைப்பட்ட டெக்ஸ்ட்டை காப்பி
செய்து, அடுத்த பக்கத்திற்கு செல்ல, அதற்கான லிங்க்கில் கிளிக்
செய்கிறீர்கள். உடனே, டெக்ஸ்ட் எடிட்டர் ஒன்றைத் திறந்து, காப்பி செய்த
டெக்ஸ்ட்டை பேஸ்ட் செய்கிறீர்கள். பேஸ்ட் செய்திடும் நேரத்தில், உங்கள்
பிரவுசர், பார்க்கப்பட்டுக் கொண்டிருக் கும் தளத்தின் அடுத்த பக்கத்தைத்
திறக்க முயற்சி எடுத்துத் திறக்கும்.
Task Switching பணியில் சி.பி.யு.
முன்னும் பின்னுமாக அடுத்தடுத்த புரோகிராம்களில் இயங்குவதில்லை. ஒரு
நேரத்தில் ஒரே ஒரு புரோகிராமினை மட்டுமே இயக்கும். ஆனால், மாற்றத்தினை மிக
அழகாக எடுத்துக் கொடுக்கும். இதனைச் சில வேளைகளில் context switching
என்றும் அழைக்கின்றனர்.

க மலர்


Last edited by மதன் on Mon May 02, 2011 10:09 am; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

ஓ.எஸ். குறிப்புகள் Empty Re: ஓ.எஸ். குறிப்புகள்

Post by மகா பிரபு Mon May 02, 2011 9:41 am

நண்பா center allignment பண்ணுறதாள படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஓ.எஸ். குறிப்புகள் Empty Re: ஓ.எஸ். குறிப்புகள்

Post by கலைவேந்தன் Mon May 02, 2011 9:47 am

மதன் நண்பரே

ஓ எஸ் குறித்த அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் பதிந்தால் அதைப்பற்றிய முழுமையான செய்தி அறிய விரும்புவோருக்கு பயன் அளிக்கும் அல்லவா..?

உங்கள் இந்த பயனுள்ள சேவை சரிவர அனைவருக்கும் செல்ல வேண்டுமெனில் ஒரே இடத்தில் இருப்பின் நலம்,

நீங்கள் ஓ எஸ் குறித்த உங்களது அனைத்து ஈகரைத்திரிகளின் தொடுப்பை இங்கே வழங்கி உதவலாம்.

நீங்கள் விரும்பினால் அவைகளை இணைத்து ஒரே திரியாக்க நான் உதவுகிறேன்.

உங்கள் கருத்தைத் தாருங்கள்.

நன்றி.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஓ.எஸ். குறிப்புகள் Empty Re: ஓ.எஸ். குறிப்புகள்

Post by Guest Mon May 02, 2011 10:10 am

பிரபு மற்றும் கலை அண்ணாவின் வேண்டுகோள் நிறைவேற்ற படும் புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

ஓ.எஸ். குறிப்புகள் Empty Re: ஓ.எஸ். குறிப்புகள்

Post by மகா பிரபு Mon May 02, 2011 10:11 am

மதன் wrote:பிரபு மற்றும் கலை அண்ணாவின் வேண்டுகோள் நிறைவேற்ற படும் புன்னகை
நன்றி நண்பா ஓ.எஸ். குறிப்புகள் 1772578765
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஓ.எஸ். குறிப்புகள் Empty Re: ஓ.எஸ். குறிப்புகள்

Post by Guest Mon May 02, 2011 10:14 am

[quote="கலைவேந்தன்"]மதன் நண்பரே

ஓ எஸ் குறித்த அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் பதிந்தால் அதைப்பற்றிய முழுமையான செய்தி அறிய விரும்புவோருக்கு பயன் அளிக்கும் அல்லவா..?

உங்கள் இந்த பயனுள்ள சேவை சரிவர அனைவருக்கும் செல்ல வேண்டுமெனில் ஒரே இடத்தில் இருப்பின் நலம்,

நீங்கள் ஓ எஸ் குறித்த உங்களது அனைத்து ஈகரைத்திரிகளின் தொடுப்பை இங்கே வழங்கி உதவலாம்.

நீங்கள் விரும்பினால் அவைகளை இணைத்து ஒரே திரியாக்க நான் உதவுகிறேன்.

உங்கள் கருத்தைத் தாருங்கள்.

நன்றி. அப்படியே செய்து விடுவோம் அண்ணே ஓ.எஸ். குறிப்புகள் 224747944
avatar
Guest
Guest


Back to top Go down

ஓ.எஸ். குறிப்புகள் Empty Re: ஓ.எஸ். குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum