ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி தோட்டா: சீமான்

Go down

தமிழக தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி தோட்டா: சீமான் Empty தமிழக தமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி தோட்டா: சீமான்

Post by நிசாந்தன் Fri Jan 14, 2011 10:51 am

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் நேற்று கடலுக்கு ஒரு படகில் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்ற பொழுது எம் இனத்தை அழித்த சிங்களவனின் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் பாண்டியன் (வயது 19) என்ற மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது
.

இன்னும் வாழ்வின் சுகம் அனுபவியாத தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய அந்த உயிர் இன்று நம்மிடம் இல்லை.இதற்கு யார் பொறுப்பு?இதுவரை 540 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்
.

ஆனால் இது போன்ற தாக்குதலைக் கண்டிக்கத் துப்பில்லாதவர்கள் தான் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றனர். நம் எல்லைக்குள் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதை இலங்கை கடற்படையினர் முன்னிலும் வேகமாக இப்பொழுது தொடர்கின்றனர்
.

இது யார் கொடுத்த தைரியம்? இதனைத் தட்டிக்கேட்ட என்னை அடக்குமுறைச் சட்டமான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவிச் சிறையில் தள்ளினார் கருணாநிதி.ஆனால் சுடப்படுவதற்குக் காரணமான ராஜபக்ஷேவுக்கு இரத்தினக் கம்பள வரவேற்பினை கருணாநிதியின் மத்திய அரசு அளித்தது
.

தமிழர்கள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறுகிறார். இப்பொழுது உயிரை இழந்து நிற்கும் பாண்டியன் குடும்பம் எப்படி மட்டற்ற மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட முடியும்? இதற்கு என்ன பதிலை முதல்வர் வைத்திருக்கிறார்
?

ஒட்டு மொத்த இனத்தையும் அழித்தொழித்த சிங்கள இராணுவத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்கிய இந்திய அரசு இப்பொழுது கூட்டுப் பயிற்சிக்கும் ஆயத்தமாகி வருகிறது. இது மீதமுள்ள தமிழனையும் அழிக்கவா
?

சிங்களவனால் கொல்லப்பட்ட எம் மீனவன் பாண்டியனின் உடலில் பாய்ந்த குண்டினை பரிசோதித்துப் பார்த்தால் அது இந்திய இராணுவம் கொடுத்த குண்டாகத்தான் இருக்கும்.தமிழனுக்கு சிங்களவன் அளித்த பொங்கல் பரிசு இந்த துப்பாக்கி தோட்டா ஆகும்
.

இவ்வாறு நாட்டின் குடிமகன் உயிரைக் காப்பாற்ற வக்கில்லாத கருணாநிதியும், சிதம்பரமும் பதவியில் இருப்பது வெட்கக்கேடு. இவ்வாறு தொடர்ச்சியாக கொல்லப்படும் மீனவர் பிரச்சனையில் இன்றும் கருணாநிதி கடிதம் எழுதி பிரச்சனையை ஊத்தி மூடப் போகிறாரா
?

முதலில் இறந்த பாண்டியன் குடும்பத்திற்கு 10 லட்சம் அளிக்க வேண்டும். இந்தப் பிரச்சனையில் இனி எடுக்கும் தீர்வு நிரந்தர இறுதித் தீர்வாகத்தான் இருக்க வேண்டும்
.

சிங்கள இனவெறி கடற்படையின் குண்டுகளுக்கு மேலும் ஒரு தமிழக மீனவர் அநியாயமாக உயிரிழந்துள்ளார். (இரண்டாம் இணைப்பு
)

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள சின்னக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பாண்டியன் (20). இவரும், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த முனியசாமியின் மகன்கள் மணிகண்டன், மணிவண்ணன் ஆகியோரும் மீன் பிடிப்பதற்காக புதன்கிழமை காலை ஜெகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் விசைப் படகில் சென்றனர்
.

இந்திய கடல் எல்லைக்குள் 14 கடல் மைல் தொலைவில் விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதிக்கு வந்த சிங்கள இனவெறி கடற்படையினர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் பலத்த குண்டுக் காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்னொருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் இந்திய கடல் எல்லைக்குள் நடந்தது
.

உயிரிழந்த பாண்டியனின் உடலுடன் மற்ற மீனவர்கள் கரைக்கு விரைந்தனர். பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரவியதும் ஜெகதாப்பட்டினமே கடற்கரையில் திரண்டு விட்டது. மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு கிளம்பியது
.

அனைத்து மீனவர்களும் பாண்டியனின் உடலுடன் இராமேஸ்வரம்-நாகப்பட்டனம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மறியலில் குதித்தனர். இதனால் இச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
.

பொலிஸார் விரைந்து வந்து மீனவர்களை சமாதானப்படுத்தினர். பாண்டியன் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது
.

சிங்கள கடற்படையின் இந்த வெறிச் செயலால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மட்டுமல்லால், இராமநாதபுரம், நாகப்பட்டனம் மாவட்ட மீனவர்களும் கடும் அதிர்ச்சியும், கொதிப்பும் அடைந்துள்ளனர்
.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்ட கடலோர கிராமங்களில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
.

சிங்கள கடற்படையின் அத்துமீறல்களுக்கும், அநியாய கொலைகளுக்கும் முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. சிங்கள கடற்படை இப்போதெல்லாம் இந்தியப் பகுதிக்குள்ளும் புகுந்து தாக்கி வருகிறது. ஆனால் இதை ஒருமுறை கூட இந்திய கடற்படையோ அல்லது கடலோரக் காவல் படையோ தடுத்ததில்லை. ஒரு முறை கூட இலங்கை கடற்படையினரின் தாக்குதலிலிருந்து இந்தியப் படைகள், இந்திய மீனவர்களைக் காத்ததில்லை
.

இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் இரத்தத்தைக் குடித்து விட்டது இலங்கைக் கடற்படை. ஆனாலும் கடலுக்குள்ளேயே போக முடியாத அளவுக்கு தொடர்ந்து இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து தங்களைக் காப்பாற்ற ஒரு நாதியும் இல்லாத நிலையில் தமிழக மீனவர்கள் பெரும் மனக் கொதிப்புடன் உள்ளனர். இந்த நிலையில் மேலும் ஒரு உயிரைப் பறித்துள்ளது சிங்கள இனவெறி கடற்படை.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அனைத்து குடும்பங்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு- தமிழக சட்டசபையில் ஆளுநர் அறிவிப்பு
» திமுக - எம்.எல்.ஏ., வீட்டில் துப்பாக்கி தோட்டா தயாரிப்பு?
» சீக்கியர் ரோமத்துக்கு உள்ள மதிப்பு தமிழனுக்கு இல்லையா?: சீமான்
» இறைவன் அளித்த பரிசு
» 50 கிராம் பொங்கல் 80 ரூபாயா? பயணியின் கேள்விக்கு ரயில்வே அளித்த ருசிகர பதில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum