ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளின் பெயரைச் சொல்லிக்கொண்டு தலையெடுக்கும் சர்வதேசப் பயங்கரவாதமும் தனியார்களின் அரச பயங்கரவாதமும்

Go down

புலிகளின் பெயரைச் சொல்லிக்கொண்டு தலையெடுக்கும் சர்வதேசப் பயங்கரவாதமும் தனியார்களின் அரச பயங்கரவாதமும் Empty புலிகளின் பெயரைச் சொல்லிக்கொண்டு தலையெடுக்கும் சர்வதேசப் பயங்கரவாதமும் தனியார்களின் அரச பயங்கரவாதமும்

Post by நிசாந்தன் Sat Jan 15, 2011 8:57 am

தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு அதன் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலோடு முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக ஸ்ரீலங்கா அரசு அதற்கான வெற்றிவிழாவையும்கொண்டாடிய பின்னர், சர்வதேசப் பங்கரவாதமும், அதனை வைத்துத் தங்கள் சொந்த வளர்ச்சியில் மேலும் வளர்த்துக்கொள்ளவும், தங்கள் அரசியல் இருக்கைகளையும், இருப்புக்களையும் தக்க வைத்துக்கொள்ளுவதற்குமான செயற்திட்டங்களைச் சர்வதேச அரசியற்பட்சிகளும், அரச பயங்கரவாதங்களும் செயற்பட்டுக்கொண்டிருப்பதானது, சர்வதேசத் தமிழினத்தை மேலும் விசனத்திற்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருப்பது ஈழத்திழர்களின் இன்றைய துர்ப்பாக்கிய நிலையே.

இன்று பயங்கரவாதச் செயல்கள் சர்வதேசம் முழுவதும் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கும் நெருக்கடியான காலகட்டத்தில், தங்கள் வாழ்வியலை சுமூகமாக அமைத்துக்கொள்ள சர்வதேச நாடுகளின் அரவணைப்பினையும், அங்கீகாரத்தையும் நட்புறவுடன் நாடிநின்று, மனிதாபிமான-இராஜதந்திர நகர்வுகளைச் செயற்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் ஈழத்தமிர்கள். ஆனால் சர்வதேச அரச பயங்கரவாதமும், அரசியல் பயங்கரவாதமும் தங்கள் பழிபாவங்களையும், அதற்கான படியையும் ஈழத்தமிழினத்தின் தலையில் கட்டிவிடத் துடித்துக்கொண்டிருப்பதுடன் தங்கள் கைவரிசையை அடுத்தடுத்து சர்வதேசங்களிலும் இருந்து வெளிவரும் ஊடகங்களின் வாயிலாகச் செய்திகள் திரிபுபடுத்தி அவற்றை வெளிப்படுத்தி நிற்கின்றன. இந்த ஊடகங்கள் உண்மைத்துவத்தை திரித்து, உலகப் பேரழிவை உண்டாக்கும் சுயநலவாதிகளுக்கும், அரசபயங்கர வாதிகளுக்கும் ஊதுகுழலாகச் செயற்பட்டுக்கொண்டிருப்பது, உலகசமாதானத்தை நோக்கி நகர்த்தப்படும் செயற்பாடுகளுக்கு கேள்விக்குறியாகி நிற்பது வருந்தத் தக்க செயலாகும்.

ரஜீவ் காந்தியின் நிகழ்விற்குப் பின்னர் பாரதத்தில் மட்மல்ல சர்வதேசங்களிலும் தங்களின் பெயரைச் சொல்லி ஈ, எறும்புக்கும் இடர் வரக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டுக்கொண்ட விடுதலைப்புலிகளினால் பாரதத்தின் முக்கிய தலைவர்களுக்கு உயிராபத்து என்னும் மாபெரும் துரோகத்தனமாக செய்தியைக் கடந்தவாரம் பாரத்தின் முக்கிய ஊடங்கள் வெளியிட்டுள்ளமை கண்டு சர்வதேசத் தமிழினம் மிகவும் வேதனையடைந்துள்ளது. முள்ளிவாய்க்காலின் நிகணவிற்குப் பின்னரும் கூட இந்தச் செய்தியைச் சொல்லித் தங்கள் கையாலாகத் தனமான புரளிகளைக் கிளப்பிக்கொண்டிருக்கும் இவர்களின் செயற்பாடுகள் மிகவும் வேதனையையும் விசனத்தையும் அளிப்பவையாக அமைந்துள்ளன.

அந்த வகையியல் கடந்த வருடம் இடம்பெற்ற மும்பைக் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு ஸ்ரீலங்காவின் கடற்படையினர் சிலர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் விலைபோனதும், இந்துமகாசமுத்திரத்தின் இடைநடுவில் ஆயுத பரிமாற்றம் இடம்பெற்றதையும், தம்மால் முன்கூட்டியே துப்புக்கண்னரகொள்ளமுடியாத துப்புக்கெட்ட நிலையை மூடிமறைக்கவும், இந்திய மாவோயிஸ்டுகளுக்கும், ஸ்ரீலங்கா இராணுவத்திற்கும் இடையில் உள்ள ஐக்கியத்தைக் கண்டறிய முடியாத நிலையையும், சர்வதேச பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பலர் இலங்கை இராணுவத்திடம் பயிற்சி பெற்றதைக் கண்டுகொள்ள முடியாத நிலைப்பாடடை மூடிமறைக்கவும், இன்று இந்திய, தமிழக அரசியலில் வேகமான புயலாக வீசிக்கொண்டிருக்கும் ஸ்பெக்ரம் ஊழல் விவகாரத்தை மூடிமறைக்கவும் இந்திய புலனாய்வுத்துறை இந்திய அரசியல்வாதிகளிடம் சோரம் போய்விட்ட சோகக் கதையும் சேர்த்துப் புனையப்பட்ட கதைதான், கடந்த வாரம் புலிவருகுது என்னும் புருடாக் கதை.

போதாக் குறைக்குப் பொந்தரும் வந்தார் என்ற பழமொழிக்க ஒப்பாக ஸ்ரீலங்காவிற்குள்ளும் புலிகள் ஊடுருவப் போகின்றார்கள் என்ற புரளியையும் ஏற்படுத்தியதோடு ஸ்ரீலங்காவின் பொருளாதார மையங்களைத் தகர்க்கத் திட்டம் என்ற புரளியையும் கிளப்பி விட்டிருக்கின்றது இந்த உளவுப்பிரிவின் பம்மாத்துக் கதைகள். ஸ்ரீலங்காவின் பொருளாதாரமே இந்தியாவும், சீனாவும் போடும் பிச்சைதான் . அந்தப் பிச்சைக்கான மையம் எனக் கருதப்படுவது இறந்துபோன பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிர்களின் உயிரற்ற (சடலங்கள்) மையங்கள்தான். அதைத் தான் ஏற்கனவே ஸ்ரீலங்கா அரச இராணுவத்தால் சிதைக்கப்பட்டுத்தானே புதைக்கப்பட்டிருக்கின்சுயன. அதில் சிதைப்பதற்கு எங்கே இடமிருக்கப்போகின்றது.

அதுமட்டுமல்லாது கூட்டு முயற்சியாக இந்திய – ஸ்ரீலங்கா, கடற்படை ரோந்து நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக அடிக்கடி அறிக்கை விட்டுக்கொண்டும், அதன் செயற்பாடாக தமிழக மீனவர்கள் வாழ்வியல் தத்தளிப்பதும் அன்றாட நிகழ்வுகளாக அரங்கேறிக்கொண்டிருக்கும்போது, விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் தப்பிப் போனதாக பம்மாத்துக் கதைகள் விடும் பாங்கு தங்களின் தவறிப்போன உளவு வேலைகளுக்கு ஒட்டுப் போட்டு ஒழுங்கு செய்யும் உன்னத செயற்பாடாகும் என்பதைச் சர்வதேசம் நன்றாகக் கணக்கிட்டுக்கொண்டிருக்கின்றது.

இந்திய உளவுப் பிரிவின் இத்தகைய செயற்பாடுகளும் அறிக்கைகளும் எதிர்காலத்திலாவது உண்மைத்துவம் கொண்டவைகளாகவும், தங்கள் இயலாமைகளையும், ஓட்டைகளையும் மறைப்பதற்கு மற்றவர்களின் வாழ்வில் மண்போடும் வகையில் அமையாது இருந்தால் ஈழத்தமிழர்களின் அவலநிலை தொடராது இருக்கும் என்பதைச் சர்வதேசங்களிலும் வாழும் தமிழினத்தின் பெயரால் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum