ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

+4
உதயசுதா
balakarthik
ரபீக்
தாளையன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by தாளையன் Wed Apr 27, 2011 6:13 pm

அவன் என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறை வான வார்த்தையாகக் கருதப்படுகிற போது, முஸ்லிம்கள் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?
இது மார்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. மொழி, வரலாறு, பழக்க வழக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.


இது தமிழ் மொழி போன்ற சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை என்பது முதல் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய் மொழியான அரபு மொழியில் இத்தகைய நிலை ஏற்படாது.


அவன்' என்று ஒருவனைக் குறிப்பதற்கு அரபு மொழியில் ஹூவ' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அவர்கள்' என்று பலரைக் குறிப்பதற்கு ஹூம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் ஒருவனைக் குறிக்கும் போது மரியாதைக்காக ஹூம்' (அவர்கள்) என்று கூறவே மாட்டார்கள்.


அல்லாஹ் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது ஹூவ' (அவன்) என்று தான் குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான். தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது ஹூம்' (அவர்கள்) என்று அல்லாஹ் பயன்படுத்தவில்லை.


அது போலவே தீயவர்களான இப்லீஸ், ஃபிர்அவ்ன் போன்றவர்களுக்கும் ஹூவ' (அவன்) என்று தான் இறைவன் பயன்படுத்தியுள்ளான்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தாலும் ஹூவ'என்று தான் கூற வேண்டும். மரியாதைக்காக ஒருமையைப் பன்மையாக மாற்றுவது அரபு மொழியில் கிடையாது.


ஹூவ' (அவன்) என்ற குறிப்பிடும் போது 'பலரைப் பற்றிக் கூறப்படவில்லை. ஒரு நபரைப் பற்றி மட்டும் தான் கூறப்படுகிறது' என்று தான் அரபுகள் விளங்குவார்களே தவிர, அவர் மரியாதைக்குரியவரா அல்லவா என்பதை இவ்வார்த்தையிருந்து புரிந்து கொள்ள மாட்டார்கள்.


இதே போல் ஒருவரைக் குறிப்பிடுவதற்கு ஆங்கிலத்தில் ஐங் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. பலரைக் குறிப்பிடுவதற்கு பட்ங்ஹ் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.


ஒருவரைப் பற்றி குறிப்பிடும் போது மரியாதைக்காக பட்ங்ஹ் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதில்லை.


இன்னும் ஏராளமான மொழிகளிலும் இந்த நிலை தான் உள்ளது.


தமிழ் மொழியிலும் ஆரம்ப காலத்தில் இந்த நிலை தான் இருந்தது. அவன் என்பது ஒருவரைக் குறிக்கும். அவர் என்பது பலரைக் குறிக்கும். இது தான் தமிழ் இலக்கண விதி. நடைமுறையும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருந்தது.


ஒரு நபரைக் குறிப்பிடும் போது, பலரைக் குறிப்பிடுவதற் குரிய சொல்லை (அவர் என்ற பன்மைச் சொல்லை) மரியாதைக்காகப் பயன்படுத்துவது பிற்காலத்தில் வழக்கமானது. அதுவும் போதாதென்று பன்மையை மீண்டும் பன்மையாக்கி அவர்கள்' என்று பயன்படுத்துவதும் வழக்கத்திற்கு வந்தது. மரியாதை கொடுக்காத போது அவன் எனவும்,


மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை குறிப்பிடும் போது அவர் எனவும்,
அதிகம் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை அவர்கள் எனவும் பிற்காலத்தில் மாற்றி விட்டனர்.


மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர்கள் எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் அவன்' என்றே குறிப்பிடப்பட்டனர். இன்றும் கூட அவ்வாறே றிப்பிடப்படுகின்றனர்.


வள்ளுவன் சொன்னான், கம்பன் கூறுகிறான், ராமன் வில்லை ஒடித்தான் என்றெல்லாம் இன்றும் கூட குறிப்பிடப்படுவதைக் காணலாம்.


அது போலவே மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன், கடவுளைப் படர்க்கையாகக் குறிப்பிடும் போது அவன்' என்றும், முன்னிலையாகக் குறிப்பிடும் போது நீ' என்றும் தான் குறிப்பிடப்பட்டது. அதுவே இன்றும் தொடர்கிறது.


மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகமானதால் அவர்களைக் குறிப்பிடும் போது அவர்கள்' என மரியாதைப் பன்மையில் குறிப்பிட்டனர்.


கம்பன் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கூற மாட்டோம்.


கருணாநிதி சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்போம்.


மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்து விட்ட பின் கருணாநிதி வாழ்கிறார்; மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வராத காலத்தில் கம்பன் வாழ்ந்தான் என்பதே இதற்குக் காரணம்.


கடவுள் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு அல்ல. நபிகள் நாயகத்தை அவ்வாறு கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கருதுகிறோம்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு தான் தமிழ் இலக்கியத்தில் இடம் பிடித்தார்கள் என்பதே இதற்குக் காரணம்.


அல்லாஹ்வை அவன் என்று குறிப்பிடுகின்ற முஸ்லிம்கள் மற்ற எந்தச் சமுதாயமும் கடவுளுக்கு அளிக்கும் மரியாதையை விட அதிக மரியாதை அளிப்பதைக் காணலாம்.


எவ்வளவு துன்பங்கள் ஏற்படும் போதும் கடவுளைப் பற்றி தரக்குறைவாகப் பேசாத ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் தான். கடவுள் முன்னிலையில் பாடுவதும், ஆடுவதும், கூச்சல் போடுவதும், கடவுளைக் கிண்டலடிப்பதும் முஸ்லிம்களிடம் அறவே இல்லை.


கடவுளை அவன்' என்று குறிப்பிடுவது மரியாதைக் குறை வுக்காக அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


இன்னொரு காரணத்துக்காகவும் முஸ்லிம்கள் இறைவனை அவன்' என்று ஒருமையில் குறிப்பிடுகின்றனர்.
'அல்லாஹ் கூறினார்கள்' எனக் கூறும் போது நிறைய அல்லாஹ் இருப்பது போன்ற தோற்றத்தை அது ஏற்படுத்தி விடும். வார்த்தையில் காட்டும் மரியாதையை விட ஏகத்துவம் மிகவும் முக்கியமானதாகும்.அல்லாஹ்வை அவர்கள்' என்று கூறிப் பழகி விட்டால் நிறைய அல்லாஹ்கள் இருந்திருப்பார்களோ என்று எதிர்காலத்தில் நினைத்து விடலாம். அவ்வாறு நினைத்தால் இஸ்லாத்தின் அடிப்படையே வீழ்ந்து விடும்.


மரியாதையை விட ஒருவன் என்று கூறுவது தான் முக்கிய மானது என்பதால் அல்லாஹ்வை அவன்' என்று கூறுவதைத் தமிழ் கூறும் முஸ்லிம்கள் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டுள்ளனர்.


அதே சமயத்தில் மார்க்கத்தில் இப்படி எந்தக் கட்டளையும் இல்லை.


அல்லாஹ்வை அவர்' என்றோ நீங்கள்' என்றோ ஒருவர் கூறினால் மார்க்கத்தில் இது குற்றமாகாது. அவ்வாறு கூறும் உரிமை அவருக்கு உள்ளது.


மரியாதையை மனதில் வைத்து ஓரிறைக் கொள்கைக்கு பங்கம் வராமல் அவன்' எனக் கூறுவதே சிறந்தது என்பது நமது கருத்தாகும்.


நூலின் பெயர்:அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்
ஆசிரியர் : P.ஜைனுல் ஆபிதீன்

avatar
தாளையன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty Re: இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by ரபீக் Wed Apr 27, 2011 6:18 pm

தகவலுக்கு நன்றி நண்பரே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty Re: இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by balakarthik Wed Apr 27, 2011 6:23 pm

நல்ல விளக்கமான பதிவு , பகிர்வுக்கு நன்றி தாளையன்ர்சூப்பருங்க (நீங்கதான் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்து விட்ட பின் வந்தவராயிற்றே)


Last edited by balakarthik on Wed Apr 27, 2011 6:50 pm; edited 2 times in total


ஈகரை தமிழ் களஞ்சியம் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty Re: இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by உதயசுதா Wed Apr 27, 2011 6:25 pm

விளக்கமான பதிவுக்கு நன்றி தாளையன்


இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Uஇறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Dஇறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Aஇறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Yஇறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Aஇறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Sஇறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Uஇறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Dஇறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Hஇறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty Re: இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by Manik Wed Apr 27, 2011 6:42 pm

நல்ல பதிவு இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty Re: இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by செய்தாலி Wed Apr 27, 2011 6:46 pm

நல்ல பதிவு அறிய தகவல் தந்த தோழருக்கு மிக்க நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty Re: இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by அசுரன் Wed Apr 27, 2011 11:50 pm

தமிழ் மொழியிலும் ஆரம்ப காலத்தில் இந்த நிலை தான் இருந்தது. அவன் என்பது ஒருவரைக் குறிக்கும். அவர் என்பது பலரைக் குறிக்கும். இது தான் தமிழ் இலக்கண விதி. நடைமுறையும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருந்தது.


ஒரு நபரைக் குறிப்பிடும் போது, பலரைக் குறிப்பிடுவதற் குரிய சொல்லை (அவர் என்ற பன்மைச் சொல்லை) மரியாதைக்காகப் பயன்படுத்துவது பிற்காலத்தில் வழக்கமானது. அதுவும் போதாதென்று பன்மையை மீண்டும் பன்மையாக்கி அவர்கள்' என்று பயன்படுத்துவதும் வழக்கத்திற்கு வந்தது. மரியாதை கொடுக்காத போது அவன் எனவும்,


மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை குறிப்பிடும் போது அவர் எனவும்,
அதிகம் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை அவர்கள் எனவும் பிற்காலத்தில் மாற்றி விட்டனர்.


மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர்கள் எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் அவன்' என்றே குறிப்பிடப்பட்டனர். இன்றும் கூட அவ்வாறே றிப்பிடப்படுகின்றனர்.
நண்பரே! நீங்கள் தொகுத்த இந்த பதிவில் குறையிருக்கிறது என்று நினைக்கிறேன். ஆமாம், தமிழ் இலக்கணத்தை நீங்கள் தவறாக சித்தரித்துள்ளீரகள். அவன் அவர் இரண்டுமே படர்க்கை ஒருமை தான். அவர் என்பது பன்மை என்று சொன்னீர்கள் அதற்கு தகுந்த ஆதாரத்துடன் எனது குற்றசாட்டை பொய்யென ஆக்குங்களேன். இஸ்லாத்தில் இறைவனை அவன் என்று அழைப்பது பற்றி எந்த தவறும் இல்லை. ஆனால் தமிழில் உள்ள இலக்கணத்துடன் ஒப்பிட்டு சொன்னதில் தான் தவறு உள்ளது. இதோ விளக்கம் : நான் - தன்மை ஒருமை.
நாம், நாங்கள் - தன்மைப் பன்மை.
நீ - முன்னிலை ஒருமை.
நீர், நீவிர், நீங்கள் - முன்னிலைப் பன்மை.
அவன், அவள், அது - படர்க்கை ஒருமை
அவர்கள், அவை - படர்க்கைப் பன்மை.
நான், யான் - தன்மை ஒருமை.
நாம், யாம், நாங்கள் - தன்மை பன்மை.
நீ - முன்னிலை ஒருமை.
நீர், நீவிர், நீங்கள் - முன்னிலை பன்மை.
தான் - படர்க்கை ஒருமை.
தாம் - படர்க்கை பன்மை.

நான் சொல்லுவது தனக்குத் தெரியும்.
தான் சொன்னதைக் கேட்டீர்களா?
தான், தாம் என்னும் படர்க்கைப் பெயர்களுக்குப் பதிலாக அவன், அவள், அவர் என வழங்குதலே இன்றுள்ள பெரு வழக்காகும். கடைசி வரியை பாருங்கள் தான், தாம் என்னும் படர்க்கைப் பெயர்களுக்கு பதிலாக அவன் பயன்படுத்த சொல்லியிருக்கிறது இலக்கணம். அப்படியானால் நீங்கள் சொல்லும் அவன் என்ற சொல்லும் பன்மை தான். இல்லை என்று நீங்கள் சொன்னால் அவர் என்ற சொல்லும் ஒருமை தான். எப்படி என் வாதம் சரியா? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். அன்புடன் அசூரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty Re: இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by அசுரன் Wed Apr 27, 2011 11:56 pm

இது தமிழ் மொழி போன்ற சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை என்பது முதல் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.
தமிழ் மொழியில் எந்த பிரச்சனையும் இல்லை நண்பா! புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty Re: இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by தாளையன் Mon May 09, 2011 5:34 pm

நண்பரே,

என் தாமதமான பதிலுக்காக மன்னிக்கவும்.

தங்களின் இலக்கணப் புலமையை கண்டு வியக்கிறேன்.

தாங்கள் கூறியுள்ளதைப் போல, இங்கே தமிழ்மொழியை யாரும் குறைகூரவில்லை.

குறைகூrriரும் எண்ணம் ஆசிரியருக்கும் இல்லை என்றே கருதுகிறேன்.

ஆசிரியர் இங்கே குறிப்பிட்டுள்ளது அரபு மொழிkkukயில் ஹுவ என்று குறிப்பிடுவதும், தமிழில் “அவன்என அழைப்பதிலும் உள்ள வித்தியாசத்தைதான்.

அதிலும் இறுதியில் அவர் என்று அழைப்பதும் தவறு இல்லை என்றே முடிக்கிறாrrர்

ஆக இக்கட்டுரை இறைவனை “அவன்என்று அழைப்பதற்காக ஆசிரியர் தந்த விளக்கமே தவிர; தமிழை தவறு கூறுவதற்காக அல்ல....

ஓருவேளை ஆசிரியரின், இலக்கணப் புலமையும், கூறியுள்ள வரலாற்று சான்றுகளிலும் தவறு இருக்கலாம்.... ஆனால் எந்தவிதத்திலும் தமிழ்மொழியை தவறென்று கூறியிருக்க வாய்ப்பில்லை.

“குற்றச்சாட்டை பொய்யாக்குங்கள்என கூறியிருக்கிறீர்கள்.....உங்கள் வாதத்தை சரி என்று ஒப்புக்கொள்ளும் ஞானமே என்னிடம் இல்லாத போது நான் எப்படி அதை பொய்யெனக்கூறமுடியும்.
avatar
தாளையன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty Re: இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by அசுரன் Mon May 09, 2011 11:28 pm

நண்பரே! உங்கள் அமைதியான பதில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இறைவனை அவன் என்றழைப்பது எந்தவிதத்திலும் தவறில்லை. அருகாமைக்காகவே அவ்வாறு இருக்கலாம். உங்கள் மேலான பதிலுக்கு நன்றிகள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Empty Re: இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum