ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? Empty செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

Post by சிவா Tue Nov 16, 2010 6:42 am

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

கல்யாணத்திற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கிய தோஷமாக இது கருதப்படுகிறது. ஆனால் இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம்.

ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என சோதிடம் கூறுகிறது.

லக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும். அப்படி மீறி திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவாய் தெசை நடைபெற்றால் அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என சோதிடம் கணிக்கிறது.

2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது.

இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன.


மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும்.

குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

சூரியன், சந்திரன், குரு, சனி, ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என சோதிடம் கூறுகிறது.

சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

2 - இடம் மிதுனம், அல்லது கன்னி ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

4 - ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

7 - ம் இடம் கடகம், மகரம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.

8 - ம் இடம் தனுசு, மீனம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.


இரண்டும், இரண்டிற்கு மேற்பட்ட தாரம் ஏற்படக்காரணம் என்ன?

7ம் அதிபதி கெட்டு கெட்டவர்கள் வீட்டில் அமையப்பெற்றால் இருதார யோகம் உண்டு

7ம் அதிபதி ராகுவுடன் சேர்க்கை பெற்றாலோ அல்லது

7ம் இடத்தில் அசுபர் இருந்தாலோ இரண்டு அசுபர்கள் 2ம் இடத்தில் அமைந்தாலோ

7ம் அதிபதி 10ல் அமையப் பெற்று ஆட்சி, உச்சம், நட்பு பெற்று 10ம் அதிபதியால் பாக்கப்பட்டாலோ

11ம் வீட்டில் இரண்டு வலிமையான கிரகங்கள் அமையப் பெற்று இருந்தாலோ

7ம் அதிபதியும் சுக்கிரனும் இணைந்து இருந்தாலோ அம்சத்தில் சேர்ந்து காணப்பட்டாலோ

7ம் அதிபதி கெட்டு 11ல் இரு கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலோ

7ம் இடத்தில் சுக்கிரன், சனி இணைந்து காணப்பட்டாலோ

சுக்கிரன் இரட்டை ராசியில் அமையப்பெற்று அந்த வீட்டிற்கு அதிபதி உச்சம் பெற்று 7ம் அதிப்தி ஆட்சி பெற்று இருந்தால் இரண்டும், இரண்டிற்கு மேற்பட்ட தாரங்கள் உண்டாகின்றது. 7ம் இடத்தில் எத்தனை சுபகிரகங்கள் உண்டோ அத்தனை தாரங்கள் எனக் கொள்க.


விதவைப் பெண்

7ம் இடத்தில் உள்ள செவ்வாய் சூரியன் சேர்கை பெற்றால் அவள் விதவையாவாள்.

மூன்று அசுபர்கள் 7ம் இடத்தில் அமையப்பெற்றால் அந்தப் பெண் மாங்கல்ய பலம் இழந்து விடுவாள்.

8ம் இடமான மங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது, போன்ற அசுபர்கள் அமையப்பெற்றாலும் விதவையாகி விடுவாள்.

7ம் இடத்தில் சனி, செவ்வாய் போன்ற அசுபர்கள் இணைது இருதால் இளவயதில் மாங்கல்ய பலம் இழ்க்க நேரிடும்.

விவாகரத்து


மங்கையர்களின் ஜாதகத்தில் 7ம், 8ம் இடங்கள் கெட்டிருந்தாலும்

லக்கினாதிபதி, 7ம் இடத்திற்கு அதிபதி 6, 8 போன்ற மறைவிடத்தில் இருந்தாலும்

12ம் இடத்தில் ராகு, 6ம் இடத்தில் கேது அமையப் பெற்ற பெண்களும்

7ம் இடத்தில் நீச கிரகம் இருந்து சுபரால் பார்க்கப்பட்டாலும் விவாகரத்து அமையப் பெறும்

6-ம் வீடும், 7-ம் வீடும் தரும் களத்திர தோஷம்:

திருமணம் என்றால் உடனே நினைவுக்கு வருவது 7-ம் வீடு தான். ஏனென்றால் அது களத்திர ஸ்தானம் என்றழைக்கப்படுகிறது. 7-ம் வீடு களத்திர ஸ்தானமென்றால் 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடான 6-ம் வீடு திருமண பந்தத்திற்கு எதிர்மறையான பலனைக் கொடுக்கும் வீடாகும். தம்பதியர்க்குள் கருத்து வேற்றுமை, பிரிவு, ஆகியவை களைக் கொடுக்கும். ஆகவே திருமணப் பொருத்தம் பார்க்கும்போதே 7-ம் வீடும், 6-ம் வீடும் சம்பந்தப்பட்டு இருக்கிறதா எனப் பார்த்து ஜாதகங்களைச் சேர்த்தல் நலம்.

வெறும் பத்துப் பொருத்தங்களை மட்டும் பார்த்து ஜாதகங்களை இணைப்பது அவ்வளவு நல்லது அல்ல; சிலர் தசப் பொருத்தம் மட்டும் பார்ப்பர்; சிலர் சமசப்தமம் இருந்தால் மட்டும் போதுமென்று ஜாதகங்களை இணைப்பர். சிலர் நட்சத்திர ஆதிக்க பலம் உள்ளவைகளான மிருகசீரிஷம், மகம்,சுவாதி, அனுஷம் ஆகிய 4 நட்சத்திரங்களுக்கும் தசப்பொருத்தம் தேவை இல்லை என்று ஜாதகங்களைச் சேர்ப்பார்கள். நாம் 6-ம் வீடும், 7-ம் வீடும் சமமந்தப் பட்டால் எவ்வாறு பாதிப்புக்களை, பாதகங்களை ஏற்படுத்துகின்றன என்று பார்ப்போம்.

உதாரண ஜாதகம் - 1


சூரி/
சனி

சுக்/
ராகு

11

12

புதன்

ராசி

/குரு

சந்திர


2


6

5

செவ்/
கேது

3

2

புதன்

4

சந்தி

ல/ கேது

அம்சம்

குரு

சூரி


ராகு


11

செவ்/ சுக்

சனி

8






உதாரண ஜாதகம் எண் 1- ஐப் பாருங்கள்.

இது கடக லக்கின ஜாதகம். லக்கினத்தில் குரு. 7-ம் வீட்டில் சந்திரன். இது கஜகேஸ்வரி யோகம். ஆகவே மிகுந்த நல்ல பலனைக் கொடுக்கும் என்று கூறலாம். ஆனால் உண்மையில் அவ்வாறில்லை. திருமணமாகி சில மாதங்கள் தான் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். அதற்குப் பின் பிரிவுதான். திரும்பவும் அவர்கள் சேரவே இல்லை. இதற்குக் காரணம் என்ன? 7-ம் வீட்டிற்கு குருவின் பார்வை. குரு பார்க்கக் கோடிப் புண்ணியம் அல்லவா? என்று நீங்கள் கேட்க்கலாம். குருவின் பார்வை நம்மையைச் செய்யவில்லை.

மாறாகத் தீமையைத்தான் செய்து இருக்கிறது. எப்படி? குரு 6-ம் வீட்டிற்கு அதிபதியல்லவா? 6-ம் வீடு 7-ம் வீட்டிற்கு எதிரிடையான பலனைக் கொடுக்க வேண்டுமல்லவா? 7-ம் வீடு திருமணமென்றால் 6-ம் வீடு பிரிவினை அல்லவா? ஆக குருவின் பார்வை திருமண வாழ்க்கையில் பிரிவினையைக் கொடுத்து விட்டது. அதைத் தவிர செவ்வாய் 7-ம் வீட்டை வேறு பார்க்கிறார். ஆக இருவரும் சண்டை போட்ட்டுக் கொண்டு பிரிந்து விட்டனர்.

உதாரண ஜாதகம் - 2



2

செவ்

4

சுக்/
ராகு

ல/
குரு

ராசி

சூரி/
புதன்

12


சந்தி


கேது

10

சனி

8

2

சனி/
ராகு

4

சுக்கி

ல/
சூரிய

அம்சம்

செவ்

12


7


11

10

குரு/
கேது

புத்/
சந்தி




இரண்டாம் ஜாதகத்தை பாருங்கள்.

இது கும்ப லக்கின ஜாதகம். லக்கினத்தில் குரு. 7-ல் சந்திரன். இதுவும் கஜகேஸ்வரி யோக ஜாதகம் தான். உடனே களத்திர ஸ்தானத்தில் கஜகேஸ்வரி யோகம் ஏற்படுவதால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தால் ஏமாற்றமாகத்தான் இருக்கும்.

7-ல் சந்திரன். அவர் யார்? அவர் 6-ம் வீட்டின் அதிபதி. 6-ம் வீட்டின் அதிபதி 7-ல்; 7-ம் வீட்டின் அதிபதி சூரியன் 6-ல்; இரண்டு அதிபதிகளும் பரிவர்த்தனையாகி விட்டார்கள். இந்தப் பரிவர்த்தனை திருமண வாழ்க்கையை முற்றிலுமாகக் கெடுத்து விட்டது.

7-ம் வீடு, 6-ம் வீடும் பரிவர்த்தனை யில் சம்மந்தப்பட்டு விட்டதால் திருமண வாழ்க்கை கசந்து, இவர் மனைவியுடன் வாழ்த நாட்கள் மாதங்கள் மூன்று மட்டுமே. சுமார் 60 வயது வரை வாழ்ந்த இவர் தனிமையிலேயே தன் வாழ்நாட்களைக் கழித்தார். பார்த்தீர்களா 6-ம் வீடு செய்கின்ற கோலத்தை.

உதாரண ஜாதகம் -3


6

7

சுகி/
சனி

சூரி

5

ராசி


கேது/செவ்
புத

ராகு


சந்தி


குரு

2

ல/

12


2

3

4

சூரி/
குரு

ல/
புதன்

அம்சம்


கேது/சனி
சந்தி

ராகு


சுக்கி


11

செவ்

9

8






மூன்றாவது ஜாதகத்தைப் பாருங்கள்.

துலா லக்கின ஜாதகம். 7-ம் வீட்டிற்குக் குருவின் பார்வை. குரு 6-ம் வீட்டின் அதிபதியல்லவா? 6-ம் வீட்டின் அதிபதியாகி 7-ம் இடத்தைப் பார்ப்பதால் திருமண பந்தம் Divorce வரை சென்று விட்டது. ஆம். திருமணபந்தம் விலகி இருவரும் விவாக ரத்துச் செய்து விட்டனர்.


செவ்வாய் தோஷம் என்றால் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? Empty Re: செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

Post by சிவா Tue Nov 16, 2010 6:48 am

உதாரண ஜாதகம் - 4




6

சனி/
புதன்

சூரி/
செவ்

சுக்கி

ராகு

ராசி


10

4


கேது


3

2

ல/
கு/சந்

12

11

12

ல/

2

சூரி/ராகு

அம்சம்


3

9


கேது


8

குரு

புத/சு
சனி/சந்

செவ்
நான்காவது ஜாதகத்தைப் பாருங்கள்.
இதுவும் துலா லக்கின ஜாதகம். லக்கினத்தில் குரு. 7-ம் வீட்டிற்கு 6-ம் வீட்டிற்குடைய குருவின் பார்வை. இத்துடன் 7-ல் சனி வேறு. திருமணமாகி 3-மாதங்கள் சேர்ந்து இருந்தனர். பின்பு சண்டையிடுக் கொண்டு அந்தப் பெண் தாய் வீட்டில் தஞ்சமடைந்து விட்டாள். திருமணமாகி ஒன்றறை ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. அதில் 3 மாதங்கள்தான் சேர்ந்து இருந்தனர். இன்னும் சேர வில்லை. பார்த்தீர்களா 6-ம் வீட்ட்டதிபர் 7-ம் வீட்டைப் பார்த்ததினால் விளைந்த விபரீதத்தை. சரி! இவர் மனைவியின் ஜாதகத்தைப் பார்ப்போமா?


உதாரண ஜாதகம் - 5



புதன்

சூரி/
சந்

ல/ சனி
செவ்/சுக்

2

10

அம்சம்


கேது

ராகு


4


குரு

7

6

5

ராகு

சூ/
சனி

ல/ சந்
சுக்

செவ்

10

அம்சம்


3

9


குரு


8

7

புத

கேது
ஐந்தாம் ஜாதகதைப் பாருங்கள்

இவர் ரிஷப லக்கினம். லக்கினத்தில் செவ்வாய், சனி, சுக்கிரன். மூவரும் 7-ம் இடத்தைப் பார்க்கிறார்கள். செவ்வாய், சனி இரண்டும் இயற்கையிலேயே அசுப கிரகங்கள். லக்கினத்தில் இருப்பதால் இவரின் குணம் கெட்டு விட்டது. செவ்வாய் இருப்பதால் முரட்டு சுபாவம் உள்ளவராகவும், சனி இருப்பதனால் மிகத் தாழ்ந்த சுபாவம் உள்ளவராகவும் இருக்கின்றார். இவர் தன் கணவருடன் சேராததற்குக் காரணம் இவர் சுபாவமே. தன் கணவன், தன் தாயார், தந்தையரை விட்டு தன்னுடன் வர வேண்டுமென்பது இவரது வாதம். இவர்கள் பிரிந்து வாழ்வதற்கு இதுதான் காரணம். செவ்வாய், சனி இருப்பதுடன் லக்கினத்தில் சுக்கிரனும் இருக்கிறார். சுக்கிரன் யார்? சுக்கிரன் 6-ம் வீட்டிற்கு அதிபதி. 6-ம் வீட்டின் அதிபதி லக்கினத்தில் இருந்து 7-ம் வீட்டைப் பார்ப்பதனால் அவர்களுக்குள் பிரிவு ஏற்படக் காரணமாயிற்று. சுக்கிரன் ஓர் அழகிய கிரகமல்லவா? அவர் லக்கினத்தில் இருப்பதனால் அவருக்கு அழகிய உருவ அமைப்பை சுக்கிரன் கொடுத்து விட்டார். ஆனால் அதே சுக்கிரன் 6-ம் வீட்டு அதிபதியாகி 7-ம் வீட்டைப் பார்த்ததினால் பிரிவையும் உண்டாக்கி விட்டார்.

பொதுவாக ஜாதகங்களைச் சேர்க்கும்போது 10-ப் பொருத்தங்களை மட்டும் பார்க்காது 7-ம் வீடு பாதிக்கப் பட்டு இருக்கிறதா என்று பார்த்துச் சேர்ப்பது நல்லது. அதே போன்று சந்திரனுக்கு செவ்வாய், சனி, ராகு போன்ற தீய கிரகங்கள் சேர்க்கை இல்லாது பார்த்துச் சேர்ப்பது நல்லது. இவர்கள் சேர்க்கை இருப்பின் அந்த ஜாதகத்தை ஒதுக்கிவிடவும்.

மூலம்: பனிப்புலம்!


செவ்வாய் தோஷம் என்றால் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? Empty Re: செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

Post by nivetha Thu Nov 18, 2010 4:21 pm

சார் என் பெயர் கனி. திருவாதிரை நட்சத்திரம் .மிதுன ராசி..பிறந்த நாள் 5 .6 .1989 .இரவு 7 .28 மணி.கொஞ்சம் என்னை பத்தியும் என் வருங்காலத்தை பத்தியும் சொல்லுங்க சார் ....
nivetha
nivetha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Back to top Go down

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? Empty Re: செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

Post by புவனா Thu Nov 18, 2010 4:29 pm

கலை சார் வந்த உடனே சொல்லுகிறோம்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? Empty Re: செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

Post by ரபீக் Thu Nov 18, 2010 4:31 pm

நமக்கு தேவை சந்தோசம் ,,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? Empty Re: செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

Post by nivetha Thu Nov 18, 2010 4:41 pm

நன்றி புவனா அக்கா ......
nivetha
nivetha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Back to top Go down

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? Empty Re: செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

Post by சிவா Thu Nov 18, 2010 5:16 pm

nivetha wrote:நன்றி புவனா அக்கா ......

புவனா அக்கா! ஹா ஹா ஹா!!!

அவருக்கு வயது 66! ஆண்டி அல்லது பாட்டி எனக் கூறுங்கள் நிவேதா!


செவ்வாய் தோஷம் என்றால் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? Empty Re: செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

Post by புவனா Thu Nov 18, 2010 5:17 pm

அப்போ நீங்க கொள்ளு தாத்தாவ அண்ணா...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? Empty Re: செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

Post by புவனா Thu Nov 18, 2010 5:18 pm

நீங்கள் என்னை அக்கா என்று சொல்லவேண்டாம்... புவனா என்றே சொல்லலாம்... nivetha


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? Empty Re: செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

Post by சிவா Thu Nov 18, 2010 5:19 pm

புவனா wrote:அப்போ நீங்க கொள்ளு தாத்தாவ அண்ணா...

ஜொள்ளுத் தாத்தா!


செவ்வாய் தோஷம் என்றால் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? Empty Re: செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum