ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாவலர்களுக்கு அடி; எடியூரப்பா அரசு பிழைத்தது

Go down

அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாவலர்களுக்கு அடி; எடியூரப்பா அரசு பிழைத்தது Empty அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாவலர்களுக்கு அடி; எடியூரப்பா அரசு பிழைத்தது

Post by பூஜிதா Mon Oct 11, 2010 11:35 am

இன்று காலையில் நடந்த பெரும் பரபரப்புக்கு இடையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அரசு குரல் ஓட்டு மூலம் வெற்றி பெற்றது. இன்று பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டசபையை முதல்வர் கூட்டியிருந்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் 16 பேர் அதிரடியாக சட்டசபை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். பாதுகாவலர்களை மீறி கதவு ,மற்றும் ஜன்னல்களை உடைத்தனர். இதனால் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்னதாக ச‌ட்டசபை வளாகத்தில் பெரும் அடி, தடி, மோதல் சம்பவம் அரங்கேறியது.




கர்நாடக பாரதிய ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, அந்தக் கட்சியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.,க்கள் வாபஸ் பெற்றதால், அக்டோபர் 12ம் தேதி மாலை 5 மணிக்குள், சட்டசபையில் மெஜாரிடியை நிரூபிக்க வேண்டும் என, முதல்வர் எடியூரப்பாவுக்கு கவர்னர் பரத்வாஜ் உத்தரவிட்டார். ஆனால், முதல்வர் எடியூரப்பாவோ, ஒருநாள் முன்னதாகவே, அதாவது, இன்று ( திங்கட்கிழ‌மை ) தனது பலத்தை நிரூபிப்பதாக அறிவித்தார்.



இதற்காக இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் நடப்பதாக இருந்தது. பா.ஜ.,வை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் போப்பையா தெரிவித்தார். இதனால் ஆத்திரமுற்ற எம்.எல்.ஏ.,க்கள் சபை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., ரேவண்ணா தலைமையில் இந்த எம்.எல்.ஏ.,க்கள் செயல்பட்டனர்.



சட்டசபையை சுற்றி 2 கி.மீ. சுற்றளவிற்கு "144' தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முழுவதும் ஆளுங்கட்சி தரப்பிலும், எதிர்க்கட்சி தரப்பிலும் பெரும் பரபரப்பு நிலவியது. முதல்வர் எடியூரப்பா தனது அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். போலீஸ் டி.ஜி.பி., அஜய்குமார்சிங்குடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிரமாக விசாரித்து அறிந்தார்.



அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை முன்னாள் முதல்வர் குமாரசாமி, அவர்களை சந்தித்து பேசினார். "நம்பிக்கை ஓட்டெடுப்பில் பாரதிய ஜனதா அரசு கவிழ்வது உறுதி. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ.,வினர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்' என்று அவர் கூறினார். பின், அதிருப்தி எம்.எல்.ஏ., க்களுடன் குமாரசாமி, மதசார்பற்ற ஜனதா தளம் எம்.பி., செலுவராயசுவாமி ஆகியோரும் சொகுசு பஸ்சில் பெங்களூரு புறப்பட்டனர்.



அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்டசபை செயலர் நோட்டீஸ் அளித்தது சரியல்ல என்று கோரி, ம.ஜ.த., - காங்கிரஸ் தலைவர்கள், கவர்னர் பரத்வாஜை சந்தித்து நேற்று முறையிட்டனர்.சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 224. இதில் பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ., க்கள் 14 பேர் உள்ளனர். இது தவிர, 2009 டிசம்பரில் நடந்த சபாநாயகர் தேர்தலின் போது ரகளையில் ஈடுபட்ட மூன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் காகா சாஹேப் பாட்டீல், மஞ்சு, ரகீம்கான், ம.ஜ.த., உறுப்பினர் ஜமீர் அகமதுகான் ஆகிய நான்கு பேர் மீதான நடவடிக்கையை, சபாநாயகர் போப்பய்யா அறிவித்தார். .



இதனால், சட்டசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 208 ஆக குறைந்துள்ளது. பாரதிய ஜனதாவுக்கு தற்போதுள்ள உறுப்பினர்கள் பலம் 103. இதுமட்டுமின்றி ம.ஜ.த., உறுப்பினர் அஸ்வத்தும் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கிறார். எனவே, பாரதிய ஜனதாவின் பலம் 104 ஆக உள்ளது.காங்கிரஸ் உறுப்பினர்கள் 73 பேர், ம.ஜ.த., உறுப்பினர்கள் 28 பேர் ஆக மொத்தம் 101 பேர் உள்ளனர். இவர்களிடம் இருக்கும் அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 17 பேர் என்று கூறுகின்றனர். ஆனால், ஆளும் கட்சியினரோ அதை மறுக்கின்றனர்.



மொத்தத்தில் பா.ஜ., ஆட்சியின் கதி சபாநாயகர் கையில் உள்ளது. ஆனால், எதிர்க்கட்சி தலைவர்களோ, சபாநாயகர் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதுமட்டுமின்றி காங்கிரஸ், ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் மாற்றி ஓட்டு போடுவார்கள் என்று பா.ஜ., தலைவர்கள் கருதுகின்றனர். "எப்படியும் வெற்றி பெற்று விடுவோம். மெஜாரிடியை விட அதிக எண்ணிக்கையில் பா.ஜ., வெற்றி பெறுவது உறுதி' என்று அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி கூறியுள்ளார்.



இந்நிலையில் காலையில் பரபரப்புக்கு மத்தியில் குரல் ஓட்டெடுப்பு மூலம் அரசு ‌தனது மீதான மெஜாரிட்டியை நிரூபித்தது. எடியூரப்பா அரசுக்கு 106 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாகவும், அரசு வெற்றி பெற்றதாகவும் சபாநாயகர் அறிவித்தார். சட்டசபை வளாகத்தில் போலீஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
» நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி
» அரசு நிலத்தை மகன்களுக்கு ஒதுக்கியது தவறுதான்! எடியூரப்பா ஒப்புதல்
» காஷ்மீரில் சீக்கியர்களுக்கு மிரட்டல்: எம்.பி.,க்கள் கேள்விக்கு அரசு பதில்
» மத்திய அரசு மீது காங். எம்.பி.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum