ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழைப்பு நிலாவிடமிருந்து

+7
ராஜா
ரிபாஸ்
balakarthik
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
Thanjaavooraan
nilaaa
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அழைப்பு நிலாவிடமிருந்து Empty அழைப்பு நிலாவிடமிருந்து

Post by nilaaa Sun Oct 17, 2010 10:58 pm

அன்பு உறவுகளே

எனது மற்றுமோர் படைப்பான உறைக்கும் உண்மைகள் என்ற எனது நான்காவது நூல் வெளியீடு

திருநெல்வேலியிலுள்ள 30 ,மதுரை றோட் இலுள்ள ஸ்ரீ ஜானகிராம் ஹோட்டல்ஸில் ஞாயிறன்று( 24/10/10) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.


Uploaded with ImageShack.us

என்னுரையை உங்களுடன் பகிர்வதில் எனக்கொரு நிறைவு.


=============================================================================================================
என்னுரை

ஈழத்தில் பிறந்து இங்கிலாந்தில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக வாழும் நான், இரண்டு நாட்டு வாழ்முறைகளைக் கண்டவள் என்ற முறையிலும், சமகாலப் பதிவுகளைப் பதிதல் ஓர் இலக்கிய வாதியின் கடமை என்பதும் என் மனதில் இருப்பதால் இந்த எனது முயற்சி.

போரின் சூழலை அங்குள்ளவன் போல் எவரும் தத்ரூபத்துடன் உணர்ச்சிகரமாகப் பதிய முடியாது எப்படியோ, அது போல் தான் வெளிநாட்டு அனுபவங்களை வெளிநாட்டில் இருப்பவர்கள் தான் பதிய முடியும் என்பதால் நான் என் சிற்றறிவுக்கு இயன்றவரை ஓர் கதை வடிவில் என் உள்ளக்கிடக்கையை எழுத்துருவாக்கியுள்ளேன்.

எனது மூன்றாம் படைப்பாகிய ‘நிலாவின் இந்திய உலா’ சென்னையில் 29 ஆம் திகதி ஆகஸ்ட் வெளியாகி, பதினைந்து நாட்களின் பின் இப்புத்தகம் உருவாகத் தொடங்கியது. 24 ஆம் திகதி அக்டோபர் திருநெல்வேலியில் இந்நூலை வெளியீடு செய்ய என் அன்பு வட்டத்தினால் (இணையம் மூலம் இணைந்து இன்று ஒர் குடும்பமென ஆகிவிட்ட என் நண்பர்கள், கூடிப் பிறக்காவிடினும் கூடியளவு அன்பு சொரியும் வட்டத்தினரே என் அன்பு வட்டம்) ஆவன நடக்கின்றன. இரண்டே மாதங்களினுள் இந்நூலானது எழுதப்பட்டு… அச்சேறி… அரங்கேறுகிறது என்றால் நம்புவது சிரமமே!.

இந்த அவசரச் சூழலையும் சாதகமாக்க உதவிய என் தனிமைக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். ஓசூரில் வைத்தியம் குறித்து நான் தங்கி இருப்பதால் வரும் மட்டுப்படுத்தப்பட்ட தொலைபேசியழைப்புகளும் விருந்தினர்களும் கூடக் காரணம் எனலாம். ஆம்! ‘மஸ்கியூலர் டிஸ்ரொபி’ (Muscular Dystrophy) என்னை 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பீடித்து என் செயல்களைத் தடுத்து வைத்துள்ளதை, உடைக்கும் முயற்சியில் நான்.

காலம் வீணே கரைவதைச் சகிக்க முடியாத நான், இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கடும் முயற்சிக்கு நிகர் எதுவும் இல்லையே!
நாடகங்கள் பல எழுதிய அநுபவம் எனக்கு உண்டெனினும் கதை, அதுவும் நாவல் எழுதுதல் இக்கன்னியின் கன்னி முயற்சியே. என்றாலும் சவால்கள் நிறைந்ததே வாழ்க்கை. எதிர்கொண்டு தான் பார்ப்போமே.

பலர் சொல்ல நினைப்பதை இக்கதை மூலம் நான் சொல்ல விழைகிறேன். இந்தக் கதையில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.

இந்நூலில் ஆங்கில உரையாடலை, இந்தக்கதையின் சூழல் அப்படி அமைந்துள்ளதன் காரணமாக அதே பாணியில் பதிய வேண்டியிருந்தமை தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

‘உறைக்கும் உண்மைகள்’ என்ற இந்த மலர் தங்கள் மனதில் என்ன தாக்கத்தை உண்டு பண்ணுகிறதோ, அதை எழுத்து வடிவில் இந்த மிகக் குறுகிய காலத்தில், எழுத்து வடிவில் தந்து நிற்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பொதுச்செயலாளர், திரு ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் எனத் சிரந்தாழ்ந்த மனம் நிறைந்த நன்றிகள்.

இந்நூலை ஐம்பதாவது அகவை கண்டு நிற்கும் எனது பெரியண்ணர் திரு ப சிவகுமார் அவர்களின் அன்புக்குக் காணிக்கையாக்குகின்றேன்.

இந்நூல் ஒரு சிலரையாவது சிந்திக்க வைத்தால் அதுவே என் எழுத்துக்கும் என் பாடுபடுதலுக்கும் கிடைத்த முழுவெற்றியென மகிழ்வேன். சுவைத்துப் பாருங்கள். உங்கள் விமர்சனத்தை மனம் திறந்து எழுதுங்கள். காத்திருக்கிறேன்.

எதிர்பார்ப்புடன்

அன்புள்ள நிலா


=====================================================================================

உங்களால் முடிந்தால் நீங்கள் வாருங்கள். தெரிந்தவர்களை வரச் சொல்லுங்கள்.

ஒன்று மட்டும் உண்மை நல்ல பேச்சாளர்கள் பேச வருகிறார்கள்.

வரவேற்பவள் நிலா, ராம்குமார், விழா ஒருங்கமைப்பாளர்கள்அழைப்பு நிலாவிடமிருந்து 42nila19102010j


Last edited by nilaaa on Tue Oct 19, 2010 9:46 pm; edited 4 times in total
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down

அழைப்பு நிலாவிடமிருந்து Empty Re: அழைப்பு நிலாவிடமிருந்து

Post by Thanjaavooraan Sun Oct 17, 2010 11:28 pm

"தாமின் புறுவது உலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்"


ஐயன் வள்ளுவன் சொன்னதைப்போல், தனது உடல், பொருள், ஆவி அத்துனையும் தமிழுக்காக அர்ப்பணித்த, அன்பிற்கினிய நிலாவின் முயற்சிகள் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.

அன்பன்,

தமிழ்சேய், தஞ்சாவூரான்.
அமிரகம்
.
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

அழைப்பு நிலாவிடமிருந்து Empty Re: அழைப்பு நிலாவிடமிருந்து

Post by nilaaa Mon Oct 18, 2010 8:53 am

தஞ்சாவூரான் உங்கள் அன்புக்கு நன்றி
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down

அழைப்பு நிலாவிடமிருந்து Empty Re: அழைப்பு நிலாவிடமிருந்து

Post by ஹாசிம் Mon Oct 18, 2010 9:55 am

தங்களின் தழிழ் தொண்டு வளர வாழ்த்துவதுடன்
புத்தக வெளியீடும் சிறப்புற வேண்டுகிறேன்
எமது ஈகரை உறவுகள் நண்பர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்


நேசமுடன் ஹாசிம்
அழைப்பு நிலாவிடமிருந்து Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அழைப்பு நிலாவிடமிருந்து Empty Re: அழைப்பு நிலாவிடமிருந்து

Post by nilaaa Mon Oct 18, 2010 9:56 am

நன்றி ஹாசிம்
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down

அழைப்பு நிலாவிடமிருந்து Empty Re: அழைப்பு நிலாவிடமிருந்து

Post by மஞ்சுபாஷிணி Mon Oct 18, 2010 10:16 am

அன்பு நிலா.....

உங்களின் இந்த பகிர்வை படிக்கும்போதே உங்களை உடனே பார்த்து பேசவேண்டும் போன்றதொரு எண்ணம் சட்டென தோன்றியதுப்பா...

முகமறியா நட்புகள் என்றாலும் கண்ணியம் குறையா அன்புகள் நான் இங்கு காண்பது...

நோய் தாக்கினால் என்ன அதை எதிர்க்க நீங்கள் உடலளவிலும் மனதளவிலும் உங்களை உறுதியாக வைரமாக வைத்திருப்பதை என்னால் அறியமுடிகிறது..

கண்டிப்பாக நீங்கள் சொன்ன கூற்று உண்மைப்பா.... ஒரு விஷயத்தை கண்டு அதை மனதில் உள்வாங்கி ஆழ்ந்து அதை கருவாக்கி கதை எழுதுவது என்பது லேசுப்பட்ட விஷயமில்லை...

என்னால் வரமுடியவில்லை என்றாலும் பங்கு பெறமுடியவில்லை என்றாலும் நல்லபடி கூட்டம் நடைபெற என் அன்பு வாழ்த்துக்கள்...

உங்கள் உடல்நலம் முன்பிலும் அதிக ஆரோக்கியம் பெற்று மனமும் உற்சாகத்துடன் இருந்து இன்னும் நிறைய படைப்புகள் உங்கள் மூலம் காண நானும் காத்திருக்கிறேன் அன்பு பிரார்த்தனைகளுடன்....

உங்களின் கதையை படிக்க எதிர்ப்பார்த்து காத்திருக்கும்.....

அன்பு மஞ்சு அன்பு மலர் அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அழைப்பு நிலாவிடமிருந்து 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அழைப்பு நிலாவிடமிருந்து Empty Re: அழைப்பு நிலாவிடமிருந்து

Post by balakarthik Mon Oct 18, 2010 10:16 am

தங்களது புத்தக வெள்யீட்டு விழா நல்லபடியாக நடைபெற எனது வாழ்த்துக்கள் அக்கா


ஈகரை தமிழ் களஞ்சியம் அழைப்பு நிலாவிடமிருந்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழைப்பு நிலாவிடமிருந்து Empty நன்றி மஞ்சு

Post by nilaaa Mon Oct 18, 2010 10:26 am

மஞ்சுபாஷிணி wrote:அன்பு நிலா.....

உங்களின் இந்த பகிர்வை படிக்கும்போதே உங்களை உடனே பார்த்து பேசவேண்டும் போன்றதொரு எண்ணம் சட்டென தோன்றியதுப்பா...

முகமறியா நட்புகள் என்றாலும் கண்ணியம் குறையா அன்புகள் நான் இங்கு காண்பது...

நோய் தாக்கினால் என்ன அதை எதிர்க்க நீங்கள் உடலளவிலும் மனதளவிலும் உங்களை உறுதியாக வைரமாக வைத்திருப்பதை என்னால் அறியமுடிகிறது..

கண்டிப்பாக நீங்கள் சொன்ன கூற்று உண்மைப்பா.... ஒரு விஷயத்தை கண்டு அதை மனதில் உள்வாங்கி ஆழ்ந்து அதை கருவாக்கி கதை எழுதுவது என்பது லேசுப்பட்ட விஷயமில்லை...

என்னால் வரமுடியவில்லை என்றாலும் பங்கு பெறமுடியவில்லை என்றாலும் நல்லபடி கூட்டம் நடைபெற என் அன்பு வாழ்த்துக்கள்...

உங்கள் உடல்நலம் முன்பிலும் அதிக ஆரோக்கியம் பெற்று மனமும் உற்சாகத்துடன் இருந்து இன்னும் நிறைய படைப்புகள் உங்கள் மூலம் காண நானும் காத்திருக்கிறேன் அன்பு பிரார்த்தனைகளுடன்....

உங்களின் கதையை படிக்க எதிர்ப்பார்த்து காத்திருக்கும்.....

அன்பு மஞ்சு அன்பு மலர் அன்பு மலர்

அன்பு மஞ்சு

உங்கள் அன்பு எண்ணங்கள் என்னை ஊக்கப் படுத்துகின்றன. மற்றும் பலரின் விருப்பத்திற்கிணங்க இணயத்தில் என் நூல்களைக் கொளவனவு செய்யும் நாளும் விரைவில் வரும்.

நன்றியம்மா
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down

அழைப்பு நிலாவிடமிருந்து Empty Re: அழைப்பு நிலாவிடமிருந்து

Post by nilaaa Mon Oct 18, 2010 10:57 am

balakarthik wrote:தங்களது புத்தக வெள்யீட்டு விழா நல்லபடியாக நடைபெற எனது வாழ்த்துக்கள் அக்கா

நன்றி பாலகார்த்திக்!
nilaaa
nilaaa
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Back to top Go down

அழைப்பு நிலாவிடமிருந்து Empty Re: அழைப்பு நிலாவிடமிருந்து

Post by ரிபாஸ் Mon Oct 18, 2010 11:02 am

ஹாசிம் wrote:தங்களின் தழிழ் தொண்டு வளர வாழ்த்துவதுடன்
புத்தக வெளியீடும் சிறப்புற வேண்டுகிறேன்
எமது ஈகரை உறவுகள் நண்பர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் நன்றி நிலா மேலும் தொடரட்டும் உங்கள் பணி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அழைப்பு நிலாவிடமிருந்து Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அழைப்பு நிலாவிடமிருந்து Empty Re: அழைப்பு நிலாவிடமிருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum