ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலாகிப் போனேன்

3 posters

Go down

காதலாகிப் போனேன் Empty காதலாகிப் போனேன்

Post by சிவா Sun Aug 30, 2009 3:42 am

ரமேஷ் சாரங்கன்

சௌந்தர்யா....... ரொம்ப அழகான பெயர். ஞானாம்பிகை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் டீச்சராக பணியாற்றுகிறாள். அவள் எழுதும் கவிதைகள் தமிழ் வார இதழ்களில் அடிக்கடி வருவதுண்டு.

இது கோடைக்காலம்
என தெரிந்தும்
அந்தப் புல் முளைத்திருக்கிறது!
இன்று அமாவாசை
என தெரிந்தும்
அந்தக் குழந்தை
பிறந்திருக்கிறது!
நீ மட்டும் ஏன் மனிதா
வாழ்க்கையை குறை கூறி
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்......


இந்த கவிதையை படித்து விட்டுத்தான் நான் அவளுக்கு ரசிகனானேன். அவளை பார்த்து வாழ்த்து சொல்ல வேண்டும் என்று எத்தனையோ முறை முயற்சித்தேன் முடியவில்லை. ஆனால் அதிர்ஷ்டம் இவ்வளவு சீக்கிரம் எனக்கு அடிக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? யெஸ். நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். சௌந்தர்யா டீச்சர் என் எதிர்த்த வீட்டிற்கே குடி வந்துவிட்டாள். என்ன செய்வதென்றே போட்டோயவில்லை. அவ்வளவு சந்தோஷம். அவளிடம் என்னை நானாகவே அறிமுகப் படுத்திக்கொண்டேன்.

பெயர் ரமேஷ், சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். மேற்படி இத்யாதி இத்யாதிகள். எங்களுக்குள் நட்பு வளர ஆரம்பித்தது. எஙகள் வீட்டு டெலிபோனில்தான் போன் பண்ணுவாள். டிபன் போட்டோமாற்றங்கள், டி.வி. பார்ப்பது, சந்தன வீரப்பனைப் பற்றி பேசுவது வரை இன்கமிங் அவுட் கோயிங் வரை ஆல் இன் ஆல் அவள்தான். இப்படிப்பட்ட பெண்ணை யாருக்குதான் சார் லவ் பண்ணத் தோணாது? நானும் அப்படித்தான் அவளை லவ் பண்ணினேன். ஆனால் சொல்லவில்லை. அவள் மனதில் நானிருக்கிறேனா என்று தெரிந்துக் கொண்ட பிறகே சொல்வதாக உத்தேசம்.

ஒரு நாள் ஈவினிங் ஷோ உதயத்தில் குஷி படம் பார்க்க சென்றேன். டிக்கெட் கிடைக்கவில்லை. என்ன ஆச்சரியம்? பக்கத்தில் டீச்சர். டீச்சரை சுற்றிலும் டீச்சர்கள். யாரோ ஒரு டீச்சருக்காக ஒரு டிக்கெட்டை வைத்து வெயிட்டிங். என்னை பார்த்த டீச்சருக்கு சந்தோஷம். எனக்கும்தான். இருக்காதா பின்ன?

என்ன ரமேஷ் சார், டிக்கெட் கிடைக்கலையா? அவள். நான் தலையாட்டி பொம்மையைப் போல் தலை சொறிந்தேன்.

நோ ப்ராப்ளம். எங்கிட்ட ஒரு டிக்கட் இருக்கு.....வாங்க படம் பாக்கலாம்...... என்றாள். (யாரோ ஒரு டீச்சருக்கு அல்வா கொடுக்கப்பட்டது).

தியேட்டருக்குள் பக்கத்து பக்கத்து சீட்டில் நானும் சௌந்தர்யாவும். படத்தை அவள் ரசித்து ரசித்து பார்த்தபோதெல்லாம் என் மனதை உரசி உரசி உசுப்பேற்றினாள். இன்டர்வெலில் காபி வாங்கி தந்தாள். சிகரெட் மட்டும் நோ. நான் விடுவேனா? நானே வாங்கி அடித்து விட்டேன். மறுநாள் ஒரு ஆஷ்ட்ரே வாங்கி தந்தாள். குஷி படத்தில் ஜோதிகா விஜய்க்கு வாங்கி தருவது போல். அன்று முதல் நான் சிகரெட் அடிப்பதையும் மது அருந்துவதையும் நிறுத்தியே விட்டேன்.

இந்த விஷயம் எங்கள் வீட்டிற்கு தெரிந்தது. அவர்களுக்கும் சம்மதம்தான். அவளிடம் என் காதலை சொல்லி விடுவதென முடிவெடுத்த போதுதான் அவள் என்னை அவசரமாக அழைத்தாள். சென்றேன். அது ஒரு தனிமையான இடம்.

என்னைப் பற்றி என்ன நினைக்கிறீங்க? என்றாள் எடுத்த எடுப்பிலேயே.

நீங்க ரொம்ப நல்லவங்க. அழகானவங்க.....

அப்புறம்?

அப்புறமென்ன அப்புறம்? விழுப்புரம் தான். என்ன கேள்வி இது? என்றேன் சூடாக. சற்று அமைதி நிலவியது.

எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா? கேட்டு விட்டு கண் கலங்கினாள். எனக்கு ஒன்றும் போட்டோயவில்லை.

என்னை லவ் பண்ற மாதிரி நடிக்க முடியுமா?

எனக்கு ஷாக்காகி விட்டது. நடிக்கணுமா? அப்போ நிஜமாலும் லவ் இல்லியா? எனக்கு தலையே சுற்றி விடும் போலிருந்தது. இத்தனை நாள் நான் அவள் மீது வைத்திருந்த காதல் நடிப்பா? என்னை பிடிக்கவில்லையோ? பிடிக்காமல் அப்புறம் எப்படி நடிப்பு?

டீச்சர், புதிர் போடாம சொல்லுங்க...... யெஸ் ரமேஷ். பக்கத்து வீட்டு அருண் என்னை மறக்கணும். என் தங்கச்சிய லவ் பண்ணணும்...... கல்யாணம் பண்ணிக்கணும்... சந்தோஷமா இருக்கணும். என் லவ்வரோட ஆத்மா சாந்தி
அடையணும்........ சொல்லி விட்டு அழுதாள். நான் அவளுக்கு லவ்வர் இல்லை என்றவுடன் என் இதயம் ஹார்ட் அட்டாக்கில் கட் ஆகிவிடுமோ என பயம் வந்தது. மனதை தேற்றிக் கொண்டு யாரு டீச்சர் உங்க லவ்வர்? என்றேன். நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்த கதையை அவள் ஃப்ளாஷ் பேக்கை போல கூற ஆரம்பித்தாள்.

கல்லூரியில் இவள் ஒரு அழகு தேவதை. இவளை சுற்றி ஏகப்பட்ட இளைஞர்கள் கூட்டம். எப்போதும் வட்டமடித்துக் கொண்டே இருக்கும். ஆனால் சௌந்தர்யா மிகவும் பயந்த சுபாவம் உடையவள். இன்னொசன்ட் கேர்ள். பயத்தில் கல்லூரி லீடர்- சேர்மேன்- கணேஷிடம் போய் கூறினாள். அவன் என்டர் ஆன பிறகு மற்றவர்கள் இப்போது சைட் அடிப்பதில்லை. ஆனால் கணேஷ் அவளை சைட் அடித்தான். ரொமான்ஸ் பண்ணினான். ஐ லவ் யூ என்று கூறினான். அடைக்கலம் என்று நினைத்து போனால், அதுவே அபகரிக்கும் படியாகி விட்டதே என சௌந்தர்யா நொந்துக் கொண்டாள். ஆனால் கணேஷ் அவளை விடுவதாக இல்லை. கணேஷ் நிஜமாகவே லவ் பண்ணிக் கொண்டிருக்கிறான் சௌந்தர்யாவை. கணேஷைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். கணேஷ் அருணின் அண்ணன். கல்லூரியில் ஹீரோ. எதையும் நேருக்கு நேர் மோதுபவன். கேட்பவன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலாகிப் போனேன் Empty Re: காதலாகிப் போனேன்

Post by சிவா Sun Aug 30, 2009 3:43 am

அதனால்தான் அவன் சௌந்தர்யாவை காதலிக்க ஆரம்பித்த பிறகு சுற்றி வளைத்து கூறாமல் நேரடியாகவே ஐ லவ் யூ என்று கூறினான். இவன் தொல்லை தாங்க முடியாமல் போலீஸ் கம்ப்ளெயின்ட் வரைகூட சென்று திரும்பி விட்டாள். தன்னைப் பற்றி ஏதாவது தவறாக நியூஸ் வந்தால், குடும்ப கௌரவம் பாதிக்கப்படுமே அப்பா அம்மாவிற்கு அசிங்கமாகி விடுமே என்று பயந்தாள். அவள் பயந்தது போலவே கணேஷ் திடீரென இன்னொரு குண்டையும் தூக்கி போட்டு விட்டு போய் விட்டான். இதோ பார் சௌந்தர்யா.... எனக்கு தெரிஞ்சதெல்லாம், நீ...நீ மட்டுந்தான். ஐ லவ் யூ. நாளைக்கு காலையில எட்டு மணிக்கு நீ தங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுசுக்கு வருவேன். எனக்கு எஸ் ஆர் நோ சொல்லணும். யெஸ்னு சொன்னா, எனக்கும் உனக்கும் ஊரரிய கல்யாணம் நடக்கும். நோன்னு சொன்னீன்னா அப்படியே உன்னை கடத்திட்டு போயி வடபழனி முருகன் கோயில்ல வச்சி தாலி கட்டிடுவேன். அரேஞ்டு மேரேஜா, இல்ல கிட்நாபிங் மேரேஜாங்கறத நீயே முடிவு பண்ணிக்க.......

இரவெல்லாம் சௌந்தர்யாவுக்கு தூக்கமில்லை. யெஸ் என்றாலும் தாலியை கட்டி விடுவான். நோ என்றாலும் தாலியை கட்டி விடுவான். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடியைப் போல. பொழுது விடிந்தது. சௌந்தர்யாவுக்கு ஒரே டென்ஷன். பாழாய்ப்போன கணேஷ் வந்துவிடுவானே..... அப்போதுதான் அவள் அந்த முடிவை எடுத்தாள். தற்கொலை செய்து கொள்வது. தன்னால் குடும்பத்திற்கு எந்த கெட்ட பெயரும் வந்து விடக்கூடாது என்பது அவள் எண்ணம்.

முடிவின்படி விஷம் வாங்கி அதை பாலில் கலந்து குடிக்கப் போகும் முன் அவளுடைய சக தோழி பூனம் ஓடி வந்தாள். சௌந்தர்யா, உன் ஊர்லேர்ந்து போன் வந்திருக்கு........ உங்கப்பாவுக்கு ஏதோ சீரியஸாம். அப்பாவிற்கு என்ற உடன் கைகால் உடம்பெல்லாம் ஆட்டம் கண்டு விட்டது சௌந்தர்யாவுக்கு. அப்பாவாச்சே, போனை எடுத்தாள். எதிர்முனையில் அம்மா செறுமி அழுவது கேட்டது. அம்மா நான் சௌந்தர்யா பேசறேன். அப்பாவுக்கு என்னாச்சு? அவருக்கு ஹார்ட் அட்டாக்குடி. உடனே புறப்பட்டு வாடி.... ரொம்ப சீரியஸா இருக்காருடி...... அழுகையும் கம்பளையுமாக அம்மாவிடமிருந்து வார்த்தைகள் துண்டு துண்டாக வந்து விழுந்தன.

சௌந்தர்யா தன் பெட்ரூமிற்குள் ஓடினாள். தலைக்குப்புற விழுந்து ஓவென அழுதாள். அப்பாவுக்கு ஏதும் ஆகி விடக்கூடாதே..... கடவுளே..... தன்னை சமாதான படுத்திக் கொண்டு துணிமணிகளை ஒரு பெட்டியில் எடுத்து வைத்தாள். அதே சமயம் கணேஷ் வந்தான். அது சமயம் காலை எட்டு மணி. வராண்டாவில் நோட்டு புத்தகங்களோடு விஷம் கலந்த பாலும் இருந்தது. கணேஷ் வேறு மாதிரியாக நினைத்து கொண்டான். மனசுக்குள் சிரித்து கொண்டான். இந்த பெண்களே இப்படித்தான். காதலிப்பார்கள், ஆனால் வெளியே சொல்ல மாட்டார்கள். பாலை எடுத்தான். எல்லாரும் முதல் இரவு அன்னைக்குத்தான் பாலை குடுத்து வெல்கம் மை பெட் ரூம்பாங்க. ஆனா இவ, தான் லவ் பண்றத இப்படி பாலை குடுத்து சிம்பாலிக்கா காட்டுறாளே...... எனி ஹவ் லவ் இஸ் கிரேட்........... என்று கூறியபடி பாலை குடித்து விட்டான். ஓரிரு நிமிடங்களில் கணேஷ் சுருண்டு விழுந்தான். விஷம் அவன் உயிரை குடித்துக் கொண்டிருந்தது. மரண வலி என்பார்களே அது அவனுக்கு வந்திருக்க வேண்டும். வலியால் துடித்தான். ஆள் நடமாட்டம் அன்று இல்லாமல் போய் விட்டது. ஒரு அறையில் சௌந்தர்யா ஊருக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தாள். மற்றொரு அறையில் கணேஷ் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அவள் புறப்பட்டு வருவதற்கும் இவன் இறப்பின் எல்லையை அடைவதற்கும் சரியாக இருந்தது. கதறியபடி ஓடி வந்து கணேஷை தூக்கினாள். உயிர் போகும் கட்டத்தில் இருந்த கணேஷ், தற்கொலை பண்ணிக்கலான்னு முடிவு பண்ணிட்டியா? அப்போ என்னை புடிக்கலையா? மரத்த சுத்தி டூயட் பாடறது, லவ் லெட்டர் குடுக்கறது..... இதெல்லாம் எனக்கு வராது. நான் முரட்டுத்தனமா பேசினது எல்லாம் வெறும் டீஸிங். ஐ லவ் யூ சௌந்தர்யா.... நீ இல்லேன்னா செத்து போயிடறதுன்னு நானே முடிவு பண்ணியிருந்தேன் தெரியுமா? என்று கூறி தன் மேல் பாக்கெட்டிலிருந்து ஒரு கடிதமும் பேண்ட் பாக்கெட்டிலிருந்து விஷத்தையும் எடுத்தான்.

உங்கிட்ட யெஸ் ஆர் நோ கேக்கறது..... நீ நோன்னு சொல்லிட்டா செத்துடறதுன்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்குத்தான் இந்த விஷம். பரவாயில்லை.......நீயே கலந்து குடுத்த விஷப்பாலை சாப்பிட்டுட்டு செத்......துப்.....போற.....து...ல.....சந்தோ.....ஷம்........ கணேஷின் தலை சாய்ந்து விட்டது. யெஸ் கணேஷ் டெட். கடிதத்தை படித்தாள். என் சாவிற்கு யாரும் காரணமில்லை. எனக்கு வாழப்பிடிக்கவில்லை- கணேஷ். கடிதம் கணேஷின் வாக்குமூலமாக இருந்தது.

கணேஷ் கையில் இருந்த கடிதமும் விஷமும் அது தற்கொலைதான் என்று நம்பும்படியாகி விட்டது. கணேஷ் தற்கொலைதான் செய்துக் கொண்டான் என்று இன்று வரை கணேஷின் தம்பி அருணும் சரி, அவன் அம்மா அப்பாவும் சரி எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனக்கு மட்டும்தான்
தெரியும் என்னால் நடந்த கொலை என்று. திடீரென சௌந்தர்யா என் கைகளை பற்றிக் கொண்டாள்.

எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா?

சொல்லுங்க.....

என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்க வீட்டுக்கு மருமகளா அழைச்சிக்கிட்டு போகணும்னு கணேஷ் நினைச்சாரு.... அதுதான் நடக்கல. அட்லீஸ்ட் என் தங்கச்சியையாவது அந்த வீட்டுக்கு மருமகளா அனுப்பணும்னுதான் கணேஷ் தம்பி அருணுக்கும் என் தங்கைக்கும் இடையில லவ்வையே உருவாக்கினேன்.

ஆனா அது வேற விதமா இருக்கு. அருண் என்னை லவ் பண்றதா சொல்றான். எப்படி ரமேஷ் என்னால முடியும்? கணேஷ் இந்த உலகத்துல வேணும்னா இல்லாம இருக்கலாம். ஆனா எங்கூடவேதான் வாழ்ந்துக் கிட்டிருக்காரு. என்னை லவ் பண்ணிக்கிட்டிருக்காரு........ நிறுத்தினாள். என்னை பார்த்தாள். திரும்பவும் சொன்னாள். ஸோ நீங்க என்னை லவ் பண்ற மாதிரி நடிக்கணும்.....அதை பார்த்து அருண் என்னை மறக்கணும்..... என் தங்கச்சிய லவ் பண்ணணும்...... கல்யாணம் பண்ணிக்கணும். அதை பார்த்து நான் சந்தோஷப்படணும். என் கணேஷோட ஆத்மா சாந்தி அடையணும். என்னை லவ் பண்ற மாதிரி நடிப்பீங்களா? ப்ளீஸ் ஹெல்ப் மீ......

ஹெல்பா இது? எனக்கு என்ன சொல்வதென்றே போட்டோயவில்லை. ஆனாலும் ஒப்புக் கொண்டேன். சௌந்தர்யாவை பொறுத்தவரை நான் வெறும் காதல் நடிகன் மட்டும்தான். ஆனால் என்னை பொறுத்தவரை நிஜம்...... நான் அவளை நிஜமாகவே காதலித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நாள் அவள் ஆசைப்பட்டது போல் அருணும் அவள் தங்கையும் காதலிக்கலாம். கல்யாணம் செய்துக் கொள்ளலாம். அதே போல் என் காதலும் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு நான் அவளை காதலிப்பது போல் நடித்துக் கொண்டு........ஸாரி, காதலித்து கொண்டிருக்கிறேன்....................
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலாகிப் போனேன் Empty Re: காதலாகிப் போனேன்

Post by Ramsiva Sun Aug 30, 2009 9:09 am

அருமையான காதல் கதை அன்பு மலர்
Ramsiva
Ramsiva
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

காதலாகிப் போனேன் Empty Re: காதலாகிப் போனேன்

Post by ramesh.vait Sun Aug 30, 2009 12:27 pm

புன்னகை
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

காதலாகிப் போனேன் Empty Re: காதலாகிப் போனேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum