ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்…

Go down

நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… Empty நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்…

Post by azeezm Sun Feb 06, 2011 2:33 pm

ஓய்வு காலமும் உல்லாச காலமே..!


நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்…

நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… P34
வேலைக்குச் சேர்ந்தவுடன் சிறிது காலத்துக்கு ஜாலியான செலவுகள்… அப்புறம்
திருமணச் செலவு.. அடுத்து பிள்ளைகள் வளர்ப்பு, படிப்பு, கல்யாணச்
செலவுகள்… கூடவே இதுபோன்ற செலவுகளுக்காக வாங்கிய கடன்கள் வேறு… இப்படி
அடுத்தடுத்த செலவுகளில் சிக்கியே மாதச் சம்பளக்காரர்களின் வாழ்க்கையும்
தொலைந்துவிடுகிறது. ஒருநாள் ரிட்டயர்மென்ட் என்று வரும்போது சம்பளம் நின்று
போகும்.. ஆனால், அன்றாடம் செய்து வந்த செலவுகள் மட்டும் இன்னும்
பன்மடங்காகப் பெருகி நம்முன் வந்து நிற்கும்.
ரு
சின்ன உதாரணம் பார்ப் போமா? இன்றைக்கு 100 ரூபாய் கொடுத்து வாங்கும் ஒரு
இருமல் மருந்து 30 ஆண்டுகள் கழித்து 1,000 ரூபாயாக இருக்கும். அப்போதுதான்
பலரும், ஆஹா… நம் கடைசிக் காலத்துக்கு என எதுவும் சேர்க்காமல் விட்டு
விட்டோமே என்று கவலைப்பட ஆரம்பிப்பார்கள்.
தேவை திட்டமிடல்..!




இந்தக்
கவலையைத் தவிர்க்க அவர்கள் செய்திருக்க வேண்டியது ஒரு சிறிய
திட்டமிடல்தான். இந்தத் திட்டமிடல் அவரவர் வயதுக்கு தகுந்தமாதிரி இருக்க
வேண்டும். ஒருவர் வேலைக்குச் சேர்ந்து கல்யாணமான நிலையில் அவரது 30-வது
வயதில் ஓய்வு காலத்துக்கான முதலீட்டைத் தொடங்கி இருந்தால் அதற்கு மாதாமாதம்
குறைவான தொகையே போதுமானதாக இருக்கும். இதுவே 50 வயதில்
ரிட்டயர்மென்டுக்காக முதலீடு செய்ய ஆரம்பித்தால்? 10 ஆண்டுகள்தான் பாக்கி
இருக்கும் நிலையில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இந்தப் பெரும் தொகையை பார்த்தே பலரும், விதி விட்ட வழியில் வாழ்க்கை
போகட்டும் என்று இருந்துவிடுகிறார்கள். இதுவும் மிகப் பெரிய தவறு! 30
வயதில் பொதுவான தேவைகளை விட லைஃப் ஸ்டைல் தேவைகள் அதிகமாக இருக்கும்.
அதாவது, பொழுதுபோக்குகள், சுற்றுலாக்கள், ஓட்டல் சாப்பாடு போன்ற செலவுகள்
அதிகமாக இருக்கும். சிலர் வாகனம் (பைக்/கார்), வீடு போன்றவற்றை
வாங்குவார்கள். இதற்காக கடன் வாங்குவார்கள். நிறைய பணம் இ.எம்.ஐ.
கட்டவே
சரியாகப் போகும். கூடவே அதி அத்தியாவசியமான ஆயுள் மற்றும் ஆரோக்கிய
காப்பீடுகளுக்கான பிரீமியச் செலவும் இருக்கிறது. இந்தச் செலவுகளுக்கே
அவர்கள் வருமானத்தின் பெரும்பகுதி போய்விடுவது உண்மைதான். என்றாலும்,
இளைமைப் பருவம் தொட்டே ஓய்வு காலத்துக்கான முதலீட்டையும் தொடங்குவது
கட்டாயத்திலும் கட்டாயம்.
30 வயதானவர்களுக்கான முதலீடு!
நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… P35சுகமான
ஓய்வு காலத்துக்கு எந்த வயதினர் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று
பார்ப்போம். செந்திலுக்கு இப்போது வயது 30. வேலைக்குச் சேர்ந்து 5 ஆண்டுகள்
முடிந்துவிட்டன. திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கும் அவருக்கு, நிறைய
செலவுகள் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. பி.பி.ஓ. நிறுவனம் ஒன்றில்
பிடித்தம் போக மாதம் கையில் 21,500 ரூபாய் சம்பளம் வாங்குகிறார். வீட்டுச்
செலவு, மருத்துவச் செலவு, மகன் விக்ரமின் படிப்பு, சொந்த வீடுகட்ட வாங்கிய
ஹோம் லோனுக்கான இ.எம்.ஐ. – இவற்றை எல்லாம் தாண்டித்தான் செந்தில் தன்
ஓய்வு காலத்துக்கு சேமிக்க வேண்டியிருக்கிறது. செந்திலின் இன்றைய லைஃப்
ஸ்டைல் எப்படி இருக்கிறதோ அதுபோலவே பணி ஓய்வின் போதும் இருந்தால்தான்
வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியும்.
செந்தில் தன் குடும்பத்தின் அடிப்படைச் செலவுகளுக்கு மட்டும் மாதத்துக்கு நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… Rupee_symbol
15,300 செலவு செய்கிறார். ஆண்டுக்கு சுமார் 7% பணவீக்க விகிதம் என்று
எடுத்துக் கொண்டால் 30 ஆண்டுகள் கழித்து அவர் பணி ஓய்வு பெறும் போது ஒரு
மாதத்துக்கு 1,16,468 ரூபாய் இருந்தால்தான் சாமாளிக்க முடியும். இந்தத்
தொகை மாதம்தோறும் கிடைக்க வேண்டும் என்றால், அவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு
மொத்தம் நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… Rupee_symbol1.75 கோடியை தொகுப்பு நிதியாக கையில் வைத்திருக்க வேண்டும்!
இவ்வளவு
பெரிய தொகையை ஈட்ட என்ன செய்வது என்று மலைக்க வேண்டியதில்லை. இதற்கு 12%
வருமானம் தரக்கூடிய திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… Rupee_symbol5,000 முதலீடு செய்து வரவேண்டும்.
40 வயதானவர்களுக்கான முதலீடு!
இந்தப்
பிரிவில் இருப்பவர்களுக்கு 40 வயதான முத்துவை ஒர் உதாரணமாக
எடுத்துக்கொள்வோம். அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள். பணி ஓய்வுக்கு
இன்னும் 20 ஆண்டுகள் இருக்கிறது. இவர்களின் இன்றைய அடிப்படைச் செலவு மாதம்
நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… Rupee_symbol22,000 என்றால், 20 ஆண்டுகள் கழித்து (7% பணவீக்கம்) நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… Rupee_symbol85,133 இருந்தால்தான் சமாளிக்க முடியும். இந்தத் தொகை மாதம்தோறும் கிடைக்க வேண்டும் என்றால் அவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… Rupee_symbol1.27 கோடி தொகுப்பு நிதியை கையில் வைத்திருக்கவேண்டும். இதற்கு 12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் மாதம்தோறும் தொடர்ந்து நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… Rupee_symbol12,909 முதலீடு செய்ய வேண்டும்.
50 வயதானவர்களுக்கான முதலீடு!
நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… P36%281%29இந்த
வயதுள்ளவர்களுக்கு 50 வயதுள்ள ராமகிருஷ்ணனை உதாரணமாக எடுத்துக்கொள்
வோம். அவருக்கு மனைவி, இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். பணி ஓய்வுக்கு
இன்னும் 10 ஆண்டுகள் இருக்கிறது. இவர்களின் இன்றைய அடிப்படைச் செலவு மாதம்
நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… Rupee_symbol25,000 என்றால், 10 ஆண்டு கழித்து (7% பணவீக்கம்) நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… Rupee_symbol49,179
இருந்தால் தான் சமாளிக்க முடியும். இந்தத் தொகை மாதம் தோறும் கிடைக்க
வேண்டும் என்றால் அவரிடம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… Rupee_symbol73.77 லட்சம் தொகுப்பு நிதி கையில் இருக்க வேண்டும். இதற்கு 12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் மாதம் தோறும் தொடர்ந்து நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… Rupee_symbol32,068 முதலீடு செய்ய வேண்டும்.
ஓய்வூதியத் தொகுப்பை அடைய முதலீட்டுத் திட்டங்கள்!
இங்கே
காட்டப்பட்டுள்ள உதாரணங்களில் முதலீடு செய்தால் சுமார் 12% வருமானம்
கிடைக்குமென எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சில
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை பரிந்துரை செய்கிறேன்.
30+ வயதானவர்களுக்கு..!
இந்த
வயதினருக்கு ஓய்வு பெற நீண்ட காலம் இருக்கிறது என்பதால் இவர்கள் தங்களின்
முதலீட்டை ஈக்விட்டி ஃபண்டுகளில் அதிகமாகச் செய்யலாம். இவர்கள் 70%
தொகையை ஈக்விட்டி ஃபண்டுகளிலும், 30% தொகையை பி.பி.எஃப். மற்றும் ஃபிக்ஸட்
மெச்சூரிட்டி பிளான்களிலும் (எஃப்.எம்.பி) முதலீடு செய்யலாம்.
எஃப்.எம்.பி. என்பது குறிப்பிட்ட முதிர்வு காலத்தைக் கொண்ட மியூச்சுவல்
ஃபண்ட். இதில் ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டில் எஃப்.டி.யோடு
ஒப்பிடும்போது வரிக்கு பிந்தைய நிலையில் லாபகரமாக இருக்கும்.
நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… P36a
40+ வயதானவர்களுக்கு..!
இந்த
வயதினருக்கு ஓய்வு பெற 20 ஆண்டு காலம் இருக்கிறது. இவர்கள் 60-65% தொகையை
ஈக்விட்டி ஃபண்டுகளிலும், மீதியை பேலன்ஸ்ட் ஃபண்டுகள், பி.பி.எஃப்.
மற்றும் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்களிலும் முதலீடு செய்யலாம்.
நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… P36b
நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… P37
50+ வயதானவர்களுக்கு..!

இந்த
வயதினருக்கு ஓய்வு பெற 10 ஆண்டுகள்தான் இருக்கிறது. இவர்கள் அதிக ரிஸ்க்
எடுக்க முடியாது. 50-65% தொகையை ஈக்விட்டி ஃபண்டுகளிலும், மீதியை
பேலன்ஸ்ட் ஃபண்டுகள், பி.பி.எஃப். மற்றும் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி
பிளான்களிலும் முதலீடு செய்யலாம்.
நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… P37a
இங்கே
கொடுக்கப்பட்டிருக்கும் ஃபண்டில், தங்களின் வசதிக்கு ஏற்ப முதலீட்டைப்
பிரித்து செய்து வரவும். 30+ வயதுக்காரர்கள், 40 வயதாகும் போது தங்களின்
முதலீட்டை ஈக்விட்டி ஃபண்டு களில் குறைத்து கடன் சார்ந்த திட்டங்களில்
அதிகரித்துக் கொள்ள வேண்டும். இதே போல் மற்ற வயதினரும் வயதாக வயதாக
ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீட்டைக் குறைத்தும், கடன் சார்ந்த ஃபண்டுகளில்
முதலீட்டை அதிகரித்தும் வரவேண்டும். மேலும், ஓய்வு காலத்துக்கு 3-5
ஆண்டுகளுக்கு முன் முதலீட்டை கொஞ்சம் கொஞ்சமாக ஈக்விட்டி ஃபண்டுகளில்
இருந்து அதிக ரிஸ்க் இல்லாத எஃப்.டி. போன்ற திட்டங்களுக்கு மாற்றுவது
பாதுகாப்பானது.
இளம் வயதிலே ஆரம்பியுங்கள்..!
ஓய்வு காலமும் உல்லாச காலமாக இருக்க வேண்டும் என்றால் இளம் வயதில் இருந்தே முதலீட்டை ஆரம்பிப்பதுதான் நல்லது. ரிட்டயர் ஆகும் போது நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… Rupee_symbol1
கோடி கையில் இருக்க வேண்டும் என்றால் (மியூச்சுவல் ஃபண்டுகளில் ஆண்டுக்
கணக்கில் 12 சதவிகிதம் வருமானம் கிடைத்தால்) 30 வயதுக்காரர் மாதம் சுமார் நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… Rupee_symbol2,860-ம் 40 வயதுக்காரர் நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… Rupee_symbol10,109-ம் 50 வயதுக்காரர் நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… Rupee_symbol43,470-ம்
சேமித்தால் போதும். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் இடையே வித்தியாசப்படும்
தொகை மலைக்கும் மடுவுக்கும் உள்ளதைப் பார்த்தாலே ‘இளமையில் சேமி’
என்பதன் அர்த்தம் புரியும்.
நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… P37b



நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… End_bar



நன்றி:-- தொகுப்பு: சி.சரவணன்

நன்றி:- நா.வி

http://azeezahmed.wordpress.com/




நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்… End_bar
avatar
azeezm
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010

http://azeezahmed.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum