ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய...

+5
உதயசுதா
கலைவேந்தன்
ரபீக்
Jotheshree
asksulthan
9 posters

Go down

தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Empty தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய...

Post by asksulthan Sat Oct 16, 2010 10:07 am

கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் பச்சிளம் குழந்தைகளை குளிக்க வைத்த பின் சாம்பிராணி புகையை அக்குழந்தைக்கு காட்டுவார்கள். காரணம் கேட்டால் குழந்தை குளித்துள்ளதால் 'ஜலதோஷம்' பிடிக்க வாய்ப்புண்டு. எனவே சாம்பிராணி போட்டால் நல்லது என்பார்கள். ஆனால் இந்த சாம்பிராணி புகை குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்கள் உடலுக்கும் கேடு என்று மருத்துவர்கள் ஒருபுறம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, சென்னை போன்ற பெரு நகரங்களில் பச்சை தலைப்பாகைகளுடன், பெரிய தாடியுடனும், கையில் சாம்பிராணி தட்டை ஏந்திக்கொண்டு கடைகடையாக ஏறி இறங்கி 'புகை' போடுவார்கள். இத்தகையவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களே! இவர்களின் இந்த நிலையை பார்க்கும் போது நமது சமுதாயத்தின் நிலை இப்படி உள்ளதே என வேதனையாக இருக்கும். சரி எதோ வயிற்றுப் பிழைப்புக்காக இந்த தொழிலை செய்கிறார்கள் என்று கருதி விட்டு விடுவோம். ஆனால் இவர்களில் சிலர் சாம்பிராணி புகையால் தூபம் போடுவது போல, மூட நம்பிக்கைகளையும் தூபம் போடுகிறார்கள் என்று ஒரு நாளிதழ் செய்தி மூலம் அறியமுடிகிறது.

ஒரு சாம்பிராணி தூபம் போடுபவர் கூறுகிறார்;
வீட்டில் பூச்சிகள் அண்டாது. வீட்டில் மற்றும் கடைகளில் செல்வம் கொழிக்கும். நம்மைப் பிடித்திருக்கும் பேய், பிசாசுகள், பீடைகள் ஓடிவிடும். வாழ்வில் சந்தோஷம் பொங்கும். என்கிறார்.

இவர் சொல்வதில் ஒன்று மட்டும் உண்மை. அதாவது வீட்டில் பூச்சிகள் மட்டும் அண்டாது . ஏனெனில், இவர்கள் போடும் புகையால் மனுஷனுக்கே மூச்சு முட்டும் போது பூச்சிகள் எப்படி தாக்குப்பிடிக்கும்..? அடுத்து இவர் சொல்வது போல் வீட்டிலும், கடைகளிலும் செல்வம் கொழிக்கும் என்றால், பேசாமல் இவர் வீட்டில் அவ்வளவு புகையையும் போட்டு செல்வத்தை கொழிக்க வைக்க வேண்டியது தானே..? ஏன் அவ்வாறு செய்யவில்லை..? அவ்வாறு செய்தால் வீட்டில் செல்வம் கொழிக்காது. மாறாக தீ தான் பிடிக்கும். இவர்கள் தினமும் கடை கடையாக அலைவதில் இருந்தே சாம்பிராணி ஒரு புகைதானே அன்றி, அதற்கு செல்வத்தை உருவாக்கும் எந்த ஆற்றலும் இல்லை என்பது புலப்படும்.

உண்மை இவ்வாறிருக்க , சில முஸ்லிம்களும் அறியாமையினால், இந்த சாம்பிராணிக்கு எதோ மகிமை இருப்பது போல எண்ணிக்கொண்டு கடை திறந்தவுடன் போனியாகுதோ இல்லையோ, இந்த சாம்பிராணி பாய்களுக்கு போனி பண்ணிவிடுகிறார்கள். இப்படிப் பட்டவர்கள் திருந்த வேண்டும். உடலுக்கும், பணத்திற்கும் கேடு உண்டாக்கும் இத்தகைய தூபங்களை போடுவதை விட்டொழிக்க வேண்டும்.

மேலும், எல்லா இடத்திலும் தூபம் போட அனுமதிக்க மாட்டார்கள். திராவிடர் கழகத்தினர் அனுமதிக்க மாட்டார்கள். அதைப்போல எங்கள் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர்கூட இதை அனுமதிக்கமாட்டார்கள் என்று இவரே கூறுகிறார். ஆக, தூபம் போடாத முஸ்லிம்களும், தி.க. வினரும் நன்றாகத்தானே சம்பாதிக்கிறார்கள்..? என்பதை அறியாமையால் தூபம் போடும் மக்கள் உணரவேண்டும்.

அடுத்து, மந்திரித்தால் கெடுதல் நிச்சயம் விலகும். நம்மைப் பிடித்திருக்கிற பீடைகள், பேய்கள்,பிசாசுகள் அனைத்தையும் அதைக் கொண்டு ஓட்டிவிடமுடியும் என்கிறார் இவர்.

முதலில் இவர்களைப் பிடித்திருக்கும் பீடையை ஓட்டிவிட்டு கவுரவமான தொழில் செய்ய முன்வரட்டும். பிறகு பேய்களையும்[!] பிசாசுகளையும்[!] பார்க்கலாம். அல்லது வெறும் புகை போடுவதோடு நிறுத்திக் கொள்ளட்டும். அதைவிடுத்து மூட நம்பிக்கைகளை புகையோடு சேர்த்து புகைய செய்யவேண்டாம் என அன்போடு இவர்களை கேட்டுக் கொள்கிறோம். ஏனெனில் இவர்களின் இந்த செயல் இஸ்லாம் எதோ மூட நம்பிக்கையை ஆதரிக்கிறதோ என்ற ஐயத்தை மற்றவர்களுக்கு எழுப்பக் கூடும்.

--
10/15/2010 05:15:00 PM அன்று *நிழல்களும்-நிஜங்களும்* இல் முகவை எஸ்.அப்பாஸ் ஆல் இடுகையிடப்பட்டது
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Empty Re: தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய...

Post by Jotheshree Sat Oct 16, 2010 12:00 pm

நன்றி பயனுள்ள தகவல் தோழரே
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Empty Re: தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய...

Post by ரபீக் Sat Oct 16, 2010 12:13 pm

பயனுள்ள தகவல பதிவுக்கு நன்றி தோழரே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Empty Re: தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய...

Post by கலைவேந்தன் Sat Oct 16, 2010 12:34 pm

மூட நம்பிக்கையை ஒரு புறம் தள்ளிவைப்போம்..

சாம்பிராணிப் புகை போட்டதும் வீடுமுழுக்க நல்ல மணம் கமழ்ந்து நல்ல மனநிலையை உருவாக்குவதை நான் உணர்ந்திருக்கிறேன்.

பிச்சை எடுக்காமல் திருடாமல் அவர்களுக்கு தெரிந்த ஒரு தொழிலைச் செய்து பிழைக்கிறார்களே என்று சந்தோஷப்பட வேண்டாமா..?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Empty Re: தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய...

Post by உதயசுதா Sat Oct 16, 2010 12:39 pm

கலை wrote:மூட நம்பிக்கையை ஒரு புறம் தள்ளிவைப்போம்..

சாம்பிராணிப் புகை போட்டதும் வீடுமுழுக்க நல்ல மணம் கமழ்ந்து நல்ல மனநிலையை உருவாக்குவதை நான் உணர்ந்திருக்கிறேன்.

பிச்சை எடுக்காமல் திருடாமல் அவர்களுக்கு தெரிந்த ஒரு தொழிலைச் செய்து பிழைக்கிறார்களே என்று சந்தோஷப்பட வேண்டாமா..?
அதானே


தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Uதூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Dதூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Aதூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Yதூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Aதூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Sதூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Uதூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Dதூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Hதூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Empty Re: தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய...

Post by Tamilzhan Sat Oct 16, 2010 12:46 pm

மேலும், எல்லா இடத்திலும் தூபம் போட அனுமதிக்க மாட்டார்கள். திராவிடர் கழகத்தினர் அனுமதிக்க மாட்டார்கள். அதைப்போல எங்கள் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர்கூட இதை அனுமதிக்கமாட்டார்கள் என்று இவரே கூறுகிறார். ஆக, தூபம் போடாத முஸ்லிம்களும், தி.க. வினரும் நன்றாகத்தானே சம்பாதிக்கிறார்கள்..? என்பதை அறியாமையால் தூபம் போடும் மக்கள் உணரவேண்டும்.

பிச்சை எடுக்காமல் திருடாமல் அவர்களுக்கு தெரிந்த ஒரு தொழிலைச் செய்து பிழைக்கிறார்களே என்ற அறியாமையால் தூபம் போடாத முஸ்லிம்களும் தி.கவினரும் சொல்லிவிட்டார்களோ..?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Empty Re: தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய...

Post by மஞ்சுபாஷிணி Sat Oct 16, 2010 3:50 pm

நல்ல அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் நண்பரே....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Empty Re: தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய...

Post by அப்புகுட்டி Sat Oct 16, 2010 4:12 pm

நன்றி நன்றி நன்றி


தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Empty Re: தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய...

Post by சரவணன் Sat Oct 16, 2010 4:47 pm

அப்படி இல்லை. இப்பொழுது வேண்டுமானால் இந்த சாம்பிராணிக்கு பதில் வேறு பொருட்களை பயன்படுத்தலாம்.

ஆனால் உண்மையான சாம்பிராணி செடிகளில் இருந்தே தாயார் செய்யப் படுகிறது.(செடியின்/மரத்தின் பெயர் நினைவில்லை). இதனால் உடலுக்கு நன்மைகள் உண்டு..ஆனால் செல்வம் கொழிக்கும் என்பதெல்லாம் மூடநம்பிக்கை தான்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Empty Re: தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய...

Post by சரவணன் Sat Oct 16, 2010 4:48 pm

இதை கவனிக்கவும்:
அழகிற்கு அணிசேர்க்கும் மூலிகைகள் - விஜயகுமாரி பாஸ்கரன்

சாம்பிராணி இலை

இது சிறிய செடியாக இருக்கும். தண்டு எளிதில் உடையும் தன்மை வாய்ந்தது. இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இலை இரண்டு மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும். இலையின் மேலும், கீழும் நுண்ணிய துணை இலைகள் படர்ந்திருக்கும். இந்த இலையைக் கசக்கினால் நல்ல வாசனை வரும்.

இந்தியா முழுவதும் குறிப்பாக ராஜஸ்தான், தென்னிந்தியாவிலும், காடுகளிலும் வளர்கிறது. வீடுகளிலும் விரும்பி மருந்திற்காக வளர்க்கப்படுகிறது. சதைப்பற்று மிக்க, மணமிக்க காம்புகளையுடைய சிறிய புதர்ச்செடி இது.

இதன் இலைகள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. கை வைத்தியமாகவும், மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பித்தப்பை கல் உண்டாவதைத் தடுக்கும் குணம் கொண்டது.

தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். நாள்பட்ட இருமல், அஜீரணம், வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு நல்ல மருந்தாக இலைச்சாறு பயன் தருகிறது. கண் அழற்சிக்கு இதன் சாறு மேல் பூச்சாக தடவ பயன்படும்.

இதில் இரண்டு வகை உண்டு. அடி வரை வளரும் வேர்கள், அதன் ஆழம் செல்லாமல் கொத்து வேராகவே இருக்கும்.

மருத்துவத் துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரி செய்யவும், சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

தேமல் உள்ள இடங்களில் காலையும், மாலையும் வெந்நீரால் கழுவிச் சுத்தம் செய்து அதன் மேல் சாம்பிராணி இலைச் சாற்றைத் தேய்த்து வந்தால் தேமல் மறையும்.

தலைவலி தோன்றிய நேரத்தில் சாம்பிராணி இலையைக் கசக்கி அதன் சாறை நெற்றிப் பொட்டில் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குணமாகும்.

source :http://www.tamilvanan.com/content/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய... Empty Re: தூபம் போடுவது சாம்பிராணியை மட்டுமல்ல; மூடநம்பிக்கைய...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum