ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்க்குற்றவாளி மகிந்தவுக்குத் தொற்றிய "புற்றுநோய்"

Go down

போர்க்குற்றவாளி மகிந்தவுக்குத் தொற்றிய "புற்றுநோய்" Empty போர்க்குற்றவாளி மகிந்தவுக்குத் தொற்றிய "புற்றுநோய்"

Post by நிசாந்தன் Sun Feb 20, 2011 11:12 am

மகிந்த ராஜபக்ஸவுக்கு ‘ஒன்றுமேயில்லை‘ என்று நம்ப வைப்பதற்கு அரசாங்கம் பெரும்பாடு பட்டுக் கொண்டிக்கிறது.

இதற்குக் காரணம் அண்மையில் வெளியான செய்திகள் தான்.

மகிந்த ராஜபக்ஸவுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக பரவிய செய்தி உண்மையா- பொய்யா என்று விவாதம் செய்வதல்ல எமது நோக்கம்.

அதை பொய் என்று அரசாங்கம் நம்ப வைக்கப் பெரும் முயற்சிகளை எடுக்கிறது அவ்வளவு தான்.

‘லங்கா ஈ நியூஸ்‘ இணையத்தளத்தில் இந்தச் செய்தி முதலில் வெளியாகி பின்னர் எல்லா ஊடகங்களிலும் அது இடம்பிடித்தது.

கடந்த மாத இறுதியில் மகிந்த ராஜபக்ஸ திடீரென அமெரிக்கா புறப்பட்டுச் சென்றபோது காரணம் எதையும் சொல்லவில்லை.

தனிப்பட்ட காரணங்களுக்காக சென்றுள்ளார் என்று மட்டும் தாமதமாக அவரது செயலகம் செய்தி வெளியிட்டது.

அதற்கிடையில் ஏன் சென்றார்- எதற்குச் சென்றார் என்று ஊடகங்கள் அலசத் தொடங்கி விட்டன.

கடைசியில் அவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்குச் சிகிச்சை பெறவே அமெரிக்கா சென்றதாகவும் செய்திகள் வெளியாகி அது பட்டிதொட்டி எங்கும் பரவி விட்டது.

ஒரு வாரம் கழித்து மகிந்த ராஜபக்ஸ நாடு திரும்பிய போது அவரை சிங்களவர்கள் பலரும் பரிதாபத்தோடு பார்க்கத் தொடங்கினர்.

அதுமட்டுமன்றி சிறிலங்காவின் சுதந்திர தினத்தின்று உரையாற்றிய போதும் அவர் –அரசியல் நோயாளிகள் மத்தியில் தான் சுகதேகியாக இருப்பதாக மட்டுமே கூறினாரே தவிர, தனக்குப் புற்றுநோய் கிடையாது என்று நேரடியாக அடித்துச் சொல்லவில்லை.

இது சந்தேகங்களை இன்னும் அதிகப்படுத்தியது.

அதற்கிடையில் மகிந்தவுக்குப் புற்றுநோய் என்றவுடன் தமிழருக்குச் செய்த அநியாயங்கள் எல்லாவற்றுக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் தானே என்று எம்மில் பலரும் கூறத் தொடங்கினர்.

உண்மையில் மகிந்த ராஜபக்ஸ முற்றிலும் சுகதேகியாக- எந்த நோயும் இல்லாமல் இருக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் அவருக்குப் புற்றுநோய் இல்லை என்று நம்பவைக்க இப்போது அரசாங்கம் பெரும்பாடு பட வேண்டியுள்ளது.

இதற்காக அரச ஊடகமான ‘லங்காபுவத்‘ சிறிலங்காவின் தலைசிறந்த புற்றுநோய் நிபுணர் ஒருவர் மகிந்தவுடன் நடத்திய தொலைபேசி உரையாடலை அப்படியே வெளியிட்டது.

அதுமட்டுமன்றி சிறிலங்காவின் சுதந்திர தினமான கடந்த 4ம் திகதி- அவர் காங்கேசன்துறைக் கடற்கரையில் காற்று வாங்கும் ஒளிப்படத்தை அரசு ஊடகமான ‘தினகரன்‘ வெளியிட்டது.

மகிந்த ராஜபக்ஸ காங்கேசன்துறைக்குச் சென்றது கடந்த மாத நடுப்பகுதியில் - அதாவது அமெரிக்கா செல்வதற்கு முன்னர்.

அப்போது அவர் அரைக் காற்சட்டையும் ரீ சேட்டுமாக கடற்கரையில் உலாவும் படத்தை, மூன்று வாரம் கழித்து வெளியிட்டதே மகிந்தவின் உடல்நலம் பற்றிய வதந்திகளை முறியடிக்கத் தான்.

அது போதாதென்று இந்த வாரம் ‘திவயின‘ என்ற சிங்கள நாளிதழில் இன்னொரு படத்துடன் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.

அதில் மகிந்த உடற்பயிற்சி செய்கின்ற ஒளிப்படமும் வெளியாகியிருந்தது.

உண்மையிலேயே மகிந்த ராஜபக்சவுக்குப் நோய் ஒன்றும் இல்லையா என்று அறிந்து கொள்வதற்காக ‘திவயின‘ ஆசிரியர் காமினி சுமணசேகர திடீரென அலரி மாளிகைக்குச் சென்றாராம்.

அதிகாலை 4 மணிக்கு அவர் போன போது மகிந்த ராஜபக்ஸ வழக்கம் போலவே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாராம்.

மகிந்த ராஜபக்ஸ அதிகாலை 4 மணி தொடக்கம் 5 மணிவரை உடற்பயிற்சி செய்வது வழக்கமாம்.

அதை வழக்கம் போல செய்வதால் அவருக்குப் புற்றுநோய் எதுவும் கிடையாது என்று தனது கட்டுரையில் அடித்துச் சொல்கிறார் ‘திவயின‘ ஆசிரியர் காமினி சுமணசேகர.

உடற்பயிற்சி செய்பவர்கள் அனைவரும் சுகதேகியாக இருப்பார்கள் என்று யார் அவருக்குச் சொன்னதோ தெரியவில்லை.

இப்போதெல்லாம் பலரும் நோய் முற்றிய பின்னர் தான் உடற்பயிற்சிக்கே போகிறார்கள் என்ற இரகசியம் அவருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

‘திவயின‘ ஆசிரியர் அதிகாலையில் திடீரெனப் போன போது அலரி மாளிகைக் கதவுகள் அவருக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தன என்று கூறினால் அதை யாராவது நம்ப முடியுமா?

சிறிலங்காவில் முன்னர் ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிறேமதாசவை அதிகாலை 4, 5 மணிக்கெல்லாம் சாதாரணமாகச் சென்று சந்திக்க முடியுமாம்.

பெரிதாக எந்தப் பாதுகாப்புக் கெடுபிடிகளும் இருக்காது என்று கொழும்பு ஊடக நண்பர்கள் பலரும் சொல்லக் கேள்வி.

ஆனால் மகிந்த ராஜபக்ஸவோ அப்படி அலரி மாளிகைக் கதவுகளைத் திறந்து வைத்து விட்டு இருப்பவரல்ல.

இவருக்கான பாதுகாப்புக் கெடுபிடிகள் எப்படியென்று நாடே அறியும்.

அப்படியிருக்க ‘திவயின‘ ஆசிரியர் திடீரெனப் போனாராம்- மகிந்த ராஜபக்ஸ உடற்பயிற்சி செய்வதைப் பார்த்துப் பிரமித்துப் போனாராம் என்று கதை விட்டிருக்கிறார்.

அவர் சொல்ல வந்தது கதையா நிஜமா என்பதல்ல முக்கியம். எனவே அதை விட்டு விடுவோம்.

அரசாங்கம் இப்போது மகிந்தவுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது என்பதை நிரூபிக்க எத்தகைய குறுக்கு வழிகளையும் நாடத் தொடங்கி விட்டது.

அரசாங்கம் தனது முழுப்பலத்தையும் கொண்டு- அதற்கு அப்பாலுள்ள வளங்களையும் கொண்டு மகிந்த ராஜபக்ஸவுக்குப் புற்றுநோய் இல்லை என்று நம்ப வைக்கப் பெரும் போராட்டமே நடத்திக் கொண்டிருக்கிறது.

ஆனால் அவருக்குப் புற்றுநோய் இல்லை என்பதை சுத்தமாக நம்ப வைக்க முடியாதுள்ளது தான் சோகம்.

‘லங்கா ஈ நியூஸ்‘ இணைத்தளம் தீயிட்டு எரிக்கப்பட்டதே இந்தச் செய்தியைப் பரப்பியதற்காகத் தான்.

அதை எரித்த போதும் அந்தச் செய்தியின் வலிமையை அரசாங்கத்தால் வெற்றி கொள்ள முடியவில்லை.

சில சந்தர்ப்பங்களில் உண்மையை விட பொய்க்கு வலிமை அதிகம். அதாவது வதந்திக்கு வலிமை அதிகம்.

இந்தச் செய்தி வதந்தியா- உண்மையா என்று எம்மால் உறுதி செய்ய முடியா விட்டாலும் அரசின் பார்வையில் அது தான் நிலைமை.

அதேவேளை மகிந்தவுக்குப் புற்றுநோய் தான் என்று வாதிடுவோரோ உண்மைக்கு முன்னால் எத்தகைய பொய்யும் நிலைக்காது என்கின்றனர்.

இந்தநிலையில் மகிந்த ராஜபக்ஸ நலமுடன் இருக்கிறார் என்று நம்ப வைப்பதன் மூலம் அரசாங்கம் எதைச் சாதிக்கப் போகிறதோ தெரியவில்லை.

அதைவிடப் பாரிய பிரச்சினைகள் பலவற்றை நாடும் அரசாங்கமும், அவரும் எதிர்கொள்கின்ற போது இதையெல்லாம் தோற்கடிப்பதில் அரசாங்கம் நேரத்தை வீணடிக்கிறது.

இது தான் அவரது ஆட்சியில் பரவியுள்ள புற்றுநோயாக மாறியுள்ளது.

மகிந்தவுக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதோ இல்லையோ – அவரது ஆட்சிக்கு அந்த நோய் தொற்றி விட்டது தான் உண்மை.

முகிலன்
ஈழநேசன்
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புற்றுநோய் உண்டாக்கும் Aspartame இனிப்பு பொருள் - WHO புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவு தகவல்
» கொரில்லாவில் இருந்து மனிதனுக்கு தொற்றிய புதிய எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிப்பு
» சர்வதேசம் முன்பு அம்மணமான போர்க்குற்றவாளி
» சர்வதேச விசாரணையிலிருந்து ராணுவத்தைக் காப்பேன்-ராஜபக்சே கொக்கரிப்பு
» போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்': விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum