ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரைமட்டமாகிறது தமிழகம்!

4 posters

Go down

தரைமட்டமாகிறது தமிழகம்!  Empty தரைமட்டமாகிறது தமிழகம்!

Post by கண்ணன்3536 Sun Apr 03, 2011 8:43 pm


- சாவித்ரி கண்ணன்

இரு கழகங்களின் தேர்தல் அறிக்கை ஏற்படுத்திய திகைப்பிலிருந்து இன்னும் மீள முடியவில்லை! எப்படி இவர்களால் இப்படியொரு அபத்தமான தேர்தல் அறிக்கையைத் தர முடிந்தது? போதாகுறைக்கு, பா.ஜ.க. வேறு இலவசங்கள் கலந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது!

தமிழகம் ஒவ்வொரு துறையிலும் மோசமான வீழ்ச்சியைக் கண்டு கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், அதைத் தூக்கி நிறுத்துவதற்கு மாறாக, அதைத் தாக்கித் தரைமட்டமாக்கி இருக்கிறார்கள்!

ஒருவர் சுமார் 19 ஆண்டுகளும் மற்றவர் 10 ஆண்டுகளும் முதலமைச்சராய் இருந்து தமிழகத்தை நிர்வாகம் செய்தவர்கள்தானே...!

தமிழகத்தின் கல்வித்துறை கதிகலங்கிக் கிடக்கிறது.

காமராஜர் காலத்தில் இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலைமை இருந்தது. இன்றோ 50 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றாகி விட்டது. இந்தச் சூழலில் இன்னும் நிரப்பப் படாத 60,000ஆசிரியர் பணியிடங்கள் காரணமாக அரசு பள்ளிக்கூடங்கள் அவல நிலையில் உழல்கின்றன. கூரையில்லாப் பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகள், இழுத்து மூடப்பட்டு வரும் பள்ளிகள்... என பாதாளத்தில் கிடக்கிறது பள்ளிக் கல்வித்துறை!

உயர்கல்வித் துறையோ ஒரேயடியாகத் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு, கல்வியின் பெயரால் பகல்கொள்ளை நடக்கிறது.

இதிலிருந்து கல்வித்துறையை மீட்டெடுக்கும் தீர்வு எதுவும் இரு தேர்தல் அறிக்கைகளிலும் இல்லை.

ஏற்கெனவே நமது பொது விநியோகத் துறை, ஊழலில் புரையோடிக் கிடக்கிறது.

ஒரு ரூபாய் அரிசி திட்டம் ஆரம்பித்தது முதல் ஆண்டுக்கு சுமார் 10000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள அரிசி கடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் ஒருகோடியே 86லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மாதம் 20கிலோ அரிசி இலவசம் என்றாலோ, அல்லது குறிப்பிட்ட குடும்ப அட்டைகளுக்கு மட்டும் மாதம் 35கிலோ அரிசி இலவசம் என்றாலோ அரசுக்கு ஏற்படப்போகும் இழப்பு பல்லாயிரம் கோடியாகிவிடும்.

இதைவிடக் கொடுமை வயல்வெளியில் விவசாயிகள் வெயிலிலும், மழையிலும் வாடி வதங்கி ஐந்தாறு மாத உழைப்புக்குப் பின் அறுவடை செய்யும் அரிசிக்கு மதிப்பே இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். தி.மு.க.வின் ஐந்தாண்டுகால ஆட்சியில், அரிசி விலையை ரேஷனில் கிலோ இரண்டு ரூபாய், பிறகு ஒரு ரூபாய் என அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் நெல் விவசாயம் கைவிடப்பட்ட சாகுபடி நிலங்கள் சுமார் 60,000 ஏக்கர் என்கிறது புள்ளிவிவரம்! தற்போதைய தமிழகத்தின் அரிசித் தேவையே அண்டை மாநிலங்களின் அரிசி வரவால்தான் ஈடு செய்யப்படுகின்றது.

இரு கழகங்களின் தேர்தல் அறிக்கைகளிலும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை வேட்டையாடும் சூழ்ச்சி புதைந்திருக்கிறது...!

மகளிரைச் சுயமாக நிற்க வைக்காமல் திட்டமிட்டு கடனாளியாக்கிக் கொண்டுள்ளன இரு கழக அரசுகளும்!

ஏற்கெனவே அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் மாணவர்களுக்கு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, ஊனமுற்றோருக்கு, பத்திரிகையாளர்களுக்கு... என ஏகப்பட்ட இலவச பஸ் பாஸ் விநியோகத்தால் 1000 கோடி நஷ்டம்! இப்போது58 வயதுக்குமேல் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் என்பது போக்குவரத்துத் துறையை ஸ்தம்பிக்க வைத்துவிடும்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன் கரிகால் சோழன் கட்டிய கல்லணையும், 80 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசு கட்டிய மேட்டூர் அணையையும் தவிர்த்துப் பார்த்தால் பாசன தண்ணீரைப் பாதுகாக்க, கழக அரசுகள் கட்டித் தந்த அணைகள் எத்தனை?

அதற்கெல்லாம் எப்படி நிதி ஒதுக்க முடியும்? அப்படி ஒதுக்கிவிட்டால் இலவசங்களை எப்படிச் செயல்படுத்துவது? இலவசங்களே வேண்டாம் என்ற நிலைமைக்கு விவசாயிகளின் விவசாய உற்பத்தி வளர்வது இவர்களின் இலவச அரசியலுக்கே ஆபத்தாகி விடக் கூடுமல்லவா?

வீடு கட்டும் கட்டுமானப் பொருட்களின் கட்டுக்கடங்கா விலையேற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரும் எந்த அறிவிப்பும் இல்லாமல் வீடு தரும் அறிவிப்பு விழலுக்கு இறைத்தே நீரே!

தமிழகத்தையே தலை நிமிர விடாமல் தற்கொலைப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கும் மதுப் பெருக்கம் குறித்து கவலைப்படவில்லை இரு கழகங்களும்!

அ.தி.மு.க ஆட்சியின் முடிவில் தமிழகத்தின் வெளிநாட்டுக் கடன் ஐம்பதாயிரத்து சொச்சம் கோடி! தி.மு.க ஆட்சி காலக்கட்டத்தில் இது ஒரு லட்சத்து சொச்சம் கோடியைக் கடந்துவிட்டது.

இப்போது நிகழ்ந்துள்ள இழப்புகளிலிருந்து மீளவே தமிழகத்துக்கு இரு தலைமுறை கால கட்டம் தேவைப்படும். ஒன்றா.....இரண்டா....இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சொல்லச் சொல்ல நெஞ்சில் சோகம் கனக்கிறது...!

நன்றி: கல்கி
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

தரைமட்டமாகிறது தமிழகம்!  Empty Re: தரைமட்டமாகிறது தமிழகம்!

Post by மஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 8:45 pm

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தரைமட்டமாகிறது தமிழகம்!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தரைமட்டமாகிறது தமிழகம்!  Empty Re: தரைமட்டமாகிறது தமிழகம்!

Post by கலைவேந்தன் Sun Apr 03, 2011 9:01 pm

சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட அற்புதமான கட்டுரை... பகிர்வுக்கு நன்றி கண்ணன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தரைமட்டமாகிறது தமிழகம்!  Empty Re: தரைமட்டமாகிறது தமிழகம்!

Post by gilmakvp Sun Apr 03, 2011 10:48 pm

அதிர்ச்சி
avatar
gilmakvp
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 20/12/2008

Back to top Go down

தரைமட்டமாகிறது தமிழகம்!  Empty Re: தரைமட்டமாகிறது தமிழகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum