ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதிலுமா முறைகேடு?

3 posters

Go down

இதிலுமா முறைகேடு? Empty இதிலுமா முறைகேடு?

Post by நிசாந்தன் Wed Nov 03, 2010 1:13 pm

1999-ம் ஆண்டு நடந்த கார்கில் யுத்தத்தில், இந்தியா பாக்கித்தானை வென்று, நாட்டுக்கே மிகப்பெரிய பெருமையை தேடித்தந்தது. இந்த கார்கில் யுத்தத்தில், இந்தியா பெற்ற வெற்றி எளிதில் கிடைத்துவிடவில்லை. கடும் பனியையும், குளிரையும் பொருட்படுத்தாமல், நமது எல்லைப் பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள், ‘பாரத் மாதா கீ ஜே’ என்று வீர முழக்கமிட்டு, போரிட்டதால்தான் அந்த வெற்றி கிடைத்தது.

இந்த போரில் பல இந்திய வீரர்கள், ‘நாளைய இந்தியாவிற்காக எங்களது இன்னுயிரை இன்று தருகிறோம்’ என்று உயிர் நீத்ததால் கிடைத்த வெற்றிதான் இது. ஆனால், அவர்களின் தியாகத்தைக்கூட உரிய முறையில் அங்கீகரிக்காமல், தன்னலம் மேலோங்கிய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது எல்லா மக்களையும் கடும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

மும்பையில், கார்கில் போரில் ஈடுபட்ட் இராணுவ வீரர்களுக்காகவும், தங்கள் வாழ்க்கைத் துணையை இழந்த விதவைகளுக்காகவும், வீடு கட்டிக் கொடுப்பதற்காக இராணுவ நிலம் ஒன்றை, அதுவும் நகரில் முக்கியமான இடத்தில் பெற்று, ‘ஆதர்சு வீட்டு வசதி திட்டம்’ என்று ஒரு திட்டத்தைத் தொடங்கினார்கள்.
மொத்தம் 26 கிரவுண்டு நிலத்தில், 6 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி வீடுகளைக் கட்டத்தான் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அனைத்து விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, 31 மாடியில் குடியிருப்புகள் கட்டப்பட்டன.

அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்ட கொலபா பகுதி, மும்பையில் மிகவும் முக்கியமான பகுதி ஆகும். மொத்தம் 103 உறுப்பினர்களுக்காக இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், கார்கில் போரில் நேரடியாக ஈடுபட்டவர்கள் என்ற வகையில் 3 பேர்களுக்கு மட்டும்தான் வீடுகள் ஒதுக்கப்பட்டதாகவும், மீதி வீடுகள் எல்லாம் அரசியல்வாதிகள், அதிகாரிகள், உயர் இராணுவ அதிகாரிகள் குடும்பங்களுக்கு
ஒதுக்கப்பட்டதாகவும் இப்போது வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது.

அதுவும் மராட்டிய முதல்-மந்திரி அசோக் சவானின் மாமியார், மைத்துனர், மைத்துனி, முன்னாள் இராணுவ தளபதியான தீபக் கபூர், விஜ், மாதவேந்திர சிங் உள்பட பலர் இந்த வீடுகளை வாங்கியிருக்கிறார்கள். இதேபோல, பல அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளின் பினாமிகளுக்கு அந்த வீடுகள் எல்லாம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றால், நமது வீரர்களின் தியாகத்தை எவ்வளவு கொச்சைப்படுத்திவிட்டார்கள் என்பதுதான், எல்லோருக்கும் உள்ள எரிச்சலாகும்.

இதில் யார், யார், ஒதுக்கீடு பெற்றுள்ளார்களோ, அதை எல்லாம் பாரபட்சம் இல்லாமல் மத்திய அரசாங்கம் விசாரித்து, ஒதுக்கீட்டை இரத்து செய்வதோடு விட்டுவிடாமல், இவ்வாறு நம் நாட்டுக்காக போரிட்டு மடிந்த வீரர்களின் குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்ட வீடுகளை போலியாகப் பெற்ற எல்லோருக்கும், கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

முன்னாள் இராணுவத் தளபதிகள், ‘எங்களுக்கு இது கார்கில் வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட வீடுகள் எனத் தெரியாது. நாங்கள் எங்கள் வீடுகளை திருப்பித் தந்துவிடுகிறோம்’ என்று சாக்குபோக்கு சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. யார் காதில் பூ சுற்ற முயல்கிறார்கள்?

இது தெரியாது என்று சொன்னால், அவர்கள் இராணுவ தளபதியாக இருந்ததற்கே பொருள் இல்லாமல் போய்விடும். இதுபோல, இந்தியா முழுவதும் 17 இலட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இராணுவ அமைச்சகத்துக்கு சொந்தமானது என்று இப்போது கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் எல்லாம், இந்தியா முழுவதும் பரவலாக உள்ளது. இதில், 2 இலட்சம் ஏக்கர் நிலங்கள் 19 மாநிலங்களில் உள்ள 62 கண்டோன்மெண்ட் பகுதிகளில் இருக்கிறது.

உடனடியாக மத்திய அரசாங்கம் இந்த நிலங்கள் தொடர்பான ஆவணங்களை எல்லாம் கண்காணித்து, எந்தெந்த நிலங்கள் யார் யார் வசம் இப்போது இருக்கிறது? இதில் எல்லாம் என்ன முறைகேடுகள் எவ்வளவு ஆக்கிரமிப்புகள் இருக்கிறது? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

இதிலுமா முறைகேடு? Empty Re: இதிலுமா முறைகேடு?

Post by ராஜா Wed Nov 03, 2010 1:52 pm

என்ன பண்ணுவது நிஷாந்தன் , இது தான் இந்தியாவின் தலைஎழுத்து.

இதிலுமா முறைகேடு? 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதிலுமா முறைகேடு? Empty Re: இதிலுமா முறைகேடு?

Post by உதயசுதா Wed Nov 03, 2010 2:02 pm

இந்திய அரசியல்வியாதிகள் இதுல மட்டும் இல்ல நிசாந்தன்
செத்த பிணத்துல கூட முறைகேடு செய்வாங்க.
இதுக்கு பேருதான் ஜன நாயகம் தெரியாதா உங்களுக்கு


இதிலுமா முறைகேடு? Uஇதிலுமா முறைகேடு? Dஇதிலுமா முறைகேடு? Aஇதிலுமா முறைகேடு? Yஇதிலுமா முறைகேடு? Aஇதிலுமா முறைகேடு? Sஇதிலுமா முறைகேடு? Uஇதிலுமா முறைகேடு? Dஇதிலுமா முறைகேடு? Hஇதிலுமா முறைகேடு? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இதிலுமா முறைகேடு? Empty Re: இதிலுமா முறைகேடு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum