ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு

+13
தாமு
ஆளுங்க
ஷர்மிஅஷாம்
கலைவேந்தன்
Aathira
சிவா
Tamilzhan
அன்பு தளபதி
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
அருண்
ரபீக்
balakarthik
17 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  Empty மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு

Post by balakarthik Sat Apr 16, 2011 12:02 pm

முன்குறிப்பு :- எம்ஜிஆர் படம் வரை தெரியும். அதற்கு முந்தைய டிரெண்ட் எனக்கு தெரியவில்லை. அம்மாவிற்கோ, நண்பனுக்கோ ஹீரோ ஒரு சத்தியம் செய்து கொடுத்துவிட, அதை தெரிந்துக் கொண்டு வில்லன் ஹீரோ முன்னாடி அட்டகாசம் செய்ய, ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோவால் பொறுக்க முடியாமல் சத்தியத்தை மானசீக வாபஸ் பெற்று களத்தில் இறங்க, அங்கே தொடங்கும் ஒரு ஃபைட். இப்படித்தான் இந்த ஏப்ரல் மாதம் முழுக்க ஈகரை பக்கம் வரமாட்டேன் என நான் நண்பனிடம் சொல்லிவைக்க, அப்படியே அதை ஃபாலோ செய்து மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த மாலையில் தோழி ஒருவர் வந்து படத்திற்கு அழைக்க, தவிர்க்க முடியாமல் நானும் சென்றுவிட, இதோ இப்பொழுது இந்தக் கருமத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

பத்தி 1ன் பின்குறிப்பு: விமர்சன சூறாவளி கலை அண்ணனின் சட்டப்படி முதல் பத்தி இப்படித்தான் “செய்ய,இறங்க,ஓட,முடிக்க” என கமா போட்டு எழுத வேண்டுமாம். மொத்த பத்தியும் இரண்டு வாக்கியங்களில் எழுதி விட வேண்டுமாம்.

மாப்பிள்ளை என்றொரு திரைக்காவியத்தை கண்ட நான் இங்கே உங்கள் முன்னால் பரோலில் வெளிவந்த கைதி போல் நிற்கிறேன். நான் பட்ட பாட்டை படிக்கும் நீங்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். இது நீங்கள் எனக்கு செய்யும் உதவி இல்லை. கடமை. பெரு நாட்டில் இப்படி ஒரு படம் பார்த்துவிட்டு வந்து இரவு நேரமென்றும் பார்க்காமல் எழுதும் எழுத்தாளானை அம்மக்கள் கொண்டாடுகின்றனர்.. தமிழ்நாடு லைட்டை ஆஃப் செய்யுடா கஸ்மாலம் என்று பக்கத்து வீட்டுக்காரன் திட்டும் அளவிலே இருக்கிறது. என் வாழ்வில் மிகப்பெரிய இரண்டு சாபக்கேடுகள் இருக்கின்றன. ஒன்று இந்த விடியா தமிழகத்தில் பிறந்தது, இரண்டாவது மாப்பிள்ளை போன்ற ஆகாவலி படங்களை பார்த்து தொலைப்பது.


மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  Z

மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? அது சூப்பர்ஸ்டார் நடித்த சூப்பர் ஹிட் படமாச்சே என்பவர்களுக்கு.. ஆம். அது உண்மைதான். மறுக்கவில்லை. ஆனால் ரஜினியின் மாப்பிள்ளை நடித்த இந்த மாப்பிள்ளை மாமனாரின் ஆல் டைம் பெஸ்ட் மொக்கையான குசேலனை சூப் வைத்து குடித்துவிடுகிறது. வீட்டோடு மாப்பிள்ளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் தியேட்டரோடு மாப்பிள்ளை மட்டும் கூடவே கூடாது என சூப்பர்ஸ்டாரின் காதுகளில் யாரேனும் கூவிவிடுங்கள். வழக்கமாக ஒரு மொக்கைப்படம் வந்தால் ரசிகர்கள் கேட்கும் பொதுவான கேள்வி “கதையை கேட்டானா இல்லையா?”. இரண்டு மாப்பிள்ளையின் கதையும் ஒன்றுதான். உடனே ”அப்புறம் ஏன் கதை என சுராஜ் தன் பெயரைப் போட்டுக் கொண்டாரென” என்னிடம் கேட்காதீர்கள். நான் அவ்விஷயத்தில் வைகோவைப் போல கையாலாகதவனாக இருக்கிறேன். விஷயம் என்னவென்றால் தமிழ் மசாலா படத்திற்கு தேவை கதை இல்லை. திரைக்கதையும், அதை தாங்கும் நடிகர்களும். இதில் தனுஷ் என்ற 4 எலும்பும் 2 மீட்டர் தோலும், மனிஷா கொல்றாடா என்பவரும், ஹன்சிகா முட்டிக்கோநீ என்பவரும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஆசிஷ் வித்யார்த்தியும் அவர்தம் அழகிய ஒட்டுமீசையும் கூட உண்டு.

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  Download_latest_mappillai_tamil_mp3_songs_free

கதைதான் ஒரு படத்திற்கு முக்கியம் என்னும் அறிவுசீவிகள் “கைப்புள்ள. ஏமாறாத” என ஆட்காட்டி விரலை தன்னை நோக்கி காட்டி உஷாராகும் வடிவேலுவை நினைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் இண்டெக்ஸ் ஃபிங்ரின் நெய்பரை காட்டிக் கொள்ளலாம். இப்போது பார்த்தாலும் சுவாரஸ்யப்படுத்தும் கதையை கந்தலாக்கி, அதை வெள்ளாவியில் போட்டு இன்னும் கசக்கி, அதை நாய்க்குட்டிக்கு போட்டு அழகுப்பார்த்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, செகண்ட் யூனிட் டைரக்‌ஷன், சிறப்பு சப்தம் பற்றியெல்லாம் நான் எழுதினால் பெரு நாட்டில் மட்டுமல்ல, சிறு நாட்டிலும் ஏளனம் செய்வார்கள். படத்தில் ஒரு ஆறுதலான விஷயம், தனுஷிற்கு வரும் கோவமெல்லாம் லாஜிக்கிலாக இருக்கிறது. தல அஜித் படம் பார்க்க சென்று, டிக்கெட் கிடைக்காமல் மேனஜருடன் சண்டைப் போட்டு பொட்டியை தூக்கி வந்துவிடுகிறார். அங்கே இயக்குனர் அற்புதமான ஒரு குறியீட்டை வைத்திருக்கிறார். ”தல படத்துக்கே டிக்கெட் கிடைக்கலைன்னா, எப்படி மத்த படத்துக்கு கிடைக்கும்?.” (இதுல எதுவும் உள்குத்து இல்லை எபதை நான் உறுதியுடன் கூறிகொள்கிறேன்)

மாப்பிள்ளை. பேரையாவது மாத்தியிருக்க வேண்டாமா? இப்போதோ எப்போதோ, இன்றோ நாளையோ மாப்பிள்ளையாக காத்திருக்கும் என்னைப் போன்றவர்கள் இந்தப் படம் பார்த்து தவறான முடிவுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது? போகட்டும். கெளசல்யா போன்ற மொக்கை ஃபிகரிடமும் கூட ஏதாவது ஒண்ணு நல்லா இருக்குமே! இந்தப் படத்தில் அப்படி ஏதுமில்லையா என நீங்கள் நினைக்கலாம். என்னோட ராசி நல்ல ராசி என்றொரு பாடல். அப்படியே ரீமிக்ஸ் தான். ஆனால் மெட்டை மாற்றாமல் பீட்டை மட்டும் மாற்றி கலக்கியிருக்கிறார். இதே ஃபார்முலாவை சுராஜும் பின்பற்றியிருந்தால் நான் நிம்மதியாக தூங்கியிருப்பேன். எல்லாம் விதியென போக முடியவில்லை.

பிகு: எல்லா பத்திக்கும் தனியே பின்குறிப்பு போடுகிறானே!! என்ன விஷயம் என யூகித்தீர்களா? ஆம். படத்தில் பெரும்பாலான “ட்விஸ்டுகள்” முதலில் காட்டப்படுகின்றன. அதன் பின் சம்பந்தப்பட்டவர்களின் பாயிண்ட் ஆஃப் வியூவில் அது விளக்கபப்டுகிறது. இந்த த்ராபையான டெக்னிக்கை ஏதோ க்ரையோஜீனிக் இஞ்சினை கண்டுபிடித்தது போல் பெருமையாக காட்ட முயல்கிறார் இயக்குனர். அதே போலதான் நானும் அந்தந்த பத்திக்கு தொடர்புடைய விளக்கங்களை அங்கங்கே சொல்லிவிட்டேன்.

கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன். மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென்றால் மோசர்பியரில் 30 ரூபாய் சிடியை என் சொந்த செலவில் வாங்கித் தருகிறேன். தயவு செய்து இதை பார்க்க வேண்டாம். பக்கத்தில் பைபிளோ, கீதையோ இல்லை. அதில் கைவைத்து சொல்வதாக நினைத்துக் கொள்ளுங்கள் “சத்தியமாக இனிமேல் நான் தனுஷ் ரசிகன் என சொல்லிக்கொள்ள மாட்டேன். ஆடுகளம் போல ஆறு படம் நடித்தாலும் இச்சத்தியம் ஆக்டிவாக இருக்கும்”. ஆமென்.



ஈகரை தமிழ் களஞ்சியம் மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  Empty Re: மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு

Post by ரபீக் Sat Apr 16, 2011 12:09 pm

படம் பார்த்து இன்னும் என்னால் பழைய நிலைக்கு வரமுடியவில்லை நன்பா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  Empty Re: மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு

Post by அருண் Sat Apr 16, 2011 12:49 pm

கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன். மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென்றால் மோசர்பியரில் 30 ரூபாய் சிடியை என் சொந்த செலவில் வாங்கித் தருகிறேன். தயவு செய்து இதை பார்க்க வேண்டாம்.
சிரிப்பு

கலக்கலான விமர்சனம் பாலா! இந்த படத்தின் மூலம் தனுஷின் இமேஜ் கீழே வந்து விட்டது............. மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  Empty Re: மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு

Post by balakarthik Sat Apr 16, 2011 1:07 pm

அருண் wrote:
கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன். மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென்றால் மோசர்பியரில் 30 ரூபாய் சிடியை என் சொந்த செலவில் வாங்கித் தருகிறேன். தயவு செய்து இதை பார்க்க வேண்டாம்.
சிரிப்பு

கலக்கலான விமர்சனம் பாலா! இந்த படத்தின் மூலம் தனுஷின் இமேஜ் கீழே வந்து விட்டது............. மகிழ்ச்சி

அது எப்போ மேல இருந்தது கீழே வருவதற்கு ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  Empty Re: மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு

Post by மகா பிரபு Sat Apr 16, 2011 1:38 pm

உங்களுடைய மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது நண்பா. நல்ல வேளை மன்மதன் அம்பு படத்திற்கு பிறகு எந்த புதுப்படமும் நான் பார்ப்பதில்லை. இணையதள விமர்சணம் மட்டுமே படிக்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  Empty Re: மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 1:41 pm

செம்ம அட்டகாசம் பண்ணிட்டு இருக்கே பாலா...... எப்டி பாலா??

சிடி வாங்கி எனக்கு அனுப்பிடு பாலா.... அட்ரெஸ் தரவா?? எதுக்கா எங்க மானேஜர் ரொம்ப ரொம்ப கேட்டுட்டு இருக்கார் பாலா... மாப்பிள்ளையோட மாப்பிள்ளை நடிச்ச படம் பார்க்கனும்னு அதுக்கு தான், எங்களுக்கும் லீவ் வேணும்ல? சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  Empty Re: மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 1:42 pm

balakarthik wrote:
அருண் wrote:
கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன். மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென்றால் மோசர்பியரில் 30 ரூபாய் சிடியை என் சொந்த செலவில் வாங்கித் தருகிறேன். தயவு செய்து இதை பார்க்க வேண்டாம்.
சிரிப்பு

கலக்கலான விமர்சனம் பாலா! இந்த படத்தின் மூலம் தனுஷின் இமேஜ் கீழே வந்து விட்டது............. மகிழ்ச்சி

அது எப்போ மேல இருந்தது கீழே வருவதற்கு ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ஒரு மார்க்கமா தான் இருக்கே போல பாலா... ஒன்னும் புரியல


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  Empty Re: மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு

Post by ரபீக் Sat Apr 16, 2011 1:43 pm

மஞ்சுபாஷிணி wrote:செம்ம அட்டகாசம் பண்ணிட்டு இருக்கே பாலா...... எப்டி பாலா??

சிடி வாங்கி எனக்கு அனுப்பிடு பாலா.... அட்ரெஸ் தரவா?? எதுக்கா எங்க மானேஜர் ரொம்ப ரொம்ப கேட்டுட்டு இருக்கார் பாலா... மாப்பிள்ளையோட மாப்பிள்ளை நடிச்ச படம் பார்க்கனும்னு அதுக்கு தான், எங்களுக்கும் லீவ் வேணும்ல? சூப்பருங்க

என்ன ஒரு வில்லத்தனம் ???


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  Empty Re: மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு

Post by அன்பு தளபதி Sat Apr 16, 2011 2:01 pm

அப்போ பொன்னர் சங்கருக்கும் மாப்பிளைக்கும் செம போட்டி எது சூப்பர் மொக்கைனு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  Empty Re: மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு

Post by Tamilzhan Sat Apr 16, 2011 2:07 pm

இந்த படம் பார்க்க போன என் நண்பர் விவேக்கின் காமெடியை பார்த்து தலையில் இருந்த நாலு முடியையும் பிடிங்கிபோட்டுடார் அவர பார்க்கவே காமெடியா இருக்கு அப்போ மாப்பிள்ளையும் காமெடி படம்தானே..? சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு  Empty Re: மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum