ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Poll_c10 
VENKUSADAS
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Poll_c10 
VENKUSADAS
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும்

+3
அன்பு தளபதி
கலைவேந்தன்
இந்து
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Empty காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும்

Post by இந்து Sat Apr 09, 2011 6:20 pm

காசுமீரில் நடைபெற்று வரும் போராட்டம் உலகைக் கவரத் துவங்கிவிட்டது. இசுரேலின் உருவாக்கம் எப்படி நிரந்தரத் தலையிடியாக இருந்ததோ அதைவிடச் சற்றும் குறையாத அளவுக்கு தலையிடி கொடுத்தது இந்தியா பாக்கித்தான் சுதந்திர நாடுகளாகப் பிரிந்தமை. இந்தத் தலையிடியின் தலைப்பிள்ளைதான் காசுமீர் போராட்டம். தலையிடி 1947லிலேயே கருக்கொண்டு பின்னாளில் உருக்கொள்ளத் தொடங்கியது. இன்றைய சந்ததியினருக்கு இத்தலையிடியின் தாற்பரியம் புரிவதில்லையாதலால் வரலாற்று நிகழ்வுகள் சில குறிப்பிடப்படுவது அவசியமாகின்றது இவ்விடத்தில்.

அரசுக்கெதிரான போராட்டங்களில் தமிழ்மக்கள் பெற்றுள்ள அனுபவம் ஒரு குறுகிய கால வேகத்தின் விளைவாக ஏற்பட்டது. ஆனால், காசுமீரிய மக்கள் 1947இலிருந்து போராடி வருகின்ற போதும் ஈழத்து வேகம் அங்குக் காணப்படவில்லைதான். ஆனால் போராட்டத்திற்கான நியாய அடிப்படை காசுமீரிய மக்களுக்கு அசைக்க முடியாத அரணாக உள்ளது. ஏனெனில், உண்மையிலேயே, இம்மக்களுக்கு சுயநிர்ணய உரிமை என்பது ஆசைக்காட்டி மோசஞ் செய்யப்பட்ட விடயமொன்றாகிறது. இந்தியாவும் ஐ.நா.வும் தான் இதில் குற்றவாளிகள். இந்தக் குற்றத்தைப் பயன்படுத்தித் தனது நலனைத் தேடுவதில் குறியாக உள்ளது பாக்கித்தான்.

உலகின் மிகவுயர்ந்த மலைத் தொடர்களால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்குப் பிரதேசமே காசுமீர். வருடத்தின் பெரும்பகுதி உறக்கத்தில் கழிய வேண்டிய அளவுக்கு ஒரே குளிர். கோடைக்கால இருப்பிடமாக மட்டும் பயன்பட்டிருக்க வேண்டிய பகுதி, குருதிக் கொட்டிக் கொண்டிருக்கிறது. 14ம் நூற்றாண்டுவரை(இந்திய) இந்து மன்னர்களினாலும் பின்னர்(1579) மொகலாய ஆட்சியின் கீழும் வந்த இப்பிரதேசம் 18ம் நூற்றாண்டில் ஆப்கானித்தான் ஆட்சியினரின் கட்டுப்பாட்டிலிருந்தது. 1819லிருந்து சீக்கியப் பேரரசு இங்கு உருவாக்கப்பட்டதுடன் 1846இல் இது பிரித்தானியரிடம் ஒப்படைக்கப்படும் வரை இரஞ்சித் சிங் என்பவரால் ஆளப்பட்டதெனத் தெரிகிறது. நமது அரசியலோடு ஒப்பிடுவதானால் இரஞ்சித் சிங்கின் ஒப்படைப்பை சங்கிலியனின் அரசு போர்த்துக்கேயரிடம் ஒப்படைக்கப்பட்டமையுடன் ஒப்பிடலாம். தற்போதைய யம்மு காசுமீர் மாநிலம் என்பது இரண்டாவது ஆங்கில சீக்கிய யுத்தத்தின் பின்பு பிரித்தானியர் காசுமீர் மீதான கட்டுப்பாட்டினை யம்முவிலிருந்த பட்டத்து மாமன்னனிடம் ஒப்படைக்கப்பட்டததன் மூலம் உருவாக்கப்பட்டது(1847). இப்படி ஒரு மாநிலம் உருவாக்கப்ப்ட்டமைக்கு ஒரு உள்நோக்கமும் உண்டு. இந்தியாவுக்கும் ஆப்கானித்தான், சீனா என்பவற்றிற்கும் இடையில் ஒரு தாங்கு அரசை(Buffer State) உருவாக்குவதே இந்த உள்நோக்கமாகும். அப்போதைய கவர்னர் செனரல் மவுண்ட்பேட்டன் பிரபு கொடுத்த அழுத்தத்தினால் ஏராளமான அரசாங்கங்கள் இந்தியாவுடன் இணைவதென்ற தீர்மானத்தையே எடுத்தன. இந்த வகையில் காசுமீரும் இணைய வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. இங்கே பெரும்பான்மையானோர் இசுலாமிய மக்கள். ஆனால் ஆட்சியளர் இந்துக்கள். மாமன்னன் அரிசிங் ஆட்சியிலிருந்தார்.

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு கூட காசுமீரிய பிராமணர் என்பது இங்கு குறிப்படத்தக்கது. இந்தியாவின் மொத்த மக்கட்தொகையில் இசுலாமியர்கள் ஏறத்தாழ 12%. யம்மு காசுமீர் மாநிலத்தில் இசுலாமியர்கலே 2/3 பங்கு பெரும்பான்மையாயினர். காசுமீர் பள்ளத்தாக்கு முழுவதும் இசுலாமியர்களே நெருக்கமாக வாழ்கின்றனர். இந்தியா பாக்கித்தான் பிரிவினைக்கு சற்று முன்னர் கூட, காசுமீர் தொடர்ந்தும் சுதந்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை மாமன்னன் அரிசிங்குக்கு ஊட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த நம்பிக்கை பாக்கித்தான் பக்கத்திலிருந்து வந்த படையெடுப்பால் தகர்ந்தது. பாக்கித்தானிலும் ஆப்கானித்தானிலும் செல்வாக்குள்ளதான பதான்சு என்ற இனக்குழுவினரே காசுமீர் மீது படையெடுத்தனர். இந்த படையெடுப்பாலும்(செப் 1947), காசுமீரிய இசுலாமியர்கள் மேற்குப் பகுதிகளில் செய்த கிளர்ச்சியினாலும் அரிசிங் புதுதில்லியின் தயவை நாட வேண்டியவரானார். காசுமீரிய சிங்கம் எனப்பெயர் பெற்றவரும் அங்கு எதிர்க்கட்சியை நிறுவியருமான சேக் அப்துல்லாவும் நேருவைச் சந்தித்து காசுமீரைக் காப்பாற்றும்படி கோரினார். காசுமீர் இந்தியாவுடன் இணைந்த பின்னரே அங்கு படைகளை அனுப்பிவைப்பதாக நேரு பதிலளித்தார்(மிகவும் தந்திரமான பதில்). இதன் விளைவாக ஒக்டோபர் 27,1947ல் மாமன்னன் அரிசிங் காசுமீரை இந்தியாவுடன் இணைக்கும் உடன் படிக்கையில் கையொப்பமிட்டார். உடனடியாக இந்தியப்படைகள் விமானத்தில் வந்து காசுமீரில் இறங்கின. பாக்கித்தானிலிருந்து வந்த இனக்குழுவினரை இவை பின்வாங்கச் செய்தன.

பதான்சு ஏற்கெனவே கைப்பற்றியிருந்த பிரதேசமே ஆசாத்காசுமீர் என அழைக்கப்படுகிறது. இது பாக்கித்தானுடன் இணைகப்பட்டுவிட்டது. 1948 மார்ச்சில் சேக் அப்துல்லா மாநில அரசாங்கத்தின் இடைக்கால முதலமைச்சரானார்.
துரோகத்தின் தொடக்கம்



மாமன்னன் அரிசிங் ஒப்பமிட்ட இணைப்பு ஆவணத்தின் ஏழாவது வாசகம் பின்வருமாறு கூறுகின்றது.

“இந்த ஆவணத்திலுள்ள எதுவேனும் ஏற்பாடு இந்தியாவின் எதிர்கால அரசியல் அமைப்பு எதனையும் ஏற்குமாறு என்னை வற்புறுத்துவதாகாது. அல்லது அத்தகைய அரசியலமைப்பு எதனதும் கீழ் இந்திய அரசாங்கத்துடன் உடன்படிக்கைகள் செய்யும் எனது சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதுமாகாது.”

இந்த வாசகமே இந்தியாவின் இன்றைய ஆட்சியாளர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்குவது. காசுமீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது சரிதானா என்ற வினாவை ஒருவர் எழுப்பினால், அவர் ஏழாம் வாசகத்தைப் படித்துவிட்டார் என்று பொருள். அந்தக் கதையெல்லாம் வேண்டாம் மற்றையதைப் பாருங்கள் என இந்திய இராசதந்திரிகள் உடனே பதிலளிப்பார்கள். காசுமீரின் இந்த நிபந்தனையுடன் கூடிய இணைப்பினால்தான் இந்த அரசியலமைப்பில் 370ஆம் உறுப்புரை சேர்க்கப்பட்டது. இந்த உறுப்புரையின்படி அரசியலைப்பின் முதலாம் உறுப்புரையும் 370ம் உறுப்புரையும் மட்டுமே காசுமீருக்கு நேரடியாக ஏற்புடையதாகும். ஏனைய உறுப்புரைகள் யாவும் காசுமீருக்கு நீடிக்கப்படலாம். ஆனால் அதற்கு முன்பு மாநில அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும். சில விடயங்களில் கட்டாயமாக அதன் சம்மதம் பெறப்படல் வேண்டும். இவ்வகையில் இந்திய அரசியலமைப்புக்கூட மாநில அரசாங்கத்தின் சம்மதமின்றிச் சில விடயங்களில் அங்கு ஏற்புடையதாகாது என்ற நிலை. இது மட்டுமல்ல, காசுமீருக்கு மட்டுமே இந்திய மாநிலங்கள் எல்லாவற்றையும் விட தனியான மாநில அரசியலமைப்பு என்று ஒன்றும் உள்ளது. முழு இரையாண்மை கொண்ட நாடுகளில் மட்டும் காணப்படும் அம்சம் இது. இணைப்பின்போது மவுண்ட்பேட்டன் பிரபு வெளியிட்ட அறிக்கை பின்வரும் உத்தரவாதத்தை அளித்திருந்தது. ”ஏதாவது மாநிலத்தில் இணைப்பு விவகாரம் பிணக்கிற்கு உட்படுமானால், இணைப்பானது அந்த மாநில மக்களது விருப்பத்தின்படி தீர்மானிக்கப்படும். காசுமீரைப் பொறுத்தளவில் அங்கு சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டு படையெடுப்பாளர் அகற்றப்பட்டதும், இணைப்புத் தொடர்பாக அங்கு அனைத்துமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே எனது அரசாங்கத்தின் விருப்பமாக உள்ளது”.

இந்த அறிக்கையும் இந்தியர்களுக்கு ஒவ்வாத விடயமாகும். ஏனெனில் இன்று வரை அத்தகைய வாக்கெடுப்பு எதுவுமே நடத்தப்பட்டிருக்கவில்லை. இதற்கு இந்திய அரசாங்கும் கூறும் காரணமோ இன்னும் வேடிக்கையானது. அறிக்கையிலுள்ள படையெடுப்பாளர் அகற்றப்பட்டதும் என்ற வாசகம் மிக முக்கியம்(ஆசாத் காசுமீர்) இன்னும் ஆக்கிரமித்தபடியுள்ளனர். அவர்கள் விரட்டப்படும் வரை வாக்கெடுப்பு இல்லை என்பது இந்தியாவின் வாதம். உண்மையில் இந்த விரட்டலுக்காகவே இரண்டு யுத்தங்கள் புரியப்பட்டன. ஆனாலும் எல்லைகளில் பெரிதான மாற்றங்கள் ஏற்பட்டதாக இல்லை.

இன்னொரு நொண்டிச்சாக்கு காசுமீர் மக்கள் உள்ளூர் தேர்தல்களில் வாக்களித்தமை, மாநில அரசியலமைப்பை உருவாக்கியமை என்பதை வைத்துப் பார்த்தால் மக்கள் இணைப்பை அங்கீகரித்துவிட்டார்கள் என்பது. இவ்வேளையில்தான் அங்கு ஐ.நா. தலையிட்டு எல்லைக் காவல் செய்யவேண்டி ஏற்பட்டது. இது ஒரு கண்காணிப்பு பணியாக உள்ளது.

அனைத்து மக்கள் வாக்கெடுப்பின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொண்ட இந்தியா காசுமீரில் அனைத்து மக்கள் வாக்கெடுப்பை நடத்தவில்லை.
சமரசங்கள் சரிவருமா?



சேக் அப்துல்லாவும் நேருவும் 1953இலிருந்து முரண்பட்டனர். இதன் விளைவு முன்னையவரின் தொடர்ச்சியான சிறைவாசம். 1964இல் முதலாவது தீவிரவாதக் குழ் தோற்றுவிக்கப்பட்டது. யம்மு காசுமீர் விடுதலை முன்னணி(J.K.L.M.)[Jammu Kashmir liberaton movement]. காசுமீரின் முழு விடுதலையைக் கோரிப் போராடுகிறது. வங்காளதேசம் உருவாகியதும் தன் கை ஓங்கிவிட்டத்தை அறிந்து இந்தியா சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பாக்கித்தானை அழைத்தது.

· 1972 யூலை 02ல் ஒப்பமிடப்பட்ட சிம்லா உடன்படிக்கையின்படி 1965இல் வரையப்பட்ட யுத்த நிறுத்த எல்லைக் கோட்டை மதித்து நடத்தல்.

· காசுமீர் சம்பந்தமான பிரச்சனைகளைப் பேசித்தீர்த்தல்.

· இறுதித் தீர்வுக்காகச் சமாதான ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடல்.

என்ற கட்டுப்பாடுகளை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

எந்தளவுக்கு 1947ஆம் ஆண்டைய தனது கட்டுப்பாடுகளை இந்தியா தட்டிக்கழிக்க முயல்கிறதோ அந்தளவுக்கு பாக்கித்தான் இன்று சிம்லா உடன்படிக்கையின் இந்தக் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்துகிறது. ஆனால் இந்தியாவுக்கு இந்த உடன்படிக்கையைவிட வேறு பற்றுக்கோடு எதுவுமில்லை. இதுதான் தற்போதைய இழுபறி 870 மைல் நீளமான யுத்த நிறுத்த எல்லைக் கோட்டில் இரு நாடுகளுமே ஒவ்வொன்றும் இரண்டு இலட்சம் படைவீரர்களை நிறுத்தி வைத்துள்ளன. ஐ.நா. படைகளும் இங்கேதான் நிலைகொண்டுள்ளன.

1982இல் சேக் அப்துல்லா இறக்க அவரது மகன் பரூக் அப்துல்லா முதலமைச்சரானார். மாறி மாறி காங்கிரசு கட்சியுடன் தேர்தல் உடன்பாடு. இது 1975ல் இந்திரா காந்தியினால் தொடங்கி வைக்கப்பட்ட விவகாரம். 1986ல் இராசீவ் காந்தியும் பரூக்கும் செய்த உடன்பாடு காசுமீரிய மக்களை வன்முறைப் பாதைக்குத் தூண்டியது. 1987ல் புதிய கட்சி பிறந்தது. தேர்தலில் நடைபெற்ற அப்பட்டமான மோசடியால் மிதவாதத் தலைமைகளே வேண்டாம் என்ற நிலை காசுமீரில் ஏற்பட்டுவிட்டது. அன்றைய தேர்தலில் புதிய கட்சியான இசுலாமிய ஐக்கிய முன்னனியின் வாக்குப் பெட்டிகளுக்குக் காவல் நின்ற இளைஞர்களைத்தான் இன்னும் இந்தியப் படையினர் பட்டியல் வைத்துத் தேடி வருகின்றனர். வன்முறைகள் வெடித்தன. பாக்கித்தானில் பயிற்சி என்பது இரகசிய விடயமல்ல. 1990 சனவரியிலிருந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 3,000 மக்கள் இறந்துள்ளதாக மனித உரிமைகள் நிறுவன அறிக்கைகள் கூறுகின்றன. 43 போராட்டக் குழுக்கள் உள்ளதாகவும் அறியப்படுகின்றது.

காசுமீரிய மக்களுடைய விருப்பு என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்த 1947இலிருந்து இன்றுவரை எவ்விதச் சந்தர்ப்பமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் தனிநாடாகப் போக விரும்புகிறார்களா? பாக்கித்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது இந்தியாவுடனேயே தொடர்ந்தும் இருக்க இசைகின்றார்களா? எப்படிக் கண்டு கொள்வது? இந்த மக்களது சுயநிர்ணய உரிமை மிகப்பெரிய மக்களாட்சி நாட்டினால் மீறப்பட்டுள்ளது. இந்த நாட்டின் சர்வதேசச் செல்வாக்குக் காரணமாகவே காசுமீரீய மக்களது சுயநிர்ணய உரிமைக்குரல் குரல்வளைக்கு வெளியே வரமுடியாதபடி அமுக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தம், உடன்படிக்கை, வாக்குறுதி என்பவற்றால் ஏமாற்றப்பட்டுவிட்ட காசுமீரிய மக்கள் இன்று சிக்கலிலிருந்து விடுபட வழியறியாது குருதிக் காணிக்கை செலுத்துகிறார்கள்.

கடந்த செப்டம்பரில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பேசுகையில் ”ஐ.நா.வின் கவனத்துக்குரிய ஒரு விடயம் காசுமீர்”, என அமெரிக்க அதிபர் குறிப்பிட்டார். ஐ.நா.வின் செயலாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கையில் காசுமீர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1990 பிப்ரவரியில் 4 இலட்சம் மக்கள் காசுமீர் வீதிகளில் ஊர்வலமாகச் சென்று ஐ.நா. கண்காணிப்புக் குழுத்தலைவரிடம் ஒப்படைத்த மகசரில் ’தமக்கு முழு சுதந்திரம் வேண்டும்’ எனக் கேட்டிருந்தனர். ஆனாலும், ‘சேக் உல் முசாகிதீன்’ போன்ற தீவிரவாதக் குழுக்கள் பாக்கித்தானுடன் இணைவதை விரும்புகின்றன. இக்குழுவின் செல்வாக்கு தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியப் படையினரின் அத்துமீறல்கள் தனியாக ஆராயப்பட வேண்டிய ஒரு விடயம். எல்லா விதங்களிலும் அந்நியமானவர்கள் எனக் கருதப்படும் இந்தியப் படையினர் காசுமீரில் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். சில நகரங்களையே கொளுத்தியுள்ளதாக அறிக்கைகள் கூறியுள்ளன. பாலியல் பலாத்காரம் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. உல்லாசப் பயணம் வந்த கனேடியப் பெண் ஒருவரை படையினர் பலாத்காரம் செய்த கதை உலகம் அறிந்த விடயம். ஆனால் வெளிவராமல் அமுக்கப்பட்டுவிட்டமை ஏராளம். இந்த வரிசையில் அண்மைய அசுரத்பால் பள்ளிவாசல் முற்றுகையும் அமைந்துள்ளது. இசுபுல் முசாகிதீன் என்ற கட்சியின் தீவிரவாதத் தலைவரை கைது செய்ய நடத்தப்பட்ட முற்றுகை இறுதியில் பிசுபிசுத்துவிட்டது. அவர் பள்ளிவாசலுக்குள் இருந்தார் என்பதற்குச் சான்றில்லை.

எத்தனை நாளைக்குக் குரல்வளையை நெரிப்பது? அடக்கப்படும் மக்களுக்காக வெளியிலிருந்து குரல்கள் எழுவதும் தவிர்க்க முடியாது.



புத்தகம் : உலக தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள்

எழுதியவர்கள் : வி.ரி.தமிழ்மாறன், வி.தமிழ்க்குமரன்.
இந்து
இந்து
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Empty Re: காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும்

Post by கலைவேந்தன் Sat Apr 09, 2011 9:11 pm

ஆக ... இந்த மாறனும் குமரனும் சொன்னதால் அவை சரித்திரம் ஆகிவிடுமா நிசாந்தன்..?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Empty Re: காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும்

Post by அன்பு தளபதி Sat Apr 09, 2011 9:14 pm

காஷ்மீர பண்டிட்கள் பற்றி ஒன்றுமே யில்லையே நண்பரே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Empty Re: காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும்

Post by ஆளுங்க Sun Apr 10, 2011 10:50 pm

காஷ்மீரில் இதுவரை நடந்த தேர்தல்களில் கிடைத்த வாக்கு சதவிகிதம் மக்கள் இணைப்பை அங்கீகரித்துவிட்டார்கள் என்று பொருள் பட தான்
இருக்கிறது.. இல்லையேல்,அங்கு வாக்கு சதவிகிதம் குறைந்து இருக்கும் என்பதே
உண்மை...


காஷ்மீரியர்கள் தனி நாடாக போக முடிவெடுத்து இருந்தால் அவர்கள் மன்னர் இந்திய அரசுடன் ஒப்பந்தம் போடும் முன்னர் ஒரு கலகம் வெடித்து இருக்க வேண்டும்....

சரி...

நீங்கள் காஷ்மீரில் இந்திய தேசத்தின் இருப்பைப் பற்றி கேள்வி கேட்கிறீர்கள்..
எனவே, உங்களிடம் இதைக் கேட்பதில் தவறு இல்லை..

இலங்கை சுதந்திரம் பெற்ற போதும் இதே நிலை இருந்ததல்லவா?
அப்போதே ஏன் ஈழம் கேட்கப்படவில்லை?

சுதந்திரம் பெற்ற சில நாட்களுக்குள்ளேயே இலங்கையில் "குடியுரிமைச் சட்டம்" இயற்றப்பட்டதல்லவா?
அதிலேயே பல அம்சங்கள் தமிழர்களுக்கு எதிராக இருந்தனவே?
ஏன் அப்போதே தமிழர்களுக்குத் தனி நாடு என்கிற குரல் எழவில்லை? (சட்டத்தின் பாதிப்பு இந்திய தமிழர்களுக்குத் தான் என்பதாலா?)

உங்கள் எழுத்துக்களில் தமிழினப் பற்று மேலோங்குகிறது.. தவறில்லை..
ஆனால், இந்திய துவேசமும் அதிகம் இருக்கிறது..
அது தவறு.....


காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Empty Re: காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும்

Post by அப்துல் Sun Apr 10, 2011 11:30 pm

ஆளுங்க wrote:

உங்கள் எழுத்துக்களில் தமிழினப் பற்று மேலோங்குகிறது.. தவறில்லை..
ஆனால், இந்திய துவேசமும் அதிகம் இருக்கிறது..
அது தவறு.....


:silent:
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Empty Re: காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும்

Post by அசுரன் Sun Apr 10, 2011 11:41 pm

பாக்கிஸ்தானுக்கு காஸ்மீரை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை! அவர்களை இந்தியா ஏன் இன்னும் அங்கிருந்து விரட்டாமல் (ஆசாத் காஷ்மீர்) வேடிக்கை பார்க்கிறது. தாமதமான நீதி அநீதிக்கு சமம். பாலியல் குற்றங்களை செய்யும் ராணுவவீரர்களை பிடித்து பொதுவான இடத்தில் கழுவேற்ற வேன்டும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Empty Re: காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும்

Post by இந்து Mon Apr 11, 2011 1:48 am

கலை அவர்களே அவர்கள் இரண்டு பேரும் வரலாற்றை உருவாக்கவில்லை. வரலாற்றைத் தான் அவர்கள் எழுதியுள்ளார்கள். நீங்கள் வேண்டுமானால் காசுமீர் இணைப்பு ஒப்பந்தம் இனையத்தில் பார்க்க கிடைத்தால், படித்துப் பார்க்கவும். பெரும்பாலும் அது கிடைக்காது என நினைக்கிறேன். அப்படி இல்லையென்றால், இந்திய சட்டப் புத்தகத்தைப் பாருங்கள். அது கண்டிப்பாக அனைவருக்கும் கிடைக்கும். சட்ட மாணவர் ஒருவரிடம் கேட்டாலே கொடுப்பார். நான் பதிந்துள்ள வாசகங்கள் உண்மையென அதைப் பார்த்தாலே புரியும். பெரும்பாலான சட்டங்கள் காசுமீருக்கு ஒத்துவராது என்றே இருக்கும். காசுமீர் அரசின் ஒப்புதல் இல்லாமல் அங்கு எந்த ஒரு சட்டத்தையும் மத்திய அரசால் அமல்படுத்த இயலாது. அதனால் தான் அங்கு அடக்குமுறை ஏவப்பட்டு உள்ளது.
இந்து
இந்து
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Empty Re: காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும்

Post by இந்து Mon Apr 11, 2011 1:58 am

ஆளுங்க உங்க பேரு என்னன்னு தெரியல. இலங்கை வரலாறை நீங்கள் சரிவர படிக்கவில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால், இலங்கை 1948ல் சுதந்திரம் அடைந்த நாள் முதல் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ இயலும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடத்தில் இருந்தது. அது தந்தை செல்வா காலம் வரை இருந்தது. அந்த நம்பிக்கை 1983 யாழ் நூலகம் எரிப்பு, 1977 தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை ஆரம்பித்த காலகட்டத்தில் முற்றிலுமாக அழிந்துபோனது. தனி ஈழம் ஒன்றுதான் தீர்வு என முடிவெடுத்து வட்டுக்கோட்டையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை முன்னிறுத்தி வெற்றிபெற்றனர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அதுதான் தனி ஈழம் அமையவேண்டும் என தமிழ் மக்கள் உலகுக்கு வெட்ட வெளிச்சமாக அறிவித்தது. மேலும், குடியுரிமைச் சட்டம் இயற்றப்பெற்ற காலகட்டத்தில், ஈழத் தமிழர்களுக்கும், மலையக தமிழர்களுக்கும் ஒரு சுமூக உறவு இருந்ததில்லை. புலிகள் இயக்கம் தான் இவர்கள் இருவரையும் இணைத்தது. அதுவரை ஈழத் தமிழர்கள் மலையகத் தமிழர்களை ஒரு பொருட்டாகவே எண்ணியதில்லை. அதன் ஒரு முக்கிய காரணையாகத்தான் 5 இலட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால் காசுமீர் மக்கள், எந்த தருணத்திலும் தாங்கள் இந்தியர் என்று சொன்னதில்லை. அவர்கள் இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை தங்களது சுதந்திரத்திற்காக இந்திய அரசிடம் போராடி வருகிறார்கள். இந்தியா காசுமீரை தனது காலணியாக அடக்கி வைத்துள்ளது. 1 குடிமகனுக்கு 10 இராணுவ வீரன் என்ற எண்ணிக்கையில் அங்கு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இந்து
இந்து
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Back to top Go down

காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Empty Re: காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும்

Post by உதயசுதா Mon Apr 11, 2011 10:13 am

[quote="thendral25"]
ஆளுங்க wrote:

உங்கள் எழுத்துக்களில் தமிழினப் பற்று மேலோங்குகிறது.. தவறில்லை..
ஆனால், இந்திய துவேசமும் அதிகம் இருக்கிறது..
அது தவறு.....
இத தானப்பா நானும் சொன்னென் காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் 440806 காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் 440806 காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் 440806 காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் 440806


காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Uகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Dகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Aகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Yகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Aகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Sகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Uகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Dகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Hகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Empty Re: காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும்

Post by Guest Mon Apr 11, 2011 10:28 am

நிஷாந்தன் அண்ணே ,நாலு நாளிதழ்யும் ,12 வகுப்பு வரை படித்த பாட புத்தகத்தையும் மனதில் வைத்து பேச வில்லை என்பது உண்மை ... சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் Empty Re: காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum