ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!

2 posters

Go down

இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Empty இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!

Post by சிவா Thu Oct 21, 2010 8:54 am

உடம்பில் மச்சம் போல், ஊழலும் நம்முடன் ஒன்றிக் கலந்துவிட்டதால், ஊழல் புகார்கள் குறித்த எந்த செய்தியும் நம்மை கலவரப்படுத்துவதே இல்லை. ஆனாலும், சமீபத்தில் படித்த ஒரு ஆய்வறிக்கை என்னை அதிரச் செய்தது.

அமெரிக்காவின் 'குளோபல் பைனான்சியல் இன்டகரிட்டி' என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி எட்டாண்டுகளில் (2000 முதல் 2008 வரை) 125 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 6.5 லட்சம் கோடி) இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது சட்டத்திற்கு புறம்பானது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களுக்கு தெரிந்து இவ்வளவு. தெரியாமல் எவ்வளவோ? இந்த அறிக்கையின் முழு விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அப்படி வெளிவரும் போது, சம்பந்தப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் வாசிக்கப்பட்டால் கூட நாம் அவர்களை புறக்கணிக்கப் போகிறோமா என்ன? 'அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....' என்று சுரணை துளியும் இன்றி அடுத்த வேலையை பார்க்கக் கிளம்பி விடுவோம்.

இந்தியர்களில் மூன்றில் ஒருவர் ஊழல்வாதியாய் இருக்கும் போது, சூடு, சுரணையெல்லாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? அல்வா இல்லாத திருநெல்வேலியா என்பது போல் ஊழல் இல்லாத அரசியல்வாதியா என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். அரசியலில் சுத்தம், சுத்தமாய் இல்லை!!! அரசியல் குறித்து விவாதம் செய்ய முனைந்தாலே, 'நாம பேசி என்னாகப் போகுது? வேற ஏதாச்சும் பேசு....' என்று அலட்சியப்படுத்தும் நிலை ஏன் வந்தது? ஊழலை ஒரு பொருட்டாக நாம் ஏன் மதிப்பதே இல்லை?

ஊழல் புகார் சுமத்தப்பட்ட ஒரு மத்திய அமைச்சரின் சொத்து மதிப்பு ரூ.88 லட்சம் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டது. நான் அதிர்ந்தே போனேன். அவரின் சொத்து மதிப்பு 88 கோடி என்று சொன்னாலாவது நம்பலாம். 88 லட்சமெல்லாம் அவருக்கு எம்மாத்திரம்...? அதிகாரத்தில் இருப்பவர்கள் தெரிந்தே ஏமாற்றுகிறார்கள்! நாமும் தெரிந்தே ஏமாறுகிறோம். சமயங்களில் எதிர்க்கட்சிகள் ஊழல் புகார் எழுப்பினால் கூட, 'உன் ஆட்சியில் தேனாறும் பாலாறுமா ஓடியது? அதிலும் ஊழல் தானே திளைத்தது?' என்ற பதில் அறிக்கை வருமே தவிர, 'என் ஆட்சியில் ஊழலே இல்லை' என்று யாரும் சொல்வதே இல்லை. நாமும் அதை கண்டு கொள்வதே இல்லை. இன்றைய தேதியில் மக்களிடம் சகிப்புத்தன்மை குறைந்து கொண்டே வருவதால், நாட்டில் விவாகரத்துகள் பெருகி விட்டன. என்ன வினோதம் பாருங்கள்....எங்கு சகிப்புத்தன்மை வேண்டுமோ அங்கு நம்மிடம் அது இருப்பதே இல்லை. எங்கு இருக்கக் கூடாதோ, அங்கு நிரம்பவே இருக்கிறது!

போகிற போக்கைப் பார்த்தால் லஞ்சம்.காம் என்ற ஒரு இணையதளம் தொடங்கி, பொதுமக்கள் ஒவ்வொருவரையும் யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் எதற்காக கொடுத்தார்கள் என்பதைப் பதிவு செய்யச் சொன்னால், தேசத்தின் மொத்த லஞ்ச லாவண்ய கணக்குகள் துல்லியமாய் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.

ஊழல் நாடுகளின் பட்டியலில் இங்தியா 84 வது இடத்தில் இருக்கிறது. அது விரைவில் முதல் ஐம்பது இடங்களுக்குள் வர வேண்டும் என்று இந்திய அரசியல்வாதிகள் தீவிரமாய் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இனிமேல் தீவிரவாதிகள் நாட்டை அழிக்க மூளையை கசக்கத் தேவையில்லை; அப்பாவி மக்களை கொன்றழிக்கத் தேவையில்லை. இந்த இரண்டையும் நம் அரசியல்வாதிகள் கச்சிதமாய் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நண்பர் என்னிடம் சொன்னார் - '2001-ல் தீவிரவாதிகள் திட்டமிட்டபடி நம் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடந்திருந்தால், பாதி நாடாளுமன்றம் காணாமல் போயிருக்கும். நம்ம நாடும் கொஞ்சம் சுத்தமா ஆயிருக்கும்....பாவிப் பயலுக...பொழைச்சுட்டானுங்க!'. விரக்தியின் விளிம்பில் வெளிப்பட்ட ஒரு சாதாரணனின் இந்த எண்ணம் அபாயகரமானது. (இந்த கருத்துக்கு நான் உடன்படவில்லை என்பது வேறு விஷயம்)

இந்தியாவின் சாபக்கேடே எல்லா மட்டத்திலும் ஊழல் வேரூன்றி இருப்பது தான். சரி....இதற்குத் தீர்வு தான் என்ன? ஒரு அரசாங்கத்தின் எல்லா அமைச்சர்களும், அதிகாரிகளும் ஊழல் செய்வதை எளிதில் கட்டுப்படுத்தலாம். உறுதியான தலைமையும், வெளிப்படையான நிர்வாகமும் இருந்தால். தலை சரியாய் இருந்தால், கிளை, இலையெல்லாம் ஏன் ஆடப் போகிறது? என்ன தான் முயன்றாலும், தலைமை சரியில்லை என்றால், ஊழலை கட்டுப்படுத்தவே முடியாது. அடுத்து, தேர்தல் முறை உடனடியாய் மாற்றி அமைக்கப் பட வேண்டும். கோடி கோடியாய் செலவழித்தால் தான் வெற்றி என்னும் போது, யோக்கியன் எப்படி வெற்றி பெறுவான்? அவனிடம் எப்படி நேர்மையான நிர்வாகத்தை எதிர்பார்க்க முடியும்? தேர்தலில் கோடிகளை கொட்டாமல் வெற்றி கிடைக்கும் வரை, நல்லவன் நிற்கப் போவதில்லை. நல்லவன் நிற்காதவரை நிலைமை மாறப்போவதில்லை. மூன்றாவது, சமூக விமர்சகர் ஞாநி சொன்னது போல், ஓட்டுப் போட விருப்பமில்லை என்பதைக் குறிக்கும் 49ஓ வாக்குச்சீட்டில் இடம் பெற வேண்டும். ஒரு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் விட, 49ஓவிற்கு அதிக வாக்குகள் பதிவானால், அந்தத் தொகுதியில் தேர்தல் ரத்துச் செய்யப்படும். பழைய வேட்பாளர்கள் யாரும் அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிட முடியாது. கட்சிகள் அனைத்திற்கும் தரமான , நேர்மையான வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

அதிகாரத்தில் இருப்பவர்களை 'ஏன்' என்று கேள்வி கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி இளைஞர்களிடம் சொல்கிறார். நல்ல விஷயம் தான். ஆனால் யதார்த்தம் என்ன...?அதிகாரத்தில் இருப்பவர்கள் கேட்கக் கூடிய நிலையிலா இருக்கிறார்கள்? 'ஏன்' என்று கேள்வி கேட்டவர்களின் நிலை தெரியுமா உங்களுக்கு? சுரங்கத் தொழில், மின் வாரியம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த 11 பேர் இந்த ஆண்டில் மட்டுமே கொலை செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கடுமையாய் மிரட்டப்பட்டும் தாக்கப்பட்டும் உள்ளனர். கைத்தறி நெசவாளர்களின் கூட்டுறவு சங்கத்தின் ஊழலை ஆதாரத்துடன் எதிர்த்து போராடிய வைத்தியலிங்கம் பாலசுப்ரமணியம் தமிழகத்தின் நாயகன்பேட்டையில் பிணமாகத் தான் மீட்கப்பட்டார். கடந்த வருடம் மழையால் கடுமையாய் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கான நிவாரணத் தொகையை அதிகாரிகளே மொத்தமாய் தின்று விட்டனர். இதை தட்டிக் கேட்ட பாலசுப்ரமணியம் தட்டப்பட்டிருக்கிறார். ஊழலை எதிர்த்து போராடுபவர்களை பாதுகாப்பதற்கான சட்டம் ஏன் இன்னும் முழுமையாய் அமல்படுத்தப்படவே இல்லை.

சென்ற ஆண்டு தில்லி உயர் நீதி மன்றம் 65 வயதுடைய மகேந்தர குமாருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிட்டது. யார் இந்த மகேந்தர குமார்? தன் உயர் அதிகாரிகளின் ஊழலை எதிர்த்து ஆதாரங்களுடன் வழக்குத் தொடுத்தவர். இந்த வழக்கும் வழக்கம் போல் பத்தாண்டுகளுக்கு மேல் நீடித்தது. இறுதியில் நீதி வென்று துணிச்சலானவர் என்று பாராட்டப் பட்டாலும், இவர் இழந்ததென்ன...? பதவி உயர்வுகள், வாழ்க்கை, உடல் நலம், நிம்மதி, இப்படி எக்கச்சக்கம்...! இத்தனை இழந்த மகேந்தர குமார் தன் மகனுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா? ' நேர்மையாய் இருக்காதே! தொல்லை தவிர உனக்கு வேறெதுவும் கிடைக்கப் போவதில்லை. இந்தியாவில் நேர்மையாளன் தூற்றப்படுவான், குற்றவாளி போற்றப்படுவான்'!

நேர்மைக்காய் போராடுபவன் சமூகத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் துரத்தியடிக்கப்படும் போது, விரக்தி தவிர அவனிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?


-அருண் சிதம்பரம்


இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!  Empty Re: இந்தியாவின் தேசிய மந்திரம் - எங்கும் ஊழல், எதிலும் ஊழல்!

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Oct 21, 2010 9:28 am

காமன்வெல்த் போட்டிகளில் ரூ 8000 கோடி ஊழல்: கில், ஜெய்ப்பால் ரெட்டி நீக்கம்?

காங்கிரஸ் என்றாலே நாற்பது வருடங்களாக ஊழல் என்றுதான் பொருள். காமராஜர், கக்கன் எல்லாம் காங்கிரசைத் துறந்தபின் கட்சியில் ஆதிக்கம் செலுத்துபவர்களில் ஒருவன் கூட மக்களுக்காக தொண்டாற்றும் நாணயஸ்தன் இல்லை. கொள்ளையர்களின் கூடாரமே அந்தக் கட்சி.

ஓட்டுக்கு பணம் என்பதை அறிமுகம் ---அறிஞ்சர்
அதை நடைமுமுறைக்கு கொண்டுவந்தவர் --
மலையாள - தமிழக முதல்வர்
அதை இன்று முதல் கடைப்டிபவர்கள் -- நமது திராவிட ''
கண்மணிகள் ....

வாழ்க திராவிடம் ...
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum