ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது

2 posters

Go down

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Empty தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது

Post by கண்ணன்3536 Mon Apr 25, 2011 2:02 pm

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது
திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011 08:13
இந்திய அரசாங்க மட்டத்தில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு இருந்தது. அதனால் பொதுமக்களின் உயிரிழப்புக்களை அது கண்டுகொள்ளவில்லை என இலங்கைக்கான ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.

பிபிசி சிங்கள சேவையான சந்தேசியவிற்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

போரின்போது முற்றுகையினால் ஓரிடத்தில் குவிந்த பொதுமக்களின் அவலங்களைப் போக்க ஐ.நா இன்னும் அதிகம் செய்திருக்க வேண்டும் என்று நிபுணர்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் ஐ.நா அதனை ஏன் செய்யவில்லை என்று எழுந்துள்ள கேள்விக்கு, இறுதிக் கட்டப் போர்க்காலத்தில் ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக முறையான மீளாய்வு ஒன்றைச் செய்வதன் மூலமே இதற்கான பதிலைப் பெறமுடியும் என்று கோர்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

அப்போது ஐ.நா பணியகம் ஆட்சேதங்கள் பற்றிய கணக்கெடுப்புகளை மேற்கொள்ள முயற்சித்தது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த போது இலங்கை அரசாங்கம் எதிர்த்தது. ஆட்சேதங்கள் எவ்வளவு, அது எப்படிக் கணக்கிடப்பட்டது என்பன போன்ற கேள்விகளை எழுப்பியது. இது எமது கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கையாகவே இருந்தது.

தம்மால் கனரக ஆயதங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும், பொதுமக்களின் இரத்தம் சிந்தப்படவில்லை என்றும் இலங்கை அரசாங்கம் வாதிட்டது.



ஆனால் அதற்கு முரணான வகையில் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை உள்ளது. பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறும் அந்த அறிக்கையில் அரசபடைகளின் எறிகணைத் தாக்குதல்களிலேயே அதிகளவு இழப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் கனரக ஆயுதங்களை அரசபடைகள் பயன்படுத்துகின்றன என்ற பலத்த சந்தேகம் ஐ.நாவுக்கு அப்போது இருந்தது. இறுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற வாக்குறுதியை உலகத் தலைவர்களுக்கு இலங்கை அரசு வழங்கியது. ஐ.நா பொதுச் செயலாளருக்கும் அந்த வாக்குறுதியை அளித்தது.

2009 ஜனவரி தொடக்கம் மே வரையான இறுதி 5 மாதங்களில் பலமுறை மீண்டும் இந்த வாக்குறுதியை அளித்த போதும் அவையெல்லாம் வெறும் பொய்களாகவே இருந்தன.

ஆனால் கனரக ஆயுதங்களைத் தொடர்ந்தும் இலங்கை அரசு பயன்படுத்தி வந்தது என்பது இறுதியில் தெளிவாகத் தெரியவந்தது.



பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தடுக்க ஐ.நா இன்னும் கடுமையான அழுத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. இதை நான் தனிப்பட்ட முறையில் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளேன்.

ஐ.நாவைப் பொறுத்த வரையில் இலங்கை விவகாரம் தொடர்பாக அதன் உறுப்பு நாடுகளிடத்தில் ஒருமித்த கருத்து இருக்கவில்லை என்றே கூற வேண்டும். ஐ.நா பாதுகாப்புச் சபைக்குள்ளேயும் எதுவும் நடக்கவில்லை.

மனிதஉரிமைகள் பேரவைக்குள்ளேயும் எந்தவொரு முயற்சிகளும் இடம்பெற்றதாக எமக்குத் தென்படவில்லை. ஐ.நா தலைமைச் செயலகத்தில் என்ன நடக்கிறது என்பது கூட வெறும் ஊகத்துக்குரியவையாகவே இருந்தன.

ஐ.நா என்பது ஒர் இராணுவ நோக்கத்துக்கான அணியோ அல்லது அரசியல் ரீதியான அமைப்போ அல்லது கண்காணிப்புப் பொறிமுறையோ அல்ல.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஐ.நாவுக்கு அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்குரிய பங்கே உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அத்துடன் ஐ.நாவிடம் இருந்து பெரும் தலையீடுகள் எதுவும் ஏற்படுவதை அந்தக் காலகட்டத்தில் இலங்கை அரசு விரும்பவில்லை.

எனவே இறுக்கமானதும், அரசாங்கத்தினது கடும் அழுத்தங்களுக்கும் மத்தியில் இருந்து கொண்டு தான் ஐ.நாவின் மனிதநேய நிறுவனங்கள் செயற்பட வேண்டியிருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற போரில் பல்வேறு நாடுகள் பங்குபற்றியிருந்தன. அரசுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்புகளை வழங்கிய நாடுகள் மற்றும் உதவுவதில் எல்லா வகையிலும் முன்னின்ற நாடுகள், குறிப்பாக இந்தியா என்று நீண்ட பட்டியலே உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை சுதந்திர காலம் முதல் இலங்கையுடன் உறவுமுறை உள்ளது. 21ம் நூற்றாண்டில் இலங்கையுடனான செல்வாக்கை இந்தியா இழந்து வருகிறது என்றே கூற வேண்டும்.

இந்த விடயத்தில் சீனா மிக வேகமாக இலங்கையுடன் நெருங்கி வருகிறது. இந்த விடயத்தில் இந்தியா சற்றுக் குழப்பிப் போயுள்ளது. அதனால் இலங்கைக்கு உதவிசெய்து கொண்டு வருகிறது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கைக்கு பல்வேறு புலனாய்வு உதவிகளை வழங்கியுள்ளது.

போர் வலயத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி விபரங்களும் அதற்குத் தெரிந்திருந்தது. இந்தியாவுக்கு பாதுகாப்பு வலயங்களுக்குள்ளேயும் புலனாய்வு வசதிகள் இருந்தன என்று தான் நான் நம்புகிறேன்.

அங்கிருந்த இழப்புகள் பற்றி இந்தியாவுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதன் விகிதாசாரங்கள் குறித்து அது கணித்துக் கொண்டிருந்தது. இந்திய அரசாங்க மட்டத்தில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு இருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பான மத்தியஸ்த நடவடிக்கைளில் நான் ஈடுபட்டிருக்கவில்லை. அந்தக்கட்டத்தில் உயர்மட்டம் முதல் அடிமட்டம் வரை பலதரப்பினருக்கிடையில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டிருந்தன.

கடைசி வாரத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் பௌதிக ரீதியில் பிரிந்து காணப்பட்டது. பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து அவர்கள் வெவ்வேறான திசைகளில் தப்பிச் செல்ல முற்பட்டார்கள்.



புலிகளின் தலைவர்கள் சரணடையும் விவகாரத்தில் விஜய் நம்பியாரும் ஈடுபட்டிருந்தார் என்ற தகவல் உள்ளது. அதில் சூழ்ச்சிகள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. அங்கு ஏதும் சூழ்ச்சிகள் தேவைப்பட்டிருக்கும் என்று நான் கருதவில்லை. எஞ்சியுள்ள தலைவர்களை சரணடையுமாறு தூண்டுதல் ஒன்று கொடுக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன். அவர்கள் சரணடைந்தனர்.

ஆனால் சில காரணங்களுக்காக கொல்லப்பட்டு விட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று என்று பிபிசி சந்தேசியவிற்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Empty Re: தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது

Post by Guest Mon Apr 25, 2011 5:32 pm

நல்லது .... எங்கே சென்றீர்கள் கண்ணன் ..தொடர்ந்து பதிவு இடுங்கள் ...

உண்மை கள் வெளி வரட்டும் தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  224747944
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Empty Re: தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Apr 26, 2011 9:45 am

மத்தியில் மலையாளிகள் ஆதிக்கம் இருக்கும் வரை தமிழனுக்கு எல்லாம் கடினம்......


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது  Empty Re: தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum