ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்

+5
முரளிராஜா
Jiffriya
redindian
ஸ்ரீமதி வேலன்
கண்ணன்3536
9 posters

Go down

கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Empty கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்

Post by கண்ணன்3536 Thu Mar 31, 2011 8:58 am

[ புதன்கிழமை, 30 மார்ச் 2011, 12:59.53 பி.ப GMT ]
செக்கச்சிவந்த மேனியைத்தான் இன்றைய தலைமுறையினர் பெரிதும் விரும்புகிறார்கள். கறுப்பாக இருப்பவர்கள், ‘ஏம்மா என்னை மட்டும் கறுப்பா பெத்த?’ என்று தங்களது அம்மாவிடம் கோபித்துக் கொள்கிறார்கள்.
இப்படி, கறுப்பு நிற தேகத்தை வெறுப்பவர்கள் மத்தியில் ஒருவித தாழ்வு மனப்பான்மையே ஏற்பட்டு விடுகிறது. சிவப்பாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகு என்ற கருத்து அவர்களது ஆழ்மனதில் பதிந்து போய்விடுகிறது. ஆனால், கறுப்பானவர்கள் அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.

கறுப்பாக இருந்தாலும் ‘களை’யாக இருப்பவர்கள் பலர் உண்டு. ஒருவருக்கு வெறும் வெள்ளை தோல் மட்டும் இருந்துவிட்டால் போதாது. முகம் களையாக இருப்பதும் அவசியம். அப்படி முகமும், உடல் அமைப்பும் களையாகவசீகரமாக இருந்தால் தான் ஒரிஜினல் அழகு. அந்தவகையில், விதவித அலங்காரங்களும், நகைகளும் களையான கறுப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும்.

பொதுவாக கறுப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக முகப்பரு வருவதில்லை. சிவப்பாக இருப்பவர்கள் பலரும், முகம் முழுவதும் முகப்பரு வந்து அவதிப்படுவதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.

கறுப்பாக இருப்பவர்கள், அவர்களது நிறத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய, உடல்வாகுக்கு பொருந்தும் ஆடைகளையும், அலங்காரத்தையும் செய்து கொண்டால் அவர்களை விட அழகானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

வெளிர் நிறத்திலான ஆடைகள், எளிய அலங்காரம் போன்றவை கறுப்பானவர்களை மேலும் அழகாகக் காட்டும். அத்துடன், புன்சிரிப்பும், பொன் நகையும் கூட அவர்களுக்குத்தான் இன்னும் அழகாகத் தோன்றும். வெள்ளைக்கல் பதித்த நகைகள், தங்க நகைகள் போன்றவை சிவப்பானவர்களை விட, கறுப்பானவர்களுக்குத்தான் எடுப்பாகத் தோன்றும்.

வெள்ளையானவர்களின் முகத்தில் சிறு மருவோ, கட்டியோ எது வந்தாலும் அப்பட்டமாக வெளியே தெரியும். ஆனால் கறுப்பானவர்களுக்கு அந்த பிரச்சினை இருப்பதில்லை.

சில பெண்கள், அடுத்த மாதம் எனக்குத் திருமணம், நான் கறுப்பாக இருக்கிறேன், ஏதாவது செய்து என்னை வெள்ளையாக்குங்கள் என்று கூறுவார்கள். இப்படிப்பட்டவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பிறக்கும்போதே கறுப்பானவர்கள் ஒரு சில முறைகளால் லேசாக சிவப்பாக ஆகலாம். ஆனால் அதுவும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டுமானால் பல சிகிச்சைகள் உள்ளன. திடீரென சிவப்பாக்க எந்த முறையும் இல்லை. எனவே, உடனடியாக சிவப்பாக்க வேண்டும் என்று எந்த அழகுக் கலை நிபுணரையும் நிர்ப்பந்திக்க வேண்டாம்.

சருமத்திற்கும் உணவு தேவைப்படுகிறது. அது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும். அதாவது, வாரத்தில் ஒரு நாளாவது சருமத்திற்கு முல்தானி மெட்டி, சந்தனம், தயிர், மஞ்சள், அரிசி மாவு, தக்காளிச் சாறு, எலுமிச்சை சாறு போன்ற எதையாவது ஒன்றை தடவி ஊற விட்டு கழுவி வந்தால் இயற்கையான முறையில் அதேசமயம் எளிய முறையில் உங்கள் அழகைப் பேணலாம்.

கறுப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள். அதுதான் உண்மை. நீங்களும் கறுப்பான தேகம் கொண்டவர் என்றால் உங்களிடம் அதுபற்றிய தாழ்வு மனப்பான்மை இருந்தால் இன்றே மறந்துவிடுங்கள். கறுப்பே சிறந்த அழகு.
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Empty Re: கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்

Post by ஸ்ரீமதி வேலன் Thu Mar 31, 2011 9:09 am

அப்ப கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு . கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  938222


வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Empty Re: கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்

Post by redindian Thu Mar 31, 2011 9:13 am

பணக்காரன் கருப்பாக இருந்தால் "கருப்பா இருந்தாலும் கலையா இருக்கிறான்" என்பார்கள். ஆனால் ஏழைக்கு இந்தப் பாக்கியம் இல்லை. உலகே மாயை.
redindian
redindian
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Empty Re: கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்

Post by Jiffriya Thu Mar 31, 2011 9:18 am

தகவலுக்கு மிக்க நன்றி.... மகிழ்ச்சி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Empty Re: கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்

Post by மலிக்கா Thu Mar 31, 2011 11:42 am

யாருக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டியும் எனக்கு கறுப்பு ரொம்ப பிடிக்கும். கறுப்பில் இருக்கும் ஒரு அழகும் மிளிர்வும் வேறெதிலுமில்லை. நல்ல தகவல்..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Empty Re: கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 12:33 pm

கறுப்பும் எல்லா நிறங்களை போல் அழகு நிறம் தான்... அதை பாசிட்டிவாக காண்பித்ததற்கு என் அன்பு நன்றிகள் ஓவியாஸ்ரீ...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Empty Re: கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்

Post by உதயசுதா Thu Mar 31, 2011 5:29 pm

மஞ்சுபாஷிணி wrote:கறுப்பும் எல்லா நிறங்களை போல் அழகு நிறம் தான்... அதை பாசிட்டிவாக காண்பித்ததற்கு என் அன்பு நன்றிகள் ஓவியாஸ்ரீ...
எய் கொய்யா,இந்த பதிவை போட்டது கண்ணன்.நீ நன்றிய ஒவியாவுக்கு சொல்ற.


என் மனமார்ந்த நன்றிகள் கண்ணன்.


கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Uகறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Dகறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Aகறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Yகறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Aகறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Sகறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Uகறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Dகறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Hகறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Empty Re: கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்

Post by சிவா Thu Mar 31, 2011 7:50 pm

உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:கறுப்பும் எல்லா நிறங்களை போல் அழகு நிறம் தான்... அதை பாசிட்டிவாக காண்பித்ததற்கு என் அன்பு நன்றிகள் ஓவியாஸ்ரீ...
எய் கொய்யா,இந்த பதிவை போட்டது கண்ணன்.நீ நன்றிய ஒவியாவுக்கு சொல்ற.


என் மனமார்ந்த நன்றிகள் கண்ணன்.

சிறந்த பின்னூட்டம்! அருமையிருக்கு


கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்  Empty Re: கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்!
» டாஸ்மாக்கும் நீங்கள் தான்...கேபிள் டிவியும் நீங்கள்தான்....
» ஜேர்மனியில் ஐந்தில் ஒருவருக்கு குடிபழக்கம்: ஆய்வுத் தகவல்
» பார்வை இழப்பைத் தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்: ஆய்வுத் தகவல்
» மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum