ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைகொடுத்த சேகுவேரா மகள்… கோபப்பட்ட ராஜபக்ஷே மகன்

Go down

கைகொடுத்த சேகுவேரா மகள்… கோபப்பட்ட ராஜபக்ஷே மகன் Empty கைகொடுத்த சேகுவேரா மகள்… கோபப்பட்ட ராஜபக்ஷே மகன்

Post by நிசாந்தன் Sun Jan 09, 2011 11:54 am

ஈழத்தில் மனசாட்சியே இல்லாமல் மனிதம் கொன்ற ராசபக்சே-வையும், துணைபோன காங்கிரஸ் அரசையும் தென் ஆப்பிரிக்க மாநாட்டில் வெளுத்துத் துவைத்து இருக்கிறார்கள் இரண்டு தமிழக இளைஞர்கள்!



சர்வதேச அளவில் ஏகாதிபத்தியம் மற்றும் நசுக்கப்படும் மனித உரிமைகளுக்கு எதிராக, கடந்த 65 ஆண்டு காலமாக போராடி வருகிறது, ‘உலக ஜனநாயக இளைஞர் அமைப்பு’ ((World Federation of Democratic Youth) W.F.D.Y). ஹிரோஷிமா, பாலஸ்தீனம், வியட்நாம் பிரச்னைகளில் மீறப்பட்ட மனித உரிமைகள் குறித்து, இந்த அமைப்பு எழுப்பிய கடுமையான கோபக் குரல் .நா-வையே ஆட்டம் காணவைத்திருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த மாநாட்டில், உலக அளவில் பல்வேறு கட்சிகளின் இளைஞர் பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொள் வார்கள். அதன்படி, கடந்த டிசம்பர் 13 முதல் 21 வரை தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா நகரில் நடந்தது 17-வது உலக மாநாடு. இதில்தான், ‘இலங்கை அரசு நடத்தியது போர் அல்லஅது ஒரு ரத்த வேட்டைஎன முழங்கினர் தமிழக இளைஞர்களான லெனின், திருமலை.



தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பி இருக்கும்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் முன்னாள் செயலாளர் லெனினிடம் மாநாட்டு அனுபவம் குறித்துப் பேசினோம்.



இந்த மாநாட்டில் 15 ஆயிரம் இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், .தி.மு.., காங்கிரஸ் போன்ற அமைப்புகளில் இருந்து மொத்தம் 25 பேர் சென்றிருந்தோம். நெல்சன் மண்டேலாவுக்கும், ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்த மாநாடு அர்ப்பணம் செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்த உலக ஜனநாயக இளைஞர் அமைப்பும் ஓர் அங்கம்தான். போர்ச்சுக்கல் நாட்டின் தியாகி வீரா என்ற தோழர்தான் அந்த அமைப்பின் இப்போதைய தலைவர்.



மாநாட்டின் ஐந்தாம் நாள் ஜனநாயக உரிமை, சுதந்திரம் மற்றும் மனித உரிமை பற்றிய கருத்தரங்கில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ‘இலங்கையில் சிங்களர்கள் தோன்றிய காலம்தொட்டே தமிழ் இனமும் வாழ்ந்து வருகிறது. ஆட்சியைப் பிடிக்கும் சிங்கள அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் கல்வி, வேலை, அன்றாட வாழ்க்கை என சகல வழிகளிலும் எம் மக்களுக்கான உரிமைகளை மறுத்து வந்தனர். எம் மக்கள் போராட்டத்தில் இறங்கியபோது, உரிமைகளுக்கு உரிய பதில் சொல்லத் திராணியற்ற சிங்கள அரசு, ஆயுதங்கள் மூலம் பதில் சொல்ல ஆரம்பித்தது. அதனால்தான், வேறு வழியில்லாமல் ஆயுதம் ஏந்தும் சூழலுக்கு ஈழத் தமிழனும் தள்ளப்பட்டான்.



கடந்த 25 ஆண்டு காலமாக தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிப்பதையே குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள் அந்த இனவெறியர்கள் என்பதற்கு சமீபத்தில் நடந்துமுடிந்த போரே சாட்சி. பெற்றோர்களை இழந்து லட்சக் கணக்கான குழந்தைகள் முகாம்களில் நடைப்பிணங்களாகத் திரிவதை இரக்கம் உள்ள எந்த மனிதனும் சகிக்க மாட்டான். ‘சேனல் 4’ தொலைக் காட்சியாளர்களே திகைக்கும் அளவுக்கு, தமிழர்கள் கொடூரமாகக் கொன்று அழிக்கப்பட்டார்கள். இப்படி அப்பட்டமான போர் குற்றம் நிகழ்த்திய ராசபக்சே-வுக்கு யார் தண்டனை கொடுப்பது? அமைதியை எதிர்பார்க்கும் ஒவ்வொருவரும் ராஜபக்ஷேவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்என்று பேசினேன்.



பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த உண்மை களைக் கேட்டு அதிர்ந்து போனார்கள். என்னுடைய மானசீக குருவான சே குவேராவின் மகள் அலைடா குவேரா என்னைத் தேடி வந்து பாராட்டியதுடன், ‘இலங்கையில் நடக்கும் இன்னல்களுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்!’ என்று உறுதி கொடுத்தார். இதில் வேடிக்கைஈழத்தை இடுகாடாக்கிய ராசபக்சே, மனித உரிமை குறித்த மாநாட்டுக்குத் தன் மகனை அனுப்பிவைத்து, தன்னை மனிதநேயக் காவலனாகக் காட்ட முயன்றதுதான்! மூன்று நாட்கள் கழித்து அந்த மாநாட்டுக்கு வந்த நமல் ராசபக்சே-வுடன், இலங்கையில் இருந்து திரளான சிங்களர்களும், தமிழர்களும் வந்திருந்தனர். எனது பேச்சைக் கேள்விப்பட்டு நமல் ராசபக்சே கோபப்பட்டாராம். ஆனால், முற்போக்கு சிந்தனை கொண்ட சிங்களர்கள் எங்களை சந்தித்து, ‘சக மனிதனின் துன்பத்தை வெளிப்படையாகக் கண்டிக்க முடியாத அளவுக்கு நாங்கள் தடுக்கப் பட்டுள்ளோம்என்று வருந்தி என் பேச்சில் இருந்த உண்மையை ஏற்றுக் கொண்டனர். இந்த மாநாட்டில் இலங்கை மீது பெரிய குற்றச்சாட்டு வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தனி விமானத்தில் தனது பிரதிநிதிகளை அனுப்பி வைத்தார் ராசபக்சே. ஆனால், இலங்கையில் நடந்த படுகொலைகளை உலகத்தின் கண்களில் இருந்து இனிமேலும் அவரால் மறைக்க முடியாது….” என்று விவரித்தார் லெனின் உணர்ச்சி வசப்பட்டவராக!



அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த திருமலை, ”போபால் விசவாயுக் கசிவால் நேர்ந்த மரணம் குறித்தும், அக்கொலைக்கு காரணமான ஆண்டர்சனை காங்கிரஸ் அரசு தப்பவிட்டது குறித்தும் நான் பேசினேன். உடனே அங்கு வந்திருந்த காங்கிரஸ்காரர்கள் கூச்சலிட்டனர். ‘இது உங்கள் நாட்டு நாடாளுமன்றம் கிடையாது, யாருக்கும்எந்தக் கருத்து சொல்லவும் இங்கே உரிமை உண்டு. அமைதியாக உட்காருங்கள்…’ என்று நிர்வாகிகள் எச்சரித்த பிறகே, அமைதி ஆனார்கள்!” என்றார்.



இலங்கையில் ஈழத்தமிழர்களின் அவலம் குறித்து உலக அளவிலான மனித உரிமையாளர்கள் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். இனியாவது நம் மக்களுக்கு நிம்மதி கிடைக்கட்டும்!



நன்றி: சூனியர் விகடன்
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அம்மா மீது கோபப்பட்ட மகள்!
» சேகுவேரா-வின் பொன்மொழிகள் !!
» பத்து ஆண்டுகளுக்கு முன் சுனாமியன்று காணாமல் போன மகன்-மகள்: மீண்டும் பெற்றோருடன் சேர்ந்தனர்:)
»  கள்ளக்காதலுக்காக கணவன், மகன், மகள் கொலை: கைதான ஸ்ரீரங்கம் பெண் திருச்சி சிறையில் அடைப்பு
» காதல் திருமணம் செய்தார் மகள்: கல்விச் சான்றுதழைத் தர மறுத்தார் தந்தை: போராடிய மகள் மயக்கம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum