ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம்

3 posters

Go down

ராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம்  Empty ராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம்

Post by Guest Sun Dec 26, 2010 10:17 am

ஸ்ரீஹரிகோட்டா: ஜிஎஸ்எல்வி ராக்கெட் கிளம்பிய சில விநாடிகளிலேயே அது தனது கட்டுப்பாட்டை இழந்ததால் அதை தகர்க்க நேரிட்டதாக இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்திய விண்வெளித்துறைக்கு நேற்று மிகப் பெரிய சோக தினமாக மாறி விட்டது. நாடே பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், ஏவப்பட்ட ஒரு நிமிடத்திற்குள்ளேயே அனைவரின் கனவுகளையும் தகர்த்து விட்டது ஜிஎஸ்எல்வி ராக்கெட்.

அதிக எடை கொண்ட ஜிசாட் செயற்கைக்கோளுடன் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட், புறப்பட்ட சில விநாடிகளிலேயே வெடித்துச் சிதறியது. இந்திய விண்வெளித் திட்டங்களுக்கு, குறிப்பாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் கனவுக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இதுகுறித்து தற்போது இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ராக்கெட்டின் முதல் கட்டத்தில் தொழில்நுட்பப் பழுது ஏற்பட்டதால் ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி ராக்கெட்டை தகர்த்து அது கடலில் விழுமாறு செய்ய நேரிட்டு விட்டது.

ராக்கெட்டை ஏவிய 45வது விநாடியில் ராக்கெட்டின் கட்டுப்பாடு துண்டிக்கப்பட்டது. 50வது விநாடியில் ராக்கெட்டின் முதல் கட்டத்தில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து ராக்கெட்டை வெடிக்கச் செய்து அதை கடலில் விழ வைக்க தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டத்தில் இருந்த மோட்டாருக்குச் செல்ல வேண்டிய கட்டளைகள் சரியாக போய்ச் சேரவில்லை. இதனால்தான் அது பழுதடைந்தது.

ராக்கெட்டை வடிவமைத்ததில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் முதல் கட்டத்தில் உள்ள மோட்டாருக்குச் செல்ல வேண்டிய கட்டளைகள் போய்ச் சேரவில்லை. மோட்டாருக்குக் கட்டளைகளைக் கொண்டு செல்ல வேண்டிய நான்கு ஸ்டிராப்புகள் துண்டிக்கப்பட்டதால்தான் இந்த கோளாறு ஏற்பட்டதாக சந்தேகிக்கிறோம் என்றார்.

முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.கஸ்தூரிரங்கன் கூறுகையில், இது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. மிகவும் சோகமாக உள்ளோம். மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தோம்.

ராக்கெட் பழுதடைய என்ன காரணம் என்பதை ஆராயவள்ளோம். இதற்காக டெலிமெட்ரி டேட்டாவை ஆராயவுள்ளோம். ராக்கெட்டின் முதல் நிலையில் பழுது ஏற்பட்டது யாரும் எதிர்பாராததாகும் என்றார்.

கடந்த ஏப்ரல் 15ம் தேதி ஜிஎஸ்எல்வி-டி3 ஏவப்பட்டது. இதுவும் தோல்வியில் முடிவடைந்தது. அப்போது நாமே வடிவமைத்த கிரையோஜெனிக் என்ஜினை அதில் பயன்படுத்தியிருந்தனர். அது செயிலிழந்ததால், ராக்கெட் கிளம்பியசில விநாடிகளில் வெடித்துச் சிதறியது. அப்போது ராக்கெட்டின் 3வது கட்டத்தில்தான் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் தற்போது முதல் கட்டத்திலேயே தோல்வி அடைந்திருப்பது விஞ்ஞானிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை பயன்படுத்துவதற்காக ரஷ்யாவிடமிருந்து நாம் 7 கிரையோஜெனிக் எந்திரங்களை வாங்கியிருந்தோம். அவற்றில் தற்போது ஆறு என்ஜின்களை பயன்படுத்தி விட்டோம். ஒரு என்ஜின் மட்டுமே தற்போது பாக்கி உள்ளது.

முன்னாள் இஸ்ரோ தலைவர் யு.ஆர். ராவும், ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் தோல்வி குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், எனது வாழ்க்கையில் முதல் நிலையிலேயே ராக்கெட் தோல்வி அடைந்திருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.

டெலிமெட்ரி டேட்டாவை ஆராயமல் இதுகுறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது. கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு ஏற்படுதல் அல்லது திட எரிபொருள் கசிவு உள்ளிட்ட ஏதாவது ஒரு தவறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என கருதுகிறேன் என்றார்.

பிஎஸ்எல்வி ராக்கெட்களில் முற்றிலும் திட எரிபொருள் பயன்படுத்தப்படும். ஜிஎஸ்எல்வி ராக்கெட்களின் முதல் இரு நிலைகளிலும் கூட திட எரிபொருள்தான் பயன்படுத்தப்படும். ஆனால் கடைசி நிலையான 3வது கட்டத்தில் மட்டும் திரவ எரிபொருள் பயன்படுத்தப்படும். அதாவது கிரையோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்படும். இதுதான் ராக்கெட்டை படு வேகமாக உந்தித் தள்ள உதவுகிறது. இந்த கிரையோஜெனிக் எந்திரம்தான் நம்மிடம் இதுவரை இல்லாமல் உள்ளது. இதை தயாரிக்கும் பணியில்தான் இந்தியா பல ஆண்டுகளாக தீவிரமாக முயன்று வருகிறது. தற்போது நாம் பயன்படுத்தி வரும் கிரையோஜெனிக் எந்திரங்கள் ரஷ்யாவிடமிருந்து பெற்றவையாகும்.

ஜிஎஸ்எல்வி ராக்கெட்களை நாம் வெற்றிகரமாக செலுத்தினால்தான் விண்வெளித்துறையில் பல பெரிய சாதனைகளை படைக்க முயல முடியும். குறிப்பாக விண்ணுக்கு மனிதனை அனுப்பும் கனவும் சாத்தியமாக முடியும். மேலும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்களை நாம் வெற்றிகரமாக செலுத்தினால், அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு பிரான்ஸுக்கோ அல்லது வேறு எங்குமோ போகத் தேவையில்லை. நாமே அதைச் செய்து கொள்ள முடியும். வணிக ரீதியில் பிற நாடுகளின் செயற்கைக் கோள்களையும் ஏவ முடியும்.

இப்படி பல்வேறு கனவுகளுடன் காத்திருக்கும் இந்தியாவுக்கு ஜிஎஸ்எல்வியின் தொடர்ச்சியான 2வது தோல்வி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
avatar
Guest
Guest


Back to top Go down

ராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம்  Empty Re: ராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம்

Post by அகீல் Sun Dec 26, 2010 10:33 am

தகவலுக்கு நன்றி நண்பா. ராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம்  678642


அகீல் ராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம்  154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

ராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம்  Empty Re: ராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம்

Post by சிவா Sun Dec 26, 2010 10:39 am

நேற்று வெடித்துச் சிதறியது ராக்கெட் அல்ல, கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம்!


ராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம்  Empty Re: ராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம்

Post by ராஜா Sun Dec 26, 2010 10:44 am

சிவா wrote:நேற்று வெடித்துச் சிதறியது ராக்கெட் அல்ல, கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம்!
என்னமோ தீபாவளி ராக்கெட்ட வெடிக்க வைத்த மாதிரி ரொம்ப சாதாரணமாக சொல்லுராணுங்க கட்டுபாட்டை இழந்து விட்டது அதனால் வெடிக்க வைத்தோம் என்று , ராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம்  56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம்  Empty Re: ராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி டி-6 ராக்கெட்
» ஜிஎஸ்எல்வி 2வது முறையாக தோல்வி-ராக்கெட் வெடித்துச் சிதறியது
» ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் இலக்கை எட்டவில்லை – இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
» பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் 16-ந் தேதி விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
» பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum