ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன் Empty நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்

Post by சிவா Wed Oct 22, 2008 8:19 pm

ஈழத்தில் நிகழ்ந்து வரும் நெருக்கடியான நிலை குறித்து, பல்வேறு கேள்விகளை அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனுக்கு ஈ-மெயிலில் அனுப்பி வைத்தோம். நடேசனும் நமது கேள்விகளுக்கான பதில்களை பிரபாகரனோடு ஆலோசித்து பதில்களாக்கி நக்கீரனுக்கு அனுப்பி வைத்துள்ளார். பிரபாகரனின் மனம் திறந்த பதில்கள் அடங்கிய பேட்டியிலிருந்து...

1980 களுக்குப் பின்னர் தமிழகத்தில் எற்பட்டுள்ள ஈழத் தமிழருக்கு ஆதரவான தற்போதைய எழுச்சியான சூழல் குறித்து?

இலங்கைத் தீவில் 1983 காலப்பகுதியில் சிங்கள அரசபடைகளாலும் பேரினவாத அரசியல் தலைமைகளினாலும் வரலாற்றில் ஒரு போதும் இல்லாதவாறு பெரியதொரு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், தமிழர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்விடங்களை விட்டு புலம் பெயர்ந்து அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் கேட்கும் அளவிற்கு... இனப்படுகொலையின் தாக்கம் இருந்தது. அந்த கொடூரங்கள் இன்னும் மறக்க முடியாதவை. இதனைக் கண்டு தமிழகமக்களும் அரசியல் தலைமைகளும் அரசியல் வேறுபாடுகளுக்கும் அப்பால் கொதித்தெழுந்தனர். அதுபோலவே, இன்றும் சிங்கள அரச படைகள் தனது தரைப்படை, கடற்படை, விமானப் படை அகிய முப்படைகளையும் பயன்படுத்தி பாரிய அளவில் இனப்படுகொலைகளை நடத்தி வருகிறது. தினமும் மக்கள் கொல்லப்பட்டும், வாழ் விடங்களை விட்டு அகதிகளாக்கப்பட்டும் தவியாய் தவிக்கின்றனர். ஈழத் தமிழர்களுக்கு சொல்லொணா இன்னல்கள், ஆற்றுப்படுத்த முடியாத கொடூரங்கள் ஏற்படுகிற போதெல்லாம் தமிழக மக்கள் கொதித்தெழுவார்கள். அவ்வாறான ஒரு சூழலே தற்போது தாய்த் தமிழகத்தில் எற்பட்டுள்ளதாகவே நாங்கள் பார்க்கிறோம். அந்த எழுச்சியான சூழல் உங்களுக்கு பலம் சேர்க்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன் Empty Re: நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்

Post by சிவா Wed Oct 22, 2008 8:20 pm

சமீபத்தில் தி.மு.க. நடத்திய சென்னை பொதுக்கூட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உணர்ச்சிமிக்க உரையை நிகழ்த்தினார் தமிழக முதல்வர் கலைஞர். அதனை அடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, "இலங்கையில் ஈழத் தமிழர்களை படுகொலை செய்து வரும் சிங்கள அரசின் யுத்தத்தை நிறுத்த இந்திய அரசு இருவார காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தமிழக நாடாளுமன்ற எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள்' என்கிற நிலையை எடுத்துள்ளார் கலைஞர். தமிழகத்தில் ஆளும் தி.மு.க., இத்தகைய ஆதரவான நிலையில் இருப்பது பற்றி?

தமிழக முதல்வர் கலைஞர் தமிழ் உணர்வுமிக்கவர். ஈழத் தமிழர்கள் மீது ஆழமான அன்பும், பாசமும் எப்போதும் கொண்டிருப்பவர். அதனை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார். தமிழீழத்தில் சிங்கள அரச பயங்கரவாதம் தலைவிரித்து ஆடிய போதெல்லாம் ஈழத் தமிழ் மக்களுக்காக ஒங்கிக் குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அதனை செயலிலும் காட்டி வருபவர். தற்போது, ஈழத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சொல்லொணா துயரம் கண்டு அத்தகைய ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பது எம்மையெல்லாம் பூரிப்படைய வைத்துள்ளது. அந்த ஆதரவை நாங்கள் என்றென்றும் எதிர்பார்க்கிறோம
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன் Empty Re: நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்

Post by சிவா Wed Oct 22, 2008 8:22 pm

உங்கள் இயக்கத்தை கடுமையாக எதிர்ப்பவரும் இயக்கத்துக்கு தடைவிதிக்க காரணமாக இருந்தவரு மான ஜெயலலிதா, இருவாரங்களுக்கு முன்பு இழப் பிரச்சினையில் அதரவான நிலையை எடுத்தார். தற்போது அதை மாற்றிக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் மனநிலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தற்போது ஈழத்தில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையின் தாக்கம், முழுத்தமிழகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அரசியல் வேறுபாடுகளை மறந்து தமிழக அரசியல்தலைவர்கள் அனைவரும் எமக்கான ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவும் ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார். ஆனால், தற்போது அதனை மாற்றிக் கொண்டிருக்கிறாரெனில்... அதுபற்றி நாங்கள் என்ன சொல்ல?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன் Empty Re: நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்

Post by சிவா Wed Oct 22, 2008 8:22 pm

உங்களின் தற்போதைய தலைநகரான கிளிநொச்சியைப் பிடித்து விடுவோம் என்கிறார் அதிபர் மகிந்த ராஜபக்சே. இலங்கையின் உண்மையான போர்க்கள நிலைமை என்ன?

இலங்கை அரசு, பல்வேறு வெளிநாடுகளிடமிருந்து ஏராளமான இராணுவ உதவிகளைப் பெற்று வருகிறது. இராணுவ தளபாடங்களை வாங்கிக் குவிக்கிறது. அதனைக் கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போர் ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் எமது தாயகத்தில் எமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்குள் நுழைந்து கிளிநொச்சி நகருக்கு அண்மையில் சிங்கள அரச படைகள் நிலை கொண்டுள்ளன. எமது விடுதலைப் போராளிகளும் சிங்கள அரச படைகளை கிளிநொச்சிக்குள் நுழைய விடாமல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த தாக்குதலில், இராணுவத்தினர் பாரிய அளவில் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். ஆதனால், இலங்கை இராணுவத்தினர் விமானங்கள் மூலம் தமிழர்களின் குடியிருப்புகள் மீது கண் மூடித்தனமான குண்டு வீச்சுக்களை நடத்துகின்றனர். அதில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் உள்ளூரிலேயே தமது வாழ்விடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களைத் தேடி அகதிகளாக நகர்ந்த வண்ணம் உள்ளனர். ஆனால், கிளிநொச்சியைப் பிடித்து விடுவோம் என்பது ராஜபக்சேவின் பகற்கனவு.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன் Empty Re: நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்

Post by சிவா Wed Oct 22, 2008 8:24 pm

இலங்கை இராணுவத்திற்கு பல்வேறு நாடுகள் உதவி செய்துவரும் நிலையில், எந்த ஒரு நாட்டின் ஆதரவும் இல்லாத உங்களால் வெற்றி பெற்றுவிட முடியுமா?

உலகத் தமிழ் மக்களின் ஆதரவு எம்பக்கம் உள்ளது. எமது மக்கள் முற்று முழுதாக எம்மோடு இணைந்து நிற்கிறார்கள். ஒரு இனத்தினுடைய விடுதலைப் போராட்டத்தில் மக்களின் ஆதரவும் பலமுமே முதன்மையானது. அதுதான் விடுதலை போராட்டத்தின் வெற்றிக்கு வழி வகுப்பதாகும். அந்த வகையில், உலக தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு தொடர்ந்து எங்களுக்கு கிடைத்து வருவதால்... இறுதி வெற்றி எங்களுக்குத்தான். அந்த வெற்றி... தமிழர்களின் வெற்றியாக இருக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன் Empty Re: நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்

Post by சிவா Wed Oct 22, 2008 8:24 pm


போராளிகளின் எண்ணிக்கையை 3 ஆயிரமாக குறைத்து புலிகளை பலவீனப்படுத்தி விட்டோம் என்கிறதே இலங்கை இராணுவம்?


எங்கள் மீது இராணுவம் நடத்தும் தாக்குதலில், சிங்கள இராணுவத்தினர் தான் இழப்புகளை அதிகம் சந்திக்கின்றனர். இந்த உண்மைகளை சிங்கள அரசு திட்டமிட்டே மறைத்து வருகிறது. சிங்கள அரசின் சார்பு ஊடகங்களும் அதனைத்தான் செய்து வருகின்றன. அத்தகைய அரசு சார்பு ஊடகங்கள் வழியாக ஒரு பொய்ப்பிரச்சாரத்தை திட்டமிட்டே செய்து வருகிறார் அதிபர் ராஜபக்சே. எங்களுக்கு எதிரான ஒரு கருத்தோட்டத்தை உருவாக்கும் முயற்சிதான் அதிபர் ராஜபக்சேவின் பொய்ப் பிரச்சாரம். எங்களின் இராணுவ வலிமை முன்னெப்போதும்போல் பலமாகவே இருக்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன் Empty Re: நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்

Post by சிவா Wed Oct 22, 2008 8:25 pm

விமான குண்டுகள் மூலம் உங்களின் மறைவிடங்கள், புலிகளின் விமான ஓடுபாதை, சந்திக்கும் இரகசிய இடங்கள் ஆகியவற்றை அழித்துவிட்டதாகவும் சிங்கள இராணுவம் கூறி வருகிறதே?

எங்களின் மறைவிடங்கள், விமான ஒடுபாதை எதையும் சிங்கள இராணுவத்தினரால் சேதப்படுத்தப்பட முடியாது. இராணுவத்தினரின் கண்மூடித்தனமான விமான குண்டுவீச்சில் தமிழ் மக்களின் வாழ்விடங்கள், மருத்துவ மனைகள், கல்விச்சாலைகள், ஆலயங்கள் அழிக்கப்படுகின்றன. வளமான செழிப்பான காடுகள் மீது குண்டுகளை வீசி இயற்கை வளங்களையும் அழித்து வருகிறது இராணுவம். தமிழீழத்தையும் தமிழ் இனத்தையும் அழிப்பதற்காகவே, மக்களின் வாழ்விடங்களையும் இயற்கை வளங்களையும் அழித்துவிட்டு... எங்களின் மறைவிடங்களை அழித்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறது இராணுவம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன் Empty Re: நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்

Post by சிவா Wed Oct 22, 2008 8:26 pm

சமீபத்தில்கூட எங்கள் அரசியல்துறை தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிய வந்துள்ளதே? அப்போது நீங்கள் அங்கு இருந்தீர்களா?

தாக்குதல் நடந்தது. ஆனால், எந்த சேதமும் எற்படவில்லை. தாக்குதல் நடந்தபோது அங்கு இருக்கவில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன் Empty Re: நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்

Post by சிவா Wed Oct 22, 2008 8:27 pm

வடக்குப் பிரதேசத்தில் நீங்கள் பதில் தாக்குதல் எதையும் நடத்த முடியாததற்கும் உங்களின் பலவீனத்திற்கும் கருணா இல்லாததுதான் காரணம் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறதே?

இயக்கத்திற்கு துரோகம் இழைத்தவர் கருணா. அவரது துரோகத்தால் இயக்கத்திலிருந்து நிராகரிக்கப்பட்டவர். புலிகள் இயக்கம் எப்போது அவரை நிராகரித்ததோ... அப்போதிலிருந்தே தமிழ் மக்களிடமிருந்தும் நிராகரிக்கப்பட்டவர். இயக்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இழைத்த துரோகத்தால், சிங்கள அரச படைகளின் ஒட்டுக்குழுவாக இயங்கி வருபவர். எமது மக்கள் முற்றுமுழுதாக அவரை நிராகரித்துவிட்ட நிலையிலும், எமது மக்களின் முழுபலமும் எம்மோடு இருக்கின்ற நிலையிலும்... இந்தக் கேள்வியை முழுதாக மறுக்கின்றேன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன் Empty Re: நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்

Post by சிவா Wed Oct 22, 2008 8:28 pm


கருணாவை இலங்கை எம்.பி.யாக மகிந்த ராஜபக்சே நியமித்திருப்பது பற்றி?


தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப்போரை நடத்திவரும் சிங்கள அரசு, உலக நாடுகளை ஏமாற்றி இராணுவ உதவிகளைப் பெறுவதற்காகவே கருணாவை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது. அதற்காக, துரோகி கருணாவிற்கு பதவி தந்துள்ளார் ராஜபக்சே. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்ததற்காக, அடக்குமுறை அரசின் தலைவர் ராஜபக்சேவால் வழங்கப் பட்ட ஒரு "கைக்கூலியாகவே அதனைப் பார்க்கின்றோம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன் Empty Re: நக்கீரன் சஞ்சிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum