ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 12:31 am

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 12:30 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 12:28 am

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 12:26 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Anthony raj Today at 12:22 am

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 12:18 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:49 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 4:52 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 12:39 pm

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:15 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:09 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:07 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:06 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 12:51 am

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 12:24 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:21 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:49 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:49 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:48 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:47 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:46 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:44 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:43 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:43 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:42 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:41 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 11:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 11:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 10:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 10:19 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Wed Jul 10, 2024 10:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Jul 10, 2024 9:54 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 8:34 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 5:56 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Wed Jul 10, 2024 2:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. சொன்ன குட்டிக்கதை

Go down

ஜெ. சொன்ன குட்டிக்கதை Empty ஜெ. சொன்ன குட்டிக்கதை

Post by சிவா Mon Jan 10, 2011 11:37 pm

ஜெ. சொன்ன குட்டிக்கதை Jaayaa
குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தரிசனம் செய்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று குமரி மாவட்டம் வந்தார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அவர், பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பிற்பகல் 2.15 மணிக்கு கன்னியாகுமரிக்கு வந்தார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய அவரை அ.தி.மு.க. நிர்வாகிகள் பூங்கொத்து மற்றும் சால்வைகள் கொடுத்து வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதா காரில் ஏறி சாமிதோப்புக்கு புறப்பட்டார். வழியில் அவரை காண, சாலையின் இருமருங்கிலும் ஏராளமான பொதுமக்கள் கூடிநின்றனர். அவர்களை பார்த்து ஜெயலலிதா கையசைத்தார். வழியில் கொட்டாரம், ஈத்தங்காடு சந்திப்பு, வடக்குதாமரைகுளம் போன்ற பகுதிகளில் அவருக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

ஜெயலலிதாவின் கார், பிற்பகல் 3 மணிக்கு சாமிதோப்புக்கு வந்தது. சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியின் வடக்குவாசல் முன் காரில் இருந்து இறங்கிய ஜெயலலிதாவுக்கு பால.பிரஜாபதி அடிகளார் உள்ளிட்ட பதி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் ஜெயலலிதா பள்ளியறைக்கு சென்று சாமிதரிசனம் செய்தார்.

ஒரு பசுவையும், கன்றுவையும் தானமாக அளித்து தலைமைப்பதியின் கோசாலை திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

பிற்பகல் 3.10 மணிக்கு விழா நிகழ்ச்சி தொடங்கியது.

விழாவுக்கு பால.பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கி பேசினார்.

விழாவில் இலவச தையல் எந்திரங்கள், மருத்துவ நிதி உதவி தலா ரூ.10 ஆயிரம் ஆகிய நல உதவிகளை தலா 5 பயனாளிகளுக்கு வழங்கி ஜெயலலிதா பேசினார்.

அவர், ‘’ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமைகளை இழந்த மக்கள், அன்றாடம் காய்ச்சிகளாய் அல்லல்பட்ட மக்கள், ஆண்டவனின் பெயராலும், ஆட்சி செய்பவரின் கொடுங்கோல் சட்டங்களாலும் துன்புறுத்தப்பட்ட மக்கள் விடுதலை பெறவேண்டி தன்னையே அர்ப்பணித்த அய்யா வைகுண்டசாமிபதியில் உங்களோடு சேர்ந்து வழிபடுவதில் நான் மிகுந்த பெருமைகொள்கிறேன்.

தம்மை நாடி வந்த அன்பர்களுக்கு ஆன்மிக ஞானத்தை புகட்டி இறை வழிபாட்டில் புதியதோர் மார்க்கத்தை ஏற்படுத்தியவர் அய்யா வைகுண்டர். அய்யா வைகுண்டரின் போதனைகள் மக்கள் மனதில் எழுச்சியை ஏற்படுத்தின.

அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளை கேட்ட மக்கள் மூட நம்பிக்கையை முற்றிலும் வெறுத்தனர். தீண்டாமை எனும் தீய பழக்கத்தினை வேறோடு ஒழிக்க முற்பட்டனர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உண்மையை உணர்ந்தனர்.

தீண்டாமையை ஒழிக்கும் வகையில் அந்த காலத்திலேயே சமபந்தி போஜனத்துக்கு ஏற்பாடு செய்தவர் அய்யா வைகுண்டர். சுயமரியாதைக்கு வித்திட்டவர். சமூக நீதியை நிலைநாட்ட பாடுபட்டவர். சுரண்டலுக்கு எதிராக போராட்டத்தை நடத்தியவர். கல்விக்கும், சிறுதொழிலுக்கும் முக்கியத்துவம் அளித்தவர்.

சாதியற்ற சமுதாயம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அய்யா வைகுண்டரின் நோக்கமாக இருந்தது. லட்சோப லட்சம் மக்களின் கண்ணீரைத்துடைத்த அய்யா வைகுண்டர் தமிழ் சமூகத்தில் குறிப்பாக இந்த பகுதிகளை சேர்ந்த பல ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய அற்புதமான மாற்றங்கள் நாம் எண்ணி எண்ணி மகிழத்தக்கவை.

அய்யா வழிவந்த பாலபிரஜாபதி அடிகளார், அய்யா வைகுண்டரின் அறிவுரைகளை பின்பற்றி வாழ்ந்து வருகிறார்.

சாதி, சமயத்துக்கு அப்பாற்பட்டு, மத நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக பாலபிரஜாதிபதி அடிகளார் விளங்குகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. அடிகளாரின் பணிகளை பாராட்டும் விதமாக எனது ஆட்சிக்காலத்தில் "கோட்டை அமீர் மதநல்லிணக்க விருது'' என்னால் அவருக்கு வழங்கப்பட்டதை இந்த இனிமையான நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.

தர்மம் என்றால் சரியான செயல்களை செய்வது. சரியான பாதையில் நடப்பதாகும். தர்மம் என்றால் அறம் என்று பொருள். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சிறிய கதையை சொல்ல விரும்புகிறேன்.

ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு ஒன்று காணாமல் போய்விட்டது. அரசனுக்கு கடுமையான கோபம். சிலம்பை ஒரு மாதத்துக்குள் கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று அறிவித்தார். ஒரு மாதத்துக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டால் மரண தண்டனை என்றும் அறிவித்தார்.

அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவியின் கையில் சிலம்பு கிடைத்தது. அந்த சிலம்பு குறித்து அந்த ஊர் மக்களிடம் கேட்டறிந்தார் துறவி. மக்கள் அரசனின் உத்தரவை அவரிடம் தெரிவித்தனர்.

அரசனின் உத்தரவை அறிந்த துறவி ஒரு மாதம் கழித்து அந்த சிலம்பை அரசனிடம் கொடுத்தார். உடனே அரசன் அந்த துறவியைப்பார்த்து, உனக்கு இப்போது மரண தண்டனை கொடுக்க வேண்டியிருக்கும் என்றார்.

அதற்கு அந்த துறவி, சிலம்பு கிடைத்ததும் ஓடோடி வந்து தந்திருந்தால் பரிசுக்கு ஆசைப்பட்டதாக ஆகிவிடும். மரணதண்டனை கிடைக்கும் என்று அஞ்சி, சிலம்பை கொடுக்காமலேயே இருந்தால் மரண தண்டனைக்கு அஞ்சியவன் ஆகிவிடுவேன்.

சிலம்பை அப்படியே வைத்துக்கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டவனாக ஆகிவிடுவேன் என்று தெரிவித்து, அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.

இதைக்கேட்ட அரசர் தலைவணங்கி துறவியை அனுப்பி வைத்தார். இப்படிப்பட்ட தர்மத்தை கடைப்பிடித்தவர் அய்யா வைகுண்டர்.

எனக்கு முன்னால் பேசிய அய்யா வழிவந்த பாலபிரஜாபதி அடிகளார் வாய்நிறைய வாழ்த்தினார். மீண்டும் கழக ஆட்சி அமைய வேண்டும் என்று வாழ்த்தினார்.

இங்கே இந்த மக்களுக்கு சில பிரச்சினைகள் இருப்பதாக அவர் கூறினார். ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள பதிக்கு வெளியே ஒரு வேலி போட்டிருப்பதாக தெரிவித்தார். நீங்கள் துணை நில்லுங்கள், இந்த தேர்தலுக்குப்பிறகு நம்முடைய ஆட்சி அமையட்டும். அதன்பிறகு அய்யா வைகுண்டர் அருளால் எல்லா வேலிகளும் தகர்த்தெறியப்படும்.

மக்களுக்கு இருக்கிற அத்தனை பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து, பாலபிரஜாபதி அடிகளார் தன்மனதில் என்னென்ன கோரிக்கைகள் வைக்க வேண்டும் என்று எண்ணி, எந்தெந்த கோரிக்கைகளை இங்கே வைக்காமல் விட்டுவிட்டாரோ அத்தனை கோரிக்கைகளையும் அய்யா வைகுண்டர் அருளால் நிறைவேற்றித்தரப்படும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

நடைபெறப்போகிற தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடைபெறுகின்ற ஒரு தேர்தலாகும்.

ஆகவே அய்யா வைகுண்டர் அருளால் நல்லாட்சி அமைந்தால், கழக ஆட்சி அமைந்தால் மக்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று தெரிவித்து மீண்டும் ஒருமுறை இந்த இனிய விழாவுக்கு என்னை அழைத்த அடிகளாருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்’’ என்று பேசினார்.


நக்கீரன்


ஜெ. சொன்ன குட்டிக்கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum