ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்

+9
அசோகன்
krishnaamma
priyamudanprabu
சாந்தன்
கலைவேந்தன்
சிவா
படுகை
புவனா
கோவை ராம்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  Empty பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்

Post by கோவை ராம் Tue Nov 16, 2010 7:26 pm

சமீபத்தில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் நிமித்தம், திருச்சிராப்பள்ளி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். உள்ளே நுழையும்போதே தேனடை போல புரோக்கர்கள், "என்ன சார் ஃப்ரெஷ்ஷா, ரினிவலா, ஈசிஎன்ஆரா என்று கேட்டு அபிமன்யுவை வதம் செய்ய சூழ்ந்து கொண்ட கெளரவர்களைப் போல சக்ர வியூகம் அமைத்தார்கள்.". அவர்களைத் தவிர்த்து விட்டு ஏற்கனவே ஆன்லைனில் நிரப்பி வைத்திருந்த படிவத்துடன் ஹனுமன் வாலுடன் இணைந்து நின்றேன். அப்பொழுது அங்கு ஒருவர் மைக்கில் ஏதோ அறிவிப்பு செய்வதற்கு ஆயத்தமானார். அவர் அந்த அலுவலகத்தில் காவலாளி உத்யோகத்திற்காக ஒரு தனியார் செக்யூரிட்டி பீரோவினால் அனுப்பி வைக்கப்பட்ட காவலாளி என்பதை அவருடைய சீருடை உணர்த்தியது.



முதலில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து, தெளிவான தமிழில் தேர்ந்த மேடைப் பேச்சாளர் போல் பேசத் துவங்கினார். வரிசையாக முதன்முறையாக பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய வந்திருப்பவர்கள், புதுப்பிப்பவர்கள், தொலைந்தவற்றிற்கு மாற்று பெற வந்திருப்பவர்கள் என அனைவருக்கும் தனித்தனியாக படிவம் நிரப்புவது எப்படி என்றும், அதில் செய்ய வேண்டியவை, கூடாதவை என்னென்ன என்பனவற்றைத் தெளிவாகவும், பொறுமையாகவும் விளக்கினார். இடையிடையே வித்யாசமாக பொன்மொழிகள், குழந்தைகளுக்கு நற்குணங்களை போதிக்க வேண்டியதன் அவசியம் என்பனவற்றையும் கூறி அசத்தினார்.


இத்தனைக்கும் இந்த நபர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உத்யோகஸ்தர் அல்ல. ஒரு தனியார் செக்யூரிட்டி பீரோ அனுப்பி வைத்திருக்கும் ஒரு காவலாளி. நான் பல இடங்களில் பார்த்த வரையில் இது போன்ற காவலாளிகள் கடனே ஒன்று ஒரு நாற்காலியில் அமர்ந்து பீடியோ, சிகரெட்டோ புகைத்த வண்ணம், சுவற்றிற்கு செங்காவி அடித்துக் கொண்டிருப்பர். இவரோ தனது செயல்பாடுகளால் மற்றவர்களிடமிருந்து நிரம்பவே வித்யாசத்தைக் காட்டினார். இவரது பேச்சின் ஹைலைட்டாக ஒரு விஷயம் கூறினார். " மேலே காத்திருக்கையில் உங்களுடைய உடைமைகளை நீங்கள் தெரியாமல் தவற விடலாம்; அவற்றை பொறுப்புணர்ந்து உங்களிடம் சேர்ப்பிக்கும் நண்பர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்; ஆனால் என்னைப் போன்ற சில தீய எண்ணம் கொண்டவர்கள் உங்களது பொருட்களைக் களவாடிவிடும் அபாயம் இருக்கிறது. எனவே உங்களது உடைமைகளை கூடிய மட்டும் என்னைப் போன்ற திருடர்கள் வசம் ஏமாந்து விடாதீர்கள் என்று அதில் "என்னைப் போன்ற" என்ற வார்த்தையை அழுத்திக் கூறிவிட்டு, மற்றவர்களைக் குறை காண்பதைக் காட்டிலும், என்னையே சொல்லிக் கொள்வதால் எனக்கும் பிரச்சனை ஏற்படாது என அதற்கு விளக்கம் வேறு கொடுத்தார்.

சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மிகுந்த பொறுமையுடனும், சிரத்தையுடனும் பாஸ்போர்ட் பெறுவதற்குண்டான அடிப்படை வழிகளை எளிமையான தமிழில் விளக்கிவிட்டு, இடையிடையே, முகவர்களிடம் உங்களது பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். யாருடைய சிபாரிசின் பேரிலும் இங்கு குறித்தகாலத்தை விடக் குறைவான காலத்தில் பாஸ்போர்ட் அளிக்கப்பட மாட்டாது, ஏமாறாதீர்கள்; ஏமாறாதீர்கள் என்று கூறிக் கொண்டே இருந்தார். அங்கேயே அவரைச் சுற்றி நின்ற முகவர்கள் கூட இதைப் பெரிது படுத்தாமல் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். தவிர போலி ஆவணங்கள் கொடுத்து ஏமாற்ற முனைவதால் விளையும் சங்கடங்களையும் எடுத்துக் கூறினார்.
கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தையுடன் கூடிய தாய்மார்கள் போன்றோர்களுக்கெல்லாம் முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகள் என்றுமே நல்லொழுக்கம் என்ற நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டால்தான், அவர்களுடைய எதிர்காலத்தை மிகச் சிறப்பானதாக அறுவடை செய்ய இயலும். எனவே அவர்களுக்கு நல்ல ஒழுக்கங்களையும், பழக்கவழக்கங்களையும் போதியுங்கள் என்று கூறிவிட்டு, அனைவரும் பொறுமையுடனும் இன்முகத்துடனும் எல்லோருடனும் பழகுங்கள்; இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள்; ஆனால் அக்கறையுடன் செயல்பட்டால் எக்கரையும் பச்சைதான் என்று கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.

அரசாங்க சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி, இவை தவிர இதர படிகள், ஓய்வு பெற்ற பிறகு பென்ஷன், பணிக் காலத்தில் இடையிடையே ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் என அனைத்தையும் பெற்றுக் கொண்டும் கூட, கடமைக்காக லஞ்சம் கேட்கும் லஞ்சப் பேய்கள் மத்தியில், இவரைப் போன்ற கடமையுணர்வு மிகுந்த உன்னத ஆத்மாக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். வெகு சமீபத்தில் திரு கடுகு அவர்களுடைய வலைமனையில் கூட அவர் தான் அமெரிக்காவில் கண்ட பள்ளி வாகன ஓட்டுனர் பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்ததும் இவருடைய நினைவுதான் வந்தது. இவரைப் போன்ற ஒரு நபர் ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும் இருந்துவிட்டால் என்ற பேராசைக் கனவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அவரைப் புகைப்படம் எடுக்க முயன்ற போது நாசூக்காக மறுத்து விட்டார். சென்ற வேலை இனிதே முடிந்த திருப்தியுடனும், அவரின் பெயரைக் கூட கேட்டுக் கொள்ளாத என்னுடைய மறதியையும் நொந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்

- யதிராஜ்


ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  Empty Re: பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்

Post by புவனா Tue Nov 16, 2010 7:32 pm

இவரை போன்றோர் தான் தேவை நாட்டிற்கு....
அந்த முகம் அறிய மனிதர்க்கு ஒரு சல்யுட்....
நன்றி நன்றி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  Empty Re: பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்

Post by படுகை Tue Nov 16, 2010 7:39 pm

" மேலே காத்திருக்கையில் உங்களுடைய உடைமைகளை நீங்கள் தெரியாமல் தவற விடலாம்; அவற்றை பொறுப்புணர்ந்து உங்களிடம் சேர்ப்பிக்கும் நண்பர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்; ஆனால் என்னைப் போன்ற சில தீய எண்ணம் கொண்டவர்கள் உங்களது பொருட்களைக் களவாடிவிடும் அபாயம் இருக்கிறது. எனவே உங்களது உடைமைகளை கூடிய மட்டும் என்னைப் போன்ற திருடர்கள் வசம் ஏமாந்து விடாதீர்கள்

இதுவும் நல்லாயிருக்கே!!
avatar
படுகை
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Back to top Go down

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  Empty Re: பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்

Post by சிவா Tue Nov 16, 2010 9:48 pm

புதிதாக உள்ளது, இக்காவலரும் புதிதாக வந்திருப்பார் போலும். பைத்தியக்காரன் என்ற பட்டம் மக்களால் அவருக்கு கொடுக்கப்படாமல் இருந்தால் அதுவே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை!


பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  Empty Re: பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்

Post by கலைவேந்தன் Fri Nov 19, 2010 7:33 pm

சபாஷ் மனிதர்..! நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  Empty Re: பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்

Post by சாந்தன் Fri Nov 19, 2010 8:47 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  Empty Re: பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்

Post by priyamudanprabu Fri Nov 19, 2010 9:48 pm

சபாஷ் மனிதர்..! நன்றி


அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  Empty Re: பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்

Post by krishnaamma Tue Feb 15, 2011 12:16 pm

அவருக்கு ஒரு சபாஷ் ! அதை எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்த உங்களுக்கு நன்றி புன்னகை சரியா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  Empty Re: பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்

Post by அசோகன் Tue Feb 15, 2011 12:43 pm

Group attention! Salute Him!
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  Empty Re: பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்

Post by த.மணிகண்டன் Wed Jun 22, 2011 5:33 pm

இப்படிப்பட்ட காவலர்கள் பார்ப்பது மிகவும் அரிது. கண்டிப்பாக அவருக்கு ஒரு சல்யூட் புன்னகை .....
த.மணிகண்டன்
த.மணிகண்டன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  Empty Re: பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum