ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா தேவிசிங் பாட்டீல் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

Go down

குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா தேவிசிங் பாட்டீல் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை  Empty குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா தேவிசிங் பாட்டீல் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

Post by சிவா Wed Jan 26, 2011 12:00 am

குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா தேவிசிங் பாட்டீல் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை  Pic110

நமது நாட்டின் 62-வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா தேவிசிங் பாட்டீல் இன்று இரவு ஏழு மணிக்கு தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவரது உரையின் தமிழாக்கம் பின்வருமாறு :

எனதருமை குடிமக்களே,

62-வது குடியரசு தினத்தை நாம் கொண்டாடும் இத்தருணத்தில், நமது நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் எல்லைப்புறத்திலும், உள்நாட்டிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள் ! நாட்டின் வளர்ச்சிப் பணியில் பங்களிப்பு செய்துள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் எனது வாழ்த்துக்கள்.

நம் நாட்டின் நாட்காட்டியில் ஜனவரி 26 மிக முக்கியமான ஒரு நாளாகும். அன்று தான் நாம் நீதி மற்றும் சமத்துவதம் அடிப்படையிலான சுதந்திர இந்தியா குடியரசாக உருவான நாளை நாம் கொண்டாடுகிறோம். அது, சிறந்த அரசியல் சாசனத்தின் மூலம் தனி மனித சுதந்திரம் மற்றும் கௌரவம் உறுதிப்படுத்தப்பட்ட நம்முடைய நாட்டை வழங்கிய நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் நம்முடைய முன்னோர்கள் செய்த தியாகங்களை நன்றி அறிதலுடன் நினைவுக் கூறும் நாளாகும்.

நல்லிணக்கம், அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கு நம்மை அர்ப்பணம் செய்து கொள்ளும் நாள் இதுவாகும். நம்முடைய சாதனைகளுக்கு கடின உழைப்பை செலுத்தும் நம் நாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கே முதன்மையான பெருமை சாரும். நம்முடைய வெற்றிகளுக்கு நாம் பெருமிதம் கொள்ளலாம். அதே சமயம் மேலும் செய்து முடிக்க வேண்டிய பல முக்கியமான வேலைகளும் உள்ளன. அதிலும் குறிப்பாக ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் உள்ள சமுதாயத்தினருக்கு அதிகாரம் அளிப்பதற்கான உறுதி நிறைவேற்றப்பட வேண்டும்.

உலகின் பழமை வாய்ந்த நாகரீகங்களில் ஒன்றான நன்னெறிகள் மற்றும் கொள்கைகளின் சொந்தக்காரர்கள் நாம் என்பதில் நாம் அதிர்ஷ்டசாலிகள் நாம். காலத்திற்கு ஏற்ப மாறிவரும் தேவைகளை சந்திக்காத நாடுகளுள் சவால்களை எதிர்கொள்ளாத நாடுகளே இருக்க முடியாது. இந்தியாவும் இத்தகைய தடைகள், சிக்கல்கள், கஷ்டங்கள், தொல்லைகளை கொண்டுள்ளன. இவற்றை நாம் தவிர்க்க முடியாது.

இவற்றுக்கு நாம் இணைந்து தீர்வுகளை கண்டறிய வேண்டும். ஒரு நாட்டின் வலிமையானது அது எதிர்கொள்ளும் சவால்களை வைத்து முடிவு செய்யப்படுவதில்லை. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் வைத்துதான் ஒரு நாட்டின் வலிமை முடிவு செய்யப்படுகிறது. மிக முக்கியமான தேசிய இலக்குகளில் நமக்கு நாடு தழுவிய கருத்தொற்றுமை தேவை. அத்தகைய இலக்குகளில் மனித வள கட்டுமானம் செய்வதற்கு வறுமை ஒழிப்பு, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், தரமான கல்விக்கு வசதி வாய்ப்பு, குறைந்த செலவில் சுகாதார வசதிகள் ஆகியவை அவசியமாகும்.

அன்பான குடிமக்களே,

இந்திய மக்கள் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்று தங்களது ஜனநாயக நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். நமது குடியரசின் அடிப்படைத் தூணாக திகழ்வது ஜனநாயகமாகும். இந்தியாவின் அடையாளத்திற்கும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக போற்றப்படும் நமக்கு ஜனநாயக நிலைத் தன்மை அவசியமாகும்.

நமது நாடாளுமன்றம் மக்கள் இறையாண்மையின் அடையாளமாகும். அதன் வெற்றிகரமான செயல்பாடு அரசு மற்றும் எதிர்கட்சிகளின் கூட்டு பொறுப்பாகும். எல்லா காலத்திலும் நாடாளுமன்றத்தின் கௌரவமும் பெருமையும் கட்டிக் காக்கப்பட வேண்டியது அவசியமாகும். கூட்டுறவான ஆக்கபூர்வமான அணுகுமுறை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் நடைபெறும் இடமாக பொது மக்கள் மனதில் அதன் நற்பெயர் திகழ வேண்டும். இது நடைபெறாத போது ஜனநாயகத்தின் மீதான மக்கள் நம்பிக்கை பாதிக்கப்படலாம்.

நமது சமூகத்தைப் பற்றிய நெருக்கமான கண்ணோட்டத்தைக் காண வேண்டிய தருணம் வந்துள்ளது. ஒரு மனிதன் கொல்லப்பட்டாலோ அல்லது பணம் திருடு போனாலா அந்த விஷயம் வேதனைக்கும் மிகுந்த கவலைக்கும் உரியது. கல்வி நிறுவனங்களில் ராகிங் போன்ற சம்பவங்கள் நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது. இத்தகைய சம்பவங்களால் நம்முடைய சமூக தன்மை ஆழமாக சேதமடைகிறது. எனவே, வன்முறையை நாட வேண்டாம் என்று எனது சக குடிமக்களை நான் கேட்டுக் கொள்கிறேன். அகிம்சை மற்றும் வாய்மையை கொண்டு நடைபோட்டு தனது சுதந்திரத்தை வென்றது நம் நாடு. சுதந்திர நாடு என்ற நம்முடைய பயணத்திலும் இந்த பாதையை பின்பற்றி நம்முடைய தார்மீக துணிவை எடுத்துக் காட்ட வேண்டும்.

நம்முடைய பண்பாடு போதிக்கும் ஒற்றுமை, நேர்மை, நன்னடத்தை, உயர்ந்த நெறிகள் ஆகியவற்றின் மிகுந்த முக்கியத்துவத்தை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். நம்முடைய இந்த பாரம்பரியத்தை நம்முடைய இளைஞர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். நாட்டின் எதிர்கால சிற்பிகள் என்ற முறையில் நன்னெறி அடிப்படையிலான கல்வி இதற்கு மிக முக்கியமாகும். ஆசிரியர்களுக்கு பயிற்சி, தரமான கல்வி போன்ற பிரச்சனைகளை நாம் தொடர்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும்.

மலைப் பகுதிகள் மற்றும் தொலைத் தூர இடங்களை சேர்ந்த மாணவர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான நம்முடைய சிறப்பான முயற்சிகள் அவர்களை சென்றடைய வேண்டும்.

அன்பான குடிமக்களே,

நாடு என்ற முறையில் நீதியான சமூகத்தை உருவாக்குவதும் முன்னேற்றுவதும் நம்முடைய நோக்கமாகும். பெண்கள், இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள், சமூகத்தித்ன விளிம்பு நிலையில் உள்ளோர் ஆகியோருக்கான திட்டங்கள் அவர்கள் வாய்ப்புகளை பெற்று எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும். ஆதரவற்றோர், தெருவில் வாழும் குழந்தைகள் மற்றும் முதியோர் ஆகியோர் பிரச்சனைகளையும் நாம் தீர்க்க வேண்டியது அவசியமாகும். நலத்திட்டங்களின் வெற்றிக்கு வளர்ச்சி நிதிக்கான ஒட்டுமொத்த தொகையும் உரிய பயனாளிகளைச் சென்றடைய வேண்டும்.

வளர்ச்சி பெற்ற சிறந்த நிர்வாகத்திற்கு ஊழல் ஒரு எதிரியாகவுள்ளது. ஊழலை ஒழிக்க திட்டமிட்ட மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அரசுக்கு மக்களுக்கும் இடையே உள்ள நியாயமான உறவுதான் நீதியான சமூகத்தை உருவாக்குவதற்கு நல்ல மாற்றத்தை கொண்டு வரும்.

தகவல், செய்தி மற்றும் கருத்துக்களைப் பொது மக்களிடம் கொண்டுவர ஊடகத் துறை மிக முக்கிய பங்காற்றுகிறது. இது பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தி அது பற்றிய விவாதங்களை வளர்த்து கண்ணோட்டங்களை உருவாக்குகிறது. சமூகத்திற்கு சிறந்த சேவையாற்றும் சிறந்த சேவகர்கள் உள்ளனர். சில சமுதாய நிறுவனங்கள தன்னலமற்ற சேவையாற்றுகின்றன. இதே போல கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோரும் சமூகத்தின் முன்னோடியாகப் பணியாற்றுகின்றனர். இத்தகைய செயல்பாடுகளை ஊடகத் துறையினர் எடுத்துக்காட்டி மற்றவர்களையும் இது போல சமூகத் தொண்டாற்ற ஊக்குவிக்க வேண்டும்.

எனது சக குடிமக்களே !

கடினமான உலகளாவிய மந்த நிதி நிலை சூழலிலும் நம்முடைய பொருளாதாரம் சீரான முறையில் வளர்ச்சிப் பெற்று வருகிறது. நாம் இப்போது நெருக்கடிக்கும் முந்தைய வளர்ச்சி நிலைக்கு திரும்பி வருகிறோம். ஆண்டுக்கு 9 சதவீத வளர்ச்சியை காணுவோம் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். அதே சமயம் பணவீக்கம் குறிப்பாக உணவுப் பொருட்கள் விலை அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. இதற்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் உணவுப் பாதுகாப்பு, வேளாண் உற்பத்தி மற்றும் கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றுக்கு மேலும் புதுமையான அணுகுமுறைகளைக் கண்டறிய வேண்டும்.

உணவு தானியங்கள் உற்பத்தியில் பசுமை புரட்சி நாட்டை தன்னிறைவு அடையச் செய்தது. உற்பத்தி அதிகரிக்க இரண்டாவது பசுமை புரட்சி தேவையாகும். முதல் பசுமை புரட்சி பாசன பகுதிகளில் மட்டுமே நடைபெற்றது. ஆனால் தற்போது நாம் மழை பெய்யும் பகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

வேளாண்மையிலும், ஊரக வளர்ச்சியிலும் தனியார் துறை, விவசாயிகள், அரசு ஆகியோரிடையே கூட்டுறவு ஏற்படுத்தும் வகையில் பொருத்தமான வழிமுறைகளைக் கண்டறிவதுடன் நவீனமயமாக்கல் மற்றும் இயந்திர பண்ணை முறையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேளாண்மை சம்பந்தப்பட்ட எல்லா நடவடிக்கைகளிலும், விவசாயிகளைக் கருத்தில் கொண்டு அவர்களையும் ஈடுபடுத்த வேண்டும். விவசாயிகளின் நில உரிமை மற்றும் விலைப் பொருட்கள் உரிமையை பாதுகாக்க வேண்டும். உணவு பாதுகாப்பு நம் நாட்டின் மிக முக்கியமான தேவை என்பதால் விவசாய உற்பத்தியை வருவாய் அளிக்கக் கூடியதாக ஆக்குகின்ற பொறுப்பை நிறுவனங்கள் துறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு பகுதியில் வறட்சி ஏற்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ஒன்றியத்திலும் உணவுப் பாதுகாப்புக்கான நிலைத்த உணவு உற்பத்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உணவு தானிய உற்பத்தி குறித்து தேசிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அடுத்த 20 ஆண்டுகளில் நம்முடைய மக்கள் தொகை 140 கோடியாகக் கூடும் என்பதால் இதே போல ஒருங்கிணைந்த உற்பத்திக்கான தேசிய திட்டமிடல் அதிலும் குறிப்பாக பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தானியங்கள் போன்ற உணவு வகைகளை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனது தேவைக்கு ஏற்ப உணவு தானியங்களை உற்பத்தி செய்ய வேண்டும். இதன் மூலம் போக்குவரத்து மற்றும் சேமிப்பு செலவுகளை மிச்சப்படுத்தலாம். போக்குவரத்து மற்றும் கையாளும் போது ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க முடிவதுடன் உணவு தானியங்களை விரைவாகவும் விநியோகம் செய்ய முடியும்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் விவசாயித்திலும் மற்ற அனைத்து துறைகளிலும் புதுமைகள் அவசியமாகும். இந்தியாவில், இது புதுமைகள் ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அறிவு பொருளாதாரம் வேகமாக முன்னேறி வரும் சூழலில் நம்முடைய ஆராய்ச்சி அதிகப்படுத்தப்பட வேண்டும். நம்முடைய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு துறைகளில் விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு வசதியாக அறிவியல் தொழில்நுட்பத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் நிலையான மற்றும் பாதுகாப்பான சூழல் அவசியமாகும். இத்துறையில் நம்முடைய காவல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களின் பணி முக்கியமானதாகும். நம்முடைய பிராந்தியத்தில் நம்முடைய அண்டை நாடுகளுடன் கூட்டுறவும் பேச்சு வார்த்தையிலும் இவர்களுடைய பங்கு முக்கியமானதாகும்.

மனிதகுல முன்னேற்றத்திற்கு ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பயங்கரவாதம். பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு சர்வதேச சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒருங்கிணைந்த முறையில் செய்லபடுவதற்கான முக்கியத் தேவை உள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினர் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய கூட்டு நடவடிக்கைக்கு இந்தியா தனது முயற்சிகளை தீவிரப்படுத்தும். இதே போல அனைத்து சர்வதேச பிரச்சனைகளிலும் தனது பொறுப்பை உணர்ந்து இந்தியா செயலாற்றும்.

எனதருமை குடிமக்களே,

நம்முடைய இலக்குகளை அடைவதற்கு நம்முடைய ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முக்கியத்துவத்தை கடந்த சில ஆண்டுகளில் நம்முடைய பல முன்னேற்றங்கள் எடுத்துக்காட்டுகின்றன. நம் நாட்டின் அடிப்படை நன்னெறிகளைப் பின்பற்றி இதனை தொடர வேண்டிய தேவையுள்ளது. ஒரு புகழ்பெற்ற கவிதையின் சில வரிகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.

இரக்கம், அகிம்சை, நன்மதிப்பு எப்போதும் ஒன்றிணைந்து செல்லும் என்பதே அதன் பொருளாகும். இந்த வார்த்தைகளுடன் குடியரசு தின நன்னாளில் அனைத்து குடிமக்களுக்கும் மீண்டும் எனது வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெய் ஹிந்த்


குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா தேவிசிங் பாட்டீல் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» கோவை வந்தார் பிரதீபா பாட்டீல்-ஆளுநர், முதல்வர் வரவேற்பு
» செத்துப் போன தூக்குத் தண்டனை கைதிக்கு கருணை காட்டிய பிரதீபா பாட்டீல்!!!
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
» பாரதி மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி டெல்லி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு.
» முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum