ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு

5 posters

Go down

இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு Empty இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு

Post by சிவா Sat Nov 13, 2010 7:06 am

சென்னை : ""மக்களுக்கு இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல,'' என, சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகன் பேசினார்.

சட்டசபையில், துணை பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து, நிதியமைச்சர் அன்பழகன் பேசியதாவது:இந்தியாவிற்கு, அமெரிக்கா உடனான உறவு முக்கியமானது. அந்நாட்டுடன் ஒப்பிடும் போது, பல்வேறு மாறுபாடான கருத்துக்கள் இருக்கலாம். கொள்கைகளில் மாறுபாடு இருக்கலாம். ஆனால், சோவியத் நாட்டுடனான உறவை நம்மால் எப்படி விட முடியாதோ, அதேமாதிரி அமெரிக்கா உடனான உறவையும் நம்மால் கைவிட முடியாது. அமெரிக்காவின் உறவை விட்டு விடுவதும் நல்லதல்ல. இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ஒபாமா, சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது, இரு நாட்டுடனான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில், தமிழகம் முக்கிய பங்கை வகிக்கிறது. மத்திய அரசு அதிக உதவி செய்தாலும், அதற்கேற்ப தமிழக அரசும் ஈடு கொடுத்துள்ளது. பல்வேறு திட்டப் பணிகள் குறைந்த அளவில் நடந்துள்ளதாக, பன்னீர்செல்வம் சுட்டிக் காட்டினார். இன்னும் ஏழு மாதங்கள் இருக்கின்றன. அதற்குள், அனைத்து திட்டங்களும் முழு வீச்சில் நிறைவேற்றப்படும்.தொழிலாளர்கள் மீது, இந்த அரசு மாறுபட்ட எண்ணம் கொண்டிருப்பது போல், கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். தொழிலாளர்களை மதிப்பது தான், திராவிடக் கொள்கை. தொழிலாளர்களுக்கு எதிராக ஒருபோதும் இந்த அரசு செயல்படாது. கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை அறிவித்ததும், 21 லட்சம் வீடுகள், ஆறு ஆண்டுகளில் கட்ட வேண்டும் என்றதும், இந்த திட்டம் நடக்குமா, நிறைவேறுமா என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். நடத்தி முடிக்கின்ற திட்டத்தை தான், முதல்வர் அறிவிப்பார். அதை, அவரே நிறைவேற்றியும் முடிப்பார்.

தற்போதுள்ள ஆட்சியின் கால வரையறை முடிந்தாலும், மறுபடியும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என, திருச்சியில் நடந்த விழாவில் முதல்வர் குறிப்பிட்டார். அதன்படி, மறுபடியும் நாங்கள் வருவோம். விலைவாசி உயர்வு பிரச்னையை பலர் தெரிவித்தனர். விலை ஏற்றத்தை நாங்கள் வரவேற்கவில்லை. அதேநேரத்தில், விலை ஏற்றத்தை தடுக்க முடியாது. விலை ஏற்றத்திற்கு, பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், வியாபாரிகளும் தான் காரணம் என்றால், அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், பொருட்களின் தேவை அதிகரிப்பு தான், விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. இதனால், மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் தான், ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருகிறோம்.

மக்களுக்கு இலவசம் வழங்குவதையும், பலர் விமர்சனம் செய்கின்றனர். இலவச கலர் "டிவி' வழங்கும் திட்டத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், "அறிவு வளர்ச்சியை ஏற்படுத்தும் சாதனமாக "டிவி' உள்ளது. அதை வெறும் பொழுதுபோக்கு சாதனமாக பார்க்கக் கூடாது. மக்களுக்கு "டிவி' வழங்குவது தவறல்ல' என்று ஐகோர்ட் தீர்ப்பு கூறியது. அரசை, மக்கள் தான் தேர்வு செய்கின்றனர். செலவழிக்கப்படும் நிதி, மக்கள் கொடுத்தது தான். அரசு பணம் கிடையாது. மக்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை, மக்களுக்கே செலவழிக்கிறோம். ஜனநாயகத்தில், தேவை ஏற்படுகின்ற மக்களுக்காக ஒரு திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்துவது தவறல்ல. இலவசம் வழங்குவதை, இழிவான காரியமாக கருதக் கூடாது. இலவசம் என்பது, தேவைக்கு ஏற்ப, அளவுக்கு ஏற்ப உட்பட்டது.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தால், இதுவரை 2.5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக, 500 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. "108' திட்டமும், மக்களின் தேவைக்காக கொண்டு வரப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்குகிறோம். இவை எல்லாம் தெரிந்தும், வேண்டுமென்றே அரசு மீது குறை கூறுகின்றனர். இந்த திட்டங்களினால், அ.தி.மு.க.,வினர் பயன்பெறவில்லையா? அ.தி.மு.க.,வினர் யாரும் கர்ப்பமாவதில்லையா? (இவ்வாறு அன்பழகன் கூறியதும், அ.தி.மு.க., உறுப்பினர்கள் உட்பட அனைவரும் குபீரென சிரித்தனர்.) நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என, பன்னீர்செல்வம் கூறினார். அவர் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், எல்லா ஆசைகளும் நிறைவேறுவது கிடையாது. அரசு கேபிள் "டிவி' என்ன ஆனது என, பொள்ளாச்சி ஜெயராமன் கேட்டார். அது, நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ஜெயராமன் - அ.தி.மு.க: அன்றைக்கு அரசு கேபிள் "டிவி' கொண்டு வர ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததும், கவர்னர் மாளிகைக்குச் சென்று இன்றைய முதல்வர் தான் தடுத்தார்.

முதல்வர் கருணாநிதி: திரும்ப, திரும்ப தவறான தகவல்களை அ.தி.மு.க.,வினர் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். நான் வேறு விஷயமாக தான், கவர்னரை சந்திக்கச் சென்றேன். அரசு கேபிளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என நான் கூறவில்லை.

அன்பழகன்: இந்த ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது போல் பேசுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியை விட, எல்லா வகை குற்றங்களிலும் தி.மு.க., ஆட்சியில் குறைவாக தான் உள்ளன.

தினமலர்!


இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு Empty Re: இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு

Post by சிவா Sat Nov 13, 2010 7:09 am

இலவசங்கள் வழங்குவது இழிவான காரியம் அல்ல! ஏனென்றால் இவர்கள் அனைவருமே அரச பரம்பரையில் பிறந்து வந்தவர்கள். அதனால் இலவசங்கள் வழங்கிக் கொண்டேதாம் இருப்பார்கள்!

இலவசம் என்றதும் சிறிதும் சிந்திக்காமல் அவற்றை வாங்க ஓடும் பாமரர்கள்தான் இழிவானவர்கள். பிச்சை எடுக்கும் மக்களுக்கும், இலவசங்களுக்கு அலையும் மக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை!


இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு Empty Re: இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு

Post by thirujothi Sat Nov 13, 2010 7:41 am

பிச்சை எடுக்கும் மக்களுக்கும், இலவசங்களுக்கு அலையும் மக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று சிவா அவர்கள் கூறினார்கள்...சிறு வித்தியாசம் இலவசம் மிக மோசம்..


Last edited by thirujothi on Sat Nov 13, 2010 7:43 am; edited 1 time in total
thirujothi
thirujothi
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு Empty Re: இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு

Post by சிவா Sat Nov 13, 2010 7:43 am

thirujothi wrote:பிச்சை எடுக்கும் மக்களுக்கும், இலவசங்களுக்கு அலையும் மக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று சிவா அவர்கள் கூறினார்கள்...இருக்கிறது வித்தியாசம் இலவசம மிக மோசம்

மிகவும் சரி ஜோதி! இலவசம் பெறுவது இன்னும் கேவலமான செயல்! இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு 678642


இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு Empty Re: இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு

Post by veluchamy Sat Nov 13, 2010 7:55 am

சிவா wrote:
இலவசம் என்றதும் சிறிதும் சிந்திக்காமல் அவற்றை வாங்க ஓடும் பாமரர்கள்தான் இழிவானவர்கள். பிச்சை எடுக்கும் மக்களுக்கும், இலவசங்களுக்கு அலையும் மக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை!

இலவசம் ஒருமனிதனை சோம்பேரியாக்கி அவன் வாழ்க்கைத் தரத்தைத் தாழ்த்தும் சூழ்ச்சியே...
''பசியென்று சொன்னால் தூண்டிலைக்கொடு '' என்கிறது சப்பானிய பழமொழி


எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
veluchamy
veluchamy
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Back to top Go down

இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு Empty Re: இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு

Post by படுகை Sat Nov 13, 2010 8:37 am

veluchamy wrote:
''பசியென்று சொன்னால் தூண்டிலைக்கொடு '' என்கிறது சப்பானிய பழமொழி

சரியே...
avatar
படுகை
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Back to top Go down

இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு Empty Re: இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு

Post by ராஜா Sat Nov 13, 2010 10:46 am

veluchamy wrote:
சிவா wrote:
இலவசம் என்றதும் சிறிதும் சிந்திக்காமல் அவற்றை வாங்க ஓடும் பாமரர்கள்தான் இழிவானவர்கள். பிச்சை எடுக்கும் மக்களுக்கும், இலவசங்களுக்கு அலையும் மக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை!

இலவசம் ஒருமனிதனை சோம்பேரியாக்கி அவன் வாழ்க்கைத் தரத்தைத் தாழ்த்தும் சூழ்ச்சியே...
''பசியென்று சொன்னால் தூண்டிலைக்கொடு '' என்கிறது சப்பானிய பழமொழி

இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு 678642 இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு 154550 அருமை வேலுச்சாமி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு Empty Re: இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum