ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கு சொந்தம்?: கேள்விகளை எழுப்பும் விண்ட்சர் எஸ்டேட்!

5 posters

Go down

யாருக்கு சொந்தம்?: கேள்விகளை எழுப்பும் விண்ட்சர் எஸ்டேட்!  Empty யாருக்கு சொந்தம்?: கேள்விகளை எழுப்பும் விண்ட்சர் எஸ்டேட்!

Post by அன்பு தளபதி Mon Mar 07, 2011 12:25 pm

‘அம்மா... நூறு ஏக்கர் அளவிலான கொடநாடு எஸ்டேட்-டைப் பற்றி தி.மு.க.வில்
இல்லாததும் பொல்லாததுமாக கிளப்பி விடுகிறார்கள். ஆனால்... முதல்வரின்
குடும்பம் கோத்தகிரி அருகே ஐநூறு ஏக்கர் பரப்புள்ள எஸ்டேட்டை அடிமாட்டு
விலைக்கு வாங்கிப் போட்டிருக்கிறார்கள். நம் கட்சிக் காரர்கள்
மட்டுமன்றி... தி.மு.க.வினரும் கூட அதை இப்போது கனிமொழி எஸ்டேட்
என்றுதானம்மா அழைக்கிறார்கள்...’’

-நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவுக்கு சமீபத்தில்
தொடர்ந்து எழுதிய கடிதங்கள் ஒருபக்கம், டெல்லியிலிருந்து கிடைத்த தகவல்கள்
ஒருபக்கம் என பிப்ரவரி 28&ம் தேதி வெளிவந்த ஜெயலலிதாவின் அறிக்கையில்
அனல் பறந்தது.

‘‘அண்மையில் கோத்தகிரியில் விண்ட்ஸர் எஸ்டேட்டை
சங்கல்பம் இன்டஸ்ட்ரீஸ் இயக்குனர் சண்முகநாதன் வாங்கியிருப்பதாக ஊடகங்கள்
செய்தி வெளியிட்டன. இந்த எஸ்டேட், ‘கனிமொழி எஸ்டேட்’ என்று
உள்ளூர்க்காரர்களால் பேசப்படுகிறது. 525.98 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட இந்த
எஸ்டேட் ஆவண எண் 2057/2006 மூலம் 16.12.2006 அன்று வெறும் 2.47 கோடி
ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறது.

ராசாத்தியின் கூற்றுப்படி இந்த
எஸ்டேட்டை வாங்கிய சண்முகநாதனுக்கும் ராசாத்திக்கும் எந்த விதத் தொடர்பும்
இல்லை. இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால்
சண்முகநாதனால் வாங்கப்பட்ட விண்ட்ஸர் எஸ்டேட்டின் ஆவணத்தில் சென்னை
தி.நகர், 12, சௌத் வெஸ்ட் போக் ரோடு என்ற முகவரியில் வசிக்கும்
கே.சேஷாத்ரியின் மகன் சீனிவாச ரத்தினம் என்பவர் சாட்சிக் கையெழுத்து
போட்டிருக்கிறார்.

அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் தொலை-பேசியில்
ராசாத்தி பேசும்போது அவருக்கு உதவி புரிந்த தணிக்கையாளர்
ரத்தினத்துக்கும், சீனிவாச ரத்தினத்துக்கும் ஒரே முகவரிதான். அவரேதான்
இவர். இப்போதாவது கனிமொழியும் ராசாத்தியும் உண்மையை
வெளிப்படுத்துவார்களா?’’ என்று கேட்டு புயலைக் கிளப்பினார் ஜெயலலிதா.

இந்த புயல் மையம் கொண்டிருக்கும் அந்த விண்ட்ஸர் எஸ்டேட்டை நோக்கி தொடங்கினோம் நம் விசாரணைப் பயணத்தை.

கோத்தகிரியை அடுத்த எஸ் கைகாட்டி கிராமத்திலிருந்து வலது பக்கம்
திரும்பினால் ஒரு ஜீப் மட்டுமே செல்லக் கூடிய அடர்ந்த காட்டுச் சாலை. அதில்
17 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கீழ் கோத்தகிரியை அடைந்தோம். கீழ்
கோத்தகிரியிலிருந்து மறுபடியும் 12 கிலோ மீட்டர் தூர திகில் பயணத்துக்குப்
பின் நாம் சென்று அடைந்தது கடினமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கரிக்கூர்
கிராமம்.

அரசியலில் பெரும் சூறாவளியைக் கிளப்பிவிட்டு தனக்கு
ஒன்றுமே தெரியாதது மாதிரி ரொம்ப அமைதியாய் ஏகாந்தத்தில் திளைத்துக்
கிடந்தது அந்த இயற்கை எழில் சூழ்ந்த கிராமம்.

இந்த
கிராமத்தில்தான் சுமார் 520 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கிறது
விண்ட்ஸர் எஸ்டேட். அதன் பெயர்ப் பலகையையும், பின்னணியில் உள்ள எஸ்டேட்டின்
ஏகாந்தப் பரப்பையும் பலத்த முயற்சிக்குப் பின் நமது கேமராவுக்குள்
விழுங்கிக்கொண்டோம்.

எஸ்டேட்டைச் சுற்றி ஆங்காங்கே தனித்துக்
கிடந்த ஓரிரு வீடுகள். அங்கே இருந்த ஆண்கள் ஆளுயர ஈட்டிகளை வைத்திருக்க...
பெண்களோ கைகளில் பட்டாக்கத்திகளை ஏந்தியிருந்தனர்.

ஏற்கனவே
குளிர் நடுக்கத்தோடு, இது என்ன ஈட்டி, பட்டாக்கத்தி என்ற ஒரு சிறு
எச்சரிக்கை உணர்வோடு ஒரு பெண்மணியிடம் ஏங்க இவ்ளோ பெரிய கத்தி
வச்சிருக்கீங்க என்று கேட்டுவிட்டோம். ‘‘சிறுத்தைப் புலி வந்துடும்
தம்பி... அதுக்காகத்தான்’’ என விளக்கம் கொடுத்தார்.

மிக
பிரமாண்டமாக விரிந்து கிடக்கும் இந்த எஸ்டேட், தி.மு.க. வசம் இருக்கும்
குன்னூர் தொகுதிக்குள் வருகிறது. எஸ்டேட்டுக்குள் தேயிலை, காபி, சில்வர்
உட் என பயிரிடப்பட்டிருக்க... எஸ்டேட்டுக்குள் நிறைய பேர் வேலை
செய்துகொண்டிருந்தனர். ஆங்காங்கே பாதுகாவலர்களும் நின்றுகொண்டிருந்தனர்.
அவர்களை எல்லாம் மீறி கேமராவில் எஸ்டேட்டை பதிவுசெய்தோம்.

இந்த
கரிக்கூர் கிராமம்தான் நீலகிரி மாவட்டத்தின் முடிவு. இதையடுத்து, சில மலைக்
குன்றுகளுக்குப் பின்னால் பவானி சாகர் அணைக் கட்டு மிக ரம்மியமாக காட்சி
அளிக்கிறது. எஸ்டேட்டில் நின்று பார்த்தால் அந்த அணைக் கட்டுப் பகுதியின்
அற்புதமான வியூ கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

கடினமலை கிராமத்திலிருந்து வெளியே வந்து சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

‘‘இந்த எஸ்டேட்டுக்கு இதுக்கு முன்னாடி குறுவைநில்லா எஸ்டேட்னு பெயர்.
அப்ப இதை கோவை பாய்னு ஒருத்தர்தான் நிர்வாகம் பண்ணிக்கிட்டிருந்தார்.
அப்புறம் ஒரு நாலஞ்சு வருசம் முன்னாடிதான் இது பேரு மாறிச்சு. சமீபத்துல
கூட இந்த எஸ்டேட்டுலேர்ந்து சில்வர் உட் மரங்களை எக்கச்சக்கமாக வெட்டி
சாய்ச்சாங்க. இது யாரோட எஸ்டேட்னு தெரியாது. ஆனா, ஊரெல்லாம் இதுக்கு பேரு
கனிமொழி எஸ்டேட்டுதான்’’ என்றனர் அந்த அமைதியைக் கிழித்தபடி!

எஸ்டேட்டைப் பார்த்து பிரம்மித்துக் கொண்டே மீண்டும் நம் பயணத்தை கோத்தகிரிக்குத் திருப்பினோம்.

கோத்தகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் இருக்கும் அதிகாரி ஒருவரை சந்தித்து
பேசினோம். பெயர் வெளியிடக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டுதான் பேச
ஆரம்பித்தார்.

‘‘நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை இரண்டு வகையான
எஸ்டேட்கள் உள்ளன. ஒன்று பராமரிக்கப்படாத தோட்டங்கள், மற்றொன்று
பராமரிக்கப்பட்ட தோட்டங்கள். இன்றைய நிலவரப்படி பராமரிக்கப்படாத தோட்டங்கள்
ஒரு ஏக்கர் ரூ. 5 லட்சம் வரை விலை போகிறது. பராமரிக்கப்பட்ட தோட்டங்கள்
ஏக்கர் ரூ. 10 லட்சம் முதல் விலை போகிறது. இதில் பராமரிக்கப்படாத
தோட்டங்களை சிறு குறு விவசாயிகள் சிறிய சிறிய தோட்டங்களாக
வைத்திருக்-கின்றனர். பரா-மரிக்கப்பட்ட தோட்டங்கள் டாட்டா, கண்ணன் தேவன்,
புரூக்பாண்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் வாங்கக் கூடிய தோட்டங்கள் மற்றும்
அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் தோட்டங்கள் தான் அவை.

அந்த
வகையில் இப்போது விண்ட்ஸர் எஸ்டேட்டாக இருக்கும் தோட்டம்,
பராமரிக்கப்பட்டுவரும் தோட்டம்தான். பராமரிக்-கப்பட்ட தோட்டத்தின் விலை
குறைந்த பட்சமே ஒரு ஏக்கர் ரூ. 10 லட்சத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது.
அப்படி இருக்க, 525.98 ஏக்கரின் விலை என்ன என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
இவ்வளவு விலை போகும் நிலத்தை வெறும் ரூ. 2 கோடி 47 லட்சத்திற்கு பதிவு
செய்திருப்பது, மிகப்பெரிய மோசடி.

நிலத்தின் மதிப்பை கைடு லைன்
வேல்யூ மற்றும் மார்க்கெட் வேல்யூ என்று இரு வகையாக கூறுவோம். இதில் கைடு
லைன் வேல்யூ என்பது அரசு நிர்ணயிக்கும் விலை. அந்த அடிப்படையிலேயே
பார்த்தால் விண்ட்சர் எஸ்டேட்டின் ஒரு ஏக்கரின் விலை ரூ. 10 லட்சம்.
அப்படியானால் 525.98 ஏக்கரின் விலை ஐம்பது கோடிகளைத் தாண்ட வேண்டும்.

நிலத்தின் கைடு லைன் வேல்யூவின் படி 11 சதவிகிதம் ஸ்டாம்ப் டியூட்டி கட்ட
வேண்டும். ஆனால் முதல்வருக்கு நெருக்கமான ஆட்கள் என்பதால் பதிவுத்துறை
அதிகாரிகளும் அடிமட்ட விலைக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் உண்மையிலேயே
அவர்கள் என்ன விலை கொடுத்து வாங்கினார்கள் என்பது தெரியவில்லை. அந்த
நிலத்தின் மதிப்பு குறைந்தது 60 கோடி ரூபாய் இருக்கும். இதற்கு 11
சதவிகிதம் ஸ்டாம்ப் டியூட்டி கட்ட வேண்டுமானால், 6 கோடியே அறுபது லட்சம்
கட்டியிருக்க வேண்டும். ஆனால் நிலத்தின் மதிப்பையே 2 கோடியே 47 லட்சம்
என்று கூறி, வெறும் 20 லட்ச ரூபாய் ஸ்டாம்ப் டியூட்டி கட்டியுள்ளனர்.
இதனால் பதிவுத்துறைக்கு பல கோடி ரூபாய் இழப்பு. ஒரு இடத்திலேயே இவ்வளவு
இழப்பு என்றால், தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இவர்கள் நிலம்
வாங்கியிருக்கிறார்களோ-? அதனால் அரசுக்கு எத்தனை கோடி ரூபாய்கள் இழப்பு
ஏற்பட்டுள்ளதோ’’ என்றார் அந்த அதிகாரி.

அ.தி.மு.க.வின்
வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இப்போதே இந்த எஸ்டேட் பற்றிய
விவரங்களை விரல் நுனியில் வைத்து அலச ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களிடம்
பேசினோம்.

‘‘தற்போது இந்த விண்ட்சர் எஸ்டேட்டை கனிமொழி எஸ்டேட்
என்று தான் அனைவரும் அழைக்கிறார்கள். காரணம் கனிமொழி குடும்பத்திற்கு
நெருக்கமான சண்முகநாதன் என்பவரது பெயரில்தான் இந்த எஸ்டேட்
வாங்கப்-பட்டுள்ளது. பத்திரத்தில் கூட ராஜாத்தியம்-மாளின் ஆடிட்டர் சீனிவாச
ரத்தினம் எனபவர்தான் சாட்சி கையெழுத்து போட்டிருக்-கிறார். அப்படியானால்
இது கனிமொழி எஸ்டேட்தானே. இனி இவர்களால் இந்தப் பகுதி மக்களுக்கு என்ன என்ன
பிரச்னைகள் வரப்போகிறதோ? அது-மட்டுமல்லாமல் ஸ்பெக்ட்ரம் பணத்தில் தான்
இந்த எஸ்டேட் வாங்கப்பட்டதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

சுமார் நூறு ஏக்கர் பரப்புள்ள கொடநாடு எஸ்டேட்டுக்கே குதிகுதியென
குதிக்கும் தி.மு.க.வினர் அரசுக்கு பலகோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடாக
வாங்கப்பட்டிருக்கும் இந்த ஐநூறு ஏக்கர் எஸ்டேட் பற்றி என்ன
சொல்லப்போகிறார்கள். அவர்கள் என்ன சொல்வது? இனி நாங்கள் சொல்வோம்...
தேர்தல் பிரசார மேடைகளில் ‘கனிமொழி எஸ்டேட்’ விவகாரத்தை கிழிகிழியென
கிழிப்போம்’’ என்கிறார்கள் ஆவேசமாய்.

கோத்தகிரியில் இருந்து
விண்ட்ஸர் எஸ்டேட்டின் திசை நோக்கிப் பார்த்தோம். ஏதோ புலனாய்வு செய்யப்
போவதைப் போல மேகங்கள் விரைந்துகொண்டிருந்தன அந்தப் பக்கம் பார்த்தபடி!

நன்றி தமிழக அரசியல்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

யாருக்கு சொந்தம்?: கேள்விகளை எழுப்பும் விண்ட்சர் எஸ்டேட்!  Empty Re: யாருக்கு சொந்தம்?: கேள்விகளை எழுப்பும் விண்ட்சர் எஸ்டேட்!

Post by பிரகாசம் Mon Mar 07, 2011 12:29 pm

யாருக்கு சொந்தம்?: கேள்விகளை எழுப்பும் விண்ட்சர் எஸ்டேட்!  300136


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
யாருக்கு சொந்தம்?: கேள்விகளை எழுப்பும் விண்ட்சர் எஸ்டேட்!  812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

யாருக்கு சொந்தம்?: கேள்விகளை எழுப்பும் விண்ட்சர் எஸ்டேட்!  Empty Re: யாருக்கு சொந்தம்?: கேள்விகளை எழுப்பும் விண்ட்சர் எஸ்டேட்!

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 07, 2011 1:49 pm

ஒரு மார்க்கமா தான் கெளம்பி இருக்கு திமுக...தகவலுக்கு அன்பு நன்றிகள் மணி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

யாருக்கு சொந்தம்?: கேள்விகளை எழுப்பும் விண்ட்சர் எஸ்டேட்!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

யாருக்கு சொந்தம்?: கேள்விகளை எழுப்பும் விண்ட்சர் எஸ்டேட்!  Empty Re: யாருக்கு சொந்தம்?: கேள்விகளை எழுப்பும் விண்ட்சர் எஸ்டேட்!

Post by ரபீக் Mon Mar 07, 2011 2:03 pm

சாத்தியமா அது எனக்கு சொந்தமில்லை அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

யாருக்கு சொந்தம்?: கேள்விகளை எழுப்பும் விண்ட்சர் எஸ்டேட்!  Empty Re: யாருக்கு சொந்தம்?: கேள்விகளை எழுப்பும் விண்ட்சர் எஸ்டேட்!

Post by sshanthi Mon Mar 07, 2011 2:53 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒரு மார்க்கமா தான் கெளம்பி இருக்கு திமுக...தகவலுக்கு அன்பு நன்றிகள் மணி...
அதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

யாருக்கு சொந்தம்?: கேள்விகளை எழுப்பும் விண்ட்சர் எஸ்டேட்!  Empty Re: யாருக்கு சொந்தம்?: கேள்விகளை எழுப்பும் விண்ட்சர் எஸ்டேட்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum