ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம்

3 posters

Go down

மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம் Empty மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம்

Post by சிவா Fri Aug 28, 2009 10:26 pm

மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம் Cow

இந்துக் கோவில் ஒன்று தங்களது பகுதிக்கு இட மாற்றம் செய்யப்படும் திட்டத்தை ஆட்சேபித்து 50 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வெள்ளிக் கிழமை தொழுகைக்கு பின்னர் ஒன்று கூடிய அந்தக் குடியிருப்பாளர்கள் மாநிலச் செயலகக் கட்டிடத்தின் நுழைவாயில் கேட்டுக்கு வெளியில் அந்த மாட்டுத் தலையை சிறிது நேரம் வைத்திருந்த பின்னர் அதனை அகற்றினர்.

“சேவியர் எங்கே? இந்தத் தலை அவருக்குத் தான் என்று சிலாங்கூர் ஆட்சிமன்ற உறுப்பினரான டாக்டர் சேவியர் ஜெயகுமாரைக் குறிக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் உரத்த குரலில் சத்தம் போட்டார்.

அந்த மாநிலத்தில் முஸ்லிம் அல்லாத விவகாரங்களுக்கு பொறுப்பானவர்களில் அவரும் ஒருவர் ஆவார்.

அதற்கு முன்னர் அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மாநிலப் பள்ளிவாசலிலிருந்து மாநில செயலகத்திற்கு கிட்டத்தட்ட 300 மீட்டர் ஊர்வலமாக சென்றனர்.

மந்திரி புசார் காலித் இப்ராஹிமையும் ஆட்சி மன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயிலையும் ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலித் சமாட்டையும் அவர்கள் கண்டித்தனர்.

கலைந்து செல்வதற்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மாட்டுத் தலையை உதைத்தனர், காறி உமிழ்ந்தனர். மாடு இந்துக்களுக்கு புனிதமானதாகக் கருதப்படுகிறது.

அந்தக் கூட்டத்தைல் பேசிய செக்சன் 23 நடவடிக்கை குழுத் துணைத் தலைவர் இப்ராஹிம் சாப்ரி, “ரத்தம் சிந்தப்பட்டால் அந்தக் கோவிலைக் கட்டுவதில் நீங்கள் பிடிவாதமாக இருந்தால் நீங்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்”, என்றார்.

“இது ஒர் எச்சரிக்கைதான். செக்சன் 22 க்கு கோவிலை இடம் மாற்றுங்கள். இந்த மாடு மாநில அரசாங்கத்திற்கு அன்பளிப்பு. இது எங்கள் பரிசு”, என்று அவர் மேலும் கூறினார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பல பதாதைகளையும் கொண்டு சென்றனர். அவற்றுள் ஒன்று ‘பீர் குடியுங்கள்’ என்று கூறும் வாசகம் ஆகும் (அது தாக்பிர் என்று பாஸ் கூறுவதை கேலி செய்வதாகும்). “சட்டவிரோத கோவில்கள் மிகவும் சிறியவை ஆனால் இடமாற்றம் செய்யப்பட்டதும் அவை புத்ராஜெயாவைப் போன்று பெரிதாகி விடும்”, என்று இன்னொரு பதாதையின் வாசகம் கூறியது.

பத்துக்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் கண்காணிப்பில் மாநில செயலகக் கட்டிடத்தின் முக்கிய நுழைவு வாயில் கேட்டில் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு கூட்டம் கூடியது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம் Empty Re: மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம்

Post by சிவா Fri Aug 28, 2009 10:27 pm

மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம் Cow1மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம் Cow3
“நாங்கள் ஒர் அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்”

பின்னர் நிருபர்களிடம் பேசிய நடவடிக்கைக் குழுத் தலைவர் மஹ்யுடின் மானாப், மாநில அரசாங்கம் விட்டுக் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் குடியிருப்பாளர்கள் பதிலடி கொடுப்பர் என்று எச்சரித்தார்.

“உயிர்கள் இழக்கப்பட்டாலும் அல்லது ரத்தம் சிந்தப்பட்டாலும் நாங்கள் ஒர் அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம். கோவில் கட்டப்படுவதிலிருந்து செக்சன் 23 ஐ நாங்கள் தற்காப்போம்”, என்றார் அவர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பே மாநில அரசாங்கத்திடம் ஆட்சேப மனு கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் எந்த பதிலும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

அந்தக் கோவில் செக்சன் 19 லிருந்து செக்சன் 23 க்கு இட மாற்றம் செய்யப்படுவது இறுதியானது என்று ஆகஸ்ட் மாதம் 11 ம் தேதி மாநில அரசாங்கம் அறிவித்தது. அந்தக் கோவில் அருகிலுள்ள வீட்டுக்கு 200 மீட்டர் தொலைவிலும் சூராவ் ஒன்றுக்கு 400 மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும் என்றும் அது கூறியது.

அந்தக் கோவில் தொழிற்சாலை மனை ஒன்றை நோக்கியிருக்கும் என்றும் ஒரு விளையாட்டுத் திடல் பலநோக்கு மண்டபம் ஆகியவை கோவிலுக்கும் வீடுகளுக்கும் இடையில் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் கோவிலைக் கட்டுவது பொருத்தமாக இருக்காது என்று சில குடியிருப்பாளர்கள் கருதினர்.

அந்தக் கோவில் இட மாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு தங்களது எதிரியான அம்னோ மக்களத் தூண்டி விடுவதாக பக்காத்தான் ராக்யாட் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம் Empty Re: மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம்

Post by சிவா Fri Aug 28, 2009 10:31 pm

மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம் Cow2

ஜெயகுமார் போலீசில் புகார் செய்வார்

இதனிடையே அந்த ஆர்ப்பாட்டம் “அவசியமில்லாதது, ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது, மற்ற சமயங்களை புரிந்து கொள்ளாதது” என்று ஜெயகுமார் வருணித்துள்ளார்.

அந்த விஷயம் பற்றி தாம் விரைவில் போலீசில் புகார் செய்யப் போவதாகவும் அவர் சொன்னார்.

“அந்த மக்களுக்கு நெறிமுறைகள் வேண்டும். அவர்கள் இன, சமய வெறுப்பைத் தூண்டிவிடுகின்றனர். அவர்களுக்கு எதிராக நான் போலீசில் புகார் செய்யப் போகிறேன்”, என்றும் அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அந்த இடத்தில் இருந்த போலீஸ்காரர்கள் நடவடிக்கை எடுக்காதது குறித்து அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.

‘போலீசார் யாரையும் நிறுத்தவில்லை. போலீசார் அவர்களை கைது செய்து வெறுப்பைத் தூண்டி விட்டதாகக் குற்றம் சாட்டியிருக்க வேண்டும்”, என்றார் அவர்.

மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம் Cow4
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம் Empty Re: மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம்

Post by சிவா Fri Aug 28, 2009 10:33 pm

கோபம் பிரதமர் சினமடைந்துள்ளார் கோபம் , உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி தூக்கம்


பிரதமர் இன்று பிற்பகல் ஷாஅலாமில் நிகழ்ந்துள்ள “மாட்டுத் தலை” எதிர்ப்பு மீது சினமடைந்திருப்பதாக மனித வள அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் கூறியிருக்கிறார்.

அந்தச் சம்பவம் குறித்து தமது ஏமாற்றத்தைத் தெரிவிப்பதற்காக தாம் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“பிரதமர் மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். அந்தப் பிரச்னையைக் கவனிப்பதாகவும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் அவர் வாக்குறுதி அளித்ததாக”, சுப்ரமணியம் கூறினார்.

“15 நிமிடங்களுக்குப் பின்னர் தம்மை பிரதமர் தம்மை திரும்ப அழைத்து தாம் தேசிய போலீஸ் படைத் தலைவரிடம் (மூசா ஹசான்) பேசி விட்டதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவருக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்”, என்று சுப்ரமணியம் கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம் Empty Re: மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம்

Post by சிவா Fri Aug 28, 2009 10:35 pm

அமைதி காக்கவும், போலீஸ் தலைவர் வேண்டுகோள்
மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம் Po1
கோயில் ஒன்று மாற்று இடத்தில் கட்டுவதற்கு செய்யப்பட்டிருக்கும் பரிந்துரைக்கு எதிராக சுமார் 50 சினமுற்ற குடியிருப்பாளர்கள் வெட்டப்பட்ட மாட்டு தலையுடன் ஷா அலாமில் ஊர்வலம் வந்ததைத் தொடர்ந்து பொதுமக்களை அமைதியாக இருக்கும்படி சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமய உணர்வுகளைத் தூண்டக் கூடிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு எதிராக பொதுமக்களை அவர் எச்சரித்தார்.

“இந்த எதிர்ப்புக்கு போலீஸ் அனுமதி இல்லை. இது ஒரு சட்ட விரோதமான கூட்டம். இக்கூட்டத்தினர் 15 நிமிடங்களுக்கு கூடினர். கலைந்து போகுமாறு உத்தரவிட்டதும் அவர்கள் கலைந்து சென்றனர்.

வெட்டப்பட்ட மாட்டு தலையை அப்புறப்படுத்துமாறும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அவ்வுத்தரவுக்கு அவர்கள் பணிந்தனர்”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

இக்கணம் வரையில், இச்சம்பவம் குறித்து போலீஸ் புகார் ஏதும் செய்யப்படவில்லை.

“போலீஸ் புகார் செய்யப்பட்டால், நாங்கள் நிச்சயமாக தேவையான நடவடிக்கை எடுப்போம்”, என்று அவர் வலியுறுத்தினார்.

இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த அவர், ஒவ்வொருவரும் சமய மற்றும் இன உணர்வுகளுக்கு மதிப்பளிக்க அளிக்க வேண்டும், இவ்வாறான செயல்களில் இறங்கக்கூடாது என்றார்.

இச்சம்பவத்திற்கு எதிராக பல எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. மஇகா தலைவர் ச. சாமிவேலும் பினாங்கு மாநில துணை முதல்வர் பி. இராமசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ச. சாமிவேலு போலீசாரை கேட்டுக்கொண்டார்

மலேசியாஇன்று
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம் Empty Re: மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம்

Post by kalaimoon70 Fri Jul 30, 2010 8:42 pm

மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம் Cow2
இது தான் மனிதமா ?

சமய உணர்வுகளைத் தூண்டக் கூடிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு எதிராக பொதுமக்களை அவர் எச்சரித்தார்.
பொது மக்கள் அமைதிக்காக வேண்டுவோம் .

மனிதம் மலர வேண்டுவோம்...


Last edited by kalaimoon70 on Fri Jul 30, 2010 8:48 pm; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம் Empty Re: மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம்

Post by திவா Fri Jul 30, 2010 8:43 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம் Empty Re: மலேசியா: கோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: குடியிருப்பாளர்கள் மாட்டுத் தலையுடன் ஊர்வலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு
» மலேசியாஇன்று: மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டம் உலகை வலம் வருகிறது
» மலேசியா செல்லும் மன்மோகனுக்கு எதிராக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
»  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
» தமிழக எல்லையில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு: ஆந்திர மாநில மக்கள் ஆர்ப்பாட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum