ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ரவுண்டு சுற்றி ஹி..... ஹி.....

Go down

ஒரு ரவுண்டு சுற்றி ஹி..... ஹி..... Empty ஒரு ரவுண்டு சுற்றி ஹி..... ஹி.....

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 10:41 pm

எனக்கு நினைவு தெரிந்து, அதாவது ஸ்கூல் போக ஆரம்பிக்காத பருவத்தில் என் அம்மா, மண் பானையில் சாதமும், மண் சட்டியில் சாம்பாரும், ரசமும் வைப்பதைப் பார்க்க ரொம்பவே பிடிக்கும். அதுவும் அந்த மண் சட்டியில் மரத்தாலான மத்தில் அரைவட்டமாகக் கீழே மொழுக்கென்று உள்ள பாகத்தால் "டொக் டொக்' ஓசையும் கடையும் விதமும் லாகவமும் பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கும். கடையும் போதே மரமத்து வாசனை, சட்டியின் மண் வாசனை, பருப்பு வாசனை எல்லாம் கலந்து ""அம்மா பசிக்குது, சாப்பாடு போடு!'' என்று உடனடியாகக் கேட்கவைக்கும்.
பள்ளி போக ஆரம்பித்தபின் தெருவோரக் குடிசைவாசிகள், வெள்ளி மாதிரியான அலுமினிய பாத்திரங்கள் உபயோகிப்பதைப் பார்த்தபோது, அவர்கள் எங்களை விட பணக்காரர்கள் என்ற எண்ணம் ஏனோ என் மனதில் பதிந்துவிட்டது. அதற்கு என்ன ஆதாரம் என்ன லாஜிக் எல்லாம் தெரியாது.
இதை எதிர்த்துப் பேசி எலிமெண்ட்ரி ஸ்கூல் வரைக்கும் தைரியம் போதலையா, நம்ம வாய்ஸ் எடுபடாது என்ற காரணமா எதுவோ தெரியாது. ஆனால் அதைப் பற்றி அதுவரை அம்மாவிடம் பேசிவில்லை. பிறகு ஹைஸ்கூல் வந்தபிறகு மற்ற தோழிகள் வீட்டுக்கு விளையாடப் போவேன். அவர்கள் வீட்டில் எவர்சில்வர் பாத்திரங்கள் புழங்குவதைப் பார்க்கும்போது எனக்குள்ளே ஒரு காம்ப்ளெக்ஸ் வந்துவிட்டது.
வீட்டில் செல்லச் சண்டை போட்டபின் கும்பகோணம் வெங்கலக் குண்டு மூன்று வித அளவுகளில் வாங்கி வந்து சமையல் மாடர்ன் ஆகியது. அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ஆரம்பத்தில் அந்த சமையல் பிடிக்கவில்லை. "ருசி மட்டு' என்றார்கள். "இத ருசி பிரச்னை இல்லையே கௌரவப் பிரச்னையாச்சே!'
வெங்கலக் குண்டும் கொஞ்ச காலம்தான். பிறகு ஒன்பதாம் வகுப்பு வந்தபோது அந்த நாளில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட ருக்மணி குக்கர் வீட்டில் நுழைந்தது. வெங்கலக் குண்டுகளுக்கு பெரிய மரப்பெட்டிக்குள் பனிஷ்மெண்ட் டிரான்ஸ்ஃபர் அளிக்கப்பட்டது.
ருக்மணி குக்கர் மட்டும் வாழ்ந்ததா என்ன? பிரஷர் குக்க் வந்ததும் ருக்மணி குக்கருக்கு டாடா! பிரஷர் குக்கரில் தான் சமையல் சீக்கிரம் ஆகிறது.
உயிர் சத்தும் விட்டமின்களும் காப்பாற்றப்படுகின்றன என்று ஒரு டயட்டிஷியன் ஸ்டைலில் பேசிக் கொண்டோம்.
பிரஷர் குக்கரிலும் எத்தனையோ வகைகள்! மூடியைச் சுற்றி வளைத்து உள்ளே நுழைக்கும் டைப், எவர்சில்வர் குக்கர், காப்பர் பாட்டம், ஸ்õண்ட்விச் பாட்டம் என வகை வகையான குக்கர்களை நான் கல்யாணம் ஆன பின்பு உபயோகித்தேன்.
வேலைக்குப் போய்க்கொண்ட இருந்ததால் "குக்கருக்காகப் பணம் செலவழிப்பதில் தப்பே இல்லை' என்ற தெளிந்த ஞானம்வேறு. இதனால் பரணில் அந்தப் பானையோடு (மண்பானை கட்டாயம் ஒன்றாவது இருந்தால்தான் லக்ஷ்மி வீட்டில் இருப்பாளாம்) பலவிதமான குக்கர்களும் அடுப்பங்கரை மேல் ஷெல்பில் நம்பிக்கையோடு குடியிருந்தன.
புது மோஸ்தர் குக்கருக்கு மாறிய போதும் பழசைத் தூக்கிப்போட மனசில்லாமல், ""வற்றல்போட, ஸ்வீட் செய்ய அடிகனமான பாத்திரம்தான் ஏற்றது'' என்ற தினுசில் பலவிதமான பொய்க்காரணங்கள் (வற்றலும் போடவில்லை. ஸ்வீட் எல்லாம் கடையில்தான்) கூறிக் கொண்டு தூக்கிப்போடவில்லை. அது தவிர சொந்த வீடு என்பதால், நம்ம தலையிலா தூக்கிக் கொண்டு திரிகிறோம் என்ற நொண்டிச்சமாதானம் வேறு.
பத்து வருடம் முன்பு ""ஜப்பானியர்கள உபயோகிக்கும் ரைஸ் குக்கரில் சாதம் மல்லிகைப் பூ மாதிரி இருக்காம். காஸ்கெட், குக்கர் வெயிட் தேவை இல்லை என்று விளம்பரங்களும் ஹோம் லைப் எக்ஸிபிஷன்களும் அடித்துச் சொல்ல நாங்களும்... அரை மணியில் சாதம் ஆனது. "கீப் வார்ம்' மோடில் சாதம் நாலு மணி நேரம் சூடாக இருந்தது.
"சாதம் சூப்பர் மா ! இன்னும் ஒரு கரண்டி போடு'' குழந்தைகள் சொல்லவே மனம் அப்படியே குதூகலித்தது.
ஐந்து வருடம் முன்பு மைக்ரோ வேவ்ஓவனில் இருபதே நிமிடத்தில் சாதம் ஆகிறதாம். விஞ்ஞான ரீதியாக அறுதியிட்டுச் சொல்கிறார்கள்.
"நியூட்ரிட்டிவ் வால்யூ' அதிகம். பாத்திரம் கருகாது. பாத்திரம் சூடே ஆகாது சக்தி நேரே உணவுப் பொருளை சென்றடைந்து சூடு செய்கிறது என்றெல்லாம் சொல்லச் சொல்ல மெஸ்மரைஸ் ஆகி எல்லாக்குக்கர்களும் பரணில் ப்ரமோஷன்! பவர்கட் அன்று மட்டும் முக்கி முனகி, ப்ரஷர் குக்கரை இறக்கி சமைப்போம்.
இந்த முப்பது வருட கால கட்டத்தில் ஆஃபீஸ், வீடு என்று ஓடி ஓடி உழைத்ததாலேயோ என்னவோ, தெரியவில்லை. மெனோபாஸ், வலி, மூட்டுவலி, கால்வலி, அசதி, இன்ன பிற தொல்லைகள்... இரவு படுக்கப்போகும்முன்பு, காலை எழுந்திரிக்கும்போது என்ன வலி வரும் என்று எப்படியாக்கப்பட்ட திறமையான ஜோசியராலும் கணித்து சொல்ல முடியாது.
சம்பளத்தில் ஒரு கணிசமான விழுக்காடு சித்தா, யுனானி, அலோபதி, அக்குபஞ்சருக்கு தட்சினை.
எந்த மருந்துக்கும் பலனில்லாததன் காரணம் பற்றி விலாவாரியாக எலெக்ட்ரிக் ட்ரெயினில் தோழிகளுடன் பேசிக்கொண்டிருக்க, இதைக் கேட்டுக் கொண்டிருந்த, ஒரு மூதாட்டி, ""ஒண்ணியும் வேணாம்மா! நீ பானையிலே சோறு பண்ணி, சட்டியிலே பருப்பு அவிச்சு தின்னு பாரு. ஐஸ்பொட்டி காய்கறி, உணவுகளை வுட்டுடு. துன்னாதே!''
நாளொரு நோயும், பொழுதொரு மருந்துமாய் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்த எனக்கு அந்த அம்மாள் சொன்னது தெய்வ வாக்கு மாதிரி தெரிந்தது. பழைய பானையை மேலே இருந்து இறக்கியதோடு, அவருக்குத் துணையாக சில சட்டிப் பானைகள் வாங்கி சமையல் பழைய (புதுப்புதுக்கு எதிர்பதம்) மாதிரி ஆரம்பமாயிற்று.
இரண்டு மாதங்கள் கழிந்தன! உடல் உபாதைகள் குறைந்தன. காலையில் மண்பானையில் செய்த சாதம் சாயந்திரம் வரைக்கும்கூட கெடுவதில்லை. சட்டி சாம்பாருக்கு இணை எந்த ஹோட்டல் சாம்பாரும் இல்லை. அதுவும் பச்சை சுண்டைக்காய் போட்டு காரக் குழம்பு... தேவாமிர்தம்தான்.
இப்போ சாதம், சாம்பார், ரசம், சமையல் தாளிதம் எல்லாம் மண் பானை, மண்சட்டி, மண் வாணலிதான். ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த குக்கர்கள், மைக்ரோவேவ்ஓவன் எல்லாவற்றையும் ஓரங்கட்டி ஒரு ராணிபோல் சட்டி பானைகள் அடுப்பில் உட்கார்ந்து கோலோச்சுகின்றன! ஆனால், அதை பார்த்து ரசிக்க (சிரிக்க?) அம்மா தான் உயிரோடு இல்லை.
-உமாமஹேஸ்வரி, சென்னை

நன்றி மங்கையர் மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு ரவுண்டு சுற்றி ஹி..... ஹி..... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum