ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!''

+4
கண்ணன்3536
சிவா
முரளிராஜா
மஞ்சுபாஷிணி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!'' Empty நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!''

Post by மஞ்சுபாஷிணி Fri Apr 15, 2011 10:44 am

நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!''
எளிமையாக இருக்கிறது அந்தப் புத்தகம்... ஏனெனில், அது மதுரை

மாவட்ட ஆட்சியரான சகாயம் என்ற எளியவரைப் பற்றியது!
ஏறுவெயில், கூளமாதாரி, நிழல் முற்றம், கங்கணம் ஆகிய புத்தகங்களின் மூலமாகக் கலைத்தன்மை சார்ந்த யதார்த்த எழுத்துக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் பெருமாள் முருகன். சகாயம் குறித்து இவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து, 'சமூக மாற்றத்துக்கான சிந்தனையாளர் வட்டம்’ ஒரு புத்தக​மாக வெளியிட்டுள்ளது. 'சகாயம் செய்த சகாயம்’ என்கிற இந்த நூல், அவருக்கு எதிரான தரப்புக்கு அக்மார்க் சவுக்கடி!

இதுவரை சகாயம் ஆற்றிய பணிகளைப் பட்டியல் இட்டு, 'இப்படிப்பட்ட நேர்மை​யான அதிகாரி​யைக் குறை கூற யாருக்கும் எந்தத் தகுதியும் இல்லை’ என்று பொட்டில் அடித்தாற்போல போட்டுத் தாக்குகிறது!

''நாமக்கல் ஆட்சியராக சகாயம் இருந்த நேரத்தில், ஒரு கிராமத்தில் குறைதீர்க்கும் கூட்டம் முடிந்து திரும்பினார். வழியில் காட்டு வேலை செய்துகொண்டு இருந்த வயதான தம்பதியைப் பார்த்தவர், உடனடியாக காரில் இருந்து இறங்கி, 'கலெக்டர் ஊருக்கு வர்றாருன்னு தெரிஞ்சும், காட்டு வேலைதான் முக்கியம்னு உழைக்கிற உங்களோட உழைப்புக்கு என் சின்ன மரியாதை இது!’ என்று சொல்லி, அவர்களின் காலில் விழுந்து வணங்கினார். பின் அவர்களோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். பெருந்தலைவர்கள் புகைப்படங்கள் அலங்கரித்த ஆட்சியர் அலுவலகத்தில், உழைப்பின் ஓர் உன்னத அடையாளமாகத் திகழும் அந்த சாதாரண மனிதர்களோடு தான் இருக்கும் புகைப்​படத்தையும் மாட்டி அழகு பார்த்தவர் சகாயம்! ஆனால், வாக்குக் கேட்க மட்டுமே கிராமங்களுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு இப்படிப்பட்ட ஏழை மக்களின் மகத்துவம் புரியுமா?

ஓர் அரசுக் கல்லூரி விடுதியில் மாணவர்கள் வாளியைத் தூக்கிக்கொண்டு உணவு வாங்கப் போனதைப் பார்த்து அதிர்ந்த சகாயம், அந்த விடுதியில் மாணவர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்டுப் பார்த்தார். அதன் தரம் மிக மோசமாக இருக்க... 'ஏழை மாணவர்கள் பணத்தை நீ முழுங்கலாமா?’ என்று உடனடியாக விடுதிக் காப்பாளரை தற்காலிகப் பணிநீக்கம் செய்தார்!

சகாயம் பொறுப்பில் இருந்த வரையில்,நாமக்கல் மாவட்டத்தின் வழியாக ரேஷன் அரிசி கடத்தலே நடத்த முடியாத அளவுக்குக் கட்டுப்படுத்தினார். அந்த லாரிகளை முனியப்ப சாமிபோல நடு ரோட்டில் வழி மறித்து நின்று தடுத்தார். அந்தத் துணிவு யாருக்கு வரும்?

தமிழின் பேரைச் சொல்லித் தமிழனின் தலையில் எத்தனையோ பேர் மிளகாய் அரைக்கிறார்கள். ஆனால், சகாயம் உண்மையான தமிழ்ப் பற்றாளர். அரசு அலுவலகங்களில் பாரதிதாசன் பாடல் வரிகள், திருக்குறள் எழுதிவைக்க ஏற்பாடு செய்தார். தமிழ் அறிஞர்களுடன் நட்பு பாராட்டினார். எந்த ஊருக்குச் சென்றாலும், அங்கு உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று சோதனை செய்வது சகாயத்தின் வழக்கம். அப்போது அங்கு படிக்கும் மாணவர்களில், தமிழ்ப் பெயர்கொண்ட மாணவர்கள் யார் என்று கேட்டு, பாராட்டுவார்!

மாவட்ட ஆட்சியராக இருப்பவர், மாவட்ட நிர்​வாகத்தை கவனிப்பதுடன், சுயமாக செயல்பட்டு, சில திட்டங்​களைத் தீட்டுவதற்கும், அதை நடைமுறைப்படுத்துவதற்கும் அவருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது! இதைச் செயலில் காட்டி​யவர்தான் சகாயம். சிலருக்கு அனுசர¬​ணயாக இருந்து, தான் இருக்கிற இடம் தெரியாமல் ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் காலம்​கழிக்கும் சராசரி ஆட்சியர் அல்ல அவர்!

'கிராமத்தில் தங்குவோம், உழவர் உணவகம், ஊன்றுகோல் திட்டம், தொடுவானம்’ போன்ற அற்புதமான திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்​படுத்தியவர். மக்களின் ஆட்சியராக, அவர்கள் மனங்களில் நிறைந்து மாவட்டத்தை நிர்வகித்து வரும் அந்த நல்லவர் மீதுதான் இன்று அரசியல் சேற்றை வாரி இறைக்கிறார்கள்.

'சகாயம் அ.தி.மு.க-வினர் போல செயல்படுகிறார்’ என்று அழகிரி கூறுகிறார். திருமங்கலம் ஃபார்மூலா நாயகரான அழகிரிக்கு, இப்போது நடக்கும் தேர்தலில் பணம் விநியோகிக்க முடியாத ஆத்திரம். அதனால்தான், சகாயத்துக்கு எதிராக என்னென்னவோ கூறி, மனரீதியான தொந்தரவை அவருக்குக் கொடுக்கப் பார்க்கிறார். ஆனால், இந்த வேலைகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டார் சகாயம்!’ என்கிறது அந்தப் புத்தகம்!

இந்த நூல் வெளியிட்டுள்ள சமூக மாற்றத்துக்கான சிந்தனையாளர் வட்டத்தின் ஸ்டாலின் ராஜாங்கம், ஜெ.பாலசுப்ரமணியம், ஜெகநாதன் ஆகியோர் கூட்டாக, ''ஓர் இக்கட்டான சூழலில் சகாயம் மதுரை ஆட்சியராகப் பொறுப்பேற்று உள்ளார். இன்றைய சூழலில் உள்ளீடாக சாதியும், வெளிப்படையாகப் பணமுமே தேர்தலைத் தீர்மானிக்கின்றன. இந்த இழிநிலையை மாற்ற நினைப்பவர் சகாயம். எனவே, தி.மு.க. திரும்பவும் 'திருமங்கலம் ஃபார்மூலா’வைக் கையாள முடியாதபடி, மதுரை மாவட்டத்தில் இரவு பகலாகத் தீவிர சோதனைகள் நடத்துகிறார். அவரை முடக்க நினைத்து, பொய்ப் புகார் கூறியவர்களுக்கு, புலி வேகப் பதிலடிதான் இந்தப் புத்தகம். 'சகாயத்துக்கு ஒரு பிரச்னை என்றால், குரல்கொடுக்க ஆள் இருக்கிறோம்’ என்று சிலருக்கு உணர்த்தவே இந்த வெளியீடு!'' என்று சூடாகச் சொல்கிறார்கள்.

நேர்மையின் துணையோடு நியாய​மாகச் செயல்படும் ஒரு நல்ல அதிகாரிக்கு இந்தப் புத்தகம் ஆதரவு மட்டுமல்ல... ஆயுதமும்கூட!

- தி.கோபிவிஜய்

நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!'' 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!'' Empty Re: நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!''

Post by முரளிராஜா Fri Apr 15, 2011 10:59 am

சகாயத்தை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!'' Empty Re: நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!''

Post by சிவா Fri Apr 15, 2011 11:08 am

அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக இருக்கும் அரசு அதிகாரிகளிடையே, துணிச்சலும், திறமையும் மிக்க மாவட்ட ஆட்சியர் திரு சகாயத்தின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது! இவரைப் பார்த்தாவது மற்ற அரசு அதிகாரிகள் திருந்தட்டும்.

இவர் தனியாள் இல்லை, இவருக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம் என்ற எச்சரிகையை வழங்கிய புத்தக வெளியீட்டாளர்களுக்கு எனது ஆதரவுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!


நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!'' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!'' Empty Re: நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!''

Post by கண்ணன்3536 Fri Apr 15, 2011 11:54 am

எனக்கும் அவர் துணிச்சல் பிடித்திருந்தது.அந்த புத்தகத்தை மின்னுலில் தந்தால் நன்று .யாராவது முயலுங்கள்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!'' Empty Re: நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!''

Post by மகா பிரபு Fri Apr 15, 2011 3:18 pm

இந்தியாவில் மிகவும் மரியாதைக்குரிய படிப்பாகவும், யாராலும் எளிதில் வெற்றி பெற இயலாத தேர்வாகவும் இருப்பது தான் ஐஏஎஸ். ஆனால் இவ்வளவு மரியாதைக்குரியவர்கள் படிக்காத அரசியல்வாதிகளின் காலில் சிக்கிய கால் பந்தாக இருப்பது தான் வேடிக்கை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!'' Empty "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!"

Post by positivekarthick Fri Apr 15, 2011 5:43 pm

"ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்...' புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போதே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, "ஹீரோ' மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார். சிறுவனாய் இருந்தபோது முளைத்த, "கலெக்டர் கனவு' நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம். தர்மபுரியில் பயிற்சி கலெக்டர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ., திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர், கோவை கலால் பிரிவு துணை கமிஷனர், சென்னை, டி.ஆர்.ஓ., தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநில தேர்தல் ஆணைய செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட கலெக்டர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர், மதுரை கலெக்டர் என, இவர், "பந்தாடப்பட்ட' விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.

பதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில:

* அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், "தோழனாக' மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.

* காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, "பெப்சி' குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, "சீல்' வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார்.

* கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், "சிண்டிகேட்' முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, "செக்' வைத்தார்.

* அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, "ரெய்டு' நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

* சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.

* தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்' என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, "இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்' என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, "நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்' என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.

* நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார்.

* இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'
நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!'' A>
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!'' Empty Re: நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!''

Post by Guest Fri Apr 15, 2011 6:16 pm

சூப்பருங்க சகாயம் அண்ணனுக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு உள்ளது... பதிவிற்கு நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!'' Empty Re: நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!''

Post by மகா பிரபு Fri Apr 15, 2011 8:59 pm

தங்கள் சேவை
தமிழ்நாட்டுக்குத் தேவை.
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!'' Empty Re: நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!''

Post by கலைவேந்தன் Fri Apr 15, 2011 9:23 pm

சூப்பருங்க சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!'' Empty Re: நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!''

Post by கண்ணன்3536 Sat Apr 16, 2011 10:06 am

சூப்பருங்க நம்ம தமிழனா ?புல்லரிக்குதப்பா .வாழ்த்துக்கள் நீங்கள் நிஜ கதாநாயகன் அவ்வளவுதான் .
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!'' Empty Re: நல்லவருக்கு ஆதரவு.. கெட்டவருக்குப் பதிலடி!''

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum