ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!

Go down

மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Empty மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!

Post by ரபீக் Fri Oct 15, 2010 9:13 pm

2011ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி உருவாக்கிட அதிமுகவினர் அனைவரும் சபதமேற்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உழைப்பால் உயர்ந்தவரும், மக்களைக் கவரும் காந்த சக்தி படைத்தவரும், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியும், தலைமுறைகள் பல கடந்தும் மக்கள் நாயகனாக தொடர்ந்து விளங்குபவருமான, “மக்கள் திலகம்‘ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஓங்கு புகழ் பேரியக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தனது 38 வருட வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 17.10.2010 அன்று அகவை 39-ல் அடியெடுத்து வைக்கிறது

இந்த நன்னாளில், கழகம் கடந்து வந்த வெற்றிப்பாதைகளின் பெருமிதங்களையும், எதிர்கொண்டு இடர் சாய்த்த பெருமைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

அதே வேளையில், நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காக வியர்வை சிந்தி உழைத்திட்ட செயல் மறவர்களையும், இயக்கப் பணிகளின் போது உயிர் நீத்திட்ட உத்தமத்தொண்டர்களின் தியாகங்களையும் நம் நெஞ்சில் நினைவுறுத்துவதோடு, கழகத்தின் அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் அனை வருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை இந்த நன்னாளில் தெரிவித்துக் கொள்வதில் நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

கழகம் பிறந்த சில மாதங்களிலேயே நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தன் முதல் வெற்றியை பெற்றது. எக்குக் கோட்டையாய் கழகத்தைக் கட்டிக்காத்து வந்த நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கழகத்தின் கொள்கை- கோட்பாடுகளை பட்டி தொட்டியெங்கும் பரப்புவதற்காக என்னை 1983-ல் அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளராக்கி மாநிலம் முழுவதும் வலம் வர வைத்தார்.

இவ்வேளையில், 1984-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பொதுத்தேர்தல் வந்தது. நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். களத்தில் இல்லாத நேரத்தில் நடந்த ஒரு உக்கிரமான போரில், எதிரிகளிடமிருந்து கழகத்தை சேதாரமில்லாமல் கட்டிக்காத்து அவரிடம் ஒப்படைக்கும் பெரும் வாய்ப்பினை உங்கள் அன்புச்சகோதரியாகிய நான் பெற்றேன்.

புரட்சித் தலைவர் நலமாக இருப்பதாகவும், அவர் படுக்கையில் இருந்தபடியே வெற்றி பெற்று, உங்கள் திருமுகம் பார்ப்பதற்கு விரைவில் தமிழகம் திரும்பி வருவார் என்கிற நம்பிக்கையூட்டும் பிரச்சாரத்தையும் தமிழகம் முழுவதும் நான் செய்து வந்ததின் விளைவாக, பொய்ப்பிரசாரம் முறியடிக்கப்பட்டு, அ.தி.மு.க. அமோக வெற்றியை ஈட்டியது.

கழகக் கண்மணிகளாகிய உங்களின் உறுதுணையாலும், ஓய்வில்லாத உழைப்பாலும், இடைவிடாத போராட்டங்களாலும், 1989-ல் பிளவுற்றுக் கிடந்த கழகத்தை ஒன்றுபடுத்தி, இழந்த “இரட்டை இலை” சின்னத்தை மீட்டு, பூட்டப்பட்ட கட்சி அலுவலகத்தையும் திறந்து, புதிய மறுமலர்ச்சியை கழகத்திற்கு ஊட்டியதன் விளைவாக, மதுரை கிழக்கு, மருங்காபுரி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அன்றைய ஆளும் கட்சியான திமுகவை அபாரமாய் தோற்கடித்து மீண்டும் அ.தி.மு.க.வை வெற்றிப்பாதைக்கு நான் அழைத்து வந்ததை நீங்கள் அறிவீர்கள்.

1991ல் எனது தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அ.தி.மு.க. அரசு, தமிழகத்திற்கு ஒரு பொற்கால ஆட்சியை வழங்கும் பொருட்டு, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைத்தது; உலகம் போற்றும் அன்னை தெரசாவே மனம் திறந்து பாராட்டும் வண்ணம் தொட்டில் குழந்தைகள் திட்டத்தை செயல்படுத்தியது, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்தி வைத்திருந்தது, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு சட்டப்பாதுகாப்பு கொடுத்தது; எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது. 1996-ல் நம் கழகம் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவானது.

ஆனாலும், மனம் தளர்ந்துவிடாது, செயல் சோர்ந்துபோகாது, தொண்டர்களை தட்டிக்கொடுத்து, தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தொண்டர்களுக்கு ஊட்டி, அதன் மூலம் மீண்டும் கழகத்தை எழுச்சிப்பாதைக்குள் கொண்டு வந்து, 1998ல் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் பெரும் வெற்றிகளை நான் குவிக்கச் செய்தேன்.

2001 சட்டமன்றப் பொதுத்தேர்தலில், நமது மாசற்ற மக்கள் இயக்கம் எனது தலைமையிலான அ.தி.மு.க.வின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச்செய்தது. தமிழகத்தின் நீண்ட கால வளர்ச்சியை மனதில் கொண்டு எண்ணற்ற புரட்சிகர திட்டங்களை தமிழகத்திற்கு தந்தோம்.

மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை தரக்கூடிய வலிமையும், வல்லமையும் கொண்ட ஒரே அரசியல் பேரியக்கம் அ.தி.மு.க. தான் என்பதில் எள் முனையளவும் ஐயமில்லை. எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின் எத்தனையோ இன்னல்களையும், இடர்பாடுகளையும், சோதனைகளையும் எதிர்கொண்டு இந்த இயக்கத்தை மீண்டும் மீண்டும் வெற்றியை நோக்கி என்னால் அழைத்துச் செல்ல முடிகிறது என்றால், அதற்கான ஊக்க சக்தியாக இருப்பது உத்தமத் தொண்டர்களாகிய உங்களின் கள்ளமில்லா அன்பும், கடமை உணர்வோடு கூடிய ஒத்துழைப்பும், என் மீது எந்நாளும் நீங்கள் கொண்டிருக்கும் மாசற்ற பற்றும் தான்.

அ.தி.மு.க.வின் 39ஆவது ஆண்டு தொடக்க விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், ஆங்காங்கே நம் வெற்றியைத் தாங்கி நிற்கும் கழகக் கொடிக்கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி விழாக்கோலம் கண்டு, இனிப்புகள் வழங்கி சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து மக்கள் பணியாற்றுங்கள்; ஒரு பொன்னான எதிர்காலம் நமக்காக காத்திருக்கிறது. 2011-ல் அமையப்போகும் புதிய அரசிற்கான சட்டமன்றத் தேர்தலிலும் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் உருவாக்கிட இந்நாளில் நாம் அனைவரும் சபதமேற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 'மீண்டும் திமுக ஆட்சி' - ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ்; 'அதிமுக ஆட்சி' - சிஎன்என் ஐபிஎன்
» மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
» தமிழகத்தில் 'மீனவ நண்பன்' எம்.ஜி.ஆரின் ஆட்சி வரட்டும்.. ஜெயலலிதா
» ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் : கருணாநிதி அறிக்கை!
» ஜெயலலிதா 2011-ல் ஆட்சி அமைக்க பாடுபட்டதற்காக வெட்கப்படுகிறேன்: விஜயகாந்த் வேதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum