ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்

Go down

புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் Empty புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்

Post by vmanirajan Fri Nov 26, 2010 11:28 pm

வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்ற உடல் பாகங்களால் புற்றுநோய் ஏற்பட புகையிலை காரணமாகிறது.

தொடர்பான தகவல்கள்

§ புகையிலையினால் ஏற்படுகிற வாய்ப்புற்று நோய் கொண்ட நோயாளிகள், உலகிலேயே, இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

§ இந்தியாவில், ஆண்கள் மற்றும் பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு, முறையே 56.4% மற்றும் 44.9% புகையிலை காரணமாயிருக்கிறது.

§ 90%கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நுரையீரல் நோய்களை, புகைபிடித்தல் ஏற்படுத்துகிறது.



· இதயம் மற்றும் இரத்தக்குழாய் நோய்கள், மாரடைப்பு, மார்புவலி, இதயக்கோளாரினால் ஏற்படும் திடீர் மரணம், ஸ்ட்ரோக் (மூளை பாதிப்பு), கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்பட்ட புற இரத்தக்குழாய் நோய்கள் போன்றவை ஏற்பட புகையிலை காரணமாகிறது.

தொடர்பான தகவல்கள்

§ இந்தியாவில் 82% நாட்பட்ட நுரையீரல் சுவாசக்குழாய் அடைப்பு நோய் ஏற்பட, புகைப்பிடித்தல் காரணமாய் அமைகிறது.

§ புகையிலை மறைமுகமாக நுரையீரல் டியூபர்குளோஸிஸினை (டி.பி) ஏற்படுத்துகிறது. எப்போதும் புகைபிடிப்பவர்களுக்கு, டியூபர்குளோஸிஸ் ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் ஆகும். சிகரெட் அல்லது பீடிகளை அதிகளவு புகைபிடிப்பவர்களுக்கு, டியூபர்குளோஸிஸ் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்.

§ புகைத்தல்/புகையிலை திடீரென இரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவினை குறைக்கிறது.

§ புகையிலை, கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தையும் குறைக்கிறது. கால்களில், கரங்களில் காங்கரின் எனப்படும் கால் மாமிசத்தை அரித்துவிடும் புண்களை ஏற்படுத்தலாம்.

§ புகையிலை, உடல் முழுவதிலும் உள்ள தமனி எனப்படும் இரத்தத்தை ஏந்திச்செல்லும் இரத்தக்குழாய் சுவர்களை சேதப்படுத்துகிறது.

§ புகைத்தல், சிறுபிள்ளைகள் மற்றும் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு உடல்நலக்கேட்டினை ஏற்படுத்துகிறது. புகைப்பழக்கமில்லாத ஒருவர், புகைப்பழக்கம் (ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் புகைக்கும்) உள்ளவரோடு சேர்ந்து வாழும்போது, புகைபிடிக்காத நபர் அவரை அறியாமலேயே மூன்று சிகரெட்டினை புகைக்கிறார். இது அவரின் சிறுநீரில் உள்ள நிகோடின் அளவு கொண்ட கணிக்கப்பட்டது.

§ புகைத்தல்/புகையிலை பயன்பாடு டையாபிடிஸ் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிற காரணியாக அமைகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

§ புகையிலை, இரத்தத்திலுள்ள நன்மை பயக்கக்கூடிய கொழுப்பின் அளவை குறைக்கிறது.

§ புகைபிடிப்பவர்கள் / புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு, பயன்படுத்தாாதவர்களை, விட இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 2 முதல் 3 மடங்கு அதிகமாக உள்ளது.

· ஒவ்வொரு 8 விநாடிகளில் 1 புகையிலை சம்மந்தமான மரணம் நிகழ்கிறது.

தொடர்பான தகவல்கள்

§ இந்தியாவில் புகையிலை சம்மந்தமான உயிரிழப்பு ஆண்டிற்கு 8 முதல் 9 லட்சம் ஆகும்.

§ புகையிலையை தவிர்ப்பதால் ஒரு விடலைப்பருவத்தினரின் வாழ்வில் 20 ஆண்டுகள் கூடுகிறது.

§ புகையிலை பயன்படுத்தும் விடலைப்பருவத்தினரில் பாதிப்பேர் புகையிலை உபயோகத்தால் கொல்லப்படுகின்றனர். (மீதமுள்ளவர்களில் பாதிபேர் நடுத்தரவயதிலும், பாதிபேர் முதிர்வயதிலும் கொல்லப்படுகின்றனர்).

§ புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உயிரிழப்பு, மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் வேகமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

· ஆண்கள் மற்றும் பெண்களில், புகைத்தல் / புகையிலை உபயோகம், கெடுதலான விளைவுகளை ஏற்படுத்துகிறது

தொடர்பான தகவல்கள்

§ ஆண்களில் மலட்டுத் தன்மை ஏற்பட, புகைப்பழக்கம் ஒரு காரணமாக அமைகிறது.

§ புகைத்தல் / புகையிலை பயன்பாடு, பெண்களில் ஈஸட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது. மாதவிடாய் நின்றுபோவது குறித்த காலத்திற்கு முன்பே ஏற்படுகிறது.

§ புகைத்தல் / புகையிலை பயன்பாடு உடலின் செயல் மற்றும் திறனை குறைக்கிறது.

§ புகைக்கும் பெண்கள், கர்ப்பத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் போது, ஸ்ட்ரோக் (மூலை பாதிப்பு) ஏற்படும் வாய்ப்பு விகிதம் அதிகரிக்கிறது.

§ புகைப்பழக்கம் உள்ள கர்ப்பிணிகளில், குழந்தையை இழக்க அதிகவாய்ப்பு உள்ளது. குறைந்த எடையுடன் கூடிய பிள்ளைபிறக்கும் வாய்ப்புள்ளது. வளர்ச்சியில் கோளாறுகள் கொண்ட குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. பிறந்த குழந்தை திடீரென இறக்க வாய்ப்புள்ளது.

· புகையிலையினை தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்

o புகையிலையை தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்

1. உங்களுக்கு புற்றுநோய் மற்றும் இதயநோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது.

2. உங்கள் இதயத்தில் ஏற்படும் அழுத்தம் குறைகிறது.

3. நீங்கள் நேசிக்கும் நபர் புகையிலையினால் பாதிக்கப்படமாட்டார்.

4. உங்கள் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் இருமல் மற்றும் சளி மறையலாம்.

5. உங்கள் பற்கள் வெண்மையாகவும், சுத்தமாகவும் மாறும்.

o புகையிலையை தவிர்ப்பதால் ஏற்படும் சமுதாய நன்மைகள்

1. நீங்கள் கட்டுபாட்டிற்குள் இருக்கும் ஒரு நபராக இருப்பின், சிகரெட் உங்களை கட்டுப்படுத்தாது.

2. உங்கள் சுயதோற்றம் மற்றும் சுயநம்பிக்கை வளரும்.

3. இப்போதும் மற்றும் எதிர்காலத்திலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராய் இருப்பீர்கள்.

4. புகையிலையை தவிர்ப்பதால் மிஞ்சும் பணம், மற்ற காரியங்களுக்கு பயன்படுத்த முடியும்

· புகையிலை பயன்பாட்டினை விட்டுவிட எந்நேரமும் நல்ல நேரம் தான்

§ புற்றுநோய் மற்றும் பிற மோசமான நோய்கள் ஏற்படும்முன், நடுத்தரவயதில் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது, பிற்காலத்தில், புகையிலைப் பழக்கத்தினால் ஏற்படும் மரணம் மற்றும் பிற ஆபத்துகளை தவிர்க்கிறது.

§ புகையிலை பழக்கத்தினை ஆரம்ப வயதிலேயே நிறுத்துவதின் பலன் மிகவும் அதிகம்.

§ புகைபிடிக்கும் பழக்கத்தை நீங்கள் விட்டுவிட்டால், இதயநோய் வரும் அபாயம், புகைபிடிக்காதவர்களைப்போலவே 3 வருடங்களில் குறைந்து, இயல்பான நிலைக்கு வருகிறது.

· புகைத்தல் / புகையிலை பயன்பாட்டினை தவிர்க்க சில ஆலோசனைகள்

1. சிகரெட் சாம்பல் போடும் தட்டுகள், பான், ஜர்தா போன்றவற்றை கண்ணிற்கும், மனதிற்கும் மறைவாக வைக்க வேண்டும்.

2. சிகரெட், பான், ஜர்தா போன்றவற்றை சுலபமாக கிடைக்காத, எட்டாத இடத்தில் வைக்கவும். உ.ம். வீட்டின் பிற அறைகளிலோ, அடிக்கடி செல்லாத இடங்களிலோ அல்லது அலமாரிகளில் வைத்து பூட்டியோ வைக்க வேண்டும்.

3. புகை, பான், ஜர்தா போன்றவற்றை பயன்படுத்த தூண்டும் காரியங்கள், புகைப்பிடிப்போர் கூட்டம் போன்றவற்றை கண்டறிந்து, சிறிது காலத்திற்கு அவற்றிலுருந்து விலகியிருக்க முயற்சிக்க வேண்டும்.

4. சுவிங்கம், இனிப்புகள், பெப்பர்மென்ட் மிட்டாய்கள், சர்க்கரை மிட்டாய் போன்றவற்றை வாயில் போட்டுக் கொள்ளுதல்

5. எப்பொழுதெல்லாம் புகையிலை, பான் போன்றவை நினைவுக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில், மூச்சினை நன்கு இழுத்து விட முயற்சிக்கவும். ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவது மற்றும் உடற்பயிற்சி செய்வது புகைப்பழக்க எண்ணத்தை குறைக்க உதவுகிறது.

6. புகையிலை எடுக்க நீங்கள் நினைக்கும்போது, உங்கள் குழந்தைகள் பற்றி சிந்தியுங்கள். மேலும், புகையிலையினால் நோய் ஏற்படின், அது உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்பதனை சிந்தனை செய்து பாருங்கள்.

7. புகையிலை பழக்கததினை நிறுத்த ஒரு தேதியை குறியுங்கள்.

8. உங்களுக்கு உதவும் நபரை கண்டறியுங்கள்.

9. புகையிலை, பான், ஜர்தா போன்றவை இல்லாத முதல் நாளுக்காய் திட்டமிடுங்கள்.

10. புகையிலை, பான், ஜர்தா போன்றவற்றின் மேல் விருப்பம் ஏற்படும் போது கீழ்க்காணும் 4 வழிகளைப் பின்பற்றுங்கள்

§ ஏதேனும் ஒரு வேலையை செய்யுங்கள்

§ அடுத்த சிகரெட்டினை புகைக்க / பயன்படுத்த தாமதியுங்கள்

§ மூச்சை நன்கு உள்ளிழுத்து விடுங்கள்

§ தண்ணீர் அருந்துங்கள்

11. புகையிலை பழக்கததினை விடுவதற்கு உங்களால் முடியும் என உறுதியாக நம்புங்கள்

12. உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள்

13. மனதைத் தளர்ததும் உக்திகளை (யோகா, நடைபயிற்சி, தியானம், நடனம், இசை போன்றவை) ஒவ்வொரு நாளும் செய்யுங்கள்.

14. காஃபின் (காபியில் இருக்கும் ஒரு வகை வேதியல் பொருள்) மற்றும் ஆல்கஹால் (மது) உட்கொள்வதை குறைத்துகொள்ளுங்கள்

15. மேலும சுறுசுறுப்பாக இருந்து, ஆரோக்கியமாக உணவினை உட்கொள்ளுங்கள்.
avatar
vmanirajan
பண்பாளர்


பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum