ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாசிப்பின் நேசிப்பை அறிவோம்

Go down

வாசிப்பின் நேசிப்பை அறிவோம் Empty வாசிப்பின் நேசிப்பை அறிவோம்

Post by Guest Wed Oct 20, 2010 10:58 pm

வாழ்க்கையில் சாதிக்க வேண்டியவை நிறையவே உள்ளன. இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நம்மில் மண்டிக்கிடக்கும் சீர்கேடுகள் இன்னும் களையப்படாதது வேதனையளிக்கிறது. கலை, இலக்கியம், கலாசாரம் போன்றவற்றைப் பேணிக்காத்தது ஒரு காலம். இன்று இலக்கிய உலகம் என்றாலே தீண்டத்தகாதவை போல பார்க்கப்படுகிறது.

நிறைய படைப்பாளிகள் வெறித்தனமாக எழுதித் தள்ளிய ஒரு காலம். இன்றோ அந்த நிலை மாறிவிட்டது. இதற்குக் காரணம் வாசிப்புத் திறன் குறைவா அல்லது வெறுப்பா என ஆராய்ச்சியில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இளைஞர்கள், யுவதிகள் எல்லாம் கையில் புத்தகங்களோடு அலைந்ததை மறக்கமுடியவில்லை. தினமும் ஒரு பத்திரிகை, நாவல், புதிய இதழ்கள் என சக்கைப்போடு போட்டது.

நூலகங்களில் நிறையப் பேர் ஆர்வமாகப் படித்ததெல்லாம் இன்று எங்கே போயிற்று? இப்படியே போனால் படைப்பாளன் என்ன ஆவான்? சிந்தனைவாதிகள் என்ன ஆவார்கள். இளைய சமுதாயத்துக்கு வழிகாட்டல் என்பதே இல்லாமல் போய்விடுமா என்ற பயம் ஏற்பட்டுள்ளது. இத்தகு நிலைக்குக் காரணம் என்ன? பெருகிவரும் சினிமாவும் சின்னத்திரைகளும் என்றால் மிகையில்லை. பொழுதுபோக்கு என்பது வேறு, வாசிப்பு என்பது வேறு. ஆனால், இன்று வாசிப்பின் நேசிப்பு மறந்து போயிற்று. மாறாக இயந்திரத்தனமாக சினிமா மாயை தொற்றிக் கொண்டுவிட்டது.

புதிய படம் வெளியானால் யாருக்கு இலாபம்? தயாரிப்பாளர், நடிகர், நடிகைகளுக்குத்தான். ஆனால், ரசிகர்களுக்கோ செலவுதான். சிறிதுநேர மகிழ்ச்சி கானல் நீராகிவிடுகிறது. உலகிலேயே அதிகமான சினிமா ரசிகர்களும் கண்மூடித்தனமான ஆதரவாளர்களும் தமிழகத்தில்தான் இருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பல கோடி செலவில் வெளியாகும் படத்துக்காக, பல நூறு ரூபாய் செலவழிக்கத் துணியும் ரசிகனுக்குப் புத்தகங்களை வாங்க ஏன் மனம் வரவில்லை என்பதே நமது ஆதங்கம்.

வாசிப்பதால் வரும் இன்பம், ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதால் வந்துவிடுமா என்பதை உணர யாருமில்லை. இன்னும் கனவுகளிலேயே வாழ்க்கையைத் தொலைப்பவர்கள்தான் அதிகமாக உள்ளனர். சுமார் 30 ஆண்டுகால இலக்கிய உலகைப் பின்னோக்கிப் பார்த்தோமானால் தமிழில் நம்பமுடியாத அளவுக்கு புதிய உத்வேகம், புதிய படைப்பாளர்கள், சிந்தனைவாதிகள் என பலர் மிளிர்ந்தனர். ஆனால், இன்று விரல்விட்டு எண்ணும் அளவிலேயே எழுத்தாளர்கள் உள்ளனர்.

நகைச்சுவை, குழந்தை இலக்கியம், நாவல் எழுதுவதற்கு யாராவது இருக்கிறார்களா என்றால் விடை ஜீரோதான். இந்த இடைவெளிக்கு என்ன காரணம். ஊக்குவிப்பவர்கள் யாரும் கிடையாது. வணிக நோக்கில் பத்திரிகைகள், பருவ இதழ்கள் தங்களது வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன. இன்றைக்குப் பிரபலமாகப் பேசப்படும் எழுத்தாளர்களை ஊக்குவித்த பல ஜாம்பவான்கள் மறைந்து விட்டனர். அவர்களின் தாராள மனப்பான்மை, தட்டிக்கொடுக்கும் தன்மை இன்று யாருக்கும் கிடையாது. அனைத்துமே பொருளாதார ரீதியான பலன்களைப் பார்ப்பதில்தான் இருக்கிறது.

சிறந்த படைப்பாளனை வெளிக்கொணர இன்று யார் இருக்கிறார்கள்? சரி, அது கூடப் பரவாயில்லை. கதைகள், தொடர்கதைகள், நாவல்களை யாராவது பிரசுரிக்கிறார்களா? அல்லது புதியவர்களுக்குத்தான் அந்த வாய்ப்புகள் தரப்படுகின்றனவா, ஏதோ துக்கடா துணுக்குகளும் நகைச்சுவைத் துணுக்குகளும் தான் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. இல்லாவிட்டால் டிவிட்டர் கதைகள், கால்பக்க கதைகள் ஏதோ பெயரளவுக்கு வெளியாகின்றன.

5 அல்லது 6 பக்கக் கதைகளை வாசிக்க முடிகிறதா? நிச்சயமாகக் கிடையாது. அந்த 6 பக்கத்தில் யாராவது ஒரு பாலியல் மருத்துவர் அல்லது ஜோதிடர் என விளம்பரக் கட்டுரைகள். அதுவும் இல்லாவிட்டால் ஆன்மிகம் என பக்கத்தை நிரப்புவதில் கவனமாக இருக்கினறனர். முன்பெல்லாம் தொடர்கதைகளுக்காகவும் சிறுகதைகளுக்காகவுமே பத்திரிகைகள் படித்தவர்கள் ஏராளம். இன்றோ கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. போதாக்குறைக்கு, சின்னத்திரையில் காலை 9 மணிமுதல் இரவு 11 மணிவரையில் மெகா தொடர்கள், இரவில் தூங்கப்போகும்போது சிரித்தவர்களின் காலம் மலையேறிவிட்டது.

சோகம், அழுகையுடன் தொடர் முடிகிறது. இதனால் மன அழுத்தம், விரக்தி, பழிவாங்கும் உணர்ச்சிகள் மோலோங்கிவிடுகின்றன. அப்புறம் இரவில் மனதில் எப்படி மகிழ்ச்சி பெருகும். குழந்தைகளைக் கண்டால் எரிந்து விழுவதும் கணவரை விரட்டி அடிப்பதுமாகப் பொழுது கழிகிறது. இந்த சினிமா, சின்னத்திரைகளை ஓரங்கட்டிவிட்டு தரமான நூல்கள், புத்தகங்களை வாசிக்கும்போது அனைத்து உணர்வுகளும் நம்மைக் கட்டிப்போடும். சினிமா, தொடர் நாடகங்களைப் புறந்தள்ளி வாசிக்கும் பழக்கத்தை இல்லத்தரசிகள் தொடங்க வேண்டும். இதனால் புதிய சிந்தனைகள், மனநிம்மதி, அலட்டல் இல்லாத வாழ்க்கை நிச்சயம்.

இதற்காக சினிமா, சின்னத்திரையை அறவே புறக்கணிப்பதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. எதுவும் அளவாக இருக்கட்டும். மேலும், இளைய சமுதாயத்தின் எழுத்துத்திறமை, வாசிக்கும் பழக்கம் மறந்து போகாமல் இருக்க உதவ வேண்டியது படித்தவர்களின் கடமை. இன்னும் இதேநிலை நீடித்தால் பழைய எழுத்தாளர்களின் படைப்புகளை மறுபிரசுரம் செய்ய வேண்டிய அபாயகட்டம் பத்திரிகைகளுக்கு நேரிடும். எனவே புதியவர்களை வளர்க்க உதவுங்கள். அல்லது வழிகாட்டுங்கள் என்பதே நமது ஆதங்கம்.

தினமணி
avatar
Guest
Guest


Back to top Go down

வாசிப்பின் நேசிப்பை அறிவோம் Empty Re: வாசிப்பின் நேசிப்பை அறிவோம்

Post by ரபீக் Wed Oct 20, 2010 11:00 pm

சிறந்த கட்டுரையை பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வாசிப்பின் நேசிப்பை அறிவோம் Empty Re: வாசிப்பின் நேசிப்பை அறிவோம்

Post by Guest Thu Oct 21, 2010 1:29 am

ரபீக் wrote:சிறந்த கட்டுரையை பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
avatar
Guest
Guest


Back to top Go down

வாசிப்பின் நேசிப்பை அறிவோம் Empty Re: வாசிப்பின் நேசிப்பை அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum