ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம்

Go down

ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Empty இலங்கை அரசை காப்பாற்றியதில் தி.மு.க.,வுக்கு கூட்டு பொறுப்பு: விஜயகாந்த்

Post by தாமு Thu Apr 28, 2011 7:25 am



சென்னை:""மத்திய அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க.,விற்கு, இலங்கை அரசை காப்பாற்றியதில் கூட்டு பொறுப்பு உண்டு என்பதை நாடறியும்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை:பொதுமக்கள் மீது இலங்கை ராணுவம் வெடிகுண்டு வீசி கொன்றது எனவும், மருத்துவமனைகள், வழிப்பாட்டு தளங்கள், கல்விக்கூடங்கள் ஆகிய மக்கள் கூடும் இடங்களில் குண்டுகள் வீசப்பட்டன எனவும், காயமுற்றோருக்கு மனிதாபிமான உதவிகள் மறுக்கப்பட்டது எனவும், உள்நாட்டில் அகதிகளாக உள்ள தமிழர்களும், விடுதலைப்புலிகள் என சந்தேகத்திற்குரியவர்களும் கொடுமைப்படுத்தப்பட்டு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது எனவும் ஐ.நா., குழு அறிக்கை தந்துள்ளது. இலங்கை அரசு எவ்வளவோ முயற்சித்தும் இந்த அறிக்கை வெளியிடப்படுவதை தடுக்க முடியவில்லை. இந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச குற்ற விசாரணை மன்றத்திற்கு உறுப்பு நாடுகள் அல்லது ஐ.நா., பாதுகாப்பு குழு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பான் -கீ -மூன் அறிவித்துள்ளார்.


ஐ.நா., அறிக்கை 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக கூறுகிறது. அந்த காலக்கட்டத்தில், முதல்வர் கருணாநிதி இங்கு இடைவேளை உண்ணாவிரத நாடகம் நடத்தினார். இலங்கை அரசு தமிழின படுகொலை நடத்துவதற்கு, இந்தியா உறுதுணையாக இருந்தது என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தாகும்.சர்வதேச அரங்கில் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம், மத்திய அரசு தான் தலையிட்டு காப்பாற்றியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஜெனீவாவில் ஐ.நா., சபையின் மனித உரிமை மீறல் குழுவினர் இலங்கையை கண்டித்து தீர்மானம் கொண்டுவந்த போது, மத்திய அரசு அதை தடுத்தது.சர்வதேச நிதியத்தின் மூலம் இலங்கை அரசுக்கு நிதி உதவி வழங்க உலக நாடுகள் மறுத்த போது, மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தின்படி, இலங்கைக்கு நிதி உதவி கிடைத்தது.


அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்ட போதெல்லாம் மத்திய அரசு தலையிட்டு இலங்கை அரசை காப்பாற்றியது. அப்போதெல்லாம் காங்கிரசின் இந்த நடவடிக்கையை கருணாநிதி ஏன் தடுத்து நிறுத்தவில்லை?. எனவே, மத்திய அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க.,விற்கு இலங்கை அரசை காப்பாற்றியதில் கூட்டு பொறுப்பு உண்டு என்பதை நாடறியும். இந்த போர்க்குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவையும், அந்நாட்டு ராணுவத்தையும், போர்க்குற்றம் புரிந்தவர்களாக வழக்கு தொடுக்க வேண்டிய தீர்மானத்திற்கு, மத்திய அரசு இப்போதாவது ஆதரவு அளிக்க வேண்டும்.


பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதும், மனிதாபிமான உரிமைகள் மீதும் தனக்கு பற்று இருக்கிறது என்பதை, மத்திய அரசு நிரூபித்துக் காட்ட வேண்டும். இது உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிற தமிழகத்தின் எதிர்பார்ப்பும் இதுதான். மத்திய அரசு வழக்கம் போல் இலங்கை அரசை ஆதரிக்கப் போகிறதா, அல்லது உலகம் போற்றும் மனித உரிமைகள் பக்கம் இருக்கப் போகிறதா?. மத்திய அரசு வழக்கம் போல், இலங்கை அரசு உதவி செய்தால் அதை கருணாநிதி எதிர்ப்பாரா அல்லது மத்திய அரசின் துதிபாடியாக வழக்கம் போல் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


ஜனதா தளம் கட்சியின் ஆட்சிக்காலத்தில் இருந்து இன்றைய காங்கிரஸ் ஆட்சி வரை, 25 ஆண்டுகள் மத்திய அரசில் முதல்வர் கருணாநிதி பங்கு பெற்றுள்ளார். அப்போதெல்லாம், தமிழ் ஈழம் தான் தீர்வு என்று கருணாநிதிக்கு தெரியவில்லையா?.இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில், இன்று ஒன்றும் தெரியாதவர் போல், தமிழ் ஈழம் தான் தி.மு.க.,வின் குறிக்கோள் என்று கூறுவது, யாரை ஏமாற்றுவதற்காக?. கருணாநிதி நடத்தும் கபட நாடகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் உலக தமிழர்கள் உணர்ந்தே இருக்கின்றனர்.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.





தினமலர் ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் Empty ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம்

Post by தாமு Thu Apr 28, 2011 7:38 am

சென்னை, ஏப்.27- ஈழத் தமிழர் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் தமிழினப் படுகொலை நடந்த பொழுதே இவை பற்றி நாம் எச்சரித்திருக்கிறோம். ஓரிரு நாட்களில் இலங்கையின் முப்படையினரும் 60,000 தமிழர்களை கொன்று குவித்தனர் என்று குறிப்பிட்டிருந்தோம். தற்போதைய ஐ.நா. சபையின் அறிக்கை சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. அந்த காலக் கட்டத்தில்தான் தமிழக முதல்வர் கருணாநிதி இடைவேளை உண்ணாவிரத நாடகம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கள இனவெறி அரசு இத்தகைய தமிழினப் படுகொலை நடத்துவதற்கு இந்தியா உறுதுணையாக இருந்தது என்பதே உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த கருத்தாகும். ஏற்கனவே சர்வதேச அரங்கில் சிங்கள இனவெறி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட பொழுதெல்லாம் இந்திய அரசுதான் தலையிட்டு காப்பாற்றி உள்ளது.

எனவே, மத்திய அரசின் ஆட்சியில் பங்கு வகிக்கும் தி.மு.கவிற்கும் சிங்கள இனவெறி அரசைக் காப்பாற்றியதில் கூட்டு பொறுப்பு உண்டு என்பதை நாடறியும்.

தற்பொழுது ஐ.நா. மன்றமே சிங்கள இனவெறி அரசு மனித உரிமை மீறி இருக்கிறது என்றும், அதிபர் ராஜபட்ச போர்க் குற்றவாளி என்றும் அறிவித்திருக்கிறது. இந்த போர்க் குற்றங்களுக்காக இந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் சிங்கள அரசின் இனவெறி அதிபர் ராஜபட்சயையும், அதன் ராணுவத்தையும் போர்க் குற்றம் புரிந்தவர்களாக வழக்குத் தொடுக்க வேண்டிய தீர்மானத்திற்கு இந்திய அரசு இப்பொழுதாவது ஆதரவு அளிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதும், மனிதாபிமான உரிமைகள் மீதும், தனக்கும் பற்று இருக்கிறது என்பதை இந்திய அரசு நிரூபித்து காட்ட வேண்டும். இது உலகமெல்லாம் இருக்கின்ற தமிழர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பும் இதுதான்.

இந்திய அரசு வழக்கம்போல் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்பட்டால் கருணாநிதி அதை எதிர்ப்பாரா? அல்லது மத்திய அரசின் துதிபாடியாக வழக்கம்போல் இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜனதா தளத்தின் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்றைய காங்கிரஸ் ஆட்சி வரை மத்திய அரசின் ஆட்சியில் சுமார் 25 ஆண்டுகள் முதல்வர் கருணாநிதி பங்கு பெற்றுள்ளார். அப்பொழுதெல்லாம் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தனி ஈழம்தான் தீர்வு என்பது தெரியவில்லையா?

அங்குள்ள தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டு அவர்கள் வாழும் பகுதிகள் சீரழிக்கப்பட்டுள்ளன. ஒன்றும் தெரியாதவர்போல் இன்று தமிழ் ஈழம்தான் தி.மு.கவின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ஏமாற்றுவதற்கு?

உண்மையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு துணை போய்விட்டு, இன்றும் நீலிக் கண்ணீர் வடிப்பது தமிழர்களை இன்னும் தொடர்ந்து ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கையிலா? கருணாநிதி நடத்தும் கபட நாடகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

ஆட்சி உங்கள் கையில், அதிகாரம் உங்கள் கையில், செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் கருணாநிதி உலகத் தமிழர்களை ஏமாற்றுகிறார்.


இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்


தினமணி ஈழத் தமிழர் விவகாரம்: கருணாநிதிக்கு விஜயகாந்த் கண்டனம் 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கருணாநிதிக்கு ராம கோபாலன் கண்டனம்
» உரிமை மீறல் பிரச்சினை: சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு கண்டனம்
» கலாம் என்றால் கலகமா... கருணாநிதிக்கு முஸ்லீம்கள் கடும் கண்டனம்
» அப்துல் கலாமை அழைக்க வில்லை கருணாநிதிக்கு அசல் தமிழர்கள் கண்டனம்
» டெசோ மாநாட்டில் தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட்டது ஏன்?: கருணாநிதிக்கு தமிழருவி மணியன் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum