ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியானம்

+2
அருண்
sshanthi
6 posters

Go down

தியானம்  Empty தியானம்

Post by sshanthi Wed Mar 09, 2011 1:08 pm


தியானம் பழகுங்கள்





தியானம்  Candle
தியானம் என்றால் என்ன ?

உங்களுக்குள்ளேயே
பதுங்கி இருக்கும் பயனுள்ள, ஆக்கப்பூர்வமான நல்லொழுக்க சக்தியை
கண்டறிதல், அனுபவித்தல், பயனடைதலே. ' தியானம் ' உன்னைப் பற்றியே, நீயே
ஆழமாக அறிந்து கொள்ளும் உள்ளுணர்வை தூண்டுவதே தியானம்.

அமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகிய இயற்கை வளத்தை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம்.

எதிர்மறையான எண்ணங்களில் இருந்து நம்மை விடுத்து - நம்மிலிருந்தே நம்மை விடுவித்து சுகந்திரமான ஆனந்தத்தை அனுபவிப்பதே தியானம்.

ஒவ்வொருவரும்
ஓர் ஆன்மா என்பதை உணர வேண்டும். அந்த ஆன்மாவில் தெய்வீக ஒளிப் புள்ளியாய்
புறப்படவேண்டும். அந்த ஆன்மீக ஒளியே, மனித சமுதாயத்தின் பொற்காலமாகும்.
மனம் சரியானால் மற்ற எல்லா விஷயங்களும் சரிவரும் என்பதில் ஐயமில்லை. மனம்
பண்பட வேண்டுமானால் அதற்கான பயிற்சியில் ஒவ்வொருவரும் முறையாக ஈடுபட்டு
வரவேண்டும். மனம் சீர் பட்டால் புலன்கள் அடக்கம் பெறுகின்றன. புலன்கள்
அடங்கியதால் மனம் நம் கைவசம் இருந்துவிடும் என்பதும் சாதாரண வெற்றியல்ல.

மனம்
எதை ஆழ்ந்து நினைக்கிறதோ அதன்படியே குணச்சித்திரம் பதிவு ஆகிவிடும். ''
எவ்வுருயிரும் எவ்வுயிரை எச்செயலை நினைத்தால்,அதன் தன்மையாகி விடும்''
என்பதே உண்மை. மனிதன் அறிந்த ஏழு சம்பத்துக்கள், உருவமைப்பு, குணம்,
அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல், வலிவு, சுகம், செல்வம் ஆகியவை. இதில்
ஒன்று குறைந்தாலும் அதை மனிதன் நாடிப் பெற வேண்டும்.

நமது தமிழர்
வாழ்க்கை விஞ்ஞானப் பூர்வமானது. தமிழர்களின் எளிமையும், அன்பும்,
இனிமையும், வலிமையும், நீதியும், நேர்மையும் அழியா சின்னங்கள். பழந்தமிழ்
மக்களின் வாழ்க்கையும் முறைகளையும், சமுதாயப் பழக்க வழக்கங்களையும் மேல்
நாட்டினர் கண்டு ஆச்சரியமடைகிறார்கள்.இலக்கியப் படைப்புகளில் காணப்படும்
புதுமைகள், கணிதம், வானியல், மருத்துவம், அறுவைச் சிகிச்சை போல்
மனதினையும் பக்குவப்படுத்தி வாழ்க்கையில் ஒரு நெறி கண்டவர்கள். நமது
வாழ்க்கை நெறி ஒரு வறட்டு கோட்பாடு அல்ல. மனதின் பூரணமே அதன் இலட்சியம்.
எந்த வெளி உலக சக்தியும் அதனை நசுக்கிவிட முடியாது. இருள் அடர்ந்த
பின்னணியிலும் நமது பண்பாடு, கலாச்சார தீபம் அணைந்து விடாமல் அற்புதமாக
ஒளிவீசுவது என்றால் நமது முன்னோர்கள், சித்தர்கள் கண்ட " தியானம் "

தியானம்
என்பது நம் முன் நிலைத்துள்ள மூச்சைக் கொண்டு நமது அறிவு, சிந்தனை வேறு
எங்கும் செல்லாது தூய அன்புடன் நம்முள் இறைவனை நேசிப்பதாகும். தியானம்
செய்யும் போது நம்மை அறியாமல் ஒரு காந்த உஷ்ணம் ஏற்படும். அந்த உஷ்ணம்
தியானத்தின் மூலம் மேலும் மேலும் பெருகும். காந்த உஷ்ணம் தசாய காந்த
உஷ்ணமாக மாறி நமது சிரசில் போய் சேரும். நமது சிரசில் பல சுரப்பிகள்
சுரந்து அற்புதங்கள் பல உண்டாகும். இவ்வாறு நிகழ்வதால் நமக்கு என்னென்ன
நன்மைகள் கிடைக்கிறது என்பதை சற்று பார்ப்போம்.

உடல் உள்ளம் தூய்மை அடைகிறது.

உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது.

அன்பு, சாந்தம், ஆனந்தம், இன்பம் சுரக்கிறது.

சக்தி விரயமாவது தடுக்கப்படுவதுடன் உடலுக்கு புதிய சக்தியும் உற்பத்தியாகிறது.

மனம் இறுக்கத்திலிருந்து தளர்கிறது.

உடல் முழுதும் பூரண ஓய்வு கிடைக்கிறது.

குறைவான பிராண வாயுவே செலவாகிறது.

உள் உறுப்புகளில் உயிரணுகளுக்கு குறைவான வேலை கிடைக்கிறது.

குறைவான சுவாச இயக்கம் கிடைக்கிறது.

இதய துடிப்புக்கு குறைவான இயக்கம் கிடைக்கிறது.

மனிதனின் சிந்தனை சக்தியை தூண்டிவிடுகிறது.

தூக்கத்தினால் கிடைப்பதை விட உடலுக்கு அதிகமான ஓய்வு கிடைக்கிறது.

ஞாபக சக்தி, புத்தி கூர்மை அதிகரிக்கிறது.

மன உலைச்சல் மன அழித்தம் நீங்குகிறது.

அலைபாயும் மனம் அடங்கி அமைதியடைகிறது.

சிந்தனை ஆற்றலும், ஞாபக சக்தியும் கூடுகிறது.

நோய் இன்றி பெரு வாழ்வில் பல்வேறு பலன் கிடைக்கிறது.

மூச்சு விடும் விகிதம் குறைகிறது. ஆதலால் ஆயுள் நீடிக்கிறது.

இரத்த அழுத்தம், இதய நோய்கள், காசநோய்கள், தூக்கமில்லாத வியாதி, தோல் நோய்கள், நீரிவு நோய்களும் குணமடைகிறது.

மனம்
சரியானால் மற்ற எல்லா விஷயங்களும் சரிவரும் என்பதில் ஐயமில்லை. மனம் பண்பட
வேண்டுமானால் அதற்கான பயிற்சியில் ஒவ்வொருவரும் முறையாக ஈடுபட்டு
வரவேண்டும். மனம் சீர்பட்டால் புலன்கள் அடக்கம் பெறுகின்றன. புலன்கள்
அடங்கியதால் மனம் நம் கைவசம் இருந்துவிடும் என்பதும் சாதாரண வெற்றியல்ல.

இந்த
வெற்றியின் வழி நாம் பரிபூரண ஆத்ம நிம்மதியும், இன்பமும் பெறுகிறோம்.
ஒருவர் அதிகம் பேசுவது கொண்டோ, சுறுசுறுப்புடன் வேலை செய்வது கொண்டோ
இதனைக் கண்டறிய முடியும். அதேபோல்தான் மெளனமாக இருப்பதும்; மெதுவாகப்
பேசுவதும் ஒருவரின் மனம் அடங்கப் பெற்றதை அல்லது புலன்கள் அடங்கி விட்டன
என்பதை காட்டிவிடாது. சுருக்கமாக ஒருவரின் புறத்தோற்றம்- நடவடிக்கைகளை
மட்டும் வைத்துக்கொண்டு மன ஒருமுகப் பாட்டை உறுதிப்படுத்த முடியாது.
உதாரணத்திற்க்கு, ஒரு நீர் நிலையில் அதன் மேல்மட்டத்தில் நீரோட்டம் அல்லது
அலை குறைந்தோ கூடுதலாகவோ எவ்வாறும் இருக்கலாம். ஆனால் நீர் நிலையின்
அடியில் எப்படிப் பார்த்தாலும் நிதானமான நீர்தான் ஓடிக் கொண்டிருக்கும்.
இவ்வாறுதான், சுற்றியுள்ள சூழ்நிலைகள் பல மாதிரி இருந்தபோதிலும், மனம்
என்பது அலையாது ஒரே நிலையில் இருக்கும் தன்மையுண்டு.

மனம் என்பதின்
கூர்முனை எண்ணம் புருவ மத்தியிலுள்ள சூஸ்மத்தில் குவிகின்றது. இவ்வாறு
குவியும் எண்ணம், ஒரு குழாயிலிருந்து விழும் நீர்த்துளி போல உணர்வு
நிலையைத் தந்து கொண்டிருக்கும். அவ்வாறு எண்ணம் குவியாது இருந்தால்
புலன்கள் சோர்ந்து தூக்க நிலைதான் உண்டாகும். பற்பல நிகழ்ச்சிகள் காண்பது
போலிருக்கும். தியானம் பூரணமாக நடைபெறாது. அது உறைப்பான உணர்வு நிலைக்கோ -
புத்திக்கோ கொண்டு செல்லாது. விழிப்பு நிலை இதனால் குறைவு பெறுவதுடன்
மயக்க புத்தியைத்தான் வளரச் செய்கிறது. மாறாக, உணர்வு நிலையில் மட்டும்
தியானத்தை கொண்டு சென்றால், அந்த உணர்வே பின் இதயத்திற்கு இறங்கி
விடுகின்றன.அலை கடலில் நங்கூரமிட்ட கப்பலை போல் பிடிமானம் கொண்டு விடும்.
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

தியானம்  Empty Re: தியானம்

Post by அருண் Wed Mar 09, 2011 1:59 pm

தியானத்தின் தன்மையை தெளிவாக விளக்கி பதிவு இட்டமைக்கு மிக்க நன்றி சாந்தி! தொடருங்கள். நன்றி நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தியானம்  Empty Re: தியானம்

Post by உதயசுதா Wed Mar 09, 2011 6:45 pm

பயனுள்ள பதிவு சாந்தி.நன்றி


தியானம்  Uதியானம்  Dதியானம்  Aதியானம்  Yதியானம்  Aதியானம்  Sதியானம்  Uதியானம்  Dதியானம்  Hதியானம்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தியானம்  Empty Re: தியானம்

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 09, 2011 9:46 pm

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ஷாந்தி.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தியானம்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தியானம்  Empty Re: தியானம்

Post by பிளேடு பக்கிரி Wed Mar 09, 2011 10:03 pm

நல்ல பதிவு



தியானம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தியானம்  Empty Re: தியானம்

Post by நியாஸ் அஷ்ரஃப் Wed Mar 09, 2011 11:25 pm

பகிர்வுக்கு நன்றிகள். பயனுள்ள பதிவு.. தியானம்  678642


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


தியானம்  Aதியானம்  Sதியானம்  Hதியானம்  Rதியானம்  Aதியானம்  Fதியானம்  Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

தியானம்  Empty Re: தியானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum