Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது!
3 posters
Page 1 of 1
சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது!
புதுடில்லி : டில்லியில் கடந்த 12 நாட்களாக நடந்த காமன்வெல்த் விளையாட்டு திருவிழா நேற்று இனிதே முடிந்தது. இதற்காக நடந்த வண்ணயமான நிறைவு விழாவில் கண்கவர் "லேசர் ஷோ, மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
டில்லியில் 19வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த 3ம் தேதி துவங்கியது. துவக்க விழா மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. கடந்த 12 நாட்களாக ரசிகர்களை கட்டிப் போட்ட இந்த விளையாட்டு திருவிழா நேற்றுடன் முடிந்தது. பல்வேறு சர்ச்சைகளை கடந்து போட்டிகள் மிகச் சிறப்பாக நடந்தது, மிகுந்த நிம்மதி அளித்தது.
நேற்று ஜவர்கலால் நேரு மைதானத்தில் வண்ணமயமான நிறைவு விழா நடந்தது. இதில், பிரதமர் மன்மோகன் சிங், சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட பல வி.ஐ.பி.,க்கள் கலந்து கொண்டனர். தேசிய கீதத்துடன் விழா துவங்கியது. தமிழகத்தின் சிலம்பம், கேரளாவின் களரி சண்டை உள்ளிட்ட பல்வேறு மாநில தற்காப்பு கலைஞர்களின் சாகச நிகழ்ச்சி முதலில் நடந்தது. பின் ராணுவத்தினரின் "பாண்ட்' வாத்திய இசை நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து "வந்தே மாதரம்' பாடலுக்கு பள்ளி குழந்தைகள் நடனம் ஆடினர். தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற 71 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணி வகுத்து வந்தனர். இந்திய குழுவுக்கு துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் தலைமை ஏற்று வந்தார். இவர் மூவர்ணக் கொடியை ஏந்தி வந்தார்.
டில்லிக்கு "குட்பை': வரும் 2014ல் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் அடுத்த காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதையொட்டி அந்நாட்டின் பிரதிநிதி ராபர்ட் வின்டரிடம் காமன்வெல்த் போட்டியின் கொடியை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இளவரசர் எட்வர்ட், டில்லி போட்டி நிறைவு பெறுவதாக முறைப்படி அறிவித்தார். தொடர்ந்து ஸ்காட்லாந்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கு பின் மிகவும் புதுமையான "லேசர் ஷோ' நடந்தது. "இசை மூலம் உலகளாவிய அன்பு' என்ற பகுதியில் சங்கர் மகாதேவன், இலா அருண் உள்ளிட்ட பிரபல பாடர்கள் பாட, நிறைவு விழா முடிவுக்கு வந்தது.
தினமலர்!
Last edited by சிவா on Fri Oct 15, 2010 8:54 am; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது!

டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டி பதக்கப்பட்டியலில், இந்தியா 2-வது இடம் பெற்று புதிய சாதனை படைத்தது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று இரவு நடைபெற்ற வண்ணமிகு நிறைவு விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார்.
19-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, தலைநகர் டெல்லியில் கடந்த 3-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.
விளையாட்டு திருவிழா
கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன், ஜனாதிபதி பிரதீபா பட்டீல், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஆகியோர் இந்த விளையாட்டு திருவிழாவை தொடங்கி வைத்தனர். முன்பு இங்கிலாந்தின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த `காமன்வெல்த்' அமைப்பில் இடம்பெற்றுள்ள 71 நாடுகளை சேர்ந்த 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
கடந்த 12 நாட்களாக விளையாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்த போட்டியில், தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை குவித்து பதக்கப்பட்டியலில் முன்னணியில் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் 37 தங்கப்பதக்கங்களுடன், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்து இந்தியா 3-வது இடத்தில் இருந்தது.
இந்தியாவின் புதிய சாதனை
போட்டியின் இறுதி நாளான நேற்று, `பேட்மிட்டன்' ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சாய்னா நேவால் அபாரமாக விளையாடி தங்கப்பதக்கம் வென்றார். `பேட்மிட்டன்' இரட்டையர் பிரிவில். ஜ×வாலா கட்டா-அஸ்வினி ஜோடியும் தங்கம் வென்றனர். இதன் மூலம், பதக்கப்பட்டியலில் இந்தியா 2-வது இடம் பெற்று புதிய சாதனை படைத்தது.
இதுவரை நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் கடந்த 2002-ம் ஆண்டு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 30 தங்கம், 22 வெள்ளி, 17 வெண்கல பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 4-வது இடம் பிடித்து இருந்தது.
இந்தியாவுக்கு 38 தங்கம்
தற்போது டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில், இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கல பதக்கங்களை குவித்து 2-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா, 74 தங்கம், 54 வெள்ளி, 48 வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இரண்டாவது இடம் பிடித்த இந்தியாவை தொடர்ந்து இங்கிலாந்து 37 தங்கம், 59 வெள்ளி, 45 வெண்கலத்துடன் 3-வது இடத்தையும், 26 தங்கம், 17 வெள்ளி, 32 வெண்கலத்துடன் கனடா 4-வது இடத்தையும் பிடித்தன.
பிரமாண்ட நிறைவு விழா
காமன்வெல்த் போட்டிகள் நேற்று மாலையுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்ட நிறைவு விழா தொடங்கியது. சிறப்பு விருந்தினராக, இலங்கை அதிபர் ராஜபக்சே நிறைவு விழாவில் பங்கேற்றார்.
இங்கிலாந்து இளவரசர் எட்வர்ட், இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், அவருடைய மனைவி குர்சரண் கவுர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி கவர்னர் திஜேந்தர் கன்னா, முதல்-மந்திரி ஷீலாதீட்சித் மற்றும் பூடான் பட்டத்து இளவரசர் ஜிக்மே நம்ஜியால் வான்சுக் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்கள், ஒலிம்பிக் விளையாட்டு போட்டி குழு நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.
தொடக்க விழாவை மிஞ்சும் விதத்தில், 7 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நிறைவு விழாவை களை கட்டச்செய்தன. 5 பிரிவுகளாக ஏறத்தாழ 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கலைநிகழ்ச்சிகள், அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தன.
வந்தே மாதரம் பாடல்
தொடக்க நிகழ்ச்சியான `அக்னி' பிரிவில் 800 கலைஞர்கள் பங்கேற்ற தமிழகத்தின் சிலம்பம், கேரளாவின் களரி உள்ளிட்ட தற்காப்பு கலைகள் இடம்பெற்றன.
`ஆஸ்கார் புகழ்' ஏ.ஆர்.ரகுமானின் `தாய் மண்ணுக்கு மரியாதை' இசை நிகழ்ச்சியில், `வந்தே மாதரம்' பாடலுக்கு, 2010 பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் நடனம் ஆடி பார்வையாளர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள்.
பிரமிக்க வைத்த `லேசர் ஷோ'
அடுத்த காமன்வெல்த் போட்டி, 2014-ம் ஆண்டில் ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது. போட்டி நடத்தும் பொறுப்பை அந்த நாட்டில் முறைப்படி ஒப்படைக்கும் நிகழ்ச்சியின்போது, ஸ்காட்லாந்தின் பாரம்பரிய `பேக் பைப்பர்' குழுவினரின் புதுமையான வரவேற்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
லேசர் ஷோ நிகழ்ச்சியின்போது, வானம் வண்ண ஒளியால் ஜொலித்த `கிராபிக்' காட்சிகள் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. நவீன, வளர்ச்சியடைந்த இந்தியாவை பிரதிபலிக்கும் வகையிலும், உலகளாவிய நேசத்தை எடுத்துக்காட்டும் விதத்திலும் கலை நிகழ்ச்சிகள் அமைந்து இருந்தன.
இறுதியில் சர்வதேச சகோதரத்துவத்தை விளக்கும் வகையில், உஷா உதுப், சங்கர் மகாதேவன், இலா அருண், கல்யாணி மேனன் போன்ற இந்தியாவின் முன்னணி இசைக்கலைஞர்கள் 29 பேர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
வரலாறு காணாத பாதுகாப்பு
நிறைவு விழாவான நேற்று டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பாதுகாப்பு பணிக்கு 50 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். நிறைவு விழா நடைபெற்ற ஜவகர்லால் நேரு ஸ்டேடிய வளாகத்தில் 7 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
இரவு 7 மணி முதல் 10 மணி வரை டெல்லியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆள் இல்லா விமானங்கள் வானில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தன.
தினதந்தி!

சப்பா இப்பவே கண்ணை கட்டுதே என்று ஒருவழியாக எந்த விபத்தும், அசம்பாவிதமும் இல்லாமல் நடத்தி முடித்த நம் அரசுக்கு ஒரு பெரிய சல்யுட் ....
மிக்க நன்றி சிவா அண்ணா ...
மிக்க நன்றி சிவா அண்ணா ...
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: சாதித்தது இந்தியா! காமன்வெல்த் சிறப்பாக நடந்து முடிந்தது!
சாந்தன் wrote:சப்பா இப்பவே கண்ணை கட்டுதே என்று ஒருவழியாக எந்த விபத்தும், அசம்பாவிதமும் இல்லாமல் நடத்தி முடித்த நம் அரசுக்கு ஒரு பெரிய சல்யுட் ....
மிக்க நன்றி சிவா அண்ணா ...
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Similar topics
» காமன்வெல்த் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது டெல்லி
» காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
» சறுக்கியது "நம்பர்-1 இந்தியா! * லார்ட்ஸ் டெஸ்டில் தோல்வி * சாதித்தது இங்கிலாந்து அணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|