ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிறிப்போன வெளியுறவு கொள்கை

2 posters

Go down

வெளிறிப்போன வெளியுறவு கொள்கை Empty வெளிறிப்போன வெளியுறவு கொள்கை

Post by நிசாந்தன் Wed Jan 19, 2011 2:40 pm

2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உட்பட பலரும் கனவு கண்டும் நம்பிக்கை தெரிவித்து இருந்தது தெரியும். ஆனால், நடந்துக் கொண்டிருப்பதோ நேர் எதிர்மறை. எவ்வளவோ விடயங்களில் இந்தியாவின் திறமையும் பலமும் ஓங்கிக்கொண்டிருந்தாலும் இந்திய அரசாங்கத்தின் பயந்தாங்கொள்ளித்தனத்தாலும், அமெரிக்காவிற்கு ஜால்ரா அடிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டு செயல்படுவதாலும், நாளுக்குநாள் நமக்கு உலக அரங்கில் இருக்கும் மதிப்பு கூடுவதாகத் தெரியவில்லை.

ஈராக்கிலும் ஆப்கானித்தானிலும் அமெரிக்கா புரிந்த அட்டூழியங்கள் விக்கிலீக்சு மூலமாகவும் இன்னபிற ஊடகங்கள் மூலமாகவும் வெளியாகி சந்தி சிரித்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்காவை இன்னும் தேவதூதனாகவே கருதி வழிபட்டுவருகிறது. அன்று அப்துல்கலாம் முதல் இன்று அமெரிக்காவின் இந்தியத் தூதர் வரை அமெரிக்க விமான நிலையங்களில் குடியேற்ற சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டாலும் நமக்குப் பெரிதாக ரோசம் வருவதில்லை.

பாதுகாப்பு கவுன்சிலில் நமக்குத் தற்காலிக இடம் கொடுத்ததற்கே, பொங்கலுக்கு இலவச ரேசன் அரிசி பெற்ற பாமரனைப் போல அமெரிக்காவிடம் பல்லிளிக்கிறது இந்தியா. நிரந்தர இடம் தர யோசிக்கிறோம் என்று ஒபாமா இந்தியாவிற்கு புறப்படும்முன் ஒருவார்த்தை சொன்னதையே தேவவாக்காக எடுத்துக் கொண்டு, ஒபாமா இங்குவந்தபோது 20 பில்லியன் டாலருக்கு வர்த்தக ஒப்பந்தம் செய்து சாமரம் வீசியது. இந்த வர்த்தகங்கள் பெரும்பாலும் அமெரிக்கர்களுக்கே அதிக சாதகமாக இருந்தன என்பதைச் சொல்லவே வேண்டாம்.

அதற்குப் பின் வந்த பிரெஞ்சுநாட்டு அதிபர் என்றைக்கோ நடந்த தாஜ் ஓட்டல் குண்டுவெடிப்பை சாவதானமாகப் பார்வையிட்டு துக்கம் விசாரித்ததற்குப் பரிசாக பல பில்லியன் டாலர் பெறுமானமுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கி மகிந்தது.

இப்போது அமெரிக்கா சொன்ன ஒரே காரணத்திற்காக ஈரான் நாட்டிற்கு Asian Clearing Union மூலம் நடந்து வந்த வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை நிறுத்தி – வெகுகாலம் நம்மோடு நட்பு பாராட்டிய ஈரானைப் போட்டுத் தள்ளியிருக்கிறது இந்தியா. இத்தனைக்கும் ஈரான் மேல் விதித்த இந்தத் தடையால் பல இந்திய வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. அதனால் என்ன, நம்நாட்டு வியாபாரிகளின் நன்மையா முக்கியம்? அமெரிக்கவிற்கு அடிபணிந்து முதலாளியைக் குளிர்வைப்பதுதான் மன்மோகன் சிங் அரசின் சிங்கிள் பாய்ண்ட் கொள்கை. பாக்கித்தான், பங்களாதேசு முதலைய இசுலாமிய நாடுகள் நமக்கு சாதகமாக இருக்க விரும்பாத நிலையில், நம்முடன் நல்லுறவில் இருந்த ஒரே பெரிய இசுலாமிய நாடான ஈரானையும் பகைத்துக் கொண்டாகிவிட்டது. ஆகா… என்னே! நம் புத்திசாலித்தனம்…

சரி-இந்தப்பக்கம் சீனாவுடன் நம் உறவு எப்படி? ஒரு பக்கம் சீன அதிபர் ஊசிண்டாவோ இந்தியாவுக்கு வந்து கைகுலுக்கி விட்டுப் போகிறார். அந்தப் பக்கம் காசுமீரை இந்தியாவிலிருந்து நீக்கி, வரைபடம் வெளியிட்டு மகிழ்கிறது சீனா. சென்ற வருட இறுதியில் இந்திய எல்லைக்குள் கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தவர்களை சீன இராணுவத்தினர் மிரட்டித் துரத்தி இருக்கின்றனர். சீன இராணுவ வீரர்களின் இந்த செயலுக்கு மேல்பாதுகாப்பாக, சீன இராணுவ உலங்கு வானூர்திகள் இந்திய எல்லைக்குள் பறந்து கொண்டிருந்தனவாம். சென்ற வருடம் செப்டம்பர் மாத இறுதியில் நடந்த இந்த அசிங்கத்தை மத்திய அரசு இப்போது அசடுவழிந்து கொண்டு வெளியிடுகிறது.

ஐம்பது வருடங்களுக்கு மேலாக திபெத்தில் ஆக்கிரமிப்பு செய்து தலாய்லாமாவை விரட்டிய சீனாவை அமெரிகாவும் கண்டுகொள்ளவில்லை. தலாய்லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்து தன் வாழ்நாளின் பெரும்பகுதியைத் தன் தொண்டர்களுடன் கழித்த பின்னும், இந்தியாவால் உலக நாடுகளின் கவனத்தை திபெத் விடயத்தில் ஈர்த்து, முடிவுக்கு கொண்டுவரவும் முடியவில்லை.

இந்த இலட்சணத்தில் சீனா தரமற்ற பல போலிப் பொருட்களை தயாரித்து, Made In India என்று அச்சடித்து உலகச் சந்தையில் புழங்கவிட்டது தெரிந்திருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் வாழும்(வாழ்ந்த?) பகுதிகளில் சீன இராணுவ வீரர்கள் ரோந்து சுற்றுவதும்... பெண்கள், குழந்தைகள் உட்பட தமிழர்களை கண்ணிவெடிகளை அகற்றும் ஆபத்தான பணியில் ஈடுபடுத்தி வருவதும் செய்திகளாக வெளியாகி இருக்கின்றன. ஆக, சீனா நம்மை எல்லா வகையிலும் சிறுமைப்படுத்தித் தாக்குதல் நடத்துவது நாளுக்குநாள் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.

நம்மைப் போட்டுத்தள்ளவே கங்கணம் கட்டியிருக்கும் சீனாவை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்? மத்திய அரசுதான் மதிமங்கி, மந்திரித்துவிட்ட கோழி போல முழிக்கிறது என்றால், தமிழ்நாட்டினர்களின் ரோசம் அதை மிஞ்சுகிறது. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகள் சீனாவில் இரும்பு உருக்காலை நிறுவி (சொந்த பணத்தில்தான்!) தங்கள் தேசப்பற்றை நிரூபித்திருக்கிறார்கள் – ஈழத்தமிழனைக் கொல்லத் துணைபோன சீனாவுக்கு பரிசளித்ததைப் போல. வெளியுறவுக் கொள்கை வெளிறிப்போன நிலையில் இருக்கிறது. உள்நாட்டு விவகாரம் ஸ்பெக்ட்ரங்களாக வெடித்து மக்களின் பணத்தையும் நலனையும் குழிதோண்டிப் புதைத்தபின், சராசரி இந்தியன் இதற்குமேல் கண்ணீர்விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் வெங்காய விலையைத் தூக்கித் தங்கத்துக்கருகில் உட்கார வைத்துவிட்டது மத்திய அரசு. வெங்காயத்தின் விலையையாவது குறைக்கலாம் என்று பாக்கித்தானிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு கப்பல் வெங்காயம் வாங்கியவுடன் பாக்கித்தான் தன் பங்குக்கு கொம்புமேல் ஏறி உட்கார்ந்து கொள்கிறது. பருத்தி ஏற்றுமதிக்கு இந்தியா ஒப்புக்கொண்ட பின்னரே வெங்காயம் விற்க சம்மதித்திருக்கிறது.

இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. நம் அரசாங்கத்தின் வீராப்பெல்லாம் உள்நாட்டில் அம்போ என்றிருக்கும் நம்முடைய மக்களிடமும், அவர்களுக்காக உழைக்கும் பினாயக் சென் போன்றோரிடம் மட்டும்தான். மற்ற நாடுகளிடம் நமது அரசாங்கம் பெட்டிப்பாம்பு. 1962-ல் ‘இந்தி-சீனி பாய் பாய்’ என்று சொல்லிக்கொண்டு அசட்டித்தனமாக அடிபட்ட கதை, இன்றுவரை பல்வேறு வழிகளிலும் தொடர்கிறது. என்ன செய்வது…? இன்குலாப் இந்தியா இன்று இளிச்சவாய் இந்தியாவாய் நிற்கிறது!

நன்றி: தமிழக அரசியல்
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

வெளிறிப்போன வெளியுறவு கொள்கை Empty Re: வெளிறிப்போன வெளியுறவு கொள்கை

Post by Guest Wed Jan 19, 2011 5:37 pm

உண்மை தான் ...

நமது அரசியல்வாதிகள் ஜால்ரா சத்தம் காதை செவிடக்கு கிறது... என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

வெளிறிப்போன வெளியுறவு கொள்கை Empty Re: வெளிறிப்போன வெளியுறவு கொள்கை

Post by பூஜிதா Wed Jan 19, 2011 5:39 pm

இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. நம் அரசாங்கத்தின் வீராப்பெல்லாம் உள்நாட்டில் அம்போ என்றிருக்கும் நம்முடைய மக்களிடமும், அவர்களுக்காக உழைக்கும் பினாயக் சென் போன்றோரிடம் மட்டும்தான். மற்ற நாடுகளிடம் நமது அரசாங்கம் பெட்டிப்பாம்பு. 1962-ல் ‘இந்தி-சீனி பாய் பாய்’ என்று சொல்லிக்கொண்டு அசட்டித்தனமாக அடிபட்ட கதை, இன்றுவரை பல்வேறு வழிகளிலும் தொடர்கிறது. என்ன செய்வது…? இன்குலாப் இந்தியா இன்று இளிச்சவாய் இந்தியாவாய் நிற்கிறது!


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

வெளிறிப்போன வெளியுறவு கொள்கை Empty Re: வெளிறிப்போன வெளியுறவு கொள்கை

Post by Guest Wed Jan 19, 2011 5:41 pm

பூஜிதா wrote:இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. நம் அரசாங்கத்தின் வீராப்பெல்லாம் உள்நாட்டில் அம்போ என்றிருக்கும் நம்முடைய மக்களிடமும், அவர்களுக்காக உழைக்கும் பினாயக் சென் போன்றோரிடம் மட்டும்தான். மற்ற நாடுகளிடம் நமது அரசாங்கம் பெட்டிப்பாம்பு. 1962-ல் ‘இந்தி-சீனி பாய் பாய்’ என்று சொல்லிக்கொண்டு அசட்டித்தனமாக அடிபட்ட கதை, இன்றுவரை பல்வேறு வழிகளிலும் தொடர்கிறது. என்ன செய்வது…? இன்குலாப் இந்தியா இன்று இளிச்சவாய் இந்தியாவாய் நிற்கிறது!

அது தான் அதே தான்.... தோழி மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

வெளிறிப்போன வெளியுறவு கொள்கை Empty Re: வெளிறிப்போன வெளியுறவு கொள்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum