ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 
Dr.S.Soundarapandian
வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_m10வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு)

2 posters

Go down

வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு) Empty வெறும் சடங்காகி போகுமோ முத்துக்குமரனின் உயிர்த்தியாகம்? (காணொளி இணைப்பு)

Post by Guest Fri Feb 04, 2011 2:55 pm

இதுவரை எத்தனையோ உயிர்கள் தன்னைத் தானே எரித்துக் கொண்டது .காரணம் தன் ஆற்றாமையை வெளிப்படுத்தவும் தன் மீதே கொண்ட சினமும் முதன்மையை இருந்தது.
ஆனால் தமிழீழத்தில் ஏற்ப்பட்ட இனப்படுகொலையை எதிர்த்தும், தமிழ்நாட்டு அரசியல், நடிகர்களின் போக்கினை கண்டித்தும், தன் உயிரையே ஆயுதமாக்கி கொண்டவன் ,கரும்புலியாய் தன்னையே மாற்றி கொண்டவன் முத்துக்குமரன்.

தமிழீழ சிக்கலை மேடை போட்டு பேசிக் கொண்டிருந்தவர்களையும் ,தமிழ்நாட்டில் நடை பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை தட்டி எழுப்பிடவும் நெருப்பாய் எழுந்தான். கனவுகளும் கற்பனைகளும் சுமந்த நெஞ்சத்தில் தன் கடைமைகளை விதைதான் .தமிழனுக்கான உரிமைகளை ஆவணமாக அடித்து கொடுத்தான் .அன்றாட பணியில் சிக்கிய மாந்தர்கள் இடையே தன் இறுதி ஆற்றாமையை வெளிபடுத்திட அவனுக்கு தேவைப் பட்டது ஒற்றைத் தீக் குச்சியும், மண்ணெண்ணெய் குடுவையும் தான்.

சனவரி 29 - சூரியன் தன் சோம்பலை விடுத்து புடவை சுற்றி உலா வரும் வேளையில் இவன் எழுந்தான். சூரியனுக்கே சுடுகின்ற அளவில் எரிந்தது அவன் உடல் மட்டும் தான். ஆனால் உள்ளமோ உலகின் உயர் தனி இனத்தை காத்திட யாராவது வரமாட்டார்களா என்ற உள்ளுணர்வினால் போராடினான் .காலை கடன் முடித்த கையேடு வந்த கூட்டமும், காலம் கடந்து கடல் அலையின திரண்ட கூட்டமும். முத்து குமரனின் உடலை சுற்றி அலைந்து கொண்டிருந்தது.

அலைகடலென திரண்ட கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ள ஒட்டு பொறுக்கி அரசியல் வாதிகள் ஒரு புறமும், தமிழினத்தை அழித்து கொண்டிருந்த அரசியல் துரோகிகள் மறு புறமும், முத்து குமரனின் இறுதி ஆவலை நிறைவேற்றும் வெறியுடன் இனப் பற்றாளர்கள் ஒரு புறம் அலைந்து கொண்டிருக்க, அவன் மரணத்திற்கு காரணமான அரசியல் வாதிகள் எங்கே நம் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அவ்விடத்தை விட்டு அகலாமல் காத்திருந்தனர் .

எனது உடலையே ஆயுதமாக்கி கொள்ளுங்கள் என்ற முத்துக்குமரனின் இறுதி ஆவலை கூட நிறைவேற்ற விடாமல், வெறும் காட்சி பொருளாக மூன்று நாட்கள் வைத்திருந்து இறுதியில் எரியூட்ட வைத்து கருணாநிதி கொடுத்த வேலையை அழகாக செய்து முடித்தனர். இனங்கான முடியாதவாறு நம்மோடு இணைந்திருத்த இனத்துரோகிகள் .

தமிழினம் காக்க தன் உடலையே விதையாய் விதைத்தவன் அந்த விதையில் விதைந்த விளைச்சலை கூட சில தலைவர்கள் அறுவடை செய்தனர், தங்கள் அரசியல் நகர்வுக்காகவும் தொகுதி பங்கீட்டிற்காகவும்.

ஆண்டுகள் இரண்டினை முடிந்து ஒட்டு மொத்த தமிழினமும் அழிந்த பிறகும், இன்னும் தமிழின சிக்கலும், தமிழ்நாட்டு அரசியலும் மாறவில்லை. மாறாக நினைவேந்தல் என்ற நிகழ்வு மட்டும் வெறும் சடங்காக மாறிக் கொண்டிருக்கிறது. யாரை ஒன்றிணைக்க பாடுபட்டானோ அந்த கனவு நிறைவேறாது அவன் உடல் துடித்துக் கொண்டிருக்கிறது .

முத்துக்குமரனின் உயிர் தியாகத்தை உரிமை கொண்டாட முடியாத வக்கற்ற அரசியல் கட்சிகள் அவன் நினைவேந்தலை மழுங்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. எதிர்வரும் காலத்தில் அப்துல் ராவுதை போன்று முத்துக்குமரனின் நினைவேந்தலும் ஒரு சடங்காகி மாறி நாளடைவில் சாதிய முத்திரை குத்தப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு விடுமோ என்ற ஐயம் நமக்குள் எழுகிறது. எனவே முத்துக்குமரனின் நினைவேந்தல் நிகழ்வு அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழினப் பற்றாளர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே அனுசரிக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே முத்துக்குமரனின் உயிர்த்தியாகம் வீண் போகாது காலத்திற்கும் உயிர்த்து நிற்கும். அடுத்த கட்ட நகர்வுக்கு நம்மை அழைத்து செல்லும்.
எம் இனத்தை காப்பாற்ற ஒருவன் வர மாட்டானா என ஏங்கி தவித்த முத்துக்குமரனின் தவிப்பு என்றும் மாறாமல் நம்மிடையே உயிர்ப்புடன் மேலோங்கி நிற்கும். அவன் கண்ட கனவு நிறைவேற ஒரு நாள் வழி பிறக்கும்.

தமிழ் தேவன்.-- வன்னி ஆன்லைன்