ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
பழமொழிகள் Poll_c10பழமொழிகள் Poll_m10பழமொழிகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகள்

+2
ராஜா
Admin
6 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பழமொழிகள் Empty பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 4:51 am

#பழமொழிகள்

# அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
# அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
# அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
# அசையாத மணி அடிக்காது
# அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
# அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
# அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
# அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
# அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
# அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
# அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
# அமைதி தெய்வத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
# அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
# அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
# #அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
# அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
# அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
# அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
# அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
# அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
# அன்பே #கடவுள்.
# அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
# அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
# அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
# அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
# அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
# அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
# அன்பும், மனைவியும் அமைவதே #வாழ்க்கை.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பழமொழிகள் Empty Re: பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 4:51 am

# அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
# அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
# அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
# அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
# அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
# அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
# அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
# அதிக ஓய்வு அதிக வேதனை.
# அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
# அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
# அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
# அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
# அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
# அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
# அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.
# அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
# அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.
# அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
# அறவால் உணரும்போது அனுமானம் எதற்கு?
# அன்பாக் பேசுபவருக்கு அந்நியர் இல்லை.
# அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.
# அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.
# அரசனும் அன்னைக்கு மகனே.
# அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
# அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.
# அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
# அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
# அஞ்சிவனைப் பேய் அடிக்கும்.
# அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
# அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
# அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பழமொழிகள் Empty Re: பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 4:52 am

# ஆடிப்பட்டம் தேடி விதை.
# ஆழம் தெரியாமல் காலை விடாதே!
# ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!
# ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.
# ஆயுள் நீடிக்க உணவைக் குறை.
# ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.
# ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
# ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.
# ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.
# ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.
# ஆறுவது சினம்.
# ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.
# ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.
# ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
# ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.
# ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?
# ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
# ஆலை விழுது தாங்கியது போல.
# ஆடு பகை குட்டி உறவா?
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பழமொழிகள் Empty Re: பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 4:53 am

# ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.
# ஆடி ஓய்ந்த பம்பரம் போல.
# ஆரம்பத்தில் சூரத்துவம்.
# ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.
# ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.
# ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.
# ஆற்றுநீர் பித்தம் போக்கும்
குளத்து நீர் வாதம் போக்கும்
சோற்றுநீர் எல்லாம் போக்கும்
# ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பழமொழிகள் Empty Re: பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 4:53 am

# இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
# இளமையில் கல்.
# இளங்கன்று பயமறியாது.
# இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
# இளமையில் கல். முதுமையில் காக்கும்.
# இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
# இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
# இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
# இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
# இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
# இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
# இறங்கு பொழுதில் மருந்து குடி.
# இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
# இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
# இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பழமொழிகள் Empty Re: பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 4:53 am

# இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
# இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
# இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
# இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
# இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.
# இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.
# இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
# இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.
# இடுக்கன் வருங்கால் நகுக.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பழமொழிகள் Empty Re: பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 4:54 am

* ஈகைக்கு எல்லை எதுவமே இல்லை.
* ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
* ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
* ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
* ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பழமொழிகள் Empty Re: பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 4:54 am

* உழுத நிலத்தில் பயிரிடு.
* உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
* உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
* உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
* உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
* உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
* உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
* உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.
* உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.
* உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
* உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.
* உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
* உழைத்து உண்பதே உணவு.
* உப்பிட்டவரை உள்ளவும் நினை.
* உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பழமொழிகள் Empty Re: பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 4:55 am

* ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது.
* ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
* ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
* ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
* ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
* ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பழமொழிகள் Empty Re: பழமொழிகள்

Post by Admin Sun Oct 19, 2008 4:55 am

* எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிர்க்க வந்த நாயை அடிச்சானாம்.
* எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு எட்டுப் பணியாரம்.
* எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.
* எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
* எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க விட்டுப் போகுமே விக்கல்.
* எந்த விரலைக கடித்தாலும் வலி இருக்கும்.
* எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.
* எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.
* எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
* எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
* எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?
* எண்ணம்போல் வாழ்வு.
* எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

பழமொழிகள் Empty Re: பழமொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum