ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு பயப்படுவது ஏன்?

4 posters

Go down

கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Empty கடவுளுக்கு பயப்படுவது ஏன்?

Post by தாமு Thu Jan 27, 2011 8:44 am

பகவானிடம் நமக்கு பயம், பக்தி, விசுவாசம் ஆகியவை இருக்க வேண்டும். பகவானிடம் பக்தி; விசுவாசம் இருக்க வேண்டியது தான். ஆனால், அவனிடம் பயம் எதற்கு? அவன் தான் பயத்தை போக்குகிறவனாயிற்றே!
இந்த, ‘பயம்’ என்ற சொல்லுக்கு, அவனைக் கண்டு, நடுநடுங்கி பயப்பட வேண்டும் என்பது பொருளல்ல… அவனுக்கு நாம் ஏதாவது அபசாரம் செய்து விட்டோமோ, செய்து விடுவோமோ என்று பயப்பட வேண்டும். ஒரு குருவிடம் சீடன் பயபக்தியுடன் நடந்து கொள்கிறான் என்றால், குருவை கண்டு அவன் நடுங்கி, பயந்து கொண்டிருப்பதில்லை. அவரது மனமறிந்து, தவறுகள் நடந்து விடாமல் கவனமாக இருந்து, பணிவிடை செய்வதைத் தான் பயபக்தியுடன் இருக்கிறான் என்கிறோம். குற்றம் – குறை இல்லாதவனிடம், எந்த பயமும் இருப்பதில்லை; நேர்மையாக நடப்பவன் எதற்கும் பயப்படுவதில்லை.

பகவானும் சரி, மகான்களும் சரி… ‘எம்மைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம்!’ என்று தான் சொல்லி இருக்கின்றனர். பகவானும், மகான்களும் மக்களுக்கு அருள் செய்யவே காத்திருக்கின்றனர். பக்தியும், விசுவாசமும் இருந்தாலே அருள் கிடைத்து விடும்; பயப்பட வேண்டியதில்லை. பிரகலாதனுக்கு பகவானிடம் பக்தியும், விசுவாசமும் இருந்தது; நலம் பெற்றான். இரண்யனுக்கு பகவானிடம் பக்தி, விசுவாசம் இல்லை; பயனடையவில்லை.

போலீசைக் கண்டதுமே சந்து பொந்து வழியாக ஓடுகிறான் குற்றவாளி. நேர்மையுள்ளவன், போலீசைபார்த்தாலும், பயமின்றி போய்க் கொண்டிருக்கிறான்.தன்னிடம் குற்றமில்லாதபோது பயம் இருக்காது; குற்றம் உள்ளவன் பயப்படுகிறான். பயம் என்ற சொல், வேறு சில இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பயமானது, மனதில் எழும் சந்தேகத்தின் காரணமாக உண்டாவது.

ஒருவன் விருந்து சாப்பிடுகிறான். வயிறு நிறைய சாப்பிட்டதும், ‘இவ்வளவு சாப்பிட்டு விட்டோமே! உடம்புக்கு ஆகுமோ, ஆகாதோ…’ என்ற பயம் வந்து விடுகிறது. பணக்காரன் அரசாங்கத்தை கண்டு பயப்படுகிறான். ‘எந்த நேரத்தில், என்ன ரெய்டு வருமோ, என்ன நோட்டீஸ் வருமோ…’ என்று பயம்.

இளம் வயதினருக்கு, வயோதிகம் வந்து விடுமோ என்ற பயம்; பணம், பொருள் உள்ளவர்களுக்கு, திருடர்களிடம் பயம்; பயணம் செய்பவர்களுக்கு, விபத்து நேர்ந்து விடுமோ என்ற பயம்; தர்ம சிந்தனை இல்லாதவர்களுக்கு, யாசகங்களைக் கண்டு பயம்; படிக்காத பையனுக்கு, தேர்வு என்றதும் பயம். இப்படி, சில வகை பயங்கள், சந்தேகத்தின் காரணமாக ஏற்படும். இன்னும் பெரிய பயம் ஒன்றுள்ளது. அது, மரண பயம்.

மரணம் எப்போதோ ஒருநாள் வரப்போவது நிச்சயம். அது எப்போது என்று தெரியாததால், எப்போது, எப்போது என்று பயந்து கொண்டே இருக்கிறான். கொஞ்சம் உடல் அசவுகரியம் ஏற்பட்டால், உடனே வைத்தியரிடம் போகிறான்.இதுவும் போதாது என்று தோன்றினால், ஜாதகத்தை தூக்கிக் கொண்டு ஜோசியரிடம் ஓடுகிறான். அவர் ஜாதகத்தை பார்த்து, ‘சனி போதாது, குரு போதாது!’ என்று சொல்லி, நீடுழி வாழ சில பரிகாரங்களையும், ஹோமங்களையும் செய்யச் சொல்கிறார். ஏன் இப்படி எல்லாம் செய்கிறான்? மரண பயம் தான்! இப்படி பயம் உண்டாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அப்படியானால் பயமே இல்லாதவன் யார்? மரணத்தைக் கண்டு பயப்படாதவன் தான் பயமற்றவன்; மற்றவர்கள் எல்லாரும் ஏதோ ஒன்றுக்கு பயந்தவர்கள் தான்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Empty Re: கடவுளுக்கு பயப்படுவது ஏன்?

Post by கலைவேந்தன் Thu Jan 27, 2011 11:23 am

பயம் என்பது கருவறையிலேயே உருவான ஒரு செயல். இருளில் நீரில் மிதந்து கிடக்கும் கருவுக்கு இயல்பான பயம் வருகிறது. பிறகு அதைத் தொடர்ந்து இருள் பயம் மனிதனை இறக்கும் வரை தொடர்கிறது. இந்த இருள் பயமே கடவுள் முதல் மரணம் வரையிலான அனைத்து பயத்துக்கும் மூலாதாரமாக விளங்குகின்றது.

- கலையானந்த ஸ்வாமிகள்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Empty Re: கடவுளுக்கு பயப்படுவது ஏன்?

Post by ARR Thu Jan 27, 2011 12:19 pm

மனசாட்சி உள்ளவனுக்கு கடவுளிடம் பயம் இருக்கும்..


கடவுளுக்கு பயப்படுவது ஏன்? 0018-2கடவுளுக்கு பயப்படுவது ஏன்? 0001-3கடவுளுக்கு பயப்படுவது ஏன்? 0010-3கடவுளுக்கு பயப்படுவது ஏன்? 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Empty Re: கடவுளுக்கு பயப்படுவது ஏன்?

Post by மஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 2:53 pm

பயம் கூட பிறந்தது திட்டு வாங்கக்கூடாது அடி வாங்கக்கூடாது என்று சென்சிட்டிவா இருக்கும் நல்லப்பிள்ளைகளும் உண்டு அவங்களுக்கு தான் பயம் அதிகமா இருக்கும்... அப்படி பயம் இருக்கும்போது தப்பு பண்ணவே மாட்டாங்க....

அருமையான பகிர்வு தாமு...
கலையானந்தா ஸ்வாமிகள் உனக்கு தான் பயம்னா வீச என்ன விலைன்னு கேப்பியே நீயா இவ்ளோ டீட்டெயிலா கொடுத்திருக்கே இதெல்லாம் ரொம்ப டூமச்சா தெரியலையாப்பா உனக்கே?

ராஜா ஐயாவின் ஒற்றை வரி பதில் மிக அருமை....உண்மை மனசாட்சி உள்ளவனுக்கு பக்தி பயம் எல்லாமே இருக்கும்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடவுளுக்கு பயப்படுவது ஏன்? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Empty Re: கடவுளுக்கு பயப்படுவது ஏன்?

Post by தாமு Thu Jan 27, 2011 4:39 pm

அனைவருக்கும் கடவுளுக்கு பயப்படுவது ஏன்? 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கடவுளுக்கு பயப்படுவது ஏன்? Empty Re: கடவுளுக்கு பயப்படுவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum