ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமையை பற்றிய ஹதிஸ் மற்றும் குரான்

Go down

ஒற்றுமையை பற்றிய ஹதிஸ் மற்றும் குரான் Empty ஒற்றுமையை பற்றிய ஹதிஸ் மற்றும் குரான்

Post by ரபீக் Thu Apr 07, 2011 11:21 am

குர்ஆன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டும் பின்பற்றி வாழ
வேண்டும் என்பதே சரியான கொள்கை.


"இன்னும், அல்லாஹ்வின் (வேதமெனும்) கயிற்றை நீங்கள் அனைவரும்
ஒன்றுசேர்ந்து (வலுவாகப்) பற்றிக் கொள்ளுங்கள்; பிரிந்து
விடாதீர்கள்"(அல்குர் ஆன் 3:103).


(நபியே!) நீர் கூறும்! நீங்கள் அல்லஹ்வை நேசிப்பீர்களானால்
என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். அல்குர்ஆன் 3:31

(நபியே!) நீர் கூறுவீராக நீங்கள் எனக்கு வழிப்பட்டு
நடப்பீர்களேயானால்அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான்.
அல்குர்ஆன் 48:16

அல்லாஹ்வுக்கும் (அவனது) தூதருக்கும் வழிபடுங்கள், அன்றியும்
நீங்கள் செய்பவற்றை யெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனே. அல்குர்ஆன் 58:13,
3:33

நீங்கள் இறை நம்பிக்கையுடையோர் (மூஃமீன்)களாயின்
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படியுங்கள். அல்குர்ஆன் 8:1

(மூஃமீன்களே) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு நீங்கள்
தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜக்காத்தை கொடுங்கள்; மேலும்
(அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள். அல்குர்ஆன் 24:56

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து
அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம்
பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52


எவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்படுகிறாரோ, அவர்
மகத்தான பாக்கியத்தை வெற்றிகொண்டு விட்டார். அல்குர்ஆன் 33:71

நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்பட்டு
நடப்பீர்களேயானால் அவன் உங்களது நற்செயல்களில் எதனையும் உங்களுக்கு குறை
வைக்கமாட்டான். அல்குர்ஆன் 49;14

இறைனம்பிக்கைக் கொண்டோர்(மூஃமீன்)களே! அல்லாஹ்வுக்கு
கீழ்படியுங்கள்; மேலும் அவனது தூதருக்கும் உங்களில் (நேர்மையாக) அதிகாரம்
வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களிடையே ஏதாவது ஒரு விஷயத்தில்
பினக்கு ஏற்பட்டு விட்டால், நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி
நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும்
ஒப்படைத்து விடுங்கள். இதுதான் உங்களுக்குமிகவும் சிறப்பான அழகான
முடிவாகும். அல்குர்ஆன் 4:59

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து
நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிளில் பிரவேசிக்கச் செய்வான்; அங்கு கீழே
ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும்
இருப்பார்கள் இது மகத்தான பாக்கியமாகும். அல்குர்ஆன் 4:13



إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ
يَشَاءُ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ(56)28

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது!
மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி
பெற்றோரை நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் (28 : 56)

فَإِنْ حَاجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِي لِلَّهِ وَمَنْ اتَّبَعَنِي
وَقُلْ لِلَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْأُمِّيِّينَ أَأَسْلَمْتُمْ
فَإِنْ أَسْلَمُوا فَقَدْ اهْتَدَوا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا
عَلَيْكَ الْبَلَاغُ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ(20)3

(முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் விதண்டா வாதம் செய்வார்களானால் "என்
முகத்தை அல்லாஹ்வுக்கே வழிபடச் செய்து விட்டேன். என்னைப் பின்பற்றியோரும்
(இவ்வாறே செய்து விட்டனர்)'' எனக் கூறுவீராக! வேதம்
கொடுக்கப்பட்டோரிடமும், எழுதப் படிக்கத்தெரியாதோரிடமும் "இஸ்லாத்தை
ஏற்கிறீர்களா?'' என்று கேட்பீராக! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் நேர் வழி
பெற்றனர். புறக்கணித்தால் எடுத்துச் சொல்வதே உமக்குக் கடமை. அல்லாஹ்
அடியார்களைப் பார்ப்பவன்.

فَإِنْ أَعْرَضُوا فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا إِنْ
عَلَيْكَ إِلَّا الْبَلَاغُ (48)42

(முஹம்மதே!) அவர்கள் புறக்கணித்தால் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக நாம்
அனுப்பவில்லை. எடுத்துச் சொல்வது தவிர உமக்கு வேறு இல்லை.

அல்குர்ஆன் (42 : 48)

எனவே நபிமார்களாக இருந்தாலும் தவறான வழியில் உள்ளவர்களுக்கு எடுத்துச்
சொல்வது தான் கடமை. அவ்வாறு எடுத்துச் சொல்லும்போது நபிமார்களின்
போதனைகள் புறக்கணிக்கப்படாலாம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபி (ஸல்) அவர்களுக்கு பக்கபலமாக இருந்த அவர்களுடைய சிறிய தந்தை
அபூதாலிப் அவர்களை நேர்வழியில் கொண்டுவருவதற்கு நபி (ஸல்) அவர்கள்
எவ்வளவோ முயற்சித்தார்கள். ஆனால் அவர் கடைசி வரை இஸ்லாத்தை ஏற்காமலேயே
மரணித்துவிட்டார்.

3884 حَدَّثَنَا مَحْمُودٌ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا
مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ ابْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِيهِ أَنَّ
أَبَا طَالِبٍ لَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ دَخَلَ عَلَيْهِ النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ أَبُو جَهْلٍ فَقَالَ أَيْ
عَمِّ قُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ كَلِمَةً أُحَاجُّ لَكَ بِهَا
عِنْدَ اللَّهِ فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي
أُمَيَّةَ يَا أَبَا طَالِبٍ تَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ
فَلَمْ يَزَالَا يُكَلِّمَانِهِ حَتَّى قَالَ آخِرَ شَيْءٍ كَلَّمَهُمْ
بِهِ عَلَى مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ رواه البخاري

முஸய்யப் பின் ஹஸ்ன் பின் அபீ வஹ்ப்(ரலி) அவர்கள் கூறினார்கள் :

அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது நபி (ஸல்) அவர்கள்
அவரிடம் சென்றார்கள். அப்போது அபூ ஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி (ஸல்)
அவர்கள், "என் பெரிய தந்தையே! "லா இலாஹ இல்லல்லாஹ்'-வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை
(நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை
கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்'' என்று சொன்னார்கள்.
அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், "அபூதாலிபே!
(பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா
புறக்கணிக்கப் போகிறீர்கள்?'' என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே
தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், " (என் இறப்பு என் தந்தை) அப்துல்
முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)'' என்று அவர்களிடம்
சொல்லிவிட்டார்.

புகாரி (3884)

மாற்றுக் கொள்கையில் உள்ளவர்களை நல்வழிபடுத்துவதற்கு நம்மால் முடிந்த
முயற்சிகளைச் செய்து வருகிறோம். எனவே அனைத்து மக்களும் நம் கொள்கையில்
ஒன்றிணைய வேண்டும் என்று ஆசைப்படும் நீங்களும் நம்முடன் சேர்ந்து
பணியாற்ற வேண்டும்.

கொள்கை சரியாக இருந்தால் அக்கொள்கையில் மக்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட
வேண்டும் என்பது இறைவன் ஏற்படுத்திய நியதியல்ல. நூஹ் (அலை) அவர்கள்
நூற்றுக்கணக்கான ஆண்டுகள் மக்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில்
இறங்கினார்கள். ஆனால் அம்மக்களில் பெரும்பாலோர் கடைசி வரை நூஹ் (அலை)
அவர்களின் பிரச்சாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் நூஹ் (அலை)
அவர்களின் கொள்கையும் அவர்கள் செய்த பிரச்சாரமும் தவறு என்று ஆகிவிடுமா?

மறுமையில் ஒரு இறைத் தூதர் தன்னை ஏற்றுக் கொண்ட ஒரு நபருடனும் இன்னொரு
இறைத் தூதர் தன்னை ஏற்றுக் கொண்ட இரண்டு நபர்கர்களுடனும் இன்னொரு இறைத்
தூதர் தன்னை ஏற்றுக்கொண்ட சிறு கூட்டத்துடனும் வருவார்கள் என்று ஹதீஸில்
பார்க்கிறோம். சில இறைத்தூதர்களுடன் அவர்களைப் பின்பற்றிய மக்கள் யாருமே
இருக்க மாட்டார்கள்.

5752 حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا حُصَيْنُ بْنُ نُمَيْرٍ عَنْ
حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ
عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ عُرِضَتْ عَلَيَّ
الْأُمَمُ فَجَعَلَ يَمُرُّ النَّبِيُّ مَعَهُ الرَّجُلُ وَالنَّبِيُّ
مَعَهُ الرَّجُلَانِ وَالنَّبِيُّ مَعَهُ الرَّهْطُ وَالنَّبِيُّ لَيْسَ
مَعَهُ أَحَدٌ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் வந்து (பின்வருமாறு) கூறினார்கள்:
(விண்ணுலகப் பயணத்தின் போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக்
காட்டப்பட்டனர். அப்போது தம்முடன் ஒரேயொரு மனிதர் மட்டுமிருந்த இறைத்
தூதரும், இரண்டு மனிதர்கள் மட்டுமே தம்முடனிருந்த இறைத் தூதரும்,
(பத்துப் பேர்களுக்குட்பட்ட) ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்த
இறைத்தூதரும், தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து செல்லத்
தொடங்கினர். (ஹதீஸின் சுருக்கம்) புகாரி 5752

இறைத் தூதர்களின் பிரச்சாரத்தை மக்கள் ஏற்கவில்லை என்பதால் அவர்களின்
கொள்கை தவறு என்று ஆகிவிடுமா? எனவே கொள்கை சரியாக இருப்பதற்கும் மக்கள்
அனைவரும் நம்முடன் ஒன்று படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இயக்கங்களை நடத்திச் செல்லும் தலைவர்கள் சுய லாபத்துக்காகவும் உலக
ஆதாயங்களுக்காகவும் செயல்படுகிறார்கள். எனவே மக்கள் இயக்க வெறியை
உள்ளத்திலிருந்து எடுத்துவிட்டு இருக்கின்ற அமைப்புகளில் எந்த அமைப்பின்
கொள்கை சரியானது? யார் உள்நோக்கம் இல்லாமல் சமுதாயத்துக்காகப்
பாடுபடுகிறார்கள்? யார் ஒழுக்கம் மற்றும் பண விஷயங்களில் சரியாக
நடக்கிறார்கள்? எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்குரிய சரியான பதிலை யார்
அளிக்கிறார்கள்? என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்தார்களானால் கண்டிப்பாக
சுயநலமிக்கத் தலைவர்கள் தனியே விடப்படுவார்கள். மக்கள் அனைவரும் சரியான
ஜமாஅத்தில் ஒன்றிணைவார்கள்.

அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் நம்மால் ஏன் ஒன்று சேர்க்க முடியவில்லை?
என்று நீங்கள் நம்மைப் பார்த்து கேட்பதை விட தவறான கொள்கையில் இருக்கும்
மற்ற அமைப்பினர்களிடம் சென்று நமது கொள்கையை எடுத்துரைப்பது தான் அனைத்து
முஸ்லிம்களும் சரியான ஒரே கொள்கையில் இணைய வழி வகுக்கும். அதைத் தான்
நாமும் செய்து கொண்டிருக்கின்றோம். நீங்களும் செய்ய வேண்டும் என்று
எதிர்பார்க்கின்றோம்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே.

Abdul Hakkeem .


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum