ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Poll_c10 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Poll_m10 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Poll_c10 
heezulia
 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Poll_c10 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Poll_m10 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Poll_c10 
Abiraj_26
 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Poll_c10 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Poll_m10 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Poll_c10 
mini
 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Poll_c10 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Poll_m10 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Poll_c10 
mohamed nizamudeen
 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Poll_c10 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Poll_m10 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல்

3 posters

Go down

 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Empty தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல்

Post by சிவா Thu Oct 14, 2010 9:00 am

புதுடில்லி: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் சரத் கமல் மற்றும் சுபாஜித் சகா ஜோடி இணைந்து இந்தியாவுக்கு தங்கம் பெற்று தந்தது. குத்துச்சண்டையில் மனோஜ் குமார், சுரன்ஜாய் சிங், பரம்ஜித் சமோதா ஆகிய 3 இந்திய வீரர்கள் தங்கம் வென்று, சாதித்தனர்.

டில்லியில், 19வது காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் பைனலில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல், சுபாஜித் சகா ஜோடி, சிங்கப்பூரின் நிங் கயோ, ஜி யங் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான போட்டியின் முதல் செட்டை சிங்கப்பூர் ஜோடி 11-9 என கைப்பற்றியது. பின்னர் எழுச்சி கண்ட இந்திய ஜோடி அடுத்த இரண்டு செட்டை 12-10, 11-4 என தன்வசப்படுத்தியது. இதற்கு சிங்கப்பூர் ஜோடி 11-5 என 4வது செட்டில் பதிலடி கொடுத்தது. இதனால் போட்டி 2-2 என சமநிலை அடைந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 11-8 என கைப்பற்றியது. இறுதியில் சரத்-சகா ஜோடி 9-11, 12-10, 11-4, 5-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றது.

மனோஜ் தங்கம்:ஆண்களுக்கான "லைட் வெல்டர் வெயிட்' 64 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இந்தியாவின் மனோஜ் குமார், இங்கிலாந்தின் பிராட்லி சவுண்டர்சை எதிர்கொண்டார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மனோஜ் குமார் 11-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார்.

சுரன்ஜாய் அதிர்ஷ்டம்:ஆண்களுக்கான "பிளை வெயிட்' 52 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் சுரன்ஜாய் சிங், கென்யாவின் பென்சன் ஜங்கிரு மோதுவதாக இருந்தது. ஆனால் கென்ய வீரர் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காததால், சுரன்ஜாய் சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

சமோதா அபாரம்:ஆண்களுக்கான "சூப்பர் ஹெவி வெயிட்' +91 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இந்தியாவின் பரம்ஜித் சமோதா, டிரினிடாட் டுபாகோவின் அப்துலை சந்தித்தார். இதில் சமோதா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றார். இதன்மூலம் குத்துச்சண்டை போட்டியில் 3 தங்கப் பதக்கம் கிடைத்தது.

ஹீனா வெள்ளி:பெண்களுக்கான தனிநபர் 10 மீ., "ஏர் பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து பங்கேற்றார். இதில் 481.6 புள்ளிகள் பெற்ற ஹீனா, 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இவரை விட 0.3 புள்ளிகள் கூடுதலாக பெற்ற மலேசியாவின் சின் பிபியனா தங்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் டினா அஸ்பான்டியரோவா (478.8 புள்ளி) வெண்கலப் பதக்கம் வென்றார்.

சமரேஷ் வெண்கலம்:ஆண்களுக்கான தனிநபர் 25 மீ., "ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் சமரேஷ் ஜங் பங்கேற்றார். இதில் 559 புள்ளிகள் பெற்ற சமரேஷ் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதில் சிங்கப்பூரின் பின் கெய் (570 புள்ளி), டிரினிடாட் டுபாகோவின் ரோஜர் பீட்டர் டேனியல் (563 புள்ளி) முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

நரங் ஏமாற்றம்:ஆண்களுக்கான தனிநபர் 50 மீ., "ரைபிள் புரோன்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ககன் நரங் பங்கேற்றார். இதில் நரங் மற்றும் இலங்கையின் மங்கலா சமரகூன் தலா 590 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தனர். பின்னர் நடந்த "டை பிரேக்கர்' சுற்றில் ககன் நரங் 51.6 புள்ளிகள் பெற்றார். இலங்கை வீரர் 53.2 புள்ளிகள் பெற்று, இறுதி சுற்றுக்கு முன்னேறினார். நேற்று முன்தினம் நடந்த 50 மீ., "ரைபிள் புரோன்' இரட்டையர் பிரிவிலும் ககன் நரங், இறுதி சுற்றுக்கு முன்னேறாமல் ஏமாற்றினார்.

இதுகுறித்து ககன் நரங் கூறுகையில், ""காமன்வெல்த் போட்டியில் எனது செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னதாக நான்கு பதக்கம் வென்ற போதிலும், "புரோன்' பிரிவு போட்டிகளில் தடுமாற்றம் கண்டது ஏமாற்றம் அளிக்கிறது. இம்முறை இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது அடுத்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியிலும் தொடரும் என நினைக்கிறேன்,'' என்றார்.

இந்தியாவுக்கு நன்றி : ஆண்களுக்கான "பான்டம் வெயிட்' 56 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இலங்கையின் மஞ்சு வானியாராச்சி, வேல்ஸ் வீரர் மெக்கோல்டுரிக்கை வீழ்த்தி, தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் 72 ஆண்டுகளுக்கு பின் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1938ல் நடந்த சிட்னியில் நடந்த போட்டியில் இலங்கையின் பார்னி ஹென்ரிகஸ் தங்கம் வென்றிருந்தார். தவிர, 60 ஆண்டுக்கு பின் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு பதக்கம் கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1950ல் ஆக்லாந்தில் நடந்த போட்டியில் 2 வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட 3 பதக்கம் குத்துச்சண்டையில் கிடைத்துள்ளது.

இதுகுறித்து இவரது பயிற்சியாளர் டியன் கோம்ஸ் கூறுகையில், ""பாட்டியாலாவில், இந்திய பயிற்சியாளர் குர்பாக்ஸ் சிங் சாந்துவிடம் மஞ்சு வானியாராச்சி பயிற்சி மேற்கொண்டார். இப்பயிற்சியின் மூலம் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இதேபோல கடந்த 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு முன் வானியாராச்சி, சாந்துவிடம் பயிற்சி மேற்கொண்டார். ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட மிகப் பெரும் தொடருக்கு முன், இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு இந்தியாவுக்கும், குத்துச்சண்டை கூட்டமைப்புக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

காஸ்யப் வெண்கலம் : பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் நடந்த 3வது இடத்துக்கான போட்டியில், இந்தியாவின் சேட்டன் ஆனந்த், காஸ்யப் மோதினர். இதில் காஸ்யப் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

தினமலர்!


 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Empty Re: தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல்

Post by balakarthik Thu Oct 14, 2010 11:16 am

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம்  தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Empty Re: தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல்

Post by கார்த்திக் Thu Oct 14, 2010 11:26 am

வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்

:suspect: :suspect: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல் Empty Re: தங்கம் வென்றார் தமிழக வீரர் சரத் கமல் : டேபிள் டென்னிசில் அசத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பை: தீபா கர்மாகர் அசத்தல்.. தங்கம் வென்றார்
» 57-வது தடகள சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்றார் தமிழக வீரர் சந்தோஷ் குமார்
» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்
»  துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார்
» ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம் - மானு பாகெர், பூனம் யாதவ் மிரட்டல்; டேபிள் டென்னிஸ் அணியினரும் அசத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum