ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_m10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10 
VENKUSADAS
ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_m10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_m10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10 
VENKUSADAS
ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_m10ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி?

+2
கலைவேந்தன்
தாமு
6 posters

Go down

ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Empty ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி?

Post by தாமு Sun Apr 10, 2011 6:50 pm

பழ.கருப்பையா
''கோட்டைக்குச் செல்ல வேண்டியவர் இல்லை கருணாநிதி. டெல்லி



திகார் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டியவர்!
அடித்துக் கொடுத்த ஆ.ராசா சிறைச்சாலையில் இருக்கும்போது, அடிக்கச் சொன்ன கருணாநிதி வெளியே இருப்பது நியாயமா? கருணாநிதி மட்டும் அல்ல... கருணாநிதியோடு பங்கிட்டுக்கொண்ட மகள் கனிமொழியும் துணைவி ராஜாத்தியும் இருக்க வேண்டிய இடமும், திகார் சிறைச்சாலை​தான்!

உலக வரலாற்றிலேயே எந்த ஜனநாயக நாட்டிலும் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்ற அளவுக்கு இவ்வளவு பெரிய தொகை கொள்ளை போனது இல்லை. இவருக்கு ஒரு கட்சி, இவ்வளவுக்கும் பிறகு ஒரு கூட்டணி. வெட்கம் இல்லாமல் கருணாநிதியின் பெயரால் வாக்குக் கேட்கிற கூட்டணிக் கட்சிக்காரர்கள், தங்களின் சுய மரியாதையை மட்டும் அல்ல, சுரணையையும் இழந்துவிட்டார்களோ என்று ஐயுறுகின்றேன்!

இன உணர்வுக்காகவும் மொழி உணர்வுக்காகவும், அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி, சோனியாவுடனும் ராஜபக்​ஷேவுடனும் சேர்ந்து, ஈழத்தை மயானமாக்கிய​போதே, அந்தக் கட்சி வாழ்வதற்கான தகுதியை இழந்துவிட்டது. தமிழினம் அறிந்த மிகப் பெரிய துரோகிகளில் முதலானவர், கோபாலபுரத்துக் கருணாநிதி. இரண்டாமவர் ஈழத்துக் கருணா. இவர்களை வரலாறு மன்னிக்காது!

அண்ணா, தன்னை அறியாமல் தமிழ்நாட்டுக்குச் செய்த தீமை... கருணாநிதி வளர இடம் கொடுத்தது. எம்.ஜி.ஆர். அறிந்தே தமிழ்நாட்டுக்குச் செய்த நன்மை... அம்மாவை அரசியலில் வளர்த்தது!

ஈழத் தமிழர்களின் உயிர்கள் மட்டும் அல்ல... தமிழ் மீனவர்களின் உயிரும் பறிபோவதற்குக் கருணாநிதிதான் காரணம். இனத்தின் மீது அவருக்கு அக்கறை இல்லை. கருணாநிதி ஆட்சியின் எழுதப்படாதக் கொள்கை... 'நாட்டைச் சுரண்டுவதுதான்’. அதனால்தான் ஆறுகளை எல்லாம்கூட கட்டாந்தரைகளாக்கிவிட்டார்கள். இவர்கள் சுரண்டிய மணல் மீண்டும் ஊற 500 ஆண்டுகள் ஆகும்!

'நான் தொலைக்காட்சிப் பெட்டி தரவில்​லையா?’ என்கிறார் கருணாநிதி. ஒன்றரைக் கோடி தொலைக்காட்சிப் பெட்டிகளை வீதியில் போகின்ற, வருகின்றவர்களுக்கு எல்லாம் விரட்டி விரட்டிக் கொடுத்தார். அது யாருடைய நன்மைக்காக? தன்னுடைய குடும்பத்துக்கு கேபிள் பணம் வர வேண்டும் என்பதற்காக! கேபிளை மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குவதற்காக கடந்த ஆட்சி காலத்தில் அரசுடமை ஆக்கினார் அம்மா. அந்த அரசுத் தீர்மானத்தில் தன்னுடைய அன்புக்குரிய கவர்னரைக் கையெழுத்துப் போடவிடாமல் செய்தது மட்டும் அல்லாமல், அடுத்து ஆட்சி மாறியவுடன் அந்தச் சட்டத்தையே ரத்து செய்தவர் கருணாநிதி!

அம்மா ஆட்சியில், 10,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. 7,000 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்குத் தேவையாக இருந்தது. மீதம் உள்ள உபரி மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கு அம்மா ஆட்சிக் காலத்தில் விற்கப்பட்டது. இன்று கருணாநிதி ஆட்சியில், தரக் குறைவான நிலக்கரியின் காரணமாகவும், ஆட்சித் திறன் இல்லாத காரணத்தினாலும் மின் உற்பத்தி சுருங்கிவிட்டது. மக்களுடைய பயன்பாடு பெருகிவிட்டக் காரணத்தினால், மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு... தமிழ்நாடு இருளில் தத்தளிக்கிறது. மக்களின் அடுத்த கட்டத் தேவைகளுக்கு ஏற்ப மின்சாரத்தைப் பெருக்குகின்ற ஆட்சித் திறன் அவருக்கு இல்லை. இவர் ஆட்சிக்கு வந்தபோது அதை செய்ய முடியவில்லை என்றாலும், புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்கி இருந்தால், நான்கு ஆண்டுகளுக்கு உள்ளாகவே பயன்பாட்டுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்திருக்குமே.!

அம்மாவின் காலத்தில், 12-க்கு விற்ற அரிசி இன்று 40. அம்மாவின் காலத்தில் அரிசி விற்ற விலைக்கு இன்று உப்பு விற்கிறது. டாடா உப்பு 12. கல் உப்பு 9. கேட்டால், 'உப்பையா சாப்பிடுகிறீர்கள்?’ என்று திருப்பிக் கேட்கிறார். அவர், உப்பில்லாமல் சாப்பிடுகிறவர்போல் இருக்கிறது. உப்புப் போட்டுக்கொண்டால், நியாயமான பதில் சொல்லியாக வேண்டுமே?

அம்மாவின் காலத்தில், ஒரு பவுன் தங்கம் 4,500. இன்று அது 15,500! ஏழைப் பெண்கள் திருமணத்தன்று அரைப் பவுன் தாலிக்குக்கூட வக்கில்லாமல் செய்துவிட்டது கருணாநிதி அரசு. அதனால்தான் அம்மா தான் ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு அரைப் பவுன் தங்கம் வழங்குவதாக வாக்கு அளித்திருக்கிறார்.

அம்மாவின் ஆட்சியில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.89 சதவிகிதம். இன்று வளர்ச்சி விகிதம் 4.49 சதவிகிதம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூன்றில் ஒரு பங்காக சரிந்துவிட்டது. ஒரு ஆட்சியின் அளவுகோல், அதனுடைய பொருளாதார வளர்ச்சிதான். தமிழ்நாட்டை சத்தீஸ்கருக்கும் மத்திய பிரதேசத்துக்கும் பழைய பீகாருக்கும் கீழாகவே கொண்டுவந்துவிட்டார் கருணாநிதி!

இவருடைய ஆட்சியில் தமிழ் மக்களின் மீது சுமத்தப்பட்டு இருக்கும் கடன் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி. இது மத்திய அரசு அனுமதித்த கடன் தொகையைவிடக் கூடுதலானது. சிறப்பு அனுமதி பெற்று, நம்மைக் கூடுதல் கடனாளியாக்கிவிட்டார். கதை, வசனம் எழுதும் கருணாநிதியும், பச்சையப்பன் கல்லூரி தமிழ் பேராசிரியர் அன்பழகனும் எந்தப் பொருளாதாரத்தை அறிவார்கள்?

ஈழத்தை மயானமாக்கிய, கச்சத் தீவை தாரை வார்ப்பதற்கு மௌன ஒப்புதல் அளித்த, மக்களை ஐந்து ஆண்டுகளாக இருளில் மூழ்கச் செய்த, விலைவாசி உயர்வைத் தடுக்கத் திறன் இல்லாத, ஆறுகளைச் சுரண்டிய, தமிழ்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்த... ஊழலையே ஒரு வரிக் கொள்கையாகக்கொண்ட இந்தக் கருணாநிதி ஆட்சி... தொலைய வேண்டுமா? வேண்டாமா?

மக்கள் சொல்வார்கள்!

சந்திப்பு: த.கதிரவன்

ஜீனியர் விகடன்.
நன்றி

http://new.vikatan.com/article.php?aid=4725&sid=136&mid=2



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Empty Re: ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி?

Post by கலைவேந்தன் Sun Apr 10, 2011 7:17 pm

இதில் சொல்லி இருப்பவை பாதி உண்மையும் பாதி பொய்யும்.. எப்படி என்றால் கருணாநிதி தமிழகப்பொருளாதாரத்தைச் சூறையாடியது உண்மை.. ஆனால் ஜெயலலிதா ஆட்சி பொற்காலம் என்பது பொய்.

இந்திய பொருளாதாரக்கொள்கைளில் இருக்கும் சீர்கேட்டின் காரணமாக இந்தியா முழுவதுமே விலைவாசிப்பிடியில் அகப்பட்டு நெரிக்கப்படுகிறோம் என்பது தான் உண்மை.

எரியும் வீட்டில் பிடுங்கும் வேலையை மட்டும் தான் கருணாநிதி செய்கிறார். அந்த வாய்ப்பு தனக்கு கிடைகக்வில்லை என்று ஜெயலலிதா பொருமுகிறார்.

என்ன ஒரு ஆறுதல் விடயம் என்றால் ஜெயலலிதாவுக்கு ஆலமரம் போன்ற குடும்பப்பின்னணி இல்லை என்பதால் அவர் பெயரில் இருக்கும் சொத்துக்கள் பிற்காலத்தில் நாட்டுடைமை ஆக்கப்படலாம்... கலைஞர் குடும்பம் அப்படி இல்லை... இருபத்தேழாவது பேரனுக்கும் ( வயது ஆறு )சில கோடிகளை எழுதிவைத்து இருக்கிறார்

ஆகவே தமிழகம் மாற வேண்டும்.. ஜெயலலிதாவுக்கு இன்னொரு வாய்ப்பை அளித்துவிட்டு கிடைக்கும் இடைக்கால சுவாசமிடும் அவகாசத்தில் நேர்மையான மூன்றாம் அணி உருவாகவேண்டும்.. அடுத்த தேர்தலில் இவர்கள் இரண்டுபேருமே அல்லாத ஓர் ஆட்சி நிகழவேண்டும்.

இதுதான் என் விருப்பம்... கருத்து..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Empty Re: ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி?

Post by positivekarthick Sun Apr 10, 2011 7:26 pm

உங்கள் கருத்து நியாயமகாவும் யோசிக்க வைப்பதாகவும் உள்ளது அண்ணா!.17a படிவத்தையும் பிரபல படுத்துங்கள் அண்ணா ! சூப்பருங்க


ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Pஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Oஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Sஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Iஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Tஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Iஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Vஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Eஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Emptyஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Kஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Aஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Rஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Tஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Hஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Iஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Cஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Empty Re: ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி?

Post by mkag.khan Sun Apr 10, 2011 7:28 pm

அவங்க ஆட்சியே இருக்கட்டும் நாமெல்லாம் எங்காவது தப்பிச்சி அகதிகளாவது போயிருவோம்


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Empty Re: ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி?

Post by கலைவேந்தன் Sun Apr 10, 2011 7:30 pm

mkag.khan wrote:அவங்க ஆட்சியே இருக்கட்டும் நாமெல்லாம் எங்காவது தப்பிச்சி அகதிகளாவது போயிருவோம்

நீங்க டெல்லிக்கு வாங்க அண்ணாச்சி... கூழோ கஞ்சியோ சேர்ந்து குடிக்கலாம்..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Empty Re: ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி?

Post by mkag.khan Sun Apr 10, 2011 7:32 pm

அய்யய்யோ அங்க கையாலகாத காங்கிரஸ் இருக்குப


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Empty Re: ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி?

Post by ARR Sun Apr 10, 2011 7:42 pm

ஜெயலலிதாவுக்கு ஆலமரம் போன்ற குடும்பப்பின்னணி இல்லை என்பதால் அவர் பெயரில்
இருக்கும் சொத்துக்கள் பிற்காலத்தில் நாட்டுடைமை ஆக்கப்படலாம்..

எப்படி கலை இப்படி..?

எந்த அரசியல்வாதி, தன் பெயரில் சொத்து சேர்ப்பார்..? பினாமி என்ற சொல்லை பிரபலப்படுத்தியதே அவர்கள்தானே..?


ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 0018-2ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 0001-3ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 0010-3ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Empty Re: ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி?

Post by கலைவேந்தன் Sun Apr 10, 2011 7:44 pm

ARR wrote:
ஜெயலலிதாவுக்கு ஆலமரம் போன்ற குடும்பப்பின்னணி இல்லை என்பதால் அவர் பெயரில்
இருக்கும் சொத்துக்கள் பிற்காலத்தில் நாட்டுடைமை ஆக்கப்படலாம்..

எப்படி கலை இப்படி..?

எந்த அரசியல்வாதி, தன் பெயரில் சொத்து சேர்ப்பார்..? பினாமி என்ற சொல்லை பிரபலப்படுத்தியதே அவர்கள்தானே..?

ஹிஹி... ஒரு குருட்டு நம்பிக்கை தான் அண்ணா... ஐம்பதுக்கு ஐம்பது சான்ஸ் இருக்கேன்னு தான்... ஆனால் கலைஞர் குடும்பத்திற்குச் சென்ற பணம் மீளுமா..?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Empty Re: ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி?

Post by ARR Sun Apr 10, 2011 7:48 pm

எங்கு போன பணமும் மீளாது..!

பார்க்கப்போனா, ஜெயா ரொம்பப் பாவம்.. கட்டின புடவைதான் அவங்களுக்கு மிஞ்சும். சொந்த அண்ணன் குடும்பத்துக்கூட ஏதும் செய்யமுடியாத சூழ்நிலைக் கைதி அவர்.


ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 0018-2ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 0001-3ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 0010-3ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Empty Re: ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி?

Post by mmani15646 Sun Apr 10, 2011 9:52 pm

கலை wrote:இதில் சொல்லி இருப்பவை பாதி உண்மையும் பாதி பொய்யும்.. எப்படி என்றால் கருணாநிதி தமிழகப்பொருளாதாரத்தைச் சூறையாடியது உண்மை.. ஆனால் ஜெயலலிதா ஆட்சி பொற்காலம் என்பது பொய்.

இந்திய பொருளாதாரக்கொள்கைளில் இருக்கும் சீர்கேட்டின் காரணமாக இந்தியா முழுவதுமே விலைவாசிப்பிடியில் அகப்பட்டு நெரிக்கப்படுகிறோம் என்பது தான் உண்மை.

எரியும் வீட்டில் பிடுங்கும் வேலையை மட்டும் தான் கருணாநிதி செய்கிறார். அந்த வாய்ப்பு தனக்கு கிடைகக்வில்லை என்று ஜெயலலிதா பொருமுகிறார்.

என்ன ஒரு ஆறுதல் விடயம் என்றால் ஜெயலலிதாவுக்கு ஆலமரம் போன்ற குடும்பப்பின்னணி இல்லை என்பதால் அவர் பெயரில் இருக்கும் சொத்துக்கள் பிற்காலத்தில் நாட்டுடைமை ஆக்கப்படலாம்... கலைஞர் குடும்பம் அப்படி இல்லை... இருபத்தேழாவது பேரனுக்கும் ( வயது ஆறு )சில கோடிகளை எழுதிவைத்து இருக்கிறார்

ஆகவே தமிழகம் மாற வேண்டும்.. ஜெயலலிதாவுக்கு இன்னொரு வாய்ப்பை அளித்துவிட்டு கிடைக்கும் இடைக்கால சுவாசமிடும் அவகாசத்தில் நேர்மையான மூன்றாம் அணி உருவாகவேண்டும்.. அடுத்த தேர்தலில் இவர்கள் இரண்டுபேருமே அல்லாத ஓர் ஆட்சி நிகழவேண்டும்.

இதுதான் என் விருப்பம்... கருத்து..!



ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 677196 ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 677196 ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 677196 ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 677196 ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 677196 ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 677196 ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? 677196
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி? Empty Re: ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எனது ஆட்சி முடியலாம், ஆனால் திராவிட சகாப்தம் முடியாது-கருணாநிதி
» அ.தி.மு.க. ஆட்சி காலத்தை காட்டிலும் தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறையில் மகத்தான சாதனைகள்: கருணாநிதி பட்டியல்
» கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் -இளங்கோவன்
» தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் : கருணாநிதி
» மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum