ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் சுதந்திரம் எத்தகையது? அது எவ்வாறு நசுக்கப்படுகிறது

Go down

பெண்களின் சுதந்திரம் எத்தகையது? அது எவ்வாறு நசுக்கப்படுகிறது Empty பெண்களின் சுதந்திரம் எத்தகையது? அது எவ்வாறு நசுக்கப்படுகிறது

Post by சிவா Wed Mar 16, 2011 11:50 am

பெண்களின் சுதந்திரம் எத்தகையது? அது எவ்வாறு நசுக்கப்படுகிறது என்பதை இங்கே அலசுகிறார்கள் பெண் பிரபலங்கள்.

சமீதா ராதர்

பிரபல `யோகா'பயிற்சியாளரும், கார்ட்டுனிஸ்டுமான சமீதா ராதர் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதே பெண்களின் உண்மையான சுதந்திரம் என்று அதிரடி குண்டு போடுகிறார்.

அவர் கூறுகிறார்:

"கடந்த பல ஆண்டுகளாக நான் குழந்தையில் லாத பல அழகிய தம்பதியரைப் பார்த்திருக் கிறேன். குழந்தைகள் இல்லாதபோதும் இவர்கள் தங்களைச் சுற்றியிருக்கும் அண்டை அயலார் மீது காட்டும் அன்பு அளவிட முடியாதது. என் விஷயத்தில் நான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒருபோதும் திட்டமிட்டதே கிடையாது. அதற்கான அவசியத்தையும் அவ சரத்தையும் நான் ஒருபோதும் உணர்ந்தது கிடையாது. ஆனால் எனக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். எனது பொன்னான நேரத்தையும் நேர்த்தியான அறிவுத் திறமையையும் நூற்றுக்கணக்கான குழந்தை களின் வளர்ச்சியில் செலவிட்டுக் கொண்டிருப்ப தில் பெருமிதம் கொள்கிறேன்.

தலாய்லாமா, அன்னை தெரசா இருவரும் என்னை கவர்ந்த சீரிய சிந்தனையாளர்கள். இவர்கள் மூலம் நான் அன்பு என்பது ஒரு குறிப்பிட்ட குடும்பம் என்கிற வட்டத்திற்குள் இயங்கும் சுயநலம் அல்ல என்பதை உணர்ந்தேன். எப்போதும் குழந்தைகள் மத்தியில் இருக்கும் எனக்கும் தனிப்பட்ட ஒரு குழந்தை வேண்டும் என்கிற உள்ளுணர்வு உண்டு. ஆனால் என்னுடைய இன்றைய தேவை உண்மையிலே அதற்கு அப்பாலும் பரந்து விரிந்திருக்கிறது'' என்கிறார்.

சந்திரா நராங்

"சுதந்தரமாக உலவுவதே பெண்களின் உண்மையான சுதந்திரம். ஆனால் சுதந்திரமாக ஒரு மொட்டை கூட போடமுடிவதில்லை...'' என்கிறார், சந்திரா நராங். இவர் மும்பையில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றின் செயல்அதிகாரி.

இதோ அவரது கருத்து:

"2005-ல் திருப்பதி ஏழுமலையானுக்கு எனது தலைமுடியைக் காணிக்கை செலுத்தி மொட்டை போட்டேன். பல வருடங்களாக நான் போற்றி வளர்த்த எனது சிகையலங்காரம் ஐந்தே ஐந்து நிமிடங்களில் மாறுபட்டது. மொட்டை போட்டு வடஇந்தியாவில் உள்ள எனது வீட்டிற்குத் திரும்பியதும் எனது உறவினர்களும் நண்பர்களும் என்னைப்பார்த்து மிரண்டுபோய் என்னை `சாமிஜி' என்று அழைக்க ஆரம்பித்தனர். ஏதோ பயங்கரமான வியாதியால் பீடிக்கப்பட்டு குணமடைந்தவளைப்போல என்னைப் பார்த்து நலம் விசாரிக்கத் தொடங்கினர். ஆனால் இது எதற்கும் நான் அசைந்து கொடுக்காமல் விமர்சனங்கள் பற்றி கவலையே படாமல் 2007-ல் மீண்டும் திருப்பதி சென்று தலைமுடி காணிக்கை செலுத்தியபோது என் உள்மனதை போற்றும் விமரிசனங்களை எதிர்கொள்ளும் தைரியத்தையும் பெற்றேன்'' என்கிறார்.

சுமனா கல்ரா

பிரபல பத்திரிகையாளரான சுமனா கல்ரா ஓரினச்சேர்க்கையில் ஆர்வமுள்ளவர். பெண்கள் செக்ஸ் சுகம் பெறுவதில் உள்ள சுதந்திரம் குறித்து தன்னுடைய சுதந்திரமான எண்ணஅலைகளைப் பகிர்ந்து கொள்கிறார். 2009 ஜூலை 2-ல் டெல்லி உயர்நீதிமன்றம் லெஸ்பியன் தொடர்பில் ஈடுபடுவது குற்றமல்ல என்று தீர்ப்பளித்ததைச் சுட்டிக்காட்டியவர், "10 வயதிலேயே தந்தையை இழந்த நான் 21 வயது அடையும்போதே கட்டாயத் திருமணத்திற்கு உட்படுத்தப் பட்டேன். எனது திருமண வாழ்க்கையின் ஆரம்பமே எனக்கு மிகவும் சூன்யமாக இருந்தது. ஏனென்றால் எனக்கு வரும் வாழ்க்கைத்துணை ஒரு பெண்ணாக இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன். எனது விருப்பத்திற்கு மாறாக எனது வாழ்க்கைத்துணை ஆணாகவே அமைந்தது!" என்று அதிரடி அதிர்ச்சி கொடுக்கிறார்.

"பெண்கள் அழகு தேவதையாகவே இருந்தாலும், செக்ஸ் விருந்தளிக்கும் விலைமகளாக இருந்தாலும், கன்னி யாஸ்திரியாக இருந்தாலும் தங்களுக்குரிய உரிமையை நிலைநாட்ட கடினமாகப் போராடவேண்டியதிருக்கிறது. நான் நன்றாகப் படித்து ஆண்களுக்கு இணையாக அல்லது அவர்களைவிட அதிகமாகச் சம்பாதித்துப் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றிருந்தாலன்றி பெண் ணாகிய எனக்கு எனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை என்கிற அவல நிலை நாட்டில் உள்ளது. பெரும்பாலான பெண்களின் நிலையும் இதுதான். எனது விருப்பத்திற்கு மாறாக பெண்ணுக்குப் பதில் ஒரு ஆண் எனக்கு வாழ்க்கைத் துணையாக அமைந்ததால்தான் திருமணமான ஓராண்டிற்குள்ளேயே எனக்கு விவாகரத்து நிகழ்ந்தது. 10 வயதிலேயே தந்தையை இழந்திருந்த எனக்கு எனது தாயும் இறந்து விடவே நான் வளர்ந்த நகரத்தைவிட்டு வெளியேறி இன்றுவரை எனது சுயஉழைப்பில் யாரையும் சார்ந்திராமல் சுதந்திரமாக வாழ்கிறேன்" என்று கூறும் இவர், 3 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தகவலையும் சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.

அதுபற்றி கூறும்போது... "எனக்கு வாழ்க்கைத்துணையாக வந்த பெண்ணிடம் எனது செக்ஸ் விருப்பத்தை நான் வெளியிட்டபோது அவள் அவளது குடும்பம் மற்றும் வாழ்ந்த நகரம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி எனது தனிப்பட்ட செக்ஸ் விருப்பத்திற்கு இணைய மறுத்தாள். இருந்தாலும் பெண்களாகிய நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து நேசித்து ஒன்றாகவே ஓரிடத்திலேயே வாழ்கிறோம். சில குறிப்பிட்ட இடங்களில் எங்களைத் தம்பதியராக ஏற்றுக்கொள்கின்றனர். பல இடங்களில் நடைபெறும் குடும்ப நிகழ்ச்சிகளில் நாங்கள் எங்கள் இருவரையும் தோழிகளாகவே அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியதிருக்கிறது..! விரும்பிய நபரைக் காதலிக்க எனக்குச் சுதந்திரம் உண்டு ஆனால் எனது காதலை வெளிப்படுத்த எனக்குச் சுதந்திரம் இல்லை" -சலித்துக் கொள்கிறார், சுமனா கல்ரா.

ஊர்வசி புட்டாலியா

பதிப்பக உரிமையாளரான ஊர்வசி புட்டாலியர் பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தினால் பெண் எழுத்தாளர்கள் படும்பாடுகள் குறித்து பகிர்ந்து கொள்கிறார்:

" லஜ்ஜா`வை எழுதிய பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீன் வயதில் மிகவும் சிறியவர். மிகச்சிறிய கால்சட்டையை அணிந்திருக்கிறார் என்றும் பரபரப்பாகப் பேசினார்கள். இப்படி பேசுவது தான்அவர்கள் சுதந்திரமாம். பெண்களை உயர்வாகப் பேசும் `கத்குலாப்` எழுதிய இந்தி எழுத்தாளர் மிரிதுலா கார்க்கும் இலக்கிய உலகில் கடுமையாக விமரிசனம் செய்யப்பட்டார். பெண்களின் செக்ஸ் குறித்து வெளிப்படையாக எழுதிய பிரபல எழுத்தாளர் கமலாதாஸ் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இவ்வாறே இஸ்மத் சுக்தாய் என்கிற பெண்எழுத்தாளர் எழுதிய `லிகாப்` என்ற கதை, ஒரு பெண்ணின் செக்ஸ் பற்றி வெளிப்படையாகப் பேசியதால் வழக்கு தொடரப்பட்டு கோர்ட் வரை ஏறி இறங்கவேண்டியதிருந்தது.

பல ஆண்டுகளாக பெண்எழுத்தாளர் அருந்ததிராயின் படைப்புகளைக் கவனித்து வருகிறேன். அவரது படைப் புகளில் பூலான்தேவி என்னை அதிகம் கவர்ந்தது.. பூலான்தேவியின் ஒப்புதலும் அனுமதியுமின்றி யாரும் அவரது வாழ்க்கைப் பின்னணியைப் படைப்பிலக்கியம் ஆக்கமுடியாது. இருந்தாலும் பெண் எழுத்தாளர் அருந்ததி என்ன சொல்கிறார் என்பதை இலக்கிய உலகு பார்க்காமல் எப்படி இவர் ஒரு பகிரங்கமான குற்ற வாளியான பூலான்தேவிக்குப் பரிந்து பேசலாம்? என்று கடுமையாக விமரிசனம் செய்தது. இதே நிலையைத்தான் அருந்ததியின் காஷ்மீர் மக்களின் உரிமைக்குப் பாடுபடும் ஆஜாதி படைப்பிலக்கியமும் பெற்றது. எனவே எழுத்தாளர்களில் குறிப்பாகப் பெண்கள்தான் கடுமை யான விமர்சனங்களுக்கு ஆளாகிறார்கள். பெண் எழுத் தாளர்களில் அதிக வயதானவர்களும் அல்லது மிகக் குறைந்த வயதுள்ளவர்களுமே அதிகமான விமர்சனத்திற்கு ஆளாகிறார்கள். பேச்சு சுதந்திரமும் கருத்துச்சுதந்திரமும் பரவலாகப் பேசப்பட்டாலும் அது அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தே வெளிப்படுகிறது"

ஊர்வசி புட்டாலியாவின் வார்த்தைகளில் கோபம் அனலடிக்கிறது.

தினதந்தி


பெண்களின் சுதந்திரம் எத்தகையது? அது எவ்வாறு நசுக்கப்படுகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum