ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பைப் பிடுங்கியது குரங்கு

Go down

ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Empty ஆப்பைப் பிடுங்கியது குரங்கு

Post by Admin Tue Nov 04, 2008 11:56 am

ஓரிடத்தில் பெரிய கட்டிடம் ஒன்று கட்டும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மதிய உணவு உண்ணுவதற்காக வேலைக்காரன் வெளியே சென்றிருந்த சமயம், சில குரங்குகள் அந்த இடத்திற்குக் வட்டமாக வந்தன.

கட்டிடத்திற்கான மர வேலை நடைபெற்று வந்த இடத்திற்குக் குரங்குகள் போய்ச் சேர்ந்தன.

அங்கே ஒரு பெரிய மரம் சிறிதளவு பிளக்கப்பட்டு அதில் ஆப்பு நன்று சொருகி அடித்து வைக்கப்பட்டிருந்தது.

அந்தப் பக்கம் பார்த்த ஒரு குரங்கு மற்றொரு குரங்கிடம், அதோ பார், அர்த்தமில்லாமல் ஒரு மரப் பிளவில் யாரோ ஆப்பைச் சொருகி வைத்திருக்கிறார்கள் என்று கூறிற்று.

இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே. அதனால் நமக்கென்ன நஷ்டம் என்று மற்றொரு குரங்கு கூறிற்று.

அனாவசியமான சொருகப்பட்டிருக்கும் அந்த ஆப்பைப் பிடுங்கி எறியப் போகிறேன் என்று கூறியவாறு முதல் குரங்கு அந்த மரத்தின்மீது ஏறி அமர்ந்து ஆப்பை சிறுகச் சிறுக அசைத்துப் பிடுங்கலாயிற்று.

ஆப்பு விடுபட்டதும் பிளவுபட்ட மரப் பலகை சடாரென்று ஒன்று சேர்ந்தது.

அதனுள் குரங்கின் விதைகள் சிக்கிக் கொள்ளவே குரங்கு துடிதுடித்துச் செத்தது.

தனக்குச் சம்பந்தப்படாத விவகாரத்தில் தலையிட்டதால்தான் குரங்கு வீணாக தன் உயிரைவிட நேர்ந்தது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Empty ஆபத்தில் உதவிய எலிகள்

Post by Admin Tue Nov 04, 2008 11:56 am

ஒரு சிறிய கிராமம் நெடுநாட்களாகப் பாழடைந்து கிடந்தது. அங்கே மனிதர்கள் யாருமே வாசம் செய்ய வில்லை. வீடுகள் எல்லாம் இடிந்தும், பாழடைந்தும் கிடந்தன. எங்கு பார்த்தாலும் சிறுசிறு செடி கொடிகள் முளைத்திருந்தன.

அந்தப் பாழடைந்த கிராமத்தில் ஏராளமான எலிகள் வசித்து வந்தன.

யாராலும், எந்தவித இடையூறும் ஏற்பட வழியில்லாததால் நூற்றுக்கணக்கில் எலிகள் நிம்மதியாகவும் இன்பமாகவும் அங்கே வாழ்ந்து வந்தன. அந்தப் பாழடைந்த கிராமத்தை ஒட்டி பெரிய ஏரி ஒன்று இருந்தது.

ஒரு நாள் நூற்றுக்கணக்கான யானைகள் அந்த பாழடைந்த கிராமத்து இடிபாடுகள் வழியாக உட்புகுந்து ஏரியில் நீர் அருந்தச் சென்றன.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் அந்த பக்கமாக நடந்து சென்றதால் அங்கே பரவலாக வசித்து வந்த எலிகள் பாடு பேராபத்துக்கு இலக்காக நேர்ந்தது.

ஏராளமான எலிகள் யானையின் காலடியில் சிக்கி மடிந்து போயின. நீர் அருந்தச் சென்ற யானைகள் திரும்பி வரும்போது நிச்சயம் தங்கள் இனம் முழுவதுமே அழிந்துவிட நேரிடும் என அவை அ்சின.

ஆகவே உயிர் தப்பிய எலிகள் அனைத்தும் ஒன்றுகூடி யோசனை செய்தன. நேரே ஏரிக்குச் சென்று அங்கு நீர் அருந்தும் யானைக் கூட்டத்திடம் தங்கள் நிலையைச் சொல்லலாம் என அவை தீர்மானித்தன. பிறகு அவைகளில் ஒன்று திரண்டு ஏரியை நோக்கிச் சென்றன.

எலிகள் யானைக் கூட்டத்தைச் சந்தித்தன. யானைகளுக்கெல்லாம் அரசனாக இருந்த யானையை நோக்கி, ஐயா நாங்கள் அருகாமையில் இருக்கும் பாழடைந்த கிராமத்தில் வாசம் செய்கின்றோம். சற்றுமுன் உங்கள் கூட்டத்தினர் அந்தப் பக்கமாக வந்தபோது எங்கள் இனத்து எலிகள் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து விட்டன. இதேபோல நீங்களெல்லாம் திரும்பி வரும்போது மிச்சமிருக்கும் நாங்கள் அனைவருமே அழிந்துபோய் விடுவது நிச்சயம். இவ்வாறு காரணமில்லாமல் நூற்றுக்கணக்கான உயிர்கள் படுநாசமடைவதற்கு உங்கள் யானைக் கூட்டம் காரணமாக இருப்பதால் உங்களுக்கு ஒருபயனும் இல்லை. இதற்குப் பதிலாக நாங்கள் அனைவரும் உயிர் வாழ உதவினால் உங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் சமயம் நாங்கள் அனைவரும் உங்கள் உதவிக்கு வருவோம் எனக் கூறின.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Empty Re: ஆப்பைப் பிடுங்கியது குரங்கு

Post by Admin Tue Nov 04, 2008 11:57 am

யானைகளின் அரசன் எலிகளின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது. நாங்கள் திரும்பிச் செல்லும் போது வேறு வழி வழியாகப் போய் விடுகிறோம். நீங்கள் எல்லோரும் கவலையை விடுத்து நிம்மதியாகச் செல்லுங்கள் என்று கூறிற்று.

எலிகள் யானைகளுக்கு நன்றி கூறிவிட்டு தங்கள் இருப்பிடம் சென்றன. யானைகளும் எலிகளுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றும் விதத்தில் வேறு வழியாகத் திரும்பிச் சென்று விட்டன.

பல நாட்களுக்குப் பிறகு அரசன் ஒருவன் தன் யானைப் படை அணிகளில் சேர்ப்பதற்காக ஏராளமான காட்டு யானைகளைப் பிடித்து வருமாறு தமது அலுவலர்களுக்கு உத்தரவிட்டான்.
அலுவலர்கள் காட்டுக்குச் சென்று, உறுதியான கயிறுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட கண்ணி வலையை விரித்துக் கட்டிவிட்டு, அந்தப் பக்கமாக யானைக் கூட்டத்தை விரட்டினர்.

திரண்டு ஓடிவந்த யானைகள் கண்ணி வலையில் நன்கு சிக்கிக் கொண்டன. யானைகளை அப்படியே சில நாட்களுக்குப் பட்டினி கிடக்குமாறு விட்டுவைத்தால் அவை அடங்கி கட்டுப்படும் என்று யானைகளை அப்படியே விட்டுவிட்டு அலுவலர்கள் அரண்மனை சென்று விட்டனர்.

யானைகளின் அரசனுக்கு எலிகள் அளித்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. கண்ணி வலையில் சிக்காத ஒரு யானையை எலிகள் இருக்குமிடத்திற்கு அனுப்பி யானைகள் கண்ணியில் சிக்கிக் கொண்ட செய்தியை அவைகளிடம் சொல்லி வருமாறு யானை அரசன் பணித்தது.

யானை விரைந்து சென்று எலிகளைச் சந்தித்து யானைகளுக்கு ஏற்பட்ட ஆபத்தை எடுத்துச் சொல்லி யானை அரசனின் வேண்டுகோளையும் தெரிவித்தது. ஏறத்தாழ ஆயிரம் எலிகள் ஒரே சமயத்தில் திரண்டு காட்டை நோக்கி விரைந்தன. யானைகள் சிறைப்பட்டுக் கிடந்த இடத்தை அடைந்ததும் மிகவும் துரிதமாக வலையைக் கடித்து நூற்றுக் கணக்கான யானைகளை விடுவித்தன.

யானை அரசன் எலிகளின் உதவிக்காக அவைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆப்பைப் பிடுங்கியது குரங்கு Empty Re: ஆப்பைப் பிடுங்கியது குரங்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum