ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தி முனையில் நின்ற மோகினி

Go down

கத்தி முனையில் நின்ற மோகினி Empty கத்தி முனையில் நின்ற மோகினி

Post by sriramanandaguruji Thu Dec 02, 2010 11:43 am

கத்தி முனையில் நின்ற மோகினி Ujiladevi.blogpost.com
மந்திர அனுபவங்கள் 2
காராத்தே, சிலம்பம், குஸ்தி போன்ற வீரவிளையாட்டுகளை கற்று கொள்ள ஆரம்பிக்கும்போது பயன்படுத்தி பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் முயல் குட்டி போல் துள்ளி குதிக்கத்தான் செய்யும். தொடர்ச்சியான பயிற்சி அந்த ஆர்வத்தை செழுமைபடுத்தி நிதான நிலைக்கு கொண்டு வந்து விடும். இது எல்லா விஷயத்திற்கு பொதுவானது தான். எனக்கும் ஆரம்பகாலம் ஆர்வம் மிகுந்ததாகவே இருந்தது. ஆனால் முதல் கட்டத்தில் நான் அடைந்த வெற்றிக்கு பிறகு பயிற்சியில் அடுக்கடுக்கான தோல்விகளை தான் கொடுத்தது. அந்த தோல்விகள் என் புத்தியை பரப்பரப்படையாமல் பார்த்து கொண்டது என சொல்லலாம். தோல்விகள் மனதை அமைதிப்படுத்தியதோடு மட்டுமல்ல உள்ளுக்குள் உறங்கி கிடந்த போர்குணம் விடாமுயற்சியாக வெளிப்பட்டது என்றும் சொல்லலாம். அந்த முயறிசியாலோ, இறைவனின் அருளாலோ சிறது சிறிதாக தோல்விகள் வெற்றிகளாக மாற துவங்கியது. அதன் பிறகு நாம் கற்றது சரிதானா என்பதற்காக பரிசோதனை செய்து பார்க்க முடிந்ததே தவிர பெருமைக்காக செய்து பார்க்க தோன்றவில்லை.



கத்தி முனையில் நின்ற மோகினி Ujiladevi.blogpost.com+%25285%2529

முதல்முறையாக அதர்வன வேத மந்திரத்தில் எனக்கு சித்தி கிடைத்தாலும் கூட அது நான் எதிர்பாராத நேரத்தில் கிடைத்ததாகும். ஆனால் நான் முயன்று பெற்ற சித்தி மோகினி கன்ம வசிய சித்தி என்பதாகும். இதற்கான முயற்சியை நான் பிறந்த ஊரில் என் பூர்வாசிரம வீட்டில் பூஜையறையில் செய்தேன். முறைப்படி மோகினி வசிய மந்திரத்தை பயிற்சி செய்து முடித்திருந்ததினால் அதை வரவழைத்து தான் பார்ப்போமே என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. எண்ணம் தோன்றிய மாத்திரத்திலேயே செயல்படுத்தவும் துவங்கினேன். மந்திரம் ஜெபிக்கும் முன்பு செய்ய வேண்டிய புற நடைமுறைகளை முடித்துவிட்டு கண்களை மூடி மனதை ஒருநிலைபடுத்தி 1008 முறை மந்திர உச்சாண்டம் செய்தேன். மந்திர உச்சாடனம் முடித்த பிறகு கண்களை திறந்த நான் அதிர்ந்து போய்விட்டேன். அந்த அதிர்ச்சியை மீண்டும் இதுவரை எந்த காரணத்திற்காகவும் நான் அடைந்ததே இல்லை. என் முன்னே அழகே வடிவான ஒரு பெண் சலனமற்ற பார்வையால் விழி இமைக்காமல் என்னையே பார்த்து கொண்டிருந்தாள். காற்றில் அவளின் நீண்ட கூந்தல் அசைவதை இப்போது நினைத்தாலும் மயிர்கூச்செரியும். அதுவரை அப்படியொரு அழகிய பெண்ணை எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் சரித்திர கதைகளில் தான் பார்த்திருக்கிறேன்.



கத்தி முனையில் நின்ற மோகினி Ujiladevi.blogpost.com+%25283%2529

வெள்ளை வஸ்திரத்தில் அடர்த்தியான கருங்கூங்தலும், சந்தனநிற மேனியும், நீல விழிகளும், நெற்றியில் ஜொலித்த செந்தூரமும், ரோஜாவை போன்று சிவந்த உதடுகளும், அவளிடமிருந்து வந்த நறுமணமும் இன்னும் மனதைவிட்டு அகலவே இல்லை. அந்த காட்சி இப்போது ரசனை மிக்கதாக தெரிகிறது. ஆனால் அதை நேருக்கு நேராக சந்திக்கும் போது பயத்தால் நான்பட்ட பாட்டை வார்த்தையில் சொல்ல இயலாது.
நெஞ்சு படபடக்க, உடலெங்கும் நடுங்க, தொப்பலாக வியர்த்து போக, கத்த முடியாமல் வாய் ஒட்டிக்கொள்ள அப்பாடா அதை இன்று நினைத்தாலும் சற்று நடுக்கம் வரத்தான் செய்கிறது. ஒரு மந்திரத்தை சொன்னால் அந்த மந்திரத்திற்குரிய உருவம் கண் முன்னால் தோன்றும் என்று தெரிந்து இருந்தாலும் கூட நேருக்கு நேராக அனுபவிக்கும் போது எந்த சமாதானங்களும் நினைவுக்கு வருவதில்லை. மேலும் நான் பயப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று மோகினியை பற்றி சிறிய வயதில் கேட்ட பல பயங்கர கதைகள். அந்த கதைகளில் மிக முக்கியமானது அந்த காலத்தில் உவரி சுயம்புலிங்க சாமி கோயிலுக்கு தை பூச விழாவில் கலந்து கொள்ள திருவனந்தபுரத்திலிருந்து மாட்டுவண்டி கட்டி வருவார்களாம்.



கத்தி முனையில் நின்ற மோகினி Ujiladevi.blogpost.com+%25281%2529

அப்படி ஒருவர் மாட்டுவண்டி கட்டி வந்து கொண்டிருந்த போது நேரம் நன்றாக இருட்டி விட்டதாம். வண்டிக்கு முன்னாலையும் பின்னாலையும் யாருமே இல்லையாம். அப்போது ஒரு இளம்பெண் வண்டியை மறித்தாளாம். வண்டி ஓட்டிக் கொண்டிருந்த பெரியவர் யார் நீ? உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டாராம்.
அதற்கு அந்த பெண் என்னிடம் வெற்றிலை இருக்கிறது, சுண்ணாம்பு இல்லை உன்னிடம் இருந்தால் கொடு என கேட்டாளாம். வண்டி ஓட்டிய பெரியவரும் சாதாரண ஆள் இல்லையாம். மலையாள மந்திரத்தை கரைத்து குடித்தவராம். தனது மந்திர சக்தியால் சுண்ணாம்பு கேட்பது மனுஷ பெண்ணல்ல, காட்டுக்குள் திரியும் வன மோகினி என கண்டு கொண்டாராம். உடனே அந்த பெரியவர் சுண்ணாம்பை கையில் எடுத்து கொடுக்காமல் தனது இடுப்பில் பாதுகாப்பிற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து அதன் முனையில் சுண்ணாம்பை வைத்து மோகனியிடம் நீட்டினாராம். சுண்ணாம்பில் மந்திரமும் அவர் ஜெபித்து இருந்ததினால் அதை தொட்டவுடன் மோகினி அடங்கிவிட்டதாம். அடங்கிய மோகினியை பிடித்து அதன் உச்சந்தலையில் மந்திர ஆணி அடித்து தனது வீட்டு வேலைக்காக பெரியவர் கூட்டி போய்விட்டாராம்.



கத்தி முனையில் நின்ற மோகினி Ujiladevi.blogpost.com+%25286%2529

ஒரு நாள் வீட்டு வேலையெல்லாம் முடித்த மோகினி இந்த பெரியவரின் மருமகளிடம் தலையில் பேண் கடி தாங்க முடியவல்லை எனக்கு கொஞ்சம் பேண் பாரு என்று சொலியதாம். அந்த பெண்ணும் பேண் பார்க்க ஆரம்பித்தாளாம். அப்படி பார்க்கும் போது தலையில் அறையப்பட்டிருந்த ஆணியை பார்த்து ஐயோ இது என்ன உன் தலையில் இத்தனை பெரிய ஆணி என்று கேட்கவும் அப்படியா! அதை உருவி எடுத்துவிடு என்று மோகினி சொன்னதாம்.
அவளும் எடுத்துவிட்டாளாம். அடுத்த கணமே சுயபுத்தி வந்த மோகினி அந்த பெண்ணை கீழே தள்ளி வயிற்றை கிழித்து கொன்றுவிட்டு தனது இருப்பிடமான காட்டிற்கு ஓடியே விட்டதாம். இந்த கதையை நான் மிகவும் சிறியவனாக இருக்கும் போது என் அம்மாவின் தாயார் சண்முக வடிவு பாட்டி கதையாக சொல்வார்கள்.
அகலமாக கண்களையும், வாயையும் விரித்து கதையை கேட்டு இருக்கிறேன். இது மட்டுமல்ல அழகான ஆண் பிள்ளைகளை மோகினி பிடித்து கொண்டால் கடைசி வரை விடாதாம். உயிரை உறிஞ்சி எடுத்து விடுமாம். இப்படி மனதில் ஏற்றப்பட்ட சிறிய வயது பயங்கள் எவ்வளவு வயதானாலும் கூட தொடர்ந்து தான் வரும்.



கத்தி முனையில் நின்ற மோகினி Ujiladevi.blogpost.com+%25287%2529

இரண்டாவது மந்திரம் சொல்லி மோகினியை வரவழைக்க தெரியுமே தவிர அதை முறைப்படி திருப்பி அனுப்பும் மந்திரம் எனக்கு தெரியாது. அதையும் கற்று கொண்டு செய்ய வேண்டிய வேலையை அவசரப்பட்டு செய்தால் இப்படித்தான் வம்பில் போய் முடியும். ஆனால் நல்ல வேளை நெஞ்சை நொறுக்கும் அந்த பய நேரத்திலும் என்னையும் அறியாமல் ஒரு நல்ல காரியம் செய்தேன். கண்களை இறுக மூடிக்கொண்டு ராமா, ராமா என மனதிற்குள் ஓலமிட்டவாறு சொன்னேன். இப்படி நான் சொன்னது நிச்சயம் திட்டமிட்டு அல்ல. பயமும், போக்கிடமில்லாத திக்கற்ற நிலையும் கடவுள் பெயரை என்னை சொல்ல வைத்தது.
அதனால் நல்ல வேளையாக காப்பாற்றப்பட்டேன். வந்த மோகினி சத்தமில்லாபமல் போய்விட்டது. அதன் பிறகு இப்படி விஷ பரிட்சைகள் எதிலும் நான் அவசரப்பட்டு இறங்குவது கிடையாது. முறைப்படியான பரிசோதனைகளை இந்த சம்பவங்கள் முடிந்து சில மாதங்களுக்கு பிறகே செய்தேன்.



கத்தி முனையில் நின்ற மோகினி Ujiladevi.blogpost.com+%25282%2529

எனது நெருங்கிய நண்பர் வேலுநாயக்கர் என்ற முருக வேலுக்கு மனரீதியாக இருந்த சில சிக்கல்களை நீக்க மந்திரங்களை பயன்படுத்தினேன். அது நல்ல விளைவுகளை கொடுத்தது. அந்த விளைவுகளால் சற்று ஏறக்குறைய ஒரு வருட காலம் நண்பர்களின் பிரச்சனைகளுக்காக மந்திரங்களை உபயோகப்படுத்த ஆரம்பித்தேன். அது நல்ல பயிற்சியாக எனக்கு அமைந்தது. மந்திரம் கற்று முடித்து நல்ல அனுபவம் வந்த பத்து வருடத்திற்கு பிறகே வெளி நபர்களுக்காகவும் செய்தேன்.




source http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post.html





கத்தி முனையில் நின்ற மோகினி Sri+ramananda+guruj+3




எனது இணைய தளம் www.ujiladevi.com
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010

http://ujiladevi.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கத்தி முனையில் பக்கிரி
» புளியந்தோப்பு கடைகளில் கத்தி முனையில் மாமூல் கேட்டு மிரட்டிய 4 ரவுடிகள் கைது
» போரூரில் கத்தி முனையில் மிரட்டி 5-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது
» குளச்சல் அருகே முகமூடி அணிந்து கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி: வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய 2 வாலிபர்கள் கைது
» ஒரு சிகரெட்டின் முனையில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum