ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
மனித உரிமை என்ன ஆனது? Poll_c10மனித உரிமை என்ன ஆனது? Poll_m10மனித உரிமை என்ன ஆனது? Poll_c10 
ayyasamy ram
மனித உரிமை என்ன ஆனது? Poll_c10மனித உரிமை என்ன ஆனது? Poll_m10மனித உரிமை என்ன ஆனது? Poll_c10 
mohamed nizamudeen
மனித உரிமை என்ன ஆனது? Poll_c10மனித உரிமை என்ன ஆனது? Poll_m10மனித உரிமை என்ன ஆனது? Poll_c10 
VENKUSADAS
மனித உரிமை என்ன ஆனது? Poll_c10மனித உரிமை என்ன ஆனது? Poll_m10மனித உரிமை என்ன ஆனது? Poll_c10 

Top posting users this month
heezulia
மனித உரிமை என்ன ஆனது? Poll_c10மனித உரிமை என்ன ஆனது? Poll_m10மனித உரிமை என்ன ஆனது? Poll_c10 
ayyasamy ram
மனித உரிமை என்ன ஆனது? Poll_c10மனித உரிமை என்ன ஆனது? Poll_m10மனித உரிமை என்ன ஆனது? Poll_c10 
mohamed nizamudeen
மனித உரிமை என்ன ஆனது? Poll_c10மனித உரிமை என்ன ஆனது? Poll_m10மனித உரிமை என்ன ஆனது? Poll_c10 
VENKUSADAS
மனித உரிமை என்ன ஆனது? Poll_c10மனித உரிமை என்ன ஆனது? Poll_m10மனித உரிமை என்ன ஆனது? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உரிமை என்ன ஆனது?

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனித உரிமை என்ன ஆனது? Empty மனித உரிமை என்ன ஆனது?

Post by சிவா Wed Aug 05, 2009 1:18 am

இலங்கையின் மறுவாழ்வுக்காக பன்னாட்டு செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்) மூலம் சுமார் ரூ. 11,200 கோடி கடன் தருவதை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகள் எதிர்த்து வாக்களிப்பைப் புறக்கணித்துள்ளன. அமைப்பின் மற்ற உறுப்பு நாடுகள் கடனை அனுமதித்துள்ளன.

விடுதலைப் புலிகளுடனான போர் கடந்த மே மாதம் முடிவடைந்த பிறகும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதன் மூலம் மனித உரிமை அப்பட்டமாக மீறி வருகிறது. எனவே அந்த நாட்டுக்குக் கடன் வழங்குவதை அனுமதிக்க முடியாது என்று அந்த மூன்று நாடுகளும் தங்களுடைய கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளன.

ஆனால் இந்தியாவும், இடதுசாரி நாடுகளும் இலங்கையின் அடாவடிப் போக்கை ஆதரித்து வாக்களித்துள்ளன. இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுள்ள இலங்கைத் தமிழர் சித்திரவதை செய்யப்படுவதைப் பற்றி இந்திய அரசு மௌனம் சாதிக்கிறது; அநியாயங்களுக்குத் துணை போகிறது.

மனித நேயத்தையும், மனித உரிமைகளையும் வாய் கிழியப் பேசும் சீனா, ரஷியா, கியூபா, வியட்நாம் முதலிய கம்யூனிஸ்ட் நாடுகளும் இலங்கையின் இனப்படுகொலைக்கு ஆதரவளிப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. இந்த நாடுகளுக்காகக் குரல் எழுப்பி ஆதரவு இயக்கங்கள் நடத்திய தமிழர்கள் இப்போது என்ன பதில் கூறப் போகிறார்கள்?

பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தானம், இராக் முதலிய நாடுகளுக்காகக் குரல் கொடுக்கிற இந்தியா உள்ளிட்ட நாடுகள், இலங்கையில் இரண்டாந்தர மக்களாக்கி இனப் படுகொலை செய்யப்படும் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்காமல் ஓடி ஒளிவது ஏன்? முற்போக்கு முகாமின் இந்த இரட்டை வேடம் எத்தனை நாளைக்கு?

"பயங்கரவாதிகளை எதிர்த்துப் போர்' என்ற பெயரால் ஈழ மக்களின் மேல் முப்படைகளையும் கொண்டு படையெடுத்து மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தது இலங்கை அரசின் சிங்கள ராணுவம். தன் நாட்டு மக்களின் மீது விமானத் தாக்குதல் நடத்தி வீடுகள், பாடசாலைகள், மருத்துவமனைகள், கோயில்கள் மற்றும் மாதா கோயில்கள் தரைமட்டமாக்கப்பட்டன.

தப்பி ஓடி வந்த மக்களை கம்பி வேலிக்குள் போட்டு பூட்டி வைத்துள்ளது. உணவுக்கும், குடிநீருக்கும் தவிக்கும் நிலையை உருவாக்கி அவர்களைச் செயலற்றவர்களாக - நடைப்பிணங்களாக ஆக்கியுள்ளது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பிரித்து உறவை அறுத்து வேடிக்கை பார்க்கிறது. போரில் குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்தவர்களின் உறுப்புகளை அறுத்துக் கொண்டு போகும் அக்கிரமத்தைக் கேள்விப்பட்டதுண்டா?

நாகரிக உலகத்தால் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்துள்ளது; அந்த மண்ணையே நஞ்சாக்கியுள்ளது.

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது மருத்துவர்களின் மனிதநேயக் கடமை. அப்படி வடகிழக்குப் பகுதியில் மருத்துவ உதவிகள் செய்துவந்த சத்தியமூர்த்தி, வரதராஜா மற்றும் சண்முகராஜா கைது செய்யப்பட்டு, அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பதுகூடத் தெரியவில்லை.

நாட்டில் பலமுறை அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகிறது; சுதந்திரமாக நடமாட முடியவில்லை; ஜனநாயகம் தினந்தோறும் கொலை செய்யப்படுகிறது. பத்திரிகையாளர்களும், செஞ்சிலுவைச் சங்கங்களும் செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை.

இதனை எப்படி நாகரிக சமுதாயம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது? இந்த அக்கிரமங்களை எதிர்ப்பதற்குப் பதிலாக அகிம்சையைப் போதித்த காந்தியின் தேசம் ஆதரவு தருகிறது. ""இந்தியாவுக்காகப் போரிட்டோம்'' என்று அந்த நாட்டு அதிபர் பகிரங்கமாக அறிவிக்கிறார். இந்தியா அடக்கத்தோடு அமைதி காக்கிறது; இனப்படுகொலையை ஆதரிக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்டு, 1948 டிசம்பர் 9 அன்று நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு (தடுப்பு) ஒப்பந்தத்தில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை உள்பட 140 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனித உரிமை என்ன ஆனது? Empty Re: மனித உரிமை என்ன ஆனது?

Post by சிவா Wed Aug 05, 2009 1:18 am

""இனப்படுகொலை என்பது ஒரு தேசிய இனம் அல்லது மதக்குழுவை முற்றிலுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கோடு, குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, குழுவின் உறுப்பினர்களுக்கு உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ சேதம் விளைவிப்பது, குழுவின் மீது திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் அதன் உடல் சார்ந்தவற்றிற்கு முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிவை ஏற்படுத்த முனைவது, குழுவினரிடையே பிறப்பு நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்கோடு செயல்படுவது, ஒரு குழுவின் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி இன்னொரு குழுவுக்கு மாற்றுவது...'' - இதைப் போன்ற செயல்களில் ஈடுபட்டால் அது "இனப்படுகொலை நடவடிக்கை' என்று அந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.

உலக மக்களையே உலுக்கிவிட்ட இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா. அவையின் மனித உரிமை ஆணையத்தால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது. மேற்கு நாடுகள் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானம் முதன்முறையாக பிற நாடுகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபட்ச, படைத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை போர்க்குற்றவாளிகளாக விசாரிப்பதற்காக விவாதிப்பதற்குக்கூட எதிர்ப்புத் தெரிவித்து சீனாவும், ரஷியாவும் "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்துவிட்டன.

கம்யூனிசத்தையே உலகத்துக்கு அறிமுகப்படுத்திய மாமேதை லெனின் வழிவந்த ரஷியாவும் மாபெரும் புரட்சியாளர் மாவோ வழிவந்த சீனாவும் மனித இனப்படுகொலைக்குத் துணை போகின்றன. கியூபா, பொலிவியா, நிகராகுவா முதலிய சோஷலிச நாடுகள், "இலங்கை இனப்படுகொலை செய்யவில்லை; மனித உரிமைகள் மீறவில்லை' என்று வாக்களித்துள்ளன.

கியூபாவும், வியட்நாமும் நடத்திய விடுதலைப் போரை ஆதரித்தோம்; அதன் மாபெரும் தலைவர்களான ஃபிடல்காஸ்ட்ரோவையும், கோசிமின்னையும் தூக்கி வைத்துக் கொண்டாடினோம். ஆனால், இந்த நாடுகள் சிறுபான்மையினரான தமிழ் மக்களின் இனப்படுகொலையை ஆதரித்துக் குரல் கொடுத்தனவே!

தேசிய இன விடுதலைக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டியது முற்போக்கு நாடுகளின் கடமையில்லையா? உலகெங்கும் பாதிக்கப்படுகிற மக்களைத் தேடிச் சென்று உதவும் கடமை அந்நாடுகளுக்கு இல்லாமல் போய்விடுமானால் அவர்கள் பேசும் கொள்கைகளும், செயல்பாடுகளும் பொய்மைதானா?

கடந்தகால வரலாறு இப்படித்தான் இருந்ததா?

கியூபா புரட்சியின் நாயகர்களில் ஒருவரும், ஃபிடல்காஸ்ட்ரோவின் நெருங்கிய தோழனாகவும் இருந்த எர்னஸ்டோ சேகுவேரா உலக மக்களின் உரிமை வாழ்வுக்காக உயிரையே தந்தவர். கியூபாவில் புரட்சி வெற்றி பெற்ற பிறகு, 1959 ஜனவரி 9 அன்று குடியரசுத் தலைவரின் ஆணைப்படி குடியுரிமை பெறுகிறார்.

அர்ஜென்டினாவில் பிறந்து, மருத்துவராகப் பட்டம் பெற்று, புரட்சிப் போராளியாக மாறிய சேகுவேரா கியூபாவின் தொழில்துறை அமைச்சராகவும், மத்திய திட்டக்குழு உறுப்பினராகவும் நியமனம் பெறுகிறார். ஒருநாள் அத்தனையையும் துறந்துவிட்டு எங்கு போனார்? 1965 ஏப்ரலுக்குப் பிறகுதான் அவர் கியூபாவில் இல்லை என்பது தெரிய வந்தது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனித உரிமை என்ன ஆனது? Empty Re: மனித உரிமை என்ன ஆனது?

Post by சிவா Wed Aug 05, 2009 1:19 am

""இப்போது உலகில் வேறு பாகங்களுக்கு எனது சிறிய பணிகள் தேவைப்படுகின்றன. கியூபாவின் ஆட்சிப் பொறுப்பில் தாங்கள் இருப்பதால் தாங்கள் ஆற்ற முடியாத கடமைகளை நான் ஆற்ற முடியும். ஆகவே அந்தப் பணியில் நான் ஈடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது...'' என்று தன் தோழர் ஃபிடல்காஸ்ட்ரோவுக்குக் கடிதம் எழுதிவிட்டு, பொறுப்புகளை முறைப்படி ராஜிநாமா செய்துவிட்டே புறப்படுகிறார்.

ஈழ மக்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது உலக நாடுகள் ஊமைகளாக இருந்தன. அநியாயங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. மனசாட்சிமிக்க சில ஐரோப்பிய நாடுகள் அரைகுறையாகக் குரல் எழுப்பின. ஆனால் புரட்சிகர கம்யூனிஸ்ட் நாடுகள் இனப்படுகொலைக்கு ஆதரவாக நின்றன என்பது வரலாற்று ஏடுகளில் மாறாத களங்கமாய் இருந்து கொண்டேயிருக்கும்.

உலக அவை எனப்படும் ஐ.நா. மன்றம் எதற்காக இருக்கிறது? வெறும் வார்த்தைக் கண்டனங்களை வாரி இறைப்பதற்குத்தானா? இதன் சட்டங்களும், விதிமுறைகளும் பேசுவதற்கு மட்டும்தானா? செயல்படுத்துவதற்கு இல்லையா? ஏழை எளிய சிறுபான்மை மக்கள் உலகில் வாழத் தகுதியில்லாதவர்கள்தானா? இந்தப் போக்கற்ற மக்களுக்கு புகலிடமே இல்லையா?

இன்றுவரை உலகில் பேசப்பட்டுவரும் நீதி, நியாயம், அறம், அமைதி, சமாதானம் என்பதெல்லாம் நீதிநூல்களில் மட்டும்தானா? புரட்சியாளர் சேகுவேரா போன்றவர்களின் தியாகமெல்லாம் படிப்பதற்கு மட்டும்தானா? உலகில் எங்கெல்லாம் மக்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்களோ அவர்களையெல்லாம் விடுதலை செய்ய வேண்டும் என்பதே ஒரு புரட்சியாளனின் கடமை என்பதை அவரின் வரலாறு கூறவில்லையா?

உலகம் எங்கும் உயிர்வதை தடை செய்யப்பட்டுள்ளது. விலங்குகளையும் பறவைகளையும் துன்புறுத்துவதைத் தடுக்கவும் சட்டம் இருக்கிறது. ஆனால் இலங்கையில் மனித உயிர்களும், உரிமைகளும் வேட்டையாடப்படுகின்றன. இதனை நாகரிக உலகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா?

பயங்கரவாதம் என்பது தனிமனிதர்களுக்கு மட்டும்தானா? அரசாங்கங்களுக்கு இல்லையா? எங்கே தீப்பற்றி எரிந்தாலும் எல்லோரும் சேர்ந்து அணைக்க வேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லது.

உதயை மு. வீரையன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனித உரிமை என்ன ஆனது? Empty Re: மனித உரிமை என்ன ஆனது?

Post by நிலாசகி Wed Aug 05, 2009 1:32 am

ஒபாமா ஒரு ஈயை அடித்ததற்கு கேஸ் போடுறாங்களாம்....இங்கு மனிதர்கள் கொல்லபடுவதை கேட்க யாருமில்லையா......பாவம் இவர்களுக்கு எல்லாம்
நடந்து முடிந்ததும் வந்து எப்படி நடந்தது என்று விசாரிக்க மட்டுமே தெரிந்த செவிடர்கள் குருடர்கள் பைத்தியங்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

மனித உரிமை என்ன ஆனது? Empty Re: மனித உரிமை என்ன ஆனது?

Post by ரூபன் Wed Aug 05, 2009 1:34 am

அழுகை என்ன கொடுமை சார் இது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மனித உரிமை என்ன ஆனது? Empty Re: மனித உரிமை என்ன ஆனது?

Post by சிவா Wed Aug 05, 2009 2:47 am

மனித உரிமை என்ன ஆனது? 01dog_10


Last edited by சிவா on Wed Aug 05, 2009 5:52 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனித உரிமை என்ன ஆனது? Empty Re: மனித உரிமை என்ன ஆனது?

Post by kirupairajah Wed Aug 05, 2009 5:34 pm

சிவா wrote:மனித உரிமை என்ன ஆனது? 01dog_bgca3

சிவா இங்கு படம் தெரியவில்லை


மனித உரிமை என்ன ஆனது? Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மனித உரிமை என்ன ஆனது? Empty Re: மனித உரிமை என்ன ஆனது?

Post by சிவா Wed Aug 05, 2009 5:54 pm

kirupairajah wrote:
சிவா wrote:மனித உரிமை என்ன ஆனது? 01dog_bgca3

சிவா இங்கு படம் தெரியவில்லை

மனித உரிமைக் கழகத்தில் உள்ளவர்களை இந்தச் செல்லப் பிராணியுடன் ஒப்பிட்டுளேன், அவ்வளவுதான்! யாரிடம் பிஸ்கட் உள்ளதோ அவர் பின்னால்தானே ஓடும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனித உரிமை என்ன ஆனது? Empty Re: மனித உரிமை என்ன ஆனது?

Post by kirupairajah Wed Aug 05, 2009 6:00 pm

இல்லை உங்களின் ஒப்பீடு தவறானது. சில மனிதர்களையும் விட நன்றியுள்ள செல்லப்பிராணி அது.


மனித உரிமை என்ன ஆனது? Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மனித உரிமை என்ன ஆனது? Empty Re: மனித உரிமை என்ன ஆனது?

Post by சிவா Wed Aug 05, 2009 6:03 pm

kirupairajah wrote:இல்லை உங்களின் ஒப்பீடு தவறானது. சில மனிதர்களையும் விட நன்றியுள்ள செல்லப்பிராணி அது.

உண்மைதான் கிருபை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனித உரிமை என்ன ஆனது? Empty Re: மனித உரிமை என்ன ஆனது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum