ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
அதிபர் முபாரக் குடும்பத்துடன் தப்பி ஓட்டம், எகிப்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.  Poll_c10அதிபர் முபாரக் குடும்பத்துடன் தப்பி ஓட்டம், எகிப்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.  Poll_m10அதிபர் முபாரக் குடும்பத்துடன் தப்பி ஓட்டம், எகிப்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.  Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிபர் முபாரக் குடும்பத்துடன் தப்பி ஓட்டம், எகிப்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

Go down

அதிபர் முபாரக் குடும்பத்துடன் தப்பி ஓட்டம், எகிப்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.  Empty அதிபர் முபாரக் குடும்பத்துடன் தப்பி ஓட்டம், எகிப்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

Post by சிவா Sat Feb 12, 2011 9:06 am

அதிபர் முபாரக் குடும்பத்துடன் தப்பி ஓட்டம், எகிப்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.  Fore12

எகிப்து அதிபர் முபாரக் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு குடும்பத்துடன் கெய்ரோவில் இருந்து வெளியேறினார். ஆட்சி பொறுப்பை ராணுவம் கைப்பற்றியது.

கெய்ரோ, பிப்.12- எகிப்து நாட்டில், கடந்த 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது.

18 நாள் போர்

கடந்த 18 நாட்களாக, தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்டிரியா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் பொதுமக்களுக்கு உரையாற்றிய அதிபர் முபாரக், தான் பதவி விலக போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.

இதனால், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற போராட்டக்காரர்கள் நேற்று லட்சக்கணக்கில் திரண்டு, அதிபர் மாளிகையையும், பாராளுமன்றத்தையும் முற்றுகையிட்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

பதவி விலகினார்

இதனால், உயிருக்கு பயந்த முபாரக் தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச்சென்றதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், அதிபர் முபாரக் பதவி விலகியதாக, துணை அதிபர் உமர் சுலைமான் அறிவித்ததாக அரசு தொலைக்காட்சி அல்-ஜசீரா நேற்று இரவு அறிவித்தது. இதைத்தொடர்ந்து முபாரக்கின் 30 ஆண்டு சர்வாதிகார ஆட்சி நேற்று முடிவுக்கு வந்தது.

ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாகவும் அறிவிப்பு வெளியானது.

வெற்றி கொண்டாட்டம்

சுலைமானின் அறிவிப்பை கேட்ட, பொதுமக்களின் கிளர்ச்சி வெற்றி கொண்டாட்டங்களாக மாறியது. நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய நோபல் பரிசு வென்ற எல் பராடி, இதுகுறித்து கூறுகையில், ``எகிப்து மக்களுக்கு இந்த நாள் மிகச்சிறந்த ஒரு நாள். எகிப்து இப்போது விடுதலை அடைந்து விட்டது'' என்று தெரிவித்தார்.

இறுதி கெடு

முன்னதாக அதிபர் பதவியில் இருந்து முபாரக் விலகுவதற்கு கடந்த வெள்ளிக்கிழமை வரை பொது மக்கள் கெடு விதித்து இருந்தனர்.

ஆனால், வருகிற செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் வரை பதவியில் இருந்து விலக முபாரக் மறுத்துவிட்டார். இதனால், நேற்று மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. நேற்று முன்தினம் இரவில் இருந்தே கெய்ரோவில் சுதந்திர சதுக்கம் அருகே மக்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர்.

அதிபர் மாளிகை முற்றுகை

நேற்று மதியம் தொழுகை முடிந்ததும், சுதந்திர சதுக்கத்தில் இருந்து அதிபர் மாளிகை நோக்கி அணிவகுத்து சென்றனர். இந்த ஊர்வலத்துக்கு `வெள்ளிக்கிழமை வழியனுப்பு விழா' (பேர்வெல் பிரைடே) என்று பெயர் சூட்டப்பட்டது.

கெய்ரோவின் புறநகர் பகுதியில் உள்ள அதிபர் மாளிகையை சுற்றி ராணுவ டேங்குகளும், அதிபர் மாளிகை அதிரடிப்படை வீரர்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

அதிபர் மாளிகையை சுற்றி சுமார் 50 மீட்டர் தூரத்தில் கம்பி தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்து. அந்த பகுதியை பொது மக்கள் சுற்றி வளைத்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முபாரக்குக்கு ராணுவம் ஆதரவு

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இரு முறை எகிப்து ராணுவ தலைமை கவுன்சில் அவசரமாக கூடி நிலைமை குறித்து விவாதித்தது. ஏற்கனவே ஒரு தளபதி உள்ளிட்ட 16 ராணுவ அதிகாரிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்ததால், இந்த கூட்டத்தில், அதிபர் முபாரக்குக்கு எதிரான முடிவு எடுக்கப்படலாம் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், ராணுவ தலைமை கவுன்சில் கூட்டத்தில் அதிபர் முபாரக்குக்கு ஆதரவாக முடிவு எடுக்கப்பட்டது.

2-வது கூட்டம் முடிவடைந்தபின் வெளியிடப்பட்ட அறிக்கையில், முபாரக் ஏற்கனவே கூறியதுபோல் செப்டம்பர் மாதம் நியாயமாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்றும், அவசர நிலை சட்டம் ரத்து செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. அத்துடன் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதுபோல், வீடுகளுக்கு திரும்பி வேலையை கவனியுங்கள் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தாலும், போராட்டத்தை கைவிடவில்லை. இறுதிவரை மேலும் தீவிரமாக போராடுவது என்று மக்கள் முடிவு செய்தனர்.

முபாரக் தப்பி ஓட்டம்

போராட்டம் தீவிரம் அடைந்து வந்ததை தொடர்ந்து, அதிபர் முபாரக் குடும்பத்தினருடன் எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ள விமான படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் தப்பிச்சென்றார்.

அல் அரேபியா டெலிவிஷன் நிறுவனம் இந்த தகவலை ஒளிபரப்பியது. எகிப்தின் செங்கடல் பகுதியில் உள்ள ஷாரம் எல் ஷேக் கடற்கரை சுற்றுலா தலத்துக்கு அவர் வந்து இறங்கிய தகவல் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த தகவல் தெரிவித்தது.

டி.வி. நிலையம் முற்றுகை

நேற்றைய போராட்டத்தின்போது கெய்ரோவில் முபாரக்கின் ஊதுகுழலாக செயல்பட்டுவரும் அரசு வானொலி மற்றும் டி.வி. நிலையங்களையும் மக்கள் முற்றுகையிட்டனர். அங்கு பணிபுரியும் சில ஊழியர்களும் பணியை புறக்கணித்து போராட்டக்காரர்களுடன் இணைந்தனர்.

நேற்று தொழுகை முடிந்ததும் முக்கிய முஸ்லிம் மத குருக்கள் சிலரும் போராட்டத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

ஷூக்களை உயர்த்தி

முன்னதாக நேற்று காலை டெலிவிஷனில் பேசிய முபாரக், "செப்டம்பர் தேர்தல் வரை பதவியில் நீடிப்பேன். ஆனால் தேர்தலில் போட்டியிட மாட்டேன். அரசியலமைப்பு சட்டப்படி துணை அதிபரிடம் அதிகாரத்தை ஒப்படைக்கிறேன்'' என்றும் அறிவித்தார்.

சுதந்திர சதுக்கத்தில் இருந்த பெரிய திரையில் அவருடைய இந்த பேச்சு ஒளிபரப்பானபோது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தங்கள் `ஷூ'க்களை உயர்த்தி பிடித்தபடி முபாரக்கை எதிர்த்து கோஷங்களை எழுப்பினார்கள்.

துப்பாக்கி சண்டை

சினாய் நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு ஒரு போலீஸ் நிலையத்தை தாக்கினார்கள். சில வாகனங்களுக்கு தீ வைத்தனர். பெட்ரோல் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

அங்கிருந்த கைதிகளை விடுவிக்க அவர்கள் முயன்றனர். இதைத்தொடர்ந்து அவர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினார்கள். கிளர்ச்சியாளர்களும் திருப்பி சுட்டனர். ஆனால் உயிர் பலி அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை.

தினதந்தி

அதிபர் முபாரக் குடும்பத்துடன் தப்பி ஓட்டம், எகிப்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum