ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தம்

Go down

சத்தம் Empty சத்தம்

Post by Admin Sat Oct 25, 2008 3:10 am

இயக்குனர் கே.பாலசந்தர்
சத்தம் Bala10

மெகா சீரியல் மாதிரி எங்கேயோ ஆரம்பித்து, பின் வளைந்து வளைந்து நீண்டு கிடந்தது அந்த கியூ.

மகேஸ்வரன் அந்த மனித வரிசையைப் பார்த்து மலைத்துப் போனார்

கடவுளே இந்த கியூவுல நின்னு வாங்கிட்டு போறதுக்கு எப்படியும் ரெண்டு மணி நேரத்துக்கு மேலே ஆகும் போல இருக்கே?

வேறு வழியில்லாமல் அந்த வரிசையில் தானும் சேர்ந்து நின்று கொண்டார்.

என்ன சார்? ஏகப்பட்ட கூட்டமா இருக்கு?

முன்னால் இருந்த ஆசாமியிடம் மகேஸ்வரன் விசாரித்தார்.

மத்த கடைகளை விட இங்க விலை கொஞ்சம் கம்மி ஹோல்சேல் ரேட்டுக்கே தர்றாங்க பட்டாசு இல்லாம தீபாவளி கிடையாது. சரி... வாங்கறது வாங்கறோம், நல்ல கடையில விலை கம்மியா வாங்குவோமே என்றுதான் அவனவன் டயம் ஆனாலும் பரவாயில்லைன்னு கால் கடுக்க நிக்கறாங்க.

தீபாவளிக்கு இன்னும் ஒருநாள் டயம் இருக்கிறது. எப்படியும் அதற்குள் இந்த கியூ நகர்ந்து விடும் என்ற நம்பிக்கை யில் மகேஸ்வரனும் நின்றார்.

தாத்தா லிஸ்ட்ல இருக்கிற எல்லா பட்டாசும் கரெக்ட்டா வந்தாகணும். அது இல்லை, இது இல்லை. தீர்ந்து போச்சு அப்படின்னு வந்து சொன்னீங்கன்னா, அவ்வளவுதான். உங்க கிட்ட நாங்க ரெண்டு பேரும் பேச மாட்டோம்... என்று பேரனும், பேத்தியும் கண்டிஷனாகச் சொல்லி அனுப்பி இருந்தார்கள். அவர்கள் எழுதிக் கொடுத்த பெரிய லிஸ்ட்டை பாக்கெட்டிலிருந்து ஒருமுறை எடுத்துப் பார்த்துக் கொண்டார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

சத்தம் Empty Re: சத்தம்

Post by Admin Sat Oct 25, 2008 3:10 am

பென்சிலால் எழுதப்பட்ட லிஸ்ட். ஒரு பட்டாசைக் கூட விட்டு வைக்கவில்லை. இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கும் தன் பேரக் குழந்தைகள், ராக்கெட்டுக்கு பெரிய ற போட்டிருந்ததை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது,

யோவ், பின்னாடி வாய்யா நிக்கறவங்க எல்லாம் மனுஷனா தெரியலை? - கூட்டத்தில் நுழைய முயன்ற ஒருவரை எதிர்த்து முதலில் ஒரு குரலும், தொடர்ந்து கோபமாக ஒலித்த பல குரல்களும் மகேஸ்வரனின் சிந்தனையைக் கலைத்தன.

நேத்து ராத்திரியே வந்து துண்டு போட்டுட்டு போனேன். டிபன் சாப்பிட்டுட்டு வர்றேன் என்னவோ கியூவுல திடீர்னு வந்து நுழையறேன்னு கத்தறீங்களே - கோபமாகச் சொன்னான், கியூவில் நுழைந்து சவுகரியமாக நின்று கொண்ட அந்த ஆள்

அந்த ஆள் இங்கதாம்பா இருந்தார். நான் பார்த்தேன் என்று முன்னால் நின்றிருந்த ஒரு ஆள் மற்றவர்களிடம் சொன்னான். சொன்னவனின் கையில் ஒரு சின்ன கண்ணாடி, முகத்தில் சோப்பு நுரை, வலது கையில் ஷேவிங் ரேஸர்

அடப்பாவிகளா இவங்க எல்லாம் எப்ப வந்து நிக்க ஆரம்பிச்சிருப்பாங்க?

தண்ணி பிடிக்க கியூ. அரிசி, சர்க்கரை வாங்க கியூ. ஸ்கூல் அட்மிஷன் வாங்க கியூ. ஆஸ்பத்திரியில் கியூ. ஓட்டுப் போட கியூ. சே மனுஷ வாழ்க்கையில பாதி கியூவிலயே போயிடுதே

நொந்து கொண்டார் மகேஸ்வரன். காலையில், தினகரன்... ஹிந்து... எக்ஸ்பிரஸ்... என்று கூவி விற்ற அதே பையன், இப்போது மாலை மலர்... மாலை முரசு என்று கூவி விற்றுக் கொண்டிருந்த போது, கவுண்டரை நெருங்கினார் மகேஸ்வரன். லிஸ்ட்டை எடுத்து நீட்ட, கடைக்காரன் மளமளவென்று பட்டாசுகளை எடுத்து அடுக்கினான்.
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

சத்தம் Empty Re: சத்தம்

Post by Admin Sat Oct 25, 2008 3:10 am

கடையில் மரியாதைக்கு கூட நரகாசூரன் படம் மாட்டப் படவில்லையே அவனால் தானே இவ்வளவு அமோக வியாபாரம் என்று நினைத்துக் கொண்டு பில்லை வாங்கிப் பார்த்தார். 2,300 ரூபாய்

ஆனால் பேரன், பேத்திகளின் சந்தோஷத்தை நினைத்துப் பார்க்கும் போது... இந்தத் தொகை அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை. கடைக்காரன் ஒரு தமிழ் தினசரியைப் பெரிதாக பிரித்துப் போட்டு, அதில் பட்டாசுகளை வைத்து, சணல் கயிற்றினால் பெரிய பொட்டலமாக இழுத்துக் கட்டி அவரிடம் நீட்டினான்.

பிளாஸ்டிக் பை இருந்தா குடுங்களேன்.

நீங்க பஸ்சுக்கு பின்னாடி பார்த்தது இல்லையா?

பஸ்சுக்கு பின்னாடியா?

பிளாஸ்டிக்கை தவிர்க்கவும் என்று ஒரு பஸ் விடாம போர்டு மாட்டி இருக்கே.

இல்லை என்று வெளிப் படையாகச் சொல்லாமல்... இதெல்லாம் கவனிக்கிறது இல்லையா? என்று நாசுக்காக சுட்டிக் காட்டிய கடைக்காரனைப் பார்த்து அசடு வழிய சிரித்துவிட்டு, அந்த ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தார்.

ஆஸ்துமா நோயாளி மப்ளர் சுற்றிக் கொள்கிற மாதிரி, ஆட்டோ மீட்டரை ஒரு அழுக்குத் துணி சுற்றி மூடி இருந்தது.

என்ன... ரொம்ப நேரமா நின்னீங்களா சார்?

ஆமாம்பா. விடியற்காலை வந்து நின்னவன், இப்பத்தான் வீட்டுக்குப் போறேன்.

பட்டாசு விலை எல்லாம் எக்கச்சக்கம். இல்லையா சார்?

ஆமாமா என்ன பண்றது? என் பேரக் குழந்தைங்க ஆசைப்பட்டாங்க.

கரெக்ட் சார். குழந்தைங்க தான் சார் முக்கியம். அவங்க நல்லா இருக்கணும். அதுக்காக நாம என்ன வேணும்னாலும் செய்யலாம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

சத்தம் Empty Re: சத்தம்

Post by Admin Sat Oct 25, 2008 3:10 am

ஆட்டோ ஒரு சில தண்ணி லாரிகளுக்கு சவால் விட்டபடி போய்க் கொண்டிருந்தது. அந்த ஆட்டோக்காரனை சில பேர் கெட்ட வார்த்தையால் திட்டி னார்கள். அதில் ஒரு வார்த்தை புதிதாக இருந்தது.

இந்த சீஸனில் அறிமுகமான புது வார்த்தையாக இருக்கும் போல என்று மகேஸ்வரன் நினைத்துக் கொண்டார்.

2,300 ரூபாய். இவ்வளவு சின்ன பொட்டலாம் என்று யோசித்தவாறு அந்த பட்டாசு பார்சலைப் பார்த்தவர் கண்களில், அதில் வெளியாகி இருந்த செய்தி கவர்ந்தது. போர்க் களக் காட்சிகள் என்று தலைப்பு கொடுத்து, வண்ணப் படங்கள் ஐந்து பெரிதாக பிரசுரிக்கப்பட்டு இருந்தது.

அதில் ஒரு படம் அவரைக் கூர்மையாக கவனிக்க வைத்தது. இரண்டு சின்னக் குழந்தைகள். ஒரு பதுங்கு குழியில் ஒன்றை ஒன்று நெருக்கமாக அணைத்துக் கொண்டிருக்க...

அந்தக் குழந்தைகளின் கண்களில் பயமும், மெல்லிய திரை போட்ட மாதிரி கண்ணீரும் இருக்க, அவர்களின் பார்வையில் தூரத்தில் புகை மண்டலமாக குண்டு வெடித்த இடம் தெரிய... கீழே ஒரு வாசகம், அம்மா... எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு என்று.

அந்தப் படத்தையும், அந்த வாசகங்களையும் விட்டு மகேஸ் வரனின் கண்கள் நகர மறுத்தன.

தாத்தா, பக்கத்து வீட்டு பாலுவை ஆட்டம்பாம் வெடிக்கச் சொல்லாதே எங்களுக்கு பயமா இருக்கு என்று போன வருடம் தன் பேத்தி ஓடி வந்து கால்களைக் கட்டிக்கொண்டு சொன்னபோது, அவள் முகத்தில் தெரிந்த அதே பயம்... மருட்சி

Post by Admin Sat Oct 25, 2008 3:11 am

இரண்டு நாடுகளின் சண்டையால் பாதிக்கப்படும் இந்த மாதிரி கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் எதிர்காலம் என்ன? அவர்கள் செய்த பாவம் தான் என்ன? இந்த உலகத்தில் எத்தனை விதமான முரண்பாடு?

வெறும் சம்பிரதாயத்துக் காகவும், சந்தோஷத்துக்காகவும் உலகின் ஒரு பக்கத்தில் வெடிகள் வெடித்து விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இன்னொரு பக்கம் வெடிகுண்டுகளும், கரும்புகை மண்டலமும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டிருக்கிறது.

வண்ணப் படத்தில் இருக்கும் இரண்டு குழந்தைகளும் தன் பேரன், பேத்தியாகவே அவர் கண்ணுக்குத் தெரிந்தனர்.

வெடிச் சத்தம் வேண்டாம், வேண்டாம் என்று அந்தக் குழந்தைகள் கெஞ்சுகிற மாதிரி மனதுக்குப் பட்டது. கூவம் ஆற்றுப் பாலத்தின் அருகே ஆட்டோ வந்தபோது நிறுத்தச் சொன்னார். பார்சலை எடுத்துக் கொண்டு பாலத்தின் விளிம்பு அருகே சென்றார்.

சத்தம் கேட்காது... சத்தம் கேட்காது என்று அவர் உதடு முணுமுணுத்தது. பட்டாசு பார்சலை கூவம் ஆற்றில் வீசி எறிந்தார். அதைப் பார்த்த ஆட்டோ டிரைவர் பதறிப் போனான்.

சார்... உங்களுக்கு என்ன பைத்தியமா? பேரன், பேத்திங்க சந்தோஷத்துக்காக இதையெல் லாம் வாங்கினேன்னு சொன்னீங்க? இப்ப ஆத்துல தூக்கி எறிஞ்சிட்டீங்களே...?

எல்லாம் என் பேரன், பேத்திகளோட சந்தோஷத்துக் காகத்தான் நீ வாப்பா என்ற படி ஆட்டோவில் ஏறினார்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum