ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆய்ந்து பார்க்காமல் யாருக்கும் உதவக்கூடாது

Go down

ஆய்ந்து பார்க்காமல் யாருக்கும் உதவக்கூடாது Empty ஆய்ந்து பார்க்காமல் யாருக்கும் உதவக்கூடாது

Post by Admin Tue 4 Nov 2008 - 13:33

சுகபோக வசதிகளில் நாட்டமுடைய ஒரு மன்னன் நிறைய செலவு செய்து தூய்மையும் மென்மையும் நிறைந்த அழகான பஞ்சணை ஒன்று தயார் செய்தான்.

பஞ்சணை தயார் செய்யப்பட்ட போது ஒரு பெண் சீலைப்பேன் அதில் எப்படியோ ஒட்டிக்கொண்டு பஞ்சணையோடு சேர்ந்து அரண்மனைப் படுக்கையறைக்கு வந்து சேர்ந்துவிட்டது.

சீலைப்பேன் எளிதாக மற்றவர்கள் கண்களில் படுவதில்லையாதலால் அன்றாடம் பணியாளர்கள் பஞ்சணையை தட்டிச் சுத்தம் செய்யும் போதுகூட அவர்கள் கண்களில் படாமல் மறைந்து நிரந்தரமாகப் பஞ்சணையிலேயே தங்கிவிட்டது.

மன்னனை அயர்ந்த உறங்கும் சமயமெல்லாம் சீலைப்பேன் தன் மறைவிடத்தைவிட்டு வெளிப்பட்டு வந்து அவன் உடலில் ஒட்டிக்கொண்டு இரத்தத்தை சுவைத்து உறி்சிக் குடிக்கும்.

நல்ல உணவு உண்டு கொழு கொழுவென இருக்கம். மன்னனின் உடல் இரத்தத்தைத் தன் விருப்பம் போல உண்ணும் வாய்ப்பு அடிக்கடி கிட்டியதால் பெண் சீலைப் பேன் நன்கு கொழுத்து தளதளவென்ற உடலைப் பெற்று அழகாகக் காட்சியளித்து.

ஒரு நாள் தற்செயலாக ஒரு மூட்டைப் பூச்சி அந்தப் பஞ்சணையில் வந்து சேர்ந்தது.

பஞ்சணையின் அழகும், மேன்மையும், அதிலிருந்து வீசும் நறுமணமும் மூட்டைப்பூச்சியின் மனத்திலே உல்லாச உவகை உணர்வை ஊட்டியது.

ஆஹா, அற்புதமான இடத்துக்கு வந்துவிட்டேன். சகல சுக போகங்களுடன் வாழும் செழுமையான உடல் வாகுபடைத்த மன்னனின் இரத்தத்தைக் குடித்து மகிழக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே. இனி நான் இந்த இடத்திலேயே தங்கி சொர்க்க போகத்தை அனுபவிப்பேன் என்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் தனக்குத்தானே கூறிக் கொண்டு உற்சாகத்துடன் பஞ்சணையில் இங்கு மங்குமாக ஒடித் திரிந்தது.

யாரோ ஒரு புது ஆள் பஞ்சணையில் உலா வருவதைக் கண்டு சீலைப்பேன் திகைப்புடன், அச்சமும் கொண்டது.

உடனே மூட்டைப்பூச்சியைப் பார்த்து, ஐயா, வரக்கூடாத இடத்திற்கு வந்திருக்கும் நீர் யார் இங்கே எனக்கு மட்டும்தான் இருக்க உரிமையுண்டு. நான் மிகவும் சிறிய ஒரு ஜீவன். என்னால் மன்னருக்குப் பெரிய தொந்தரவு ஏதும் நிகழ வழியில்லை. நீரோ பெரிய ஜீவன். சட்டென பிறர் கண்களில் நீர் பட்டுவிடக்கூடும். அப்போது நம் இருவருக்குமே ஆபத்து. ஆதலால் உடனடியாக இந்த இடத்தைவிட்டுப் போய்விடும் என்று கூறிற்று.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆய்ந்து பார்க்காமல் யாருக்கும் உதவக்கூடாது Empty Re: ஆய்ந்து பார்க்காமல் யாருக்கும் உதவக்கூடாது

Post by Admin Tue 4 Nov 2008 - 13:34

மூட்டைப்பூச்சி இதமான குரலில், சீலைப்பேனைப் பார்த்து, பெண்ணே ஆதரவற்று புகலிடம் தேடி வந்திருக்கும் என்னை உதாசீனப்படுத்தி விரட்டி விடாதே. என்னால் உனக்கோ - மன்னனுக்கோ பெருந்தீங்கு ஏதும் நேரிடாது. தவிரவும் இருப்பிடம் தேடி வந்திருக்கும் ஓர் அதிதியை உபசரிப்பது பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு அல்லவா! என்று கூறிற்று.

ஐயா, ஒருவர் மட்டுமேயிருக்க உரிமைப்பட்ட இடத்தில் இருவர் தங்க நேர்ந்தால் வீணான தொல்லைகள் தானாக வந்து சேரும். நீர் என் பேச்சை ஏற்று உடனே இந்த இடத்தைவிட்டுப் போய்விடுவதுதான் நல்லது என்று சீலைப்பேன் செப்பிற்று.

பெண்ணே, உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமைப் பொறுப்பு உண்டு. நெருப்பை வணங்க வேண்டியது அந்தணர் கடமை. அந்தணரை வணங்க வேண்டிய கடமை பிற வகுப்பினருக்கு உண்டு. மணமான பெண்கள் தங்கள் கடமைப்பட்டிருக்கின்றார்கள். இதே போன்று வீடு தேடி வந்த அதிதியை உபசரிக்க இல்லறத்தார் கடமைப்பட்டிருக்கின்றார்கள். இந்த காரணத்துக்காவது என்னை இங்கே தங்க அனுமதிக்கக்கூடாதா ?

பெண்ணே மற்றொரு முக்கியமான ஒரு காரணத்துக்காகவும் நான் இங்கே தங்க ஆசைப்படுகின்றேன்.

இதுவரை நான் பிராமணன், வைசியன், சூத்திரன் ஆகிய வருணத்தினரின் இரத்தத்தைக் குடித்து மகிழ்ந்திருக்கின்றேன். ஆனால் நல்ல சுகபோக வாழ்வு நடத்தும் மன்னன் உடல் இரத்தத்தை நான் சுவைத்ததே இல்லை. எவ்விதமாவது மனம் வைத்து நானும் உன்னுடன் தங்கியிருக்க அனுமதி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

மூட்டைப்பூச்சியின் விடாப்பிடியான வேண்டுகோள் காரணமாக சீலைப்பேனுக்குக் கொஞ்சம் இரக்கம் ஏற்பட்டது. என்றாலும் மூட்டைப்பூச்சியின் இயல்பு தெரிந்திருந்த காரணத்தால் அதை பஞ்சனையில் இருக்க அனுமதிக்க பேனுக்குத் தயக்கமாக இருந்தது.

சீலைப்பேன், மூட்;டைப் பூச்சியைப் பார்த்து, ஐயா உங்கள் வர்க்கத்தின் இயல்பு எனக்குத் தெரியும். வாய்ப்பு கிடைத்தால் கால நேரம் பார்க்காமல் கடித்து இரத்தம் குடிக்கப் பார்ப்பீர்கள். நீங்கள் கடிக்கும் போது கடிபடுபவர்களுக்கு வலியிருக்கும். அதனால் கடிப்பதைப் புரிந்து கொண்டு கடிப்பது யார் என்று பார்த்துக் கொல்ல முயற்சிப்பார்கள். கொல்லுவதற்காக உம்மைத் தேடும்போது நானும் அகப்பட்டுக் கொள்வேன். இந்த வம்பெல்லாம் எதற்கு ? தயவு செய்து நீர் இந்த இடத்தைவிட்டு அகன்று விடும் ? என்று கூறிற்று.


பெண்ணே, நீ கூறுவதுபோல என் இனத்துக்கு உரிய சில கெட்ட குணங்கள் இருக்கலாம். உன்னுடைய ஆலோசனையின் பேரில் என் இயல்புகளை நான் மாற்றிக் கொள்ள முடியும். மன்னரைக் குடிக்கும் விஷயத்தில் நான் என்னென்ன நடைமுறையினை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து நீ கூறும் அறிவுரையை நான் அப்படியே கடைப்பிடிக்கின்றேன். தயவு செய்து என்னை விரட்டாமல் இங்கே தங்க அனுமதிக்க வேண்டும் என்று மூட்டைப்பூச்சி கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆய்ந்து பார்க்காமல் யாருக்கும் உதவக்கூடாது Empty Re: ஆய்ந்து பார்க்காமல் யாருக்கும் உதவக்கூடாது

Post by Admin Tue 4 Nov 2008 - 13:34

இனியும் பிடிவாதம் பிடிப்பது சரியல்ல என எண்ணி மூட்டைப்பூச்சியை அங்கே தங்க அனுமதிப்பது என்று தீர்மானித்தது.

நீர் இவ்வளவு தூரம் கேட்டுக் கொள்வதால் இங்கே தங்க அனுமதிக்கின்றேன். ஆனால் நான் கூறக்கூடிய சில நிபந்தனைகளின் படி எப்போதும் நடக்க வேண்டும் தவறினால் நாம் இருவருமே பெருந்தொல்லைக்கு இலக்காக நேரிடும் என்று சீலைப்பேன் எச்சரிக்கை செய்தது.

நான்தான் முதலிலேயே சொல்லிவிட்டேனே. நீ கூறக்கூடிய எதையும் வேதவாக்காகக் கொண்டு அதன் படி நடப்பேன். நான் எவ்விதம் நடந்துக் கொள்ள வேண்டும் என உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் மூட்டைப் பூச்சிக் கேட்டது.

மன்னர் நல்ல உணர்வுடன் இருக்கும்போது கடிக்கக் கூடாது. அவர் குடிபோதையில் இருக்கும் போது - அயர்ந்து குறட்டை விட்டுத் தூங்கும்போதும் மட்டுமே கடிக்கலாம். நினைத்த நேரமெல்லாம் கடித்து இரத்தம் குடிக்க நினைக்கக் கூடாது. கடிக்கும் போதும் மன்னருடைய கால்களில் மட்டுந்தான் கடிக்கவேண்டும். மற்ற வேறு எந்த இடத்திலும் கடிக்கக் கூடாது என்று சீலைப் பேன் அறிவுரை கூறிற்று.


மூட்டைப்பூச்சி அவ்வாறே செய்வதாக வாக்குறுதி அளித்தது.

அன்று இரவு மன்னன் வந்து பஞ்சணையில் படுத்தான்.

மன்னனுடைய வாளிப்பான, சதைப்பற்றுள்ள உடலைப் பார்த் உடனே மூட்டைப்பூச்சி இரத்த வெறி கொண்டு , சீலைப்பேனுக்குக் கொடுத்த வாக்குறதியை அடியோடு மறந்து விட்டது.

தன்னை மீறி எழுந்த உற்சாகத்துடன் மூட்டைப் பூச்சி விரைந்து சென்று மன்னரின் முதுகிலே தன் சக்தி முழுவதையும் செலுத்திக் கடித்து இரத்தத்தை உறி்சத் தொடங்கியது.

சுரீர் என முதுகில் வலி ஏற்பட்டதைக் கண்டு மன்னன் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான்.

உடனே தனது பணியாளர்களை அழைத்து முதுகில் ஏதோ கடித்த மாதிரி இருந்தது. என்ன என்று பாருங்கள் என உத்தரவிட்டான்.

தனது அவசர புத்தி காரணமாக நிலைமை மோசமாகி விட்டதைக் கண்டு திகிலடைந்த மூட்டைப் பூச்சி வேகமாக ஓடி ஓர் இடுக்கில் மறைந்து கொண்டது.

அதற்குள் பணியாளர்கள் வந்து பஞ்சணையைத் தட்டி உதறி மன்னரைக் கடித்த ஜந்து என்ன என்று கண்டு பிடிக்க முயன்றார்.

ஏதோ அமர்க்களம் நடைபெறுவதைக் கண்ட சீலைப்பேன் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகத் தன் மறைவிடத்தை விட்டு வெளிப்பட்டது.

சீலைப்பேனை பணியாளர்கள் பார்த்து விட்டனர்.

அதை பிடித்து மன்னரிடம் காண்பித்து, அரசே, இந்தச் சிறிய சீலைப்பேன்தான் தங்களைக் கடித்திருக்க வேண்டும். இனி தாங்கள் நிம்மதியாகப் படுத்து உறங்குங்கள் என்று கூறி சீலைப்பேனை நசுக்கிக் கொன்று போட்டனர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆய்ந்து பார்க்காமல் யாருக்கும் உதவக்கூடாது Empty Re: ஆய்ந்து பார்க்காமல் யாருக்கும் உதவக்கூடாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum