ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ராத்திரிக் கூத்து!

Go down

ஒரு ராத்திரிக் கூத்து! Empty ஒரு ராத்திரிக் கூத்து!

Post by சிவா Mon Aug 31, 2009 1:13 am

ரா.கி.ரங்கராஜன்

'அஸ்க்!'' என்ற தும்மல் ஒலி பலமாகக் கேட்டது. குழந்தை ஜயா சர்ரென்று மூக்கை உறிஞ்சினாள். நள்ளிரவு நேரம்.

''சனியனுக்கு என்ன, ஜலதோஷமா?'' என்று படுக்கையில் புரண்டபடி அலுத்துக் கொண்டான் சங்கரன். ''ஆமாம், சாயந்தரமே பிடித்து'' என்று சரஸ்வதி பதில் அளித்தாள்.

''தரித்திரத்துக்குப் பூஞ்சை உடம்பு. மழைக் காலமாய் இருக்கிறது. பார்த்துக்கொள் என்று முட்டிக் கொள்கிறேன். நீ லட்சியம் பண்ணினால்தானே?''

'அஸ்க்' என்று இரண்டாவது தும்மல் புறப்பட்டது.

''பார் படுகிற அவஸ்தையை. குளிர்காலத்தில் குழந்தைக்குக் கனமாய் ஒரு சொக்காய் இல்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டே, நேற்று ஆபீசிலிருந்து வருகிறேன். இவள் இருக்கிற சொக்காயையும் போட்டுக் கொள்ளாமல், தெருவில் தூறலில் நின்று கொண்டிருக்கிறாள். பெற்றவளுக்கு அடக்கி வளர்க்கத் தெரியவேண்டும்...''

''ஆகா! நான் அடக்கினால் அடங்கிவிட மாட்டாளோ உங்கள் பெண்'' என்ற சரஸ்வதி, மகள் பக்கம் திரும்பி, ''எதற்கடி முனுகுகிறாய்? பேசாமல் படுத்துத் தூங்கு'' என்று அதட்டினாள்.

''தண்ணி, அம்மா!'' என்ற ஜயாவின் குரல், அப்பாவிடமுள்ள பயத்தில் ஈனசுரத்தில் கேட்டது.

''தண்ணீர் வேண்டுமாம். ப்ளாஸ்கிலே இருக்கிறது. கொஞ்சம் எடுத்துக் கொடுங்கள்'' என்று சரஸ்வதி சொல்லும் போது சுவர்க் கடியாரம் இரண்டு மணி அடித்தது.

''மணி காதில் விழுந்ததா? அம்மாவுக்கும் பெண்ணுக்கும் விளையாட்டா இருக்கிறதோ? பேசாமல் தூங்குங்கள். என்னால் எழுந்திருக்க முடியாது'' என்றான் சங்கரன் கோபமாக.

ஐந்து நிமிஷம் நிசப்தம் நிலவிற்று. கடியாரம் ஒன்றுதான் டிக்டிக் என்று வாய் வலிக்காமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

திடீரென மறுபடி சரஸ்வதியின் அதட்டல் கேட்டது. ''எதற்காகடி இப்படிப் புரண்டு புரண்டு படுத்து உயிரை எடுக்கிறாய்?''

டக்கென்று தன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டான் சங்கரன். ''இப்படி என்னிடம் கொண்டு வந்து விடு. அவளை நாலு போட்டோனானால் வாயை மூடிக் கொண்டு தூங்குவாள்!''

''முதலில் நீங்கள் தூங்குங்கள் பேசாமல்!''

தும்மல் நின்றும், உறிஞ்சல் நிற்கவில்லை ஜயாவுக்கு. முகத்தைக் தலையணையில் தேய்த்துக் கொள்வதும், காலை மடக்குவதும், கையை நீட்டுவதுமாக அலட்டிக் கொண்டே இருந்தாள்.

சங்கரனுக்குப் பொறுக்க முடியவில்லை. விருட்டென்று எழுந்து சென்று, மகளைப் படுக்கையோடு பெயர்த்து எடுத்து தன் பக்கத்தில் கொண்டு வந்து விட்டாள்.

குழந்தைக்கு அப்பாவிடம் பயம் இருந்த அளவுக்குப் பிரீதியும் இருந்தது. தந்தையின் கழுத்தை மெல்லச் சுற்றிக் கட்டிக்கொண்டாள். வாழைக் குருத்துப் போன்ற பிஞ்சுக் கரத்தின் ஸ்பரிசம் மனதுக்குப் பிடித்திருந்தாலும், தன் முகத்தினருகே ஒரு ஜலதோஷ மூக்கு உராய்வது சங்கரனுக்கு என்னவோ போலிருந்தது. ''நகர்ந்து படு'' என்று குழந்தையைச் சற்றுத் தள்ளி விட்டுவிட்டுப் போர்வையை இழுத்து மூடிக் கொண்டான் அவன்.

பஞ்சைப் பிய்த்துப் போட்டாற் போல நினைவு அப்படியும் இப்படியுமாய் சிதறி, தூக்கம் வருகிற சமயம்-

''ஸ்... ஆ...!'' என்ற முனகல் அருகிலிருந்து கேட்டது.

''ஏய் சனியனே! என்ன மறுபடி?'' என்று பல்லைக் கடித்தான் சங்கரன்.

'ஜயா கண்ணை மிரள மிரள விழித்து விட்டு காதைத் தொட்டுக் காட்டினாள். ''வலிக்கிறது... அப்பா... ஸ்!''

''சரி, சரி, கண்ணை மூடிக் கொள், தூக்கம் வந்துவிடும்.''
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு ராத்திரிக் கூத்து! Empty Re: ஒரு ராத்திரிக் கூத்து!

Post by சிவா Mon Aug 31, 2009 1:13 am

''ஸ்...'' காதைத் தன் கைகளால் படபடவெனத் தட்டிக் கொண்டாள் ஜயா.

''சூ! உன்னைத்தானே? இவள் என்னமோ காதை வலிக்கிறது என்று ஆரம்பிக்கிறாளே! எழுந்த பாரேன் என்னவென்று!''

சரஸ்வதி, வலப்புறம் திரும்பியிருந்தவள், இடப்புறம் திரும்பிக் கொண்டாளே தவிர, எழுந்திருக்கவில்லை. ''வேறு என்ன வேலை! காதுக் குத்தலாக்கும்! நடுராத்திரி பார்த்துத் தான் பீடைக்கு எல்லாம் வரும்.''

''அட, சட்! எருமைக்கடா! உனக்கு அலுப்பாயிருந்தால் குழந்தையை எதற்காகத் திட்டுகிறாய்?'' என்று சீறி விழுந்தான் சங்கரன். காதுக் குத்தல் என்ற சொல்லைக் கேட்டதுமே, அவன் தூக்கம் பறந்து விட்டது, சோர்வு விடைபெற்றது. திடுமென்று குழந்தையிடம் அபார இரக்கம் ஏற்பட்டது அவனுக்கு.

ஒரு பாட்டியம்மாள் அவன் கண் முன்னால் வந்து நின்றாள்.

அவன் அம்மாவைப் பெற்ற பாட்டியுமல்ல, அப்பாவைப் பெற்ற பாட்டியுமல்ல. யாரோ ஒரு தூரத்து உறவுப் பாட்டி.

இருபது வருடத்துக்கு முன்னால் சங்கரனுக்குப் பத்து வயதிருக்கலாம். அப்பா வகையில்லை, அம்மா - அம்மா அல்ல, சித்தி. எவ்வளவோ பேருக்கு அன்பைக் கொட்டுகிற செய்யாதவன். கொடுமைப்படுத்தினாள் என்று சொல்ல முடியாதென்றாலும், அன்பு அபூர்வமாகத்தான் வெளிப்பட்டது அவளிடமிருந்து.

பள்ளிக்கூடத்திலிருந்து புறப்பட்ட சிறுவன் சங்கரன், குடையை அங்கேயே விட்டுவிட்டான். பாதி வழியில் மழை பிடித்துக் கொள்ளவே, சொட்டச் சொட்ட நனைந்தபடிதான் வீடு திரும்பினான். குடையை மறந்து விட்ட கோபத்தில் சித்தி, அவன் தலையை துவட்டக் கூட முன்வரவில்லை.

இரவு படுக்கும்போது கடுமையான சளி பிடித்துக் கொண்டது. நச்சு நச்சென்று மூக்கு ஓயாமல் தும்மிக் கொண்டே தூங்கினான்.

நடு இரவில் திடுமெனத் தூக்கம் கலைந்து விட்டது. காதில் குத்தலான குத்தல், ஆணியைச் செவிக்குள் விட்டுச் சுரீர்ரென்று குத்துவது போல் நரம்பைச் சுண்டிற்று வேதனை.

''சித்தி! காதை வலிக்கிறது சித்தி'' என்று சங்கரன் ஓ வென்று அழுதான்.

''தூங்கடா வாயை மூடிக் கொண்டு. தன்னாலே சரி ஆகும்'' என்று அதட்டினாள் சித்தி.

''நன்றாயிருக்கிறது, கோமளம்! காதுக் குத்தலைக் குழந்தையால் பொறுத்துக் கொள்ள முடியுமா?'' என்று ஓர் இதமான குரல் அப்போது கேட்டது.

அப்பா அல்ல, வீடு இடிந்து விழுந்தால் கூட எழுந்து கொள்ளாத பேர்வழி அவர். பரிந்து பேசியது ஒரு பாட்டியம்மாள் - அப்பாவின் தூரத்து உறவுக்காரி.

சற்று நேரத்தில் எலும்பு குத்தும் ஒரு தொடையில், தன் தலை மெல்ல எடுத்துக் கொள்ளப்படுவதை உணர்ந்தான் சங்கரன். சுவரில் மாட்டியிருந்த பெட்ரூம் விளக்கு கீழே இறங்கி, அவன் கண்ணுக்கு வெகு சமீபத்தில் வைக்கப்பட்டது. கிழவி, தன் புடவைத் தலைப்பைப் பந்தாகச் சுருட்டி, விளக்குக்கு மேலாகக் காட்டிச் சங்கரனின் காதண்டை ஒத்தடம் கொடுத்தாள் - வெகு நேரம் வரை.

சங்கரனுக்கு உடல் சிலிர்த்தது. இந்த இருபது வருடத்தில் அவனுக்கு மறுபடி காதைக் குத்தும் அளவுக்கு சளிபிடிக்கவில்லை. ஆனால் அந்த முதல் அனுபவம் இப்போதும் கடுமையாக நினைவு வந்தது. சுள்சுள்ளென்று அவன் காதுக்குள் குத்திற்று. மெத்மெத்தென்ற ஒரு சூடான துணிச் சுருள் அவன் செவியைத் தொட்டுத் தொட்டுச் சென்றது.

''ஸ்... அம்மா! ஆ!'' என்று ஜயா முனுகினாள்.

''ஏய்! சரசு! எழுந்திருந்து குழந்தையைக் கவனிக்கப் போகிறாயா, இல்லையா?'' என்று மனைவியை உலுக்கினான் சங்கரன்.

''ஐயய்யய்ய...!'' என்று சரஸ்வதி அலுத்துக் கொண்டாள். ''என்ன அவளுக்கு மேலே நீங்கள் படுத்துகிறீர்கள்? சளி. முட்டிக் கட்டிக் கொண்டிருக்கிறது. குத்தாமல் என்ன செய்யும்? கொஞ்ச நேரத்தில் தன்னாலே தூங்கிப் போய் விடுவாள். பேசாமல் விடுங்கள் அவளை-''

சரஸ்வதி, ஜயாவைப் பெற்றெடுத்த தாய்தான். ஆனால் காதுக் குத்தலை அவள் அனுபவித்தவள் அல்ல. ''ஜயா! ரொம்ப வலிக்கிறதாம்மா?'' என்று சங்கரன் மகளைக் கேட்டான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு ராத்திரிக் கூத்து! Empty Re: ஒரு ராத்திரிக் கூத்து!

Post by சிவா Mon Aug 31, 2009 1:13 am

தந்தையின் இந்தத் திடீர் பரிவே குழந்தைக்குப் பாதிக்குணம் தந்ததோ என்னவோ! ''ஊஹ¤ம்... இல்லை... ஆ! உஸ்...!'' கைகளால் காதை படபடவென்று தட்டிக் கொண்டாள் ஜயா.

சங்கரன் எழுந்து கொண்டான். பெட்ரூம் விளக்கைக் கீழே எடுத்து வைத்தான். வேட்டியின் முனையை மடித்து, தீபத்துக்கு மேலாகக் காட்டி, பெண்ணின் காதில் ஒத்தடம் கொடுக்கலானான்.

ஜயா இப்படியும் அப்படியுமாகப் புரண்டாள். மூக்கு நுனியில் குமிழிகளாக நீர் நுரைத்தது.

மணி மூன்றாகி விட்டதென்று கடியாரம் நினைவூட்டிற்று.

வென்னீரில் யூகலிப்ட்ஸ் ஆயிலை விட்டு ஆவி பிடிக்கச் சொல்லலாம் என்ற எண்ணம் உதித்தது சங்கரனுக்கு. பிளாஸ்க்கைத் திறந்து பார்த்தான். ஆறி, சில்லிட்டிருந்தது நீர்.

வெளியே சரசரவென்று மழை தொடங்கிற்று. ஊதல் காற்று மூடியிருந்த ஜன்னலிலிருந்த இடுக்கைக் கண்டுபிடித்து உள்ளே நுழைந்து வந்தது.

''கொஞ்சம் படுத்திரு. ஜயாக் கண்ணு, போய் வென்னீர் கொண்டு வருகிறேன்'' என்று புறப்பட்டான் சங்கரன்.

சமையலறை இரண்டாம் கட்டில் இருந்தது. முற்றத்து வழியாகப் போக வேண்டும். என்ன வேகமாக ஓடியும் தலையை நனையாமல் காக்க முடியவில்லை.

எப்போதும் காலையில் பற்ற வைக்க அடுப்பில் கரி போட்டு வைக்கும் சரஸ்வதி, அன்று வெறும் அடுப்பாகவே வைத்திருந்தாள். கரிப் பீப்பாய் முதல் கட்டில் இருந்தது. மறுபடியும் ஒரு நடை ஓடி, கரி எடுத்து வந்து போட்டு, மண்ணெண்ணெயைக் கொட்டி அடுப்பைப் பற்ற வைத்தான் சங்கரன்.

முள்மாதிரி சுரீரென உறைத்தது, கம்பியில்லா ஜன்னல் வழியே பிரவேசித்த குளிர்க் காற்று, எரியும் அடுப்பில் கையைக் காய்ச்சிக் கொண்டாலும், காலோடு தலை சுகமாகப் போர்த்துக் கொள்ள அவா எழுந்தது. ஆனால் படுக்கையிலிருந்து எழுந்து வந்த போது, வெறும் பனியனோடு புறப்பட்டு விட்டான். இப்போது போர்வைக்காக முதல் கட்டுக்கு மூன்றாம் நடை நடக்க இஷ்டப்படவில்லை அவன்.

அடுப்பில் வைத்திருந்த நீர், தளதளவென்று கொதித்தது. அந்தக் குளிர் வேளைக்கு, சூடாக ஏதேனும் பானம் குடித்தால் என்ன? பால் இல்லாமலே, ஹார்லிக்ஸ் தயாரிக்கலாம்...

''ஸ்... அப்பா!'' என்ற முனகல் அவனைத் தூக்கி வாரிப்போட வைத்தது!

கதவருகில் சாட்சாத் ஜயாவே நின்று கொண்டிருந்தாள்.

''ஐயையோ! மழையில் நனைந்து கொண்டா வந்தாய்? வா, இப்படி!'' என்று சங்கரன் மகளை இழுத்து மடியில் விட்டுக் கொண்டான்.

''தூக்கம் வரலை, அப்பா. காதை வலிக்கிறது...''

''சுடச்சுட ஒரு டம்ளர் ஹார்லிக்ஸ் சாப்பிடலாமா, இரண்டு பேருமாய்?''

''ஓ!'' என்று ஜயா உற்சாகமாய் ஆமோதித்தாள்.

''சர்க்கரை டப்பாவையும், டம்ளரையும் எடு, பார்க்கலாம்.''

குழந்தை, தன் காது வலியையும் மறந்து, அலமாரியில் எம்பி இழுத்தாள்.

ணங்கென்று ஒரு வெண்கல டம்ளர் கீழே விழுந்து, ஙணஙணவென்று தரையில் உருண்டு ஓடிற்று.

''பார்த்து எடுக்க வேண்டாமோ?'' என்று சங்கரன் பெண்ணிடம் செல்லமாய் கேட்ட அதே சமயம், தோட்டத்துப் பக்கம் இருந்த மூடிய ஜன்னலை யாரோ டொக் டொக்கென்று தட்டினார்கள்.

திடுக்கிட்டவனாய் சங்கரன் எழுந்து கொண்டு, ஜன்னல் கதவைத் திறந்து பார்க்க, பளீரென்று ஒரு டார்ச் விளக்கின் ஒளி அவன் கண்ணைக் கூச வைத்தது.

''யாரையா! நீர்தானா?'' என்று அடுத்த வீட்டு ஆத்ம நாதனின் குரலைச் சங்கரன் கேட்டான். அவர் கையில் தொடங்கி, தோட்டத்தைத் தாண்டி, தன் வீட்டு ஜன்னலைத் தட்டிய நீண்ட கழியின் நுனியையும் பார்த்தான்.

''ஆமாம், என்ன விசேஷம்?'' என்று எரிச்சலைக் காட்டிக் கொண்டான் சங்கரன்.

''பயந்தே போய் விட்டேன், ஐயா! கொல்லைப் பக்கம் வந்தேன். உங்கள் சமையல் கட்டில், வெளிச்சம் தெரியவும், சத்தம் கேட்கவும் தூக்கி வாரிப் போட்டது. என்ன பண்ணுகிறீர் இந்த நேரத்தில் சமையலறையில்...?''

''ஊம். ஒன்றுமில்லை. ஜயா கொஞ்சம் தண்ணீர் கேட்டாள்'' என்று ஜன்னலை சாத்திவிட்டு திரும்பினான் சங்கரன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு ராத்திரிக் கூத்து! Empty Re: ஒரு ராத்திரிக் கூத்து!

Post by சிவா Mon Aug 31, 2009 1:13 am

அடுப்பு நீரில் கொதி அடங்கியிருந்தது. ஜயா சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தாளே தவிர, தூங்கவில்லை என்பது, காதை அவள் கைகள் தொட்டுக் கொண்டிருப்பதிலிருந்தே தெரிந்தது.

''இந்த ஊதல் காற்றிலே எதற்காக அம்மா இங்கே வந்தாய்? பேசாமல் அங்கேயே படுத்துக் கொண்டிருக்கக் கூடாதா?'' என்றபடி சங்கரன் ஹார்லிக்ஸைக் கரைத்தான்.

''வலிக்கிறதுன்னு சொன்னால் அம்மா திட்டறாள் அப்பா!'' என்று குழந்தை மூக்கால் பேசினாள்.

''அவள் கிடக்கிறாள் ராட்சசி'' என்று கூறிவிட்டு, சுடச்சுடப் பானத்தை ஜயாவின் உதட்டருகில் வைத்து மெள்ளக் குடிக்கச் செய்தான். பிறகு, தானும் ஒரு டம்ளர் குடித்தான்.

மழை சோனாமாரியாக வர்ஷித்தது. முன்கட்டுக்குள் ஓடுவது கூட சாத்தியமில்லை. மகளை மடியில் படுக்க வைத்துக் கொண்டு, சில்லென்று ஈரமாயிருந்த சிமென்ட் தரையில் வெகு நேரம் உட்கார்ந்திருந்தான் சங்கரன்.

மெல்ல மெல்ல ஜயாவின் கண்கள் அயர்ந்தன. மழையும் சற்று ஓய்ந்தது. யாரோ சைக்கிள் பால்காரன் மணி அடித்துக் கொண்டு விரையும் சத்தம் தொலைவிலிருந்து கேட்டது.

மெதுவாகக் குழந்தையைக் தோளில் சாத்திக் கொண்டு சங்கரன் எழுந்தான். விளக்கை அணைத்து, சமையலறைக் கதவைச் சாத்தி விட்டு, முன்கட்டுக்கு வந்தான். ஜயாவைப் படுக்கையில் அலுங்காமல் கிடத்தி, கனமாகக் கம்பளியைப் போர்த்தினான்.

''அஸ்க்!'' என்று ஒரு பிரம்மாண்டமான தும்மல் புறப்பட்டது.

ஜயாவிடமிருந்தல்ல - அவனிடமிருந்து!

அஸ்க்! அஸ்க்! அஸ்க்!

சர்ர்.....!

சங்கரன் மூக்கை உறிஞ்சினான். மண்டைக்குள்ளிருந்து பிரளயம் புறப்படுவது போன்ற உணர்ச்சி எழுந்தது.

திடீரென 'ஆ!' என்று கூவினான் சங்கரன்.

சட்டென்று சரஸ்வதி தன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டாள். கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டு அவனை வெறிக்க நோக்கினாள். ''நீங்களா கத்தினீர்கள்?''

''ஆமாம்... ஸ்!....ஆ!....''

''என்ன இது? நன்றாகக் கூத்தடிக்கிறீர்கள் ராத்திரி வேளையில்...''

''அட, சீ!... ஆ! காதுக் குத்தல்.''

''உங்களுக்கா?''

''எனக்கே! எனக்கே! அம்மாடி! ஆ!''

''லட்சணம்தான்! பேசாமல் படுங்கள்!''

சங்கரன் படுத்தான். சற்று நேரத்துக்கெல்லாம், பெட்ரூம் விளக்கு தன் தலைமாட்டருகில் இறக்கி வைக்கப்படுவதைக் கவனித்தான். புடவைத் தலைப்பு பந்தாகச் சுருண்டு தன் காதில் சூடாகப் படுவதை உணர்ந்தான்.

குழந்தையின் அன்புக்குக் கட்டுப்பட மறுக்கலாம் ஒரு பெண். ஆனால், கணவனின் அதிகாரத்துக்குப் பயப்படாமல் இருக்க முடியுமோ?

அத்தனை காது வலி நடுவேயும் சங்கரனுக்கு லேசாக சிரிப்பு வந்தது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு ராத்திரிக் கூத்து! Empty Re: ஒரு ராத்திரிக் கூத்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum